"من لم يدع قول الزور والعمل
به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه"
“யார்
பொய் பேசுவதையும் அதன்படி செயற்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும்
விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எவ்வித தேவையும் கிடையாது”.
ஒரு முஸ்லிமிடம்
காணப்படும் இணை பிரியாத பண்பாக உண்மைத் தன்மை என்பது காணப்படும்.முஸ்லிம் என்றாலே
அவன் உண்மையும்,நானயமும் மிக்கவன்தான்.எனவேதான் முஸ்லிம் சமூகத்தில் அடிப்படையில்
அனைவரும் நம்பிக்கைக்குரியவர்களாக பார்க்கப்பட வேண்டும் என இஸ்லாம்
எதிர்பார்க்கிறது.எனவேதான் நபியவர்கள் ஒரு முஸ்லிம் எவ்வகையிலும் பொய் என்ற
பண்பைப் பெற முடியாது என வழியுறுத்தினார்கள்.
ورد
حديث في موطأ الإمام مالك ، هذا نصه: عن صفوان بن سُليم رضي الله عنه : " أن النبي
صلى الله عليه وسلم سُئل : أيكون المؤمن جباناً ؟ قال : ( نعم ) ، ثم سُئل: أيكون المؤمن
بخيلاً ؟ قال : ( نعم ) ، ثم سُئل: أيكون المؤمن كذاباً؟ قال : ( لا)
“றஸுல்(ஸல்) அவர்களிடம் ஒரு முஃமின் கோழையாக இருக்க
முடியுமா என கேட்கப்பட்டதற்கு முடியும் என பதிலளிக்கப்பட்டது. பிறகு ஒரு முஃமின் உலோபியாக
இருக்க முடியுமா எனக் கேட்கப்பட்டது.அதற்கும் முடியும் என பதிலளிக்கப்பட்டது. பிறகு
ஒரு முஃமின் பொய்யனாக இருக்க முடியுமா என கேட்கப்பட்டது. அதற்கு முடியாது என பதிலளித்தார்கள்.”
பொய்யும்,வாக்குமாறுவதும்
ஒரு முனாபிக்குக்குறிய பண்பு என நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
وحذر النبي - صلى الله
عليه وسلم - من الكذب في الحديث وعدّه من النفاق، فقال - صلى الله عليه وسلم -: "آية
المنافق ثلاث: إذا حدَّث كذب، وإذا وعد أخلف، وإذا ائتمن خان"- متفق عليه-
“முனாபிக்கை மூன்று விடயங்களால் அடையாளம் காணலாம்:அவன்
பேசினால் பொய் பேசுவான்,வாக்களித்தால் மாறு செய்வான்,நம்பினால்
மோசடி செய்வான்”
قال تعالى: {فَأَعْقَبَهُمْ
نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا
وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ} [التوبة: 77]
“அவர்கள் அல்லாஹ்வுக்களித்த வாக்கை மீறியமையாலும்
அவர்கள் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தமையாலும் அல்லாஹ்வை சந்திக்கும் நாள் வரையும் நிபாக்கை
அவர்களது உள்ளத்தில் படிவாக ஆக்கிவிட்டான்”
ஒரு
சாதாரண விடயததில் கூட பொய் கலக்கக் கூடாது என்பதனை கண்டிப்பாக வழியுருத்தி உள்ளார்கள்.
عن
عبد الله بن عامر -رضي الله عنه- قال: دعتني أمي يومًا -ورسول الله - صلى الله
عليه وسلم - قاعد في بيتنا- فقالت: تعالَ أعطِك، فقال لها: ((ما أردتِ أن
تعطيه؟)). قالت: أردتُ أن أعطيه تمرًا. فقال النبي - صلى الله عليه وسلم -: ((أما
إنك لو لم تعطِه شيئًا كُتِبَتْ عليك كذبة))-أبو داود-.
அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(றழி) அவர்கள் கூறுகின்றார்கள்:ஒரு முறை றஸுலுல்லாஹ்(ஸல்)
அவர்கள் எமது வீட்டில் அமர்ந்திருக்கும் போது எனது தாய் என்னை;இங்கே வாருங்கள் உங்களுக்கு
ஒரு பொருள் தருகிறேன். என அழைத்தார்கள்.அப்போது நபியவர்கள் : பிள்ளைக்கு நீங்கள் என்ன
கொடுக்க விரும்பினீர்கள்? என கேட்டர்கள்.அதற்கு எனது தாய்:பிள்ளைக்கு நான் ஒரு ஈத்தம்
பழம் கொடுக்க விரும்பினேன் என்றார்.அதற்கு நபியவர்கள்:நீங்கள் பிள்ளைக்கு ஏதும் கொடுக்காதுவிட்டால்
நீங்கள் பொய் பேசியதாக பதியப்படும் என்றார்கள்.
விளையாட்டாகக் கூட பொய் என்பது ஒரு முஸ்லிமிடம் வந்து விடக் கூடாது எனபதனை
நபியவர்கள் வழியுருத்தியுள்ளார்கள்.
عن
معاوية بن حيدة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: " ويل
للذي يحدث القوم بالحديث , فيكذب ليضحكهم , ويل له , ويل له "
“மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய்யான விடயங்களை கூறுபவருக்கு கேடு உண்டாகட்டும்.
அவருக்கு கேடு உண்டாகட்டும்.அவருக்கு கேடு உண்டாகட்டும்.”
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: " لا يصلح الكذب في جد
ولا هزل , ولا أن يعد أحدكم ولده شيئا ثم لا ينجز له "
“அப்துல்லாஹ் இப்னு
மஸ்ஊத்(றழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:முக்கியமான விடயமாயினும் முக்கியமற்ற விடயமாயினும்
அதில் பொய் சரிப்பட்டு வரமாட்டாது. ஒருவர் தனது பிள்ளைக்கும் கூட வக்களித்துவிட்டு
அதனை நிறைவேற்றாது இருக்க வேண்டாம்.”
உண்மையாக நடப்பதுதான்
எமது வியாபார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை நன்மை பயப்பதாக,பரகத் உள்ளதாக மாற்றும்…வியாபாரத்தின்
நோக்கமும் மனித நலனே அல்லாமல் இலாபமல்ல…அது நிறைவேராத போது குறித்த செயல் அங்கீகரிக்கப்படாததாக
மாறிப் பேகிறது.
قَالَ
رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - : ”الْبَيِّعَان
ِبِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا
فَاِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَاِنْ كَتَمَا وكذبا
محقت بَرَكَةُ بَيْعِهِمَا-“صحيح البخاري-.
“வியாபாரத்தில் ஈடுபடுகின்ற இரு சாராறும் தாம் பிரிந்து செல்லும் வரை
தாம் மேற் கொண்ட வியாபார நடவடிக்கை தொடர்பில் தெரிவுக்குரியவர்கள்.அவர்கள் இருவரும்
வெளிப்படைத் தன்மையுடன் உண்மை பேசி நடந்து கொண்டால் அல்லாஹ் அவர்களது வியாபார நடவடிக்கையில்
அருள்பாளிப்பான்.அவர்களிருவரும் உண்மையை மறைத்து,பொய் கூறி நடந்து கெண்டால் அவர்களிருவரதும்
வியாபார நடவடிக்கையினது பரகத் நீக்கப்பட்டுவிடும்.”
பொய் சொல்பவர்களை அல்லாஹ் மறுமையில் எவ்வகையிலும் கணக்கில் எடுக்கமாட்டான்.
فقال
رسول الله –صلعم-: ((ثلاثة لا ينظر الله إليهم ولا يزكيهم ولا يكلمهم يوم القيامة
ولهم عذاب أليم)) قالوا: من هم يا رسول الله؟ قال: ((شيخ زانٍ، وملك كذاب، وعائل
مستكبر))-رواه مسلم-.
“மறுமை
நாளில் மூன்று நபர்கள் இருப்பார்கள்.அல்லாஹ் அவர்களை பார்க்கவோ,தூய்மைப்படுத்தவோ,அவர்களுடன்
பேசவோ மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனை இருக்கும். என நபியவர்கள் கூறியதைக் கேட்ட
ஸஹாபாக்கள் அவர்கள் யார் எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்:வயது முதிர்ந்த நிலையில்
விபச்சாரத்திலீடுபடுபவர்.பொய் பேசும் ஆட்சியாளன்.பெருமை பிடித்த ஏழை”
பொய் ஒரு மோசடியாகும்
وقال
صلى الله عليه وآله: «كبرت خيانة أن تحدث أخاك حديثاً هو لك به مصدق وأنت له به
كاذب»
“உனது சகேதரன் நீ உண்மை கூறுவதாக
உன்னை நம்பியிருக்க, அவனுக்கு நீ அவனுக்கு பொய் கூறுவது மிகப் பெரும் மோஷடியாகும்”
பொய் பேசுவதால் மலாஇகாக்கள் தூரப்பட்டுச்
செல்கின்றார்கள்
وقال صلى الله عليه وآله: «إن العبد ليكذب الكذبة فيتباعد
الملك منه مسيرة ميل من نتن ما جاء به».
“ஒருவர் பொய் பேசுகின்ற போது
அதன் துர் வாடை காரணமாக அவரிடமிருந்து மலக்கு ஒரு மைல் தூரமளவு விலகிச் செல்கிறார்”
عن عائشة - رضي الله عنها - قالت: " ما كان خلق أبغض إلى رسول
الله صلى الله عليه وسلم من الكذب, ولقد كان الرجل يحدث عند رسول الله صلى الله
عليه وسلم بالكذبة , فما يزال في نفسه [عليه] حتى يعلم أنه قد أحدث منها توبة
"
ஆயிஷா(றழி)அவர்கள்
குறிப்பிடுகிறார்கள்: “பெய்யைப் பார்க்கிலும் றஸுலுல்லாஹ்(ஸல்) அவர்களுக்கு மிகவும்
வெறுப்பான ஒரு பண்பு காணப்படவில்லை.நபியவர்களிடம் தொடர்ந்தும் பொய் பேசக் கூடிய ஒருவர்
பற்றி வெறுப்பான மனோ நிலையுடன் நபியவர்கள் தொடர்ந்தும் இருந்தார்கள்.அவர் தௌபா செய்ததாக
அறியும் வரை இன் நிலை நீடித்தது.
عن أبي بكرة نفيع بن الحارث رضي الله عنه قال: قال رسول الله صلى
الله عليه وسلم: (" ألا أنبئكم بأكبر الكبائر؟ , ألا أنبئكم بأكبر الكبائر؟ ,
ألا أنبئكم بأكبر الكبائر؟ " , فقلنا: بلى يا رسول الله , قال: "
الإشراك بالله وعقوق الوالدين وكان رسول الله صلى الله
عليه وسلم متكئا فجلس فقال: ألا وقول الزور ,
وشهادة الزور , ألا وقول الزور , وشهادة الزور قال: " فما زال رسول الله صلى
الله عليه وسلم يكررها " , حتى قلنا: ليته سكت).
“பெரும் பாவங்களுள்
மிகப் பெரும் பாவம் குறித்து உங்களுக்கு கூறட்டுமா?, பெரும் பாவங்களுள் மிகப் பெரும் பாவம் குறித்து உங்களுக்கு
கூறட்டுமா?, பெரும் பாவங்களுள் மிகப் பெரும்
பாவம் குறித்து உங்களுக்கு கூறட்டுமா? என நபியவர்கள் கேட்டதற்கு நாம் ஆம்,கூறுங்கள்
யாரஸுலல்லாஹ் என்றோம்.அதற்கு நபியவர்கள்:அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோருக்கு
மாறு செய்வதுமாகும் என்றார்கள்.சாய்ந்திருந்த நபியவர்கள் எழுந்து அமர்ந்து கொண்டு,அதில்
பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் உள்ளடங்கும், அதில் பொய் பேசுவதும் பொய் சாட்சியமும்
உள்ளடங்கும் என திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தார்கள். அவர் மௌனிக்கக் கூடாதா
என நாம் பேசிக் கொள்ளுமளவு அவர் அதனை கூறிக் கொண்டிருந்தார்.
இங்கு நபியவர்கள்
பொய்யை, அது சார்ந்த விடயங்களை எவ்வளவு தூரம் வெறுத்தார்கள் அதனை மிகப்பெறும் பாவமாகக்
கருதினார்கள் என்பதனை விளங்குகிறோம். உண்மையை கூறுவதில் அழிவுதான் இருப்பினும் உண்மை
கூறுவதே சிறப்பானது.
النبي عليه الصلاة والسلام يقول: (تحروا الصدق وإن رأيتم فيه الهلكة،
فإن فيه النجاة، وتجنبوا الكذب وإن رأيتم فيه النجاة؛ فإن فيه الهلكة)
“உண்மையாக இருப்பதில் அழிவு இருப்பினும் நீங்கள் அதனையே தேடுங்கள் ஏனெனில்
அதில் வெற்றியுள்ளது.பொய் சொல்லி தப்பிக்கலாம் என்றிருந்தாலும் நீங்கள் அதனை தவிர்ந்திருங்கள்.
ஏனெனில் அதில் அழிவு உள்ளது”
உண்மை நன்மையை நோக்கியும் நல்ல
முடிவை நோக்கியும் கொண்டு சேர்க்கும் பொய்
தீமையை நோக்கியும் மோசமான முடிவை நோககியும் கொண்டு சேர்க்கும்
قال - صلى الله عليه وسلم -: ”عليكم بالصدق، فإن الصدق يهدي إلى البر، وإن
البر يهدي إلى الجنة، وما يزال الرجل يصدق ويتحرى الصدق، حتى يكتب عند الله صديقا،
وإياكم والكذب، فإن الكذب يهدي إلى الفجور، وإن الفجور يهدي إلى النار، وما يزال
الرجل يكذب ويتحرى الكذب، حتى يكتب عند الله كذابا-“رواه مسلم-
“நீங்கள் உண்மையை கடைப் பிடியுங்கள்.உண்மை நன்மைக்கு வழிகாட்டும்.நன்மை
சுவனத்துக்கு வழிகாட்டும்.ஒரு மனிதர் உண்மை பேசி,முழுமையாக உண்மையை கடைப் பிடித்து
வந்தால்,அவர் அல்லாஹ்விடம் உண்மையாளராக எழுதப்படுவார்.பொய்யை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்.பொய்
பாவத்துக்கு வழிகாட்டும்.பாவம் நரகிற்கு வழிகாட்டும்.ஒரு மனிதர் பொய் பேசி,முழுமையாக
பொய்யை கடைப் பிடித்தால், அவர் அல்லாஹ்விடம் பொய்யராக எழுதப்படுவார்.”
(وَالَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ
أُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ) -الزمر: 33-.
“உண்மையை கொண்டு வந்தவரும்,அதனை நம்பி ஏற்றவர்களும் என அவர்கள் இரு சாராரும்தான்
தக்வா உள்ளவரகள்”
கஃப் இப்னு மாலிக் (றழி) சம்பவத்தை சொல்ல வந்த குர்ஆன் தவறு இழைத்தாலும்
எப்போதும் உண்மையாளர்களுடனேயே நீங்கள் இருங்கள். பொய்யர்களுக்கு சார்பாக இருக்காதீர்கள்
எனக் குறிப்பிடுகிறது.
”ياأيها
الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين“- التوبة:
119-
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்வதோடு,உண்மையாளர்களுடனும் இருங்கள்”
றமழான் இந்தப் பண்பு மாற்றத்தை எம்மிடம் ஏற்படுத்திக் கொள்வதற்கான சிறந்த
சந்தர்ப்பமாகும்.எம்மிடம் காணப்படும் தவிர்க்கப்பட வேண்டிய பண்புகளை மாற்றுவதற்கான
உடன்பாடான இடம்பாட்டை றமழான் கொண்டிருக்கிறது.ஏனெனில் றமழானில் நாம் பிடிக்கும் நோன்பு
ஒன்றை தவிர்ந்திருப்பதற்கு,செய்யாமலிருப்பதற்கான பயிற்சியை வழங்குகிறது.
الصوم
لغةً: الإمساك عن الفعل، وهو الامتناع عن الأكل والشرب في أوقات معلومة.
நோன்பு என்பது ஒரு
செயலை செய்யாமல் தவிர்ந்திருத்தல் என்ற கருத்தை கொடுக்கிறது.அதாவது உண்ணல்,குடித்தல்,உறவு
வைத்தல் என்பவற்றிலிருந்து குறித்த ஒரு காலப் பகுதிக்கு தவிர்ந்திருப்பதனையே நாம் நோன்பு
என்கிறோம்.
وفي الاصطلاح هو الإمساك عن المفطرات بقصد القربة
பரிபாஷையில் அல்லாஹ்வை நெருங்கும்
நோக்கில் நோன்பை முறிக்கும் விடயங்களில் இருந்து தவிர்ந்திருப்பது நோன்பாகக் கருதப்படுகிறது.
அத்துடன் நேரடியாகவே பொய்யை விட்டும்
தவிர்ந்திருப்பதை நோன்பின் நோக்கங்களுள் ஒன்றாக ஹதீஸ் குறிப்பிடுகிறது.
"من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه"
“யார்
பொய் பேசுவதையும் அதன்படி செயற்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும்
விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எவ்வித தேவையும் கிடையாது”.
عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
" من لم يدع الخنا والكذب، فلا حاجة لله - عز وجل - في أن يدع طعامه وشرابه
" (صحيح الترغيب والترهيب: 1080)
“யார் மோசமான செயல்களையும்
பொய்யையும் விடவில்லையோ அவர் உணவையும் பானத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எவ்வித
தேவையும் கிடையாது”
இந்தப் பண்பு எமது மாற்றத்துக்கு,முன்னேற்றத்துக்கு
பெரும் தடைக் காரணியாகக் காணப்படுகிறது.எமது பேச்சுக்களில்,எழுத்துக்களில்,அறிக்கைகளில்,மதிப்பீடுகளில்….சாதாரணமாக
இது கலந்து விடுவதைக் காண்கிறோம்.நாம் இதில் பலபோது கவனயீனமாக நடக்கின்றோம்…இதனால்
எத்தனையோ முன் நகர்வுகள் தடைப் பட்டுப் போகின்றன…பலபோது நாம் செய்யாதவற்றை செய்ததாகவும்…செய்தவற்றை
செய்யாததாகவும் கூறிக் கொள்கிறோம்…பலதை நகைச் சுவையாக கடந்து செல்கிறோம்….இப்படி ஏராளம்…இதனால்
நடிப்பவர்கள் நம்பப்படுகின்ற…பொய்கள் உண்மைப் படுத்தப்படுகின்ற அருவருப்பான ஒரு சூழலை
நாம் எதிர் கொள்ள நேரிடுகிறது… இந்த நிலை மாற்றப்படுவதற்கான சிறந்த காலமாக றமழான் காணப்படுகிறது…றமழானிலிருந்து
பாவமன்னிப்புப் பெற்று வெளியேறுவது என்றால் எம்மிலுள்ள பிழைகள், தவறுகள், பாவங்களிலிருந்து
விடுபட்டு நாம் வெளிவருவது என்பதுதானே அதன் அர்த்தம்….
“أَتَانِي جِبْرِيلُ، فقَالَ: يَا
مُحَمَّدُ، مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ، فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْتُ:
آمِينَ”
“என்னிடம் ஜிப்ராஈல் வந்து, முஹம்மதே! யார் றமழானை அடைந்தும்
பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அல்லாஹ் அவரை தொலையச் செய்யட்டும் என்று பிரார்த்தித்தார்
அதற்கு நான் இறைவா இதற்கு பதிலளிப்பாயாக என்று கூறினேன்” என நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்த நிலையிலிருந்து
எம்மை மாற்றுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதுடன் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வோம்.
ولنكثر من
الدعاء: ”وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ
صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَاناً نَصِيراً“ -الإسراء:80-.
“றப்பே! என்னை
உண்மையின் வாயிலால் நுழையச் செய்து, உண்மையின் வாயிலாலேயே வெளியேறச் செய்வாயாக. உன்னிடமிருந்து
மார்க்கத்துக்கு உதவுவதற்கான அதிகாரத்தையும் எனக்குத் தருவாயாக” என தஹஜ்ஜுத் நேரத்தில்
எழுந்து தொழுது பிரார்த்தியுங்கள் என அல்குர்ஆன் இதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு
வழிகாட்டுகிறது.
من الدعاء المأثور عن النبي صلى الله عليه وسلم: (اللهم اهدني لأحسن
الأعمال والأخلاق لا يهدي لأحسنها إلا أنت، واصرف عني سيئ الأعمال والأخلاق لا
يصرف عني سيئها إلا أنت).
“யாஅல்லாஹ்! சிறந்த
செயல்களையும் பண்பாடுகளையும் நோக்கி எனக்கு வழிகாட்டுவாயாக.உன்னைத்தவிர அவற்றில் சிறந்தவற்றை
நோக்கி யாராலும் வழிகாட்ட முடியாது.என்னிலிருந்தும் மோசமான செயல்கள்,பண்பாடுகளை திசை
மாற்றிவிடுவாயாக.அவற்றில் மோசமானவற்றை என்னை விட்டும் அகற்றக் கூடியவன் உன்னைத் தவிர
யாரும் இல்லை.”
No comments:
Post a Comment