Monday, May 22, 2017

الربانية وقيام الليل இறைவனைச் சார்ந்து வாழ்தலும் இரவுத் தொழுகையும் எம்.என். இக்ராம்


 "نحن رهبان بالليل وفرسان بالنهار"
நாம் இரவுத் துறவிகள்... பகல் கால குதிரை வீரர்கள்
 "كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون"
நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுப்பதன் மூலமும் அதனைக் கற்பதன் மூலமும் ரப்பானிய மனிதர்களாக ஆகுங்கள்.”


நாம் ரப்பானிகளாக வாழ்வது எவ்வாறு? அல்லாஹ்வுடன் தொடர்புள்ள உயிரோட்டமுள்ள உள்ளங்களாக எமது உள்ளங்களை மாற்றிக்கொள்வது எவ்வாறு? என்பது தொடர்பாக சிந்திக்கும் போது அதற்கான ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளோம். அது உளரீதியான ஆன்மீகப் பயணம்.
எந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கும் ஒரு வழிகாட்டி தேவை. அவ்வகையில் எமது இந்தப் பயணத்துக்கான வழிகாட்டியாக அல்குர்ஆன் காணப்படுகின்றது. எனவே,       “ لا ربانيه دون الاعتصام بالقران அதாவது அல்குர் ஆனுடனான பிணைப்பின்றி ரப்பானியப் பண்பைப் பெற முடியாது.
(إن هذا القران يهدى للتى هى أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا) 
இந்தக் குர்ஆன் மிக நேர்த்தியான சரியான விடயங்களை நோக்கி வழிகாட்டும். நல்ல செயல்களில் ஈடுபடும் முஸ்லிம்களுக் (பெரும் கூலி உண்டு என) நன்மாராயம் கூறுங்கள்.”
)كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون (
நீங்கள் வேதத்தைக் கற்பிப்பதன் மூலமாகவும் அதனைக் கற்பதன் மூலமாகவும், ரப்பானீக்களாக இருங்கள்.”
ஒருவரை அல்லாஹ்வுடன் பிணைத்துவிடுவதில் அல்குர்ஆனுக்குப் பெரும் பங்கு காணப்படுகிறது. ஒருவரை அல்லாஹ்வுடன் பிணைத்து விடுவதற்கு அல்குர்ஆன் தான் பொருத்தமான வாயிலாகும்.
(أو لم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن فى ذالك لرحمه وذكرى لقوم يؤمنون )
நாம் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்படக்கூடிய வேதத்தை இறக்கியருளியிருப்பது அவர்களுக்குப் போதுமானதாக இல்லையா? அதில் ஈமான் கொண்டவர்களுக்கு அருளும் நல்லுபதேசமும் காணப்படுகிறது.”
ஒருவன் அல்லாஹ்வைச் சார்ந்து வாழ்வதற்கான பாதை பிரதானமாக மூன்று விடயங்களுடன் தொடர்புபடுகின்றது:
1.    مع الله: அல்லாஹ்வுக்கான முழுமையான கட்டுப்பாடு.
2.    مع الناس: மனிதர்களுடனான உறவில் சிறந்த முறையில் நடத்தல்.
3.    مع النفس: மனதுடன் எச்சரிக்கையாக நடத்தலும் அதனுடன் தொடர்ந்து போராடுதலும்.

:مع الله
இதில் நாம் இங்கு பார்க்கப் போகின்ற விடயம் அல்லாஹ்வுடன் உறவு என்ற வட்டத்தில் வரும் விவகாரமாகும்.
உண்மையில் எல்லா இபாதத்களும் அல்லாஹ்வுடனான உறவை ஏற்படுத்தும் சாதனங்கள்தான் எனினும் அவற்றுள் முக்கியமான இரண்டு இபாதத்கள் அல்லாஹ்வுடனான உறவை மிகவும் பலப்படுத்தும். அவை தொழுகையும் திக்ர்-ஃபிக்ர் என்பவையுமாகும்.
உண்மையில் இறை நினைவும் இறை ஞாபகமும் தொழுகையுடன் இணைந்த வகையில் காணப்படும் இபாதத்களாகும்.தொழுகையில், ஃபர்ளுத் தொழுகைகளை அடுத்து முக்கியமான இபாதத்தாக இரவுத் தொழுகை காணப்படுகிறது.
இரவுத் தொழுகைக்குரிய அந்த நேரத்தில்தான் அல்லாஹ்வுடனான உறவைப் பலப்படுத்தும், முழுமைப்படுத்தும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
இரவு நேரத் தொழுகை இன்றி அல்லாஹ்வை நோக்கிய பயணம் இரு,க்க முடியாதுஎன்பது அனைத்து விதமான மனநல மருத்துவர்களும் அறிஞர்களும் ஒன்றுபட்ட விடயமாகும்.
يجمع كل علماء وأطباء القلوب أنه لا سير إلى الله بدون قيام
இரவுத் தொழுகையின் போதுதான் அல்குர்ஆனை நீண்ட நேரம் கருத்தூன்றி ஓதுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இவ்வகையில் ஒரு சகோதரர் தினமும் இரவுத் தொழுகையில் ஈடுபடுவது அவசியமாகும். ஒரு நாளேனும் இரவுத் தொழுகையில் ஈடுபடாது அதனைக் கடந்து செல்வது கூடாது. அப்படி நடந்தால்  அல்லாஹ்வை நோக்கிய எமது பயணம் பல பின்னடைவுகளைச் சந்திக்கலாம். எனவே தான் ஸலபுகள் இதனை விடாமல் கடைபிடித்தார்கள். ஸஹாபாக்கள் முதல் எமது ஸலபுகள் அனைவரதும் தவறாத பண்பாக இரவுத் தொழுகை காணப்பட்டது.
முஹம்மத் ஹபீப் அல்பாரிஸின் மனைவி அவரை இரவுத் தொழுகைக்காக எழுப்பக் கூடிய நேரத்தில்ஹபீபே! நீங்கள் எழுந்திருங்கள், பாதை நீண்டதாகக் காணப்படுகிறது. எமது  கட்டுச் சாதனம் குறைவாகவே உள்ளது. நல்லடியார்களின் பிரயாண வாகனங்கள் எம்மை முந்திவிட்டன. நாம் மாத்திரம் பிந்திவிட்டோம்.” எனக் கூறுவார்.
பகல் காலத்தில் எமது தஃவா ரீதியான மற்றும் தொழில் சார்ந்த வேலைப் பளுக்களின் காரணமாக இரவு நேரத்தில் நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுக்க வேண்டுமென எம்மிடம் ஒரு தவறான புரிதல் காணப்படுகிறது.
இந்தத் தவறான புரிதலை குர்ஆன் மறுக்கிறது. பகல் கால சுமைகள் இரவுத் தொழுகைகளால்தான் சுமக்க முடியுமானவை எனக் குர்ஆன் குறிப்பிடுகிறது.
)إن ناشئة الليل هى اشد وطئا وأقوم قيلا إن لك فى النهار سبحا طويلا(
இரவின் வளர்ந்துவரும் பகுதியானது, எந்த விடயமும் ஆழ்ந்து பதியக் கூடிய நேரமாகக் காணப்படுகின்றது.உங்களுக்குப் பகல் காலத்தில் நீண்ட நீச்சல் காணப்படுகிறது.”
(فإذا فرغت فانصب وإلى ربك فارغب)
நீங்கள் தஃவா வேலையிலிருந்து ஓய்வு பெற்றால் அல்லாஹ்வுக்கு முன்னால் நடப்பட்ட கல்லை போன்று நின்று வணங்குவீராக.உம்முடைய றப்பிடமே  எல்லா விருப்புக்களையும் வையுங்கள்
இரவுத் தொழுகை தூய மனிதர்களின் பாசறை... அந்தப் பாசறையில் தான் இவ்வுலகை வென்ற உயர்ந்த மனிதர்கள் உருவாகியிருக்கின்றார்கள். எனினும் இன்றைய தலைமுறையிடத்தில் இந்த ஸுன்னா மறக்கப்பட்ட ஒன்றாக மாறிப் போய் உள்ளது. இதனால் தஃவா சுமையானதாக மாறிவிட்டது. இந்நிலை மாற வேண்டுமாயின் அந்த ஸுன்னாவை நோக்கி நாம் மீண்டாக வேண்டும்.
கியாமுல் லைல் மிகச் சிறந்த வணக்கமாகும்:
عن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( أتاني جبريل فقال: يا محمد ! عش ما شئت فإنك ميت وأحبب من شئت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزي به واعلم أن شرف المؤمن قيامه بالليل وعزه استغناؤه عن الناس) رواه الحاكم والبيهقي وحسنه المنذري والألباني
ஒரு முறை ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் வந்து: முஹம்மதே! நிர் விரும்பிய அளவு வாழுங்கள்... ஆனால் நீங்கள் மரணிப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களுடன் நேசம் பாராட்டுங்கள்... ஆனால், அவரை நீங்கள் பிரிந்துவிடுவீர்கள். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்... ஆனால் அதற்குரிய கூலியை நீங்கள் கொடுக்கப் பெறுவீர்கள். அறிந்துகொள்ளுங்கள். ஒரு முஃமினின் சிறப்பு அவனது இரவுத் தொழுகையில் காணப்படுகிறது. அவனது கண்ணியம் மக்களிடம் அவன் தேவையற்றிருப்பதில் உள்ளது.” என்றார்கள்.
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل) رواه مسلم
பர்ளான தொழுகைக்குப் பின்னால் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.” (முஸ்லிம்)
عن صهيب بن النعمان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( صلاة الرجل تطوعا حيث لا يراه الناس تعدل صلاته على أعين الناس خمسا وعشرين ) رواه أبو يعلى بسند حسن
 “மக்கள் காணாத நேரத்தில் ஒருவன் தொழுகின்ற சுன்னத்தான தொழுகை மக்கள் காணும் நேரத்தில் தொழும் 25 தொழுகைகளுக்குச் சமனாகும்.”
கியாமுல் லைல் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும்:
قال النبي صلى الله عليه وسلم لمعاذ رضي الله عنه: ( ألا أدلك على أبواب الخير؟ الصوم جنة،والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار وصلاة الرجل من جوف الليل ثم تلا: { تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفاً وَطَمَعاً وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ . فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاء بِمَا كَانُوا يَعْمَلُونَ } السجدة: 16-17 ) رواه الترمذي بسند صحيح
நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரழி) அவர்களிடம்: “உமக்கு நான் நன்மையின் வாயில்களைக் காட்டித் தரட்டுமா?” எனக் கேட்டார்கள். பின்னர்நோன்பு என்பது கேடயமாகும். நீர் நெருப்பை அணைப்பது போன்று ஸதகா தவறுகளை அழித்து விடும். இரவின் நடுநிசியில் ஒருவன் எழுந்து தொழுவதும் அவ்வாறே...” என்று கூறிவிட்டுஅவர்களுடைய விலா எலும்புகளை படுக்கையிலிருந்து விலக்கி அல்லாஹ்விடம் பயத்துடனும் எதிர்பார்ப்புடனும் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்கான கூலியாக அல்லாஹ் அவர்களுக்காக மறைத்து வைத்துள்ள கண்குளிர்ச்சியை யாருமே அறியமாட்டார்கள்.” என்ற வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.
இரவில் நின்று வணங்குபவனுடன் அல்லாஹ் நெருக்கமாக இருப்பான்:
عن عمرو بن عبسة رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول: ( أقرب ما يكون الرب من العبد في جوف الليل الأخير فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فكن) رواه الترمذي بسند صحيح.
இரவின் கடைசிப் பகுதியில் இறைவன் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான். அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களுள் ஒருவராக உம்மால் இருக்க முடியுமாயின் இருந்துகொள்.
உள்ளத்திலிருந்து பொடுபோக்குத் தனத்தை இல்லாமல் செய்யும்:
عن عبدالله بن عمرو رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( من قام بعشر آيات لم يكتب من الغافلين ومن قام بمائة آية كتب من القانتين ومن قام بألف آية كتب من المقنطرين) رواه أبو داود بسند صحيح
யார் இரவில் பத்து வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் பொடுபோக்கானவர்களில் சேர்க்கப்பட மாட்டார். யார் நூறு வசனங்களை ஓதித் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்வோருடன்  சேர்க்கப்படுப்படுவார். யார் ஆயிரம் வசனங்களை ஓதித் தொழுகின்றாரோ அவர் பெரும் புதையல்களைப் பெற்றவர்கள் வரிசையில் சேர்க்கப்படுவார்.”
கீழ்வானத்துக்கு இறங்கி வரும் அருளாளனைச் சந்திக்கும் வாய்ப்பு:
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ( ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول: من يدعوني فأستجيب له؟ من يسألني فأعطيه؟ من يستغفرني فأغفر له؟) متفق عليه
ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அருளாளனும் உயர்ந்தவனுமான எங்கள் ரப்பு ஒவ்வோர் நாள் இரவிலும் அதன் மூன்றாம் பாகத்தில் கீழ் வானத்துக்கு இறங்கி வருகிறான். அந்த நேரத்தில் அவன் கூறுகிறான்: என்னிடம் பிரார்த்திப்பவர்கள் யாரும் இருக்கிறார்களா...? நான் அவர்களுக்குப் பதிலளிக்க...! என்னிடம் கேட்பவர்கள் யாரும் இருக்கிறார்களா...? நான் அவர்களுக்குக் கொடுப்பதற்காக...! என்னிடம் பாவமன்னிப்புக் கோருப்பவர்கள் யாரும் இருக்கிறார்களா...? நான் அவர்களுக்கு மன்னிப்பளிப்பதற்காக...?”
சுவனத்தின் விஷேட அறைகளுக்குச் சொந்தக்காரர்களாகலாம்:
عن علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( إن في الجنة لغرفاً يُرى ظهورها من بطونها وبطونها من ظهورها، فقام إليه أعرابي فقال: لمن هي يارسول الله؟ قال: هي لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى لله بالليل والناس نيام) رواه الترمذي بسند حسن
சுவனத்திலே விஷேட அறைகள் காணப்படுகின்றன. அவற்றின் வெளிப்பகுதியை உள்ளிருந்து பார்க்கலாம். உட்பகுதியை வெளியிருந்து பார்க்கலாம்என நபியவர்கள் கூறியதற்கு ஒரு நாட்டுப் புற அரபி எழுந்து, “அது யாருக்குரியது...? யா ரஸூலல்லாஹ்!” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்யார் நல்ல முறையில் தமது வார்த்தைகளை  அமைத்துக் கொள்கிறாரோ...! யார் உணவளிக்கிறாரோ...! யார் தொடர்ந்தேர்ச்சியாக நோன்பிருக்கிராரோ...! மேலும் மக்கள் உறங்கும் நேரத்தில் இரவில் எழுந்து நின்று வணங்குகிறாரோ...!  அவருக்குத் தான்எனப் பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் அன்பைப் பெறும் வாய்ப்பு:
عن أبي الدرداء رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( ثلاثة يحبهم الله ويضحك إليهم ويستبشر بهم - وذكر من بينهم - والذي له امرأة حسناء وفراش لين حسن فيقوم من الليل فيقول: يذر شهوته ويذكرني ولو شاء رقد) رواه الطبراني بسند حسن
மூன்று பேர் இருக்கிறார்கள்: அவர்களை அல்லாஹ் விரும்புகிறான். அவர்களைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான். அவர்களைப் பற்றித் தன்னுடன் உள்ளவர்களுக்குச் சிறப்பித்துக் கூறுவான். அவர்களில் ஒருவர்; அவருக்கு ஓர் அழகிய மனைவி இருப்பாள். வசதியான படுக்கை இருக்கும்... ஆனால் அவர் இரவில் எழுந்து நின்று வணங்குவார். அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் :அவன் தனது இச்சையை விட்டு விட்டு என்னை நினைவுபடுத்துகிறான். அவன் விரும்பியிருந்தால் உறங்கியிருக்கலாம்.”
மலாஇக்காக்களிடம் அல்லாஹ் பெருமை பாராட்டும் நிலை
عن ابن مسعود رضي الله عنه: عن النبي صلى الله عليه وسلم قال: (عجب ربنا تبارك وتعالى من رجلين: من رجل ثار من لحافه وفراشه من بين حبه وأهله إلى صلاته فيقول الله لملائكته: يا ملائكتي انظروا إلى عبدي هذا قام من بين فراشه ولحافه من بين حبه وأهله إلى صلاته رغبة فيها عندي وشفقة مما عندي) رواه أبويعلي بسند حسن
இரு மனிதர்களைப் பற்றி எங்களது றப்பு ஆச்சரியப்படுகிறான்.அதில் ஒருவர் தனது அன்புக்குரியவர்களையும் மனைவியையும் விட்டு விட்டு,தனது போர்வையை உதரித் தள்ளிவிட்டு அல்லாஹ்வை தொழுவதற்காக இரவில் எழுந்திருப்பவர்.அவரைப் பற்றி அல்லாஹ் மலக்குமார்களிடம் :எனது அடியானைப் பாருங்கள்  அவன் எனன்னிடம் இருக்கும் அருளில் விருப்பம் கொண்டும் எனது தண்டனைக்கு அஞ்சியும் தனது படுக்கை,போர்வை என தனது விருப்புக்குரியவை ,மனைவி என அனைத்தையும் ஒதுக்கிவிட்டு தொழுகைக்காக எழுந்திருக்கிறான். எனக் கூறுகிறான்.
நல்லடியார்களின் வழமை
عن أبي أمامة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وهو قربة إلى ربكم ومكفرة للسيئات ومنهاة للإثم) رواه الترمذي بسند حسن
நீங்கள் இரவிலே நின்று வணங்குங்கள்.அது ஸாலிஹீன்களது வழமையாக இருந்தது.அது உங்களது இறைவனை நெருங்கும் செயலாகும்.குற்றங்களுக்கு பரிகாரமாகும்.பாவங்களை தடுத்து விடக் கூடியதாகும்.”
உள்ளத்தில் குர்ஆனை பதியவைக்கும்
عن ابن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( إذا قام صاحب القرآن فقرأه بالليل والنهار ذكره وإذا لم يقم به نسيه) رواه مسلم
அல-குர்ஆனை சுமந்தவர் இரவில் எழுந்து நின்று வணங்கி அதனை ஓதுவாராயின் பகலில் அதனை நினைவு படுத்திக் கொள்ளலாம்.அவர் இரவில் எழுந்து நின்று வணங்காதுவிடின் அவர் அதனை மறந்து விடுவார்.”
இறை திருப்தியையும் சுவனமும்
عن عبدالله بن سلام رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام) رواه ابن ماجه بسند صحيح
மனிதர்களே!ஸலாத்தை பரப்புங்கள்.தேவையானோருக்கு உணவளியுங்கள்.மனிதர்களெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் எழுந்து தொழுங்கள்.சுவனத்துக்கு உங்களால் பாதுகாப்பாக நுழையலாம்.”
 இரவு நேர வணக்கம் தொடர்பாக நிறைய சிறப்புக்கள் இன்னும் இடம்பெற்றுள்ளன.ஐங்காலத் தொழுகை கடமையாக்க முன்னர் அல்லாஹுத் தஆலா நபியவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் ஆரம்ப ஒரு வருட காலமாக இரவுத் தொழுகையை கடமையாக்கியிருந்தான்.நபியவர்களுக்கு வாழ்நாள் முழுதும் இது கடமையாக இருந்தது.எனவேதான் நபியவர்கள் ஏதாவது காரணத்திற்காக இரவுத் தொழுகை தவறினால் அதனை அடுத்த தினம் காலையில் கலா செய்பவர்களாக இருந்தார்கள்.
 உண்மையில் எம்மிடம் இந்த இடத்தில் ஏற்படுகின்ற குறைபாடுதான் அணியின் ஏனைய குறைபாடுகள் அனைத்துக்குமான அடிப்படைகள்.நாம் அல்லாஹ்வுடனான உறவை இந்த இடத்தை மையப் படுத்தி சீர் படுத்த முடியுமாயின் தஃவாவில் நிறைய மாற்றங்களை நாம் எதிர்பாராத வகையில் காணலாம்.இந்த இரவுப் பள்ளிக்கு சமூகம் தந்து எமது அனைத்து பிரச்சினைகளையும் அல்லாஹ்விடம் முறையிட்டு தீர்வு தேடமுடியுமாயின் அதுவே எமது வெற்றியின் துவக்கப் புள்ளியாக இருக்கும்.
  றமழான் காலத்திலே தஃவாவுக்காக மனித உள்ளங்களை சம்பாதிக்க வேண்டும் என பள்ளிவாயில்களில் போய் நேரங்களை வீணாக்குவதைப் பார்க்கிலும் குறைந்தது இரவு 2.00 மணிக்காவது எழுந்து தொழும் வகையில் எமது நேரத்தை ஒழுங்கு பண்ணிக் கொள்வது மேலானது.மனிதர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் கையில் இருக்கின்றன.அவனை நாம் நெருங்கினால் அவன் அவற்றை எமக்கு வசப்படுத்தித் தருவான்.அப்படியல்லாமல் அவனுடன் போலியாக நடந்தால் மனிதர்களிடமிருந்தும் போலியான புன்முறுவல்கள் மாத்திரமே கிடைக்கும்.மனித உள்ளங்களை சம்பாதிக்க வேண்டுமா? நீங்கள் அதன் சொந்தக்காரனிடம் செல்லுங்கள்.வேறு எங்கும் பாதை தவரிச் சென்று கைசேதப்படாதீர்கள்.இந்த ஆபத்திலிருந்து றமழான் கால எமது இரவுத் தொழுகைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رضي الله عنه قَالَ: احْتَجَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حُجَيْرَةً بِخَصَفَةٍ أَوْ حَصِيرٍ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله علي وسلم يُصَلِّي فِيهَا، قَالَ: فَتَتَبَّعَ إِلَيْهِ رِجَالٌ وَجَاءُوا يُصَلُّونَ بِصَلَاتِهِ، قَالَ: ثُمَّ جَاءُوا لَيْلَةً فَحَضَرُوا، وَأَبْطَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْهُمْ، قَالَ فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ، فَرَفَعُوا أَصْوَاتَهُمْ، وَحَصَبُوا الْبَابَ، فَخَرَجَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُغْضَبًا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : «مَا زَالَ بِكُمْ صَنِيعُكُمْ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُكْتَبُ عَلَيْكُمْ، فَعَلَيْكُمْ بِالصَّلَاةِ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ خَيْرَ صَلَاةِ الْمَرْءِ فِي بَيْتِهِ، إِلَّا الصَّلَاةَ الْمَكْتُوبَةَ-مسلم-
"صلوا أيها الناس في بيوتكم، فإن أفضل الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة"-البخاري- 

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...