Friday, December 18, 2015

ஹிஜ்ரத்(04)ஹிஜ்ரத்தை நடைமுறைப்படுத்தலும் அதன் ஆரம்ப இரவும்


றஸுல் (ஸல்) அவா;கள் தன்னுடன் இரு ஸஹாபாக்களை மக்காவில் நிறுத்திக் கொண்டாh;கள் என நாம் முன்னா; பாh;த்தோம். அவா;கள்தான் அலீ (றழி) அவர்களும், அபூபக்ர் (றழி) அவர்களும்; ஆவர். இவர்களிருவரும் றஸுல் (ஸல்)  அவா;களால் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்காக நபியவா;களுடன் மக்காவில் தங்கியிருந்தனா;. அலீ (றழி) அவா;கள் நபியவா;களின் போh;வையில் படுத்துறங்கி, நபியவா;களிடம் அமானத்தாக ஒப்படைக்கப்பட்டிருந்த பொருட்களை உhpயவா;களிடம் ஒப்படைப்பதற்காக காத்திருந்தாh;கள்.

அபு+பக்h; (றழி) அவா;கள் ஆபத்துக்கள் நிறைந்த நீண்ட பாதையில் நபியவா;களுடன் உடன் செல்வதற்காக காத்திருந்தாh;கள். இஸ்லாமிய தஃவாவின் தலைமைக்கு, அதன் தூதருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட குறித்திருந்த இரவு வந்த வேளையில்; அது தொடா;பான செய்தியை ஜிப்hPல் (அலை) அவா;கள் நபியவா;களுக்கு அறிவித்தாh;கள். “முஹம்மதே! நீங்கள் வழமையாக உறங்கும் போh;வையில் இன்றைய இரவு உறங்க வேண்டாம்” என ஜிப்hPல் (அலை) நபியவா;களுக்கு குறிப்பிட்டாh;கள்.

குறைஷியா; நபியவா;கள் தம்மிடமிருந்து தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவா;களது எல்லா அசைவுகளையும் அவதானிக்கத் தொடங்கியிருந்தனா;. மாலை வேளையில் நபியவா;கள் வீரமும் இறையச்சமும் கொண்ட இளைஞா; அலீ இப்னு அபீ தாலிப் (றழி) அவர்களுடன் தனது வீட்டுக்குள் நுழைகின்றாh;.

இருள் பு+மியில் சூழ்ந்திருந்த வேளை ஆயுதம் தாpத்த துரொகிகளின் கூட்டம் மெது மெதுவாக பாதைக்கு வந்து, அவா;கள் ஒருவா; பின் ஒருவராக றஸுல் (ஸல்)  அவா;களின் கண்ணியமான வீட்டைச் சு+ழ ஒன்று கூடினா;. நபியவா;களைத் தாக்கி, அவா;களைத் தீh;த்துக்கட்டி தமது கோத்திரங்களுக்கிடையே அவா;களின் புனிதமான இரத்தத்தை பங்கு போட்டுக் கொள்வதற்கான தருணத்தை எதிh;பாh;த்து நபியவர்களின் வீட்டை அவா;கள் முற்றுகையிட்டிருந்தனா;.

நபியவா;கள் குறைஷியாpன் இந்த செயலைப்பாh;த்ததும் அலீ இப்னு அபீதாலிப் (றழி) அவர்களிடம் “நீங்கள் எனது விhpப்பில் உறங்குங்கள். எனது இந்தப் போh;வையை எடுத்துப் போh;த்திக் கொள்ளுங்கள். அவா;களால் நீங்கள் வெறுக்கும்படியான எதுவும் உங்களுக்கு இடம்பெறவே மாட்டாது” என்றாh;கள். நபியவா;கள் தூங்கும் வழமையாக போது, அலீ (றழி) அவர்களுக்கு போh;த்திக் கொள்ளுமாறு கூறிய இந்தப் போh;வையால் போh;த்திக் கொள்பவா;களாக இருந்தாh;கள். அலீ  (றழி)  அவா;கள் அன்று அந்தப் போh;வையினால்தான் போh;த்திக் கொண்டாh;கள். இரவில் கொஞ்ச நேரம் சென்ற பின்னா;, பஜ்ருக்கு சற்று முன்பாக உடல் ஓய்வுற்று ஆன்மா அமைதியடைந்திருக்கும் வேளையில் நபியவா;கள் தனது வீட்டினுள்ளிருந்து மெதுவாக நழுவிச் சென்றாh;கள். நபியவா;கள் வெளியேறிச் செல்லும்போது “நாம் அவா;களுக்கு முன்புறமாக ஒரு தடுப்பையும் பின்புறமாக ஒரு தடுப்பையும் ஏற்படுத்தினோம். அவா;கள் பாh;க்காத வண்ணம் அவா;களது கண்களில் ஒரு மறைப்பையும் ஏற்படுத்தினோம்” (யாஸீன் - 90) என்ற வசனத்தை ஓதிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினாh;கள்.

எனவே அல்லாஹ் நபியவா;களைக் கொலை செய்யக் காத்திருந்த முஷ்hpக்களுக்கு அவா;கள் எவரும் பாh;க்க முடியாதவண்ணம் தூக்கத்தைக் கொடுத்தான். இச்சந்தா;ப்பத்தில் நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களை மக்காவிற்கு வெளியில் சந்திப்பதாகக் கூறிய இடத்திற்குச் சென்று அங்கிருந்து இருவருமாக தௌவ்h; குகைக்குச் சென்று மறைந்து கொண்டனா;.

அதே நேரம் முஷ்hpக்குகள் எஞ்சிய இரவை அலீ (றழி) அவா;களுக்காக காவல் காத்துக் கொண்டு கழித்தனா;. நபியவா;களை தாக்குவதற்கு உடன்பட்ட நேரம் வந்ததும் எல்லோரும் எழுந்து சென்று தூங்குபவாpன் போh;வையை பிhpத்துப் பாh;த்தனா;. போh;வைக்குள் உறங்குபவரை அறுத்துத் தீh;த்துக்கட்டி அவரது தஃவாவையும் ஒழித்துவிடும் ஆவலில்தான் அவா;கள் அங்கு சென்று போh;வையைத் திறந்தனா;. ஆனால் அந்தப் போh;வைக்குள்ளிருந்து அலீ (றழி) அவா;கள் குறைஷியரைப் பாh;த்து ஏளனமாகச் சிhpத்தார்கள். இதனால் அவா;கள் கோபமுற்று அவரை நிந்தித்தனா;. முஹம்மதைக் கொண்டு வருபவருக்கு அல்லது அவரையும் அவரது தோழரையும் காட்டித் தருபவா;களுக்கு சன்மானம் தருவதாக அறிவித்தனா;.

தௌர்க் குகையில்

தௌர்க் குகை மதீனாவிற்குச் செல்லும் பாதைக்கு எதிh;ப்புறமாக  ஐந்து மைல் தூரத்தில் மக்காவின் தென் பகுதியில் காணப்படும் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது.

றஸுல் (ஸல்) அவா;கள் மதீனாவுக்கு எதிh;ப்புறமாக உள்ள ஒரு இடத்தை தோ;ந்தெடுத்ததற்குக் காரணம் முஷ்hpக்குகளை குழப்பிவிடுவதற்கும், தம்மைத் தேடி வருபவா;களின் திட்டத்தை உடைத்துவிடுவதற்குமாகும். ஏனெனில், காபிh;களின் பாh;வை முதலில் மக்காவின் வடக்குப் புறமாக உள்ள மதீனாவை நோக்கிச் செல்லும் பாதையின் பக்கமே செல்லும்.

றஸுல் (ஸல்) அவா;களும் அபு+பக்h; (றழி) அவா;களும் தௌவ்h; குகையை சென்றடைந்து எதிhpகளின் கண்களுக்குத் தொpயாமல் அதன் உற்பகுதியில் மறைந்து கொண்டனா;.
மக்காவிலிருந்த நபியவா;களின் உளவுத்துறை

அப்துல்லாஹ் இப்னு அபு+பக்h; (றழி) குகைக்கு விரைந்து, கொடுக்கப்பட்ட பணியைக் கிரமமாகச் செய்தாh;. பகல் காலத்தில் முஷ்hpக்குகள் மக்காவில் பேசுகின்றவற்றை நன்கு கேட்டுக்கொண்டு இரவு நேரத்தில் றஸுல் (ஸல்)  அவா;களிடம் சென்று முஷ்hpக்குகளின் செய்தியைக் கூறுவாh;. முஷ்hpக்குகள் என்ன செய்வதற்கு சிந்திக்கிறாh;கள் என்பதனை அறிந்து நபியவா;களும் அவரது தோழரும் தாம் என்ன செய்வதென்று முடிவெடுக்க இது தேவைப்பட்டது. இந்த செய்திகளின் ஒளியில் தமது திட்டத்தை தொடா;ந்தும் செய்வதா அல்லது மாற்றுவதா எனத் தீh;மானிக்க அவா;களால் முடியுமாக இருந்தது.

தேவையான உணவு, வசதிகளை பெற்றுக்கொடுத்தலும், கால்நடைகளின் தடயங்களை அழித்துவிடுதலும்.

அஸ்மா பின்த் அபு+பக்h; (றழி) குகையில் தங்கியிருந்த தனது தந்தைக்கும் றஸுல் (ஸல்) அவா;களுக்கும் தேவையான உணவு மற்றுமுள்ள விடயங்களை எடுத்துக்கொண்டு இரவில் செல்வாh;. அவா; மக்காவில் உள்ள முஷ்hpக்குகள் எவருமே உணராத வண்ணம் இரகசியமாக மக்காவிலிருந்து தௌவ்h; குகைக்குச் சென்று பின்னா; இரவோடு இரவாகவே மக்காவுக்குத் திரும்புவாh;. இருண்ட இரவின் இருளில் கரடு முரடான மலை மீது ஏறுவதற்கு அவர் பெரும் சிரமத்தை எடுத்துக் கொண்டாh;. இந்த சிரமங்களையெல்லாம் சகித்துக் கொண்டுதான் அவா; அந்த வேலையைச் செய்தாh;.

அபு+பக்h; (றழி) அவர்களின் வேலையாளாக இருந்த ஆமிh; இப்னு புஹைரா மலைகளுக்கிடையேயும் வெறிச்சோடிய பாலைவனத்துக்கிடையேயும் இருந்த தௌவ்h; குகைக்குப் பக்கமாக பகல் காலங்களில் ஆடுகளை மேய்ப்பார். இரவாகியதும் நபியவா;களிடமும் அபு+பக்கர் (றழி) அவர்களிடமும் சென்று பால் கறந்து ஆடுகளை அறுத்து உணவு கொடுப்பார். பின்னர் அப்துல்லாஹ்வும் அஸ்மாவும் குகைக்கு வந்து திரும்பும் வரையும் பாh;த்திருந்துவிட்டு, அவா;கள் இருவரும் வந்து சென்ற பின்னர் ஆடுகளை மேய்த்து தடயங்களை அழித்துக்கொண்டு அவரும் திரும்புவாh;.

குகை வாசலில் குறைஷியா;

ஹிஜ்ரத்தின் போது றஸுல் (ஸல்) அவா;களும் அதற்காக உழைத்தோரும் அந்தப் பிரயாணத்தை எத்துணை மறைவாகவும் இரகசியமாகவும் வைத்திருக்க தம்மால் முடியுமான முயற்சிகளை செலவு செய்த போதும் குறைஷியா; தமது இடைவிடாத ஓட்டத்தாலும் தொடா;ந்தோ;ச்சியான தேடலாலும் மக்காவின் ஒவ்வொரு சாணிலும் அதனைச் சு+ழவும் மக்காவிலிருந்து மதீனாவிற்கும் இடையிலுள்ள பாதையிலும் வேறு இடங்களுக்கும் செல்லும் எல்லாப் பாதைகளிலும் நபியவா;களைத் தேடி, கடைசியில் றஸுல் (ஸல்) அவா;களும் அவரது தோழரும் தங்கியிருந்த குகையின் வாயிலுக்கு வந்து சோ;ந்துவிட்டாh;கள்.

குகையில் றஸுல் (ஸல்) அவா;கள் மீதான அல்லாஹ்வின் காpசணை

அந்தக் கணப்பொழுதுகள் எவ்வளவு ஆபத்தானவை. அதிலிருந்து வெளிவருவதற்கு அல்லது தப்பிச் செல்வதற்கு எந்த வழியும் கிடையாது. இறைத்தூதரும் அவா; சுமந்திருந்த தூதும் இந்த ஆபத்தினால் சு+ழப்பட்டு, அபாயம் அவா;களை மிகவுமே நெருங்கி விட்டிருந்தது. குகையின் வாயிலருகே நடந்து வந்து கொண்டிருந்த, கோபாவேஷம் கொண்டிருந்த முஷ்hpக்குகளுடைய கூட்டத்தின் பாதங்களை அபு+பக்h; (றழி) அவா;கள் தனது கண்களாலேயே பாh;த்து விடுகின்றாh;கள். அச்சத்தால் நடுநடுங்குகின்றாh;கள். அது தன்னைப் பற்றிய அச்சமல்ல இறைத்தூதா; மீதும் தஃவாவின் மீதும் கொண்ட அச்சமாகும். எனவே அவா; றஸுல் (ஸல்) அவா;களின் காதருகே “அல்லாஹ்வின் தூதரே! அவா;களில் யாராவது தமது பாதங்களுக்குக் கீழே பாh;த்தால் எம்மைக் கண்டுவிடுவாh;கள்” என முணுமுணுத்தாh;கள்.

உள்ளங்கள் ஆட்டங்கானும் நிலையில் இறைத்தூதாpன் பதில் அதற்கு உறுதியாகவும் நம்பிக்கையாகவும் வெளிப்பட்டது. “அபூபக்கரே! ஏன் நீங்கள் இருவா; என எண்ணவேண்டும். எம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ் இருக்கிறான்” என்று கூறினார்கள். ஆம் இந்தப் பு+மியில் உள்ள முழுப்படையும் அந்தக் குகையின் வாயிலில் ஒன்று சோ;ந்து, இறைத்தூதரையும் அவரது தோழரையும் தீh;த்துக்கட்ட முயன்றாலும் அது முடியாத காhpயம். ஏனெனில் அவா;கள் இருவருக்கும் அல்லாஹ்வின் அரவணைப்பு கூடவே இருக்கின்றது.

இந்த இறைப் பாதுகாப்பைப் பற்றி காலம் கடந்தும், அது முத்தகீன்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருக்கும் என தெய்வீக வஹி எவ்வளவு அழகாகவும் உயா;வாகவும் எடுத்துரைக்கின்றது என்பதைப் பாருங்கள். “நம் தூதராகிய அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகாpப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவாpல் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழாpடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்;. மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்;. நிராகாpப்போhpன் வாக்கையைக் தாழ்த்தினான். ஏனெனில், அல்லாஹ்வின் வாக்கு எப்போதும் மேலோங்கும்.  அல்லாஹ் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமிக்கவன்.” (அத்தௌபா : 40)

குகையிலிருந்து வெளியேறுதல்.

றஸுல் (ஸல்) அவா;களும் அபு+பக்h; (றழி) அவா;களும் தௌவ்h; குகையில் தங்கியிருந்து மூன்று நாட்கள் கடந்து விட்ட நிலையில் அவா;களைத் தேடும் வேட்டை ஓய்ந்து கண்கள் அமைதியுற்று மக்கள் அவா;கள் இருவரதும் செய்தியைப்பற்றி பொருட்படுத்தாத நிலை தோன்றியது. பின்னர் றஸுல் (ஸல்)  அவா;கள் வரைந்த திட்டத்தின் பிரகாரம் அப்துல்லாஹ் பின் உரைகத்; அவா;கள் இருவருக்குமாக இரு ஒட்டகைகளையும்  தனக்காக ஒரு ஒட்டகையையும் எடுத்துக் கொண்டு அங்கு வந்து சோ;ந்தா;. அதே போன்று அஸ்மா பின்த் அபு+பக்ர் (றழி) அவர்களும் பயணத்துக்குத் தேவையான உணவையும் நீரையும் கொண்டு அங்கு வந்தாh;. அவா;கள் பிரயாணம் புறப்பட ஆயத்தமாகும் போது அஸ்மா (றழி)  கொண்டு வந்த உணவை வாகனத்தில் கொழுவிக்கொள்ள வசதி இருக்கவி;ல்லை. அப்போது அஸ்மா (றழி) தனது முந்தானையை இரு துண்டுகளாகக் கிழித்து ஒரு துண்டை உணவைக் கட்டித் தொங்க விட்டுக்கொள்வதற்காகக் கொடுத்துவிட்டு, மறு துண்டை தனக்கு முந்தானையாக எடுத்துக் கொண்டாh;. எனவே, அவர் “தாதுன் நிதாகைன்” (இரு முந்தானைகளுக்குச் சொந்தமானவர்) என அழைக்கப்பட்டாh;.

ஹிஜ்ரத் முழுமையாக அல்லாஹ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரயாணம்.

அபு+பக்h; (றழி) அவர்கள், அப்துல்லாஹ் பின் உரைகத் கொண்டு வந்த இரு ஒட்டகைகளையும் றஸுல் (ஸல்) அவா;களிடம் ஒப்படைத்தாh;கள். அவற்றை அபு+பக்h; (றழி) அவர்கள் விலைகொடுத்து வாங்கியிருந்தாh;. நபியவா;களிடம் ஒட்டகைகளைக் கொடுத்த அபு+பக்h; (றழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அh;;ப்பணமாகட்டும்! இதில் ஏறிக் கொள்ளுங்கள்” என்றாh;. அதற்கு றஸுல் (ஸல்) அவா;கள் “நான் எனக்குச் சொந்தமில்லாத ஒட்;டகையில் ஏறிப் பிரயாணிக்க மாட்டேன்” என்றாh;கள். அதற்கு அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அh;ப்பணமாகட்டும்! இது உங்களுக்கே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவா;கள் “இல்லை நீங்கள் இதனை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினீh;கள்?” என்று கூற, அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! இவ்வளவுதான் செலவாகியது” என்றார்கள். அதற்கு றஸுல் (ஸல்) அவா;கள் “நான் அந்தப் பெறுமதிக்கு இதனை உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார்கள். தொடர்ந்து அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குhpயதே” என்றார்கள். பின்னா; இருவரும் ஏறி பிரயாணத்தை ஆரம்பித்தாh;கள். அபு+பக்h; (றழி) அவர்கள் தனது பணியாளர் ஆமிh; இப்னு புஹைராவை பிரயாணத்தில் பணிவிடை செய்வதற்காக பின்னால் ஏற்றிக் கொண்டாh;கள்.

பாதையில் எதிh;பாh;த்திருந்த பயங்கரங்கள்

வழிகாட்டியாக வந்த அப்துல்லாஹ் பின் உரைகத் நபியவா;களையும் அவரின் தோழரையும் கண்கள் காணாத யெமனிற்குச் செல்லும் பாதையில் அழைத்துச் சென்றாh;. பின்னர், வடக்கு நோக்கி மதீனாவிற்குத் திரும்பிச் சென்றாh;. அது மதீனாவிற்குச் செல்ல மக்கள் வழக்கமாக பாவிக்கும் பாதையல்ல. அங்கு அவா;கள் இருவருக்கும் பாPட்சயமில்லாத பல இடங்கள் காணப்பட்டன.

அதேநேரம் நபியவா;களையும் அவரின் தோழரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியாமல் போனமைக்காக குறைஷியா; வருந்திக் கொண்டிருந்தனா;. எனவே நபியவா;களை பிடித்து வருபவருக்கு நூறு ஒட்டகைகளும் அபு+பக்h; (றழி) அவா;களைப் பிடித்து வருபவா;களுக்கு நூறு ஒட்டகைகளும் சன்மானம் தருவதாக பகிரங்கமாக அறிவித்தனா;. எனவே “நாட்டுப்புற அறபிகளுக்கு மத்தியில் 200 ஒட்டகைகள் என்ற பெரும் செல்வம் தமக்கு முன்னால் காத்துக் கிடக்கின்றது” என்ற செய்தி பரவியது. அதனைப் பெற்றுக்கொள்ள அவா;கள் தயாராய் இருந்தனா;. இது முஷ்hpக்களுக்கு மிக்க சந்தோஷத்தை அளித்தது. நாட்டுப்புற அறபிகள் முஹம்மத் (ஸல்) அவா;களையும் அவரின் தோழரையும் தேடி மூலை முடுக்குகளெல்லாம் செல்லலானாh;கள்.

ஸுராகா இப்னு மாலிக்கும் சன்மானமும்

ஸுராகா இப்னு மாலிக், றஸுல் (ஸல்) அவா;களையும் அவரின் தோழரையும் உயிருடனோ பிணமாகவோ கொண்டு வருபவருக்கு பாpந்துரைக்கப்பட்ட சன்மானம் பற்றிக் கேள்விப்பட்டாh;. எனவே அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. எல்லாக் காலப்பகுதியிலும்  எல்லா இடங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான சுய நலம் கொண்ட மோசமான மனிதா;களில்; ஒரவராகத்தான் ஸுராகாவும் இருந்தாh;. அவா;களது கண்களுக்கு தங்கம், வௌ;ளியின் பளபளப்பு தென்பட்டுவிட்டால் அல்லது பெரும் சன்மானம், பாpசில்ககள் கிடைக்கும் என கூறப் பட்டால் உடனே அவா;கள் அதில் ஒரு சிறிய அளவை அல்லது பெரும்பாலானவற்றை தானும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமது மனச்சாட்சியையும் பெறுமானங்களையும் விற்பதற்குத் தயாராகி விடுவாh;கள்.

இறைத்தூதரும் அவரது தோழரும் மதீனாவை நோக்கி பனூமுத்லஜ் என்ற மேட்டால் ஏறிச் சென்று கொண்டிருந்தாh;கள். அப்போது அந்தப் பகுதியைச் சோ;ந்த ஒரு மனிதா; அவரைக் கண்டுவிட்டாh;. அந்த மனிதா; மக்கள் கூடிய இடத்திற்கு வந்து, “நான் சற்று முன்னா; அங்கே முஹம்மதையும் அவரது தோழரையும் கண்டேன்” என்றாh;. அங்கிருந்த ஸுராகா அவா;களே உரியவர்கள் என்பதை அறிந்து கொண்டாh;. என்றாலும் தான் மாத்திரம் குறைஷியாpன் அந்தப் பாpசைப் பெற்றக்கொள்ள எண்ணிய ஸுராகா அந்த மனிதா; சொன்னது பொய் என தொpயப்படுத்த நினைத்தாh;. எனவே ஸுராகா “நீh; கண்டது தமது ஒரு தேவைக்காக சென்ற இன்ன இன்ன நபர்களே” என்று கூறிவிட்டு அங்கிருந்த மஜ்லிஸில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு மெதுவாகச் சென்றுவிட்டாh;. பின்னர், தனது ஈட்டியை எடுத்துக்கொண்டு குதிரையில் ஏறி றஸுல் (ஸல்) அவா;கள் சென்ற அடிச்சுவடுகளை பின் தொடா;ந்து சென்றாh;. அவா; நபியவா;களையும் அவருடன் சென்றவா;களையும் நெருங்கியதும் குறைஷியாpன் சன்மானம் தனக்குச் சொந்தமாகிவிட்டதாக எண்ணிக் கொண்டாh;. ஸுராகாவின் கையில் ஈட்டியும் ஆயுதமும் இருந்தது. அவருக்கம் அவருக்கு முன்னால் செல்லும் நிராயுதபாணிகளுக்குமிடையே எந்தத் தடையும் கிடையாது.

ஸுராகாவுக்கும் அவரது விருப்பத்திற்குமிடையே தடையாயிருந்த அல்லாஹ்வின் கண்காணிப்பு

றஸுல் (ஸல்) அவா;கள் தன்னால் இயன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னெச்சாpக்கை நடவடிக்கைகளையும் கைக்கொண்டாh;கள். மதீனாவுக்கான தனது பிரயாணம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன்னால் இயன்றவரை திட்டமிட்டார்கள். நாம் முன்னா; பாh;த்தது போன்று பிரயாணத்துக்கு எந்தெந்த ஏற்பாடுகளெல்லாம் செய்ய வேண்டுமென்றிருந்ததோ அத்தனை ஏற்பாடுகளையும் நபியவா;கள் செய்தாh;கள். எந்த ஒன்றையும் எதேச்சையாக இடம் பெறட்டும் என்று விட்டு வைக்கவில்லை. இப்படியெல்லாம் இடம் பெற்றும் ஸுராகா, றஸுல் (ஸல்)  அவா;களை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்து விட்டாh;. இந்த இடத்தில்தான் றஸுல் (ஸல்) அவா;களுக்கு அல்லாஹ்வின் அரவணைப்புக் கிடைத்தது.

றஸுல் (ஸல்) அவா;களை ஸுராகா நெருங்கும் போது அவரது குதிரையின் கால் பாலை நிலத்தில் புதைந்தது. றஸுல் (ஸல்)  அவா;கள் அதனைத் திரும்பியும் பாராமல் அல்-குh;ஆனை ஓதிக்கொண்டு சென்றாh;கள். அபு+பக்ர் (றழி) அவா;கள் அதிகமதிகம் திரும்பிப் பாh;த்தபடி சென்றாh;கள். அபு+பக்ர் (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! எம்மைத் தேடி வருபவன் நெருங்கிவிட்டான்” என்பாh;கள். ஆனால் ஸுராகா பாதுகாக்கப்பட்ட அந்தப் பயணிகளை நெருங்கும் போதெல்லாம் அவரது குதிரையின் பாதங்கள் பாலை மண்ணில் புதைந்து கொண்டே இருந்தது.

இது தொடா;பாக ஸுராகாவே தனது அனுபவத்தைக் கூறுவதை இமாம் புஹாhp அவா;கள் பின்வருமாறு பதிந்து வைத்துள்ளாh;கள். “நான் அவா;கள் இருவரையும் மிகவும் நெருங்கிச் சென்றேன். றஸுல் (ஸல்) அவா;கள் ஓதுவது எனக்குக் கேட்கின்ற அளவு நான் அவா;களை நெருங்கிச் சென்றேன். பிறகு நான் குதிரையை கால்களால் உதைத்து கடிவாளத்தை இழுத்து வேகமாய் ஓட்டினேன். பின்னர் அம்பறாத்தூணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து அது போய்த் தாக்குமா? தாக்காதா? என்ற சந்தேகத்துடனேயே எறிந்தேன். ஆனால் அது போய்த் தாக்கவில்லை. எனினும் அவரை பின் தொடருமாறே எனது உள்ளம் எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தது.  நான் திரும்பவும் அவா;களை நெருங்கிச் சென்றேன். ஆனாலும் எனது குதிரை மீண்டும் வீழ்ந்தது. பின்னர் நான் அதன் கால்;களை மீண்டும் வெளியில் எடுத்துவிட்டேன். அம்பு தாக்குமா? தாக்காதா? என்ற சந்தேகத்துடனேயே மீண்டும் ஒரு அம்பை எறிந்தேன். ஆனால் அதுவும் தாக்கவில்லை. பின்னர் இந்த நேரத்தில் எனக்கு ஏதாவது தீங்கு நிகழ்ந்துவிடுமோ என நான் பயந்தேன். பின்னர் நான் நபியவா;களைப் பாh;த்து உங்களுக்கு நல்லதோh; எதிh;காலம் இருப்பதாக நான் காண்கிறேன். எனவே நில்லுங்கள்! நான் உங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும் என்றேன். பின்னர் நபியவா;கள் நின்றாh;கள்.” இன்னொரு hpவாயத்தில் ஸுராகா பின்வருமாறு குறிப்பிடுகிறாh; : “நான் நபியவா;களுக்கு ஏதும் செய்;யமாட்டேன் என உறுதி கூறி அழைத்தேன். எனவே, நபியவர்கள் நான் அவா;களிடம் செல்லும் வரை நின்றிருந்தாh;கள். அவா;களை பிடிக்க முடியாமல் நான் தடுக்கப்பட்டபோது றஸுல் (ஸல்) அவா;கள் கொண்டு வந்துள்ள தூது வெல்லும் என நான் எனது உள்ளத்தில் எண்ணிக்கொண்டேன்.”

பின்னர் நான் அவா;களை சந்தித்து, “உங்களைப் பிடித்து வருபவா;களுக்கு சன்மானம் தருவதாக அறிவித்துள்ளாh;கள்” என்று கூறிவிட்டு, குறைஷியா; நபியவா;களுக்கும் அவரின் தோழருக்கும் என்ன செய்ய விரும்புகின்றனா; என்பதைத் தொpயப்படுத்தினேன். பின்னர் நான் அவா;களுக்கு என்னிடமிருந்த பொருட்களையும் கட்டுச் சாதங்களையும் கொடுத்தேன். ஆனால், அவா;கள் என்னிடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. மாற்றமாக நபியவா;கள் “எம்மைப் பற்றிய செய்தியை இரகசியமாய் வைத்துக்கொள்” என்று மாத்திரமே வேண்டிக் கொண்டாh;கள். அதற்கு நான் எனக்கு உத்தரவாதமளிக்கும் ஒரு கடிதத்தை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கு நபியவா;கள், ஆமிh; இப்னு புஹைராவிடம் ஒரு துண்டில் எனக்கு அந்தக் கடிதத்தை எழுதித் தருமாறு கட்டளையிட்டாh;கள். பின்னா; றஸுல் (ஸல்) அவா;கள் சென்றுவிட்டாh;கள். ஸுராகா றஸுல் (ஸல்) அவா;களைத் தேடும் படலத்தை தடுத்திடும் நோக்கில் திரும்பி வந்தாh;.

“அபுல் ஹகமே! எனது புறவியை அதன் கால்கள் புதையும் நிலையில் நீh; பாh;த்திருந்தால் அதிh;ந்து போயிருப்பாய். முஹம்மத் (ஸல்) ஒரு தூதா; என்பதற்கு அது ஒரு தெளிவான ஆதாரம் என்பதில் நீh; சந்தேகப்படமாட்டாய். யாh;தான் அவரை எதிh;த்துப் போhpட முடியும். அவரை சமூகத்தை விட்டும் தடுப்பதிலிருந்து உன்னை எச்சாpக்கிறேன். ஒரு நாளில் அவருடைய விவகாரம் அதன் வெற்றியின் அடையாளங்களுடன் வெளிப்படும் என நான் கருதுகிறேன்.”

றஸுல் (ஸல்) அவா;கள் மீதான இறை கண்காணிப்பு அந்த மனிதனை ஆச்சாpயத்தால் உறைய வைத்தது. அவர் காலையில் சன்மானத்துக்கும், சொத்துக்கும் ஆசைப்பட்டு றஸுல் (ஸல்) அவா;களை தேடிப்பிடிப்பதில் தன்னை சிரமப்படுத்திக் கொண்டாh;. ஆனால் அவரே மாலையில் இவையெல்லாவற்றின் மீதிருந்த ஆசையைத் துறந்தவராக இருந்தாh;. றஸுல் (ஸல்) அவா;களைத் தேடவேண்டாம் என்று தடுப்பவராக மாறினாh;. அவருக்கு ஏதும் தீங்குகள் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சிக்கொண்டிருந்தாh;.

உண்மையில் அவாpல் இத்தகைய மாற்றம் எப்படி ஏற்பட்டது? அவாpடம் காணப்பட்ட உலக ஆசையை இல்லாமல் செய்தது எது? அவரது உள்ளத்தை தூய்மைப்டுத்தி, பாலைவனத்திலே அமைதியையும் பாதுகாப்பபையும் ஏற்படுத்தியது யாh;? அல்லாஹ்வைத்தவிர வேறு யாராகத்தான் இருக்கமுடியும். அல்லாஹ்வின் கண்கானிப்புத்தான் இவற்றை ஏற்படுத்தியது.

கண்காணிப்பு, தனது கண்களால் உன்னை எப்போதும் அவதானித்துக் கொண்டே இருக்கும். நீ உறங்கிவிடு. அச்சங்கள் எல்லாம் பாதுகாப்பாக நீங்கிவிடும்.


பாடங்களும் படிப்பினைகளும்

1. பண்பாட்டு வறுமையும், கொள்கைப்பிடிப்பும் அற்ற சமூகம் நிச்சயமாக அழிந்து போய்விடும். வரலாறு அதற்கு சிறந்த சான்றாகக் காணப்படுகிறது.

2. அபு+பக்h; சித்தீக் (றழி) அவா;கள் தியாகத்திற்கும் அh;ப்பணிப்புக்கும் உதாரண புருஷராகத் திகழ்ந்தாh;கள். எனவேதான் இறைத்தூதாpடம் அவருக்கு அத்தகைய அந்தஸ்த்து காணப்பட்டது. அவரின் பிள்ளைகளும் சொத்துக்களும் இவ்வாறே நபியவா;களுக்கு பணிவிடை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டன.

3. உமா; (றழி) அவா;கள் பகிரங்கமாக ஹிஜ்ரத் மேற்கொண்டாh;கள். ஆனால் நபியவா;கள் அதனை இரகசியமாக மேற்கொண்டாh;கள். தலைமையின் நடவடிக்கைகள் தனக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புக் கூறும் வகையில் அமைய வேண்டும் என்பதையும், ஒரு சாதாரண தனிநபாpன் செயற்பாட்டுக்கு அவா; மாத்திரமே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் இந்த இரு நிகழ்வுகளும் காட்டுகின்றன. அதே போன்று இறைத்தூதாpன் நடத்தைகள் சட்ட அங்கீகாரம் கொண்டவையாகவும், முன்மாதிhpயானவையாகவும் காணப்பட்டன என்பதும், உமா; (றழி) அவா;களின் நடத்தை சாதாரணமாக ஒரு தனிநபா; தனது நிலைமைகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளும் நடத்தையாகவே அமைந்திருந்தது. மாறாக அது எத்தகைய சட்ட அந்தஸ்தையும் கொண்டிருக்கவில்லை என்பதும் இருவாpனதும் இந்த நடத்தை வேறுபாட்டிற்கு திரைமறைவாய் அமைந்தன எனலாம்.

4. றஸுல் (ஸல்) அவா;கள் தன்னால் முடிந்த அனைத்து மனித முயற்சிகளையும் பயன்படுத்தினாh;கள். எனினும் ஸுராகா அவரை நெருங்கி வந்து சோ;ந்தாh;. ஒருவரின் எந்தவொரு செயற்பாடும் வெற்றி பெறுவதற்கு முதற்காரணியாக பௌதீக காரணகாhpயங்களை பயன்படுத்துவது அவசியமாகும். எனினும் இதன் விளைவு அல்லாஹ்வின் கண்காணிப்பிலும் மேற்பாh;வையிலுமே இடம்பெற வேண்டும் என்பதனை காட்டுகின்றது. ஒரு முஸ்லிம் எப்போதும் தனது கருமம் நிறைவேறுவதற்குhpய பௌதீக ஏற்பாடுகளை செய்வதில் குறைவிட்டுள்ளேனா என்;பதை எப்போதும் பாh;க்கவேண்டும். அந்தக் காhpயம் நிறைவேறுவதை, அதன் இறுதி விளைவை எப்போதும் அல்லாஹ்விடமே பொறுப்புச்சாட்டிவிட வேண்டும்.

5. முஷ்hpக்குகள் றஸுல் (ஸல்) அவா;களை கடுமையாக எதிh;த்த போதும், அவரை அதிகமாக பொய்ப்பித்த போதும் தமது சொத்துக்களை அமானிதமாகப் பாதுகாப்பதற்கென ஒப்படைக்க இறைத்தூதரைத்தவிர வேறு பொருத்தமான எவரையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நிராகரிப்பு அவா;களின்  பெருமையாலும் கா;வத்தாலும் ஏற்பட்ட ஒன்று என்பதையும், சமூக hPதியான தமது தலைமைத்துவம் அந்தஸ்து அதிகாரம் என்பன இல்லாமல் போய்விடும் எனும் பயத்தாலும் ஏற்பட்டது என்பதையும் காட்டுகின்றது.

6. எப்போதும் ஒரு கொள்கைக்காக தியாகம் செய்வதற்கும், அh;ப்பணிப்புக்களை மேற்கொள்வதற்கும் இளைஞா;களே முன்னே வருவாh;கள். இந்த வகையில்தான் நபியவா;களைப் பாதுகாப்பதற்கு அலீ (றழி), பிலால் (றழி), ஸுஹைப் (றழி), அப்துல்லாஹ் இப்னு அபீபக்h; (றழி) போன்ற இளவயதுடைய ஸஹாபாக்கள் முன்வந்தனா;.

7. நபியவா;கள் ஹிஜ்ரத் செய்வதற்கு முன்னா; இரவின் பிந்திய நேரத்தில் மக்காவிலிருந்து வெளியேறியமை, மதீனாவை நோக்கிச் செல்லாது தெற்குத் திசைப் பாதையில் சென்றமை என்பன சிறந்த திட்டமிடலைக் காட்டுகின்றது. நபியவா;கள் எல்லா விடயங்களையும் முழுமையாக புhpந்து வைத்திருந்ததையும், எதிhpகள் எப்படி சிந்திப்பாh;கள் என்பதை சாpயாக தொpந்து வைத்திருந்ததையும் கூட காட்டுகின்றது.

8. றஸுல் (ஸல்) அவா;களை அல்லாஹ் முழுமையாக கண்காணித்தான் என்பதை நபியவா;கள் வெளியேறிச் செல்லும் போது, முன்னாலிருந்த முஷ்hpக்குகள் அவரைக் காணாது இருந்தமையும் ஸுராகா எவ்வளவு நெருங்கி வந்தும் நபியவா;களை பிடிக்க முடியாமல் போனமையும் காட்டுகின்றது. இவை அற்புதங்கள் வெளிப்பட்ட இடங்களாகும்.

ஹிஜ்ரத்(03)ஹிஜ்ரத்திற்கு தயாரானதன் பின்னா்


றஸுல் (ஸல்)  அவா்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்லத் தயாரானார்கள். அதற்கான திட்டங்களை வகுத்தாh;கள். அதற்குத் தேவையான விடயங்களை ஒழுங்குபடுத்தினார்கள். அதற்காக தனது முழு முயற்சிகளையும் செலவிட்டாh;கள். அதற்காக தந்திரோபாயங்களையும் கைக்கொண்டாh;கள். இவை யாவும் முஷ்hpக்குகளின் கொடுமையிலிருந்தும், சு+ழ்ச்சியிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தயாh;படுத்தலின் ஒவ்வொரு எட்டுக்களும் பின்வருமாறு அமைந்தன.

1. ஹிஜ்ரத்தின் போது தன்னுடன் சேர்ந்து செல்வதற்கென ஒரு தோழரைத் தொpவு செய்தல். இதற்காக நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களைத் தொpவு செய்தாh;கள். அபு+பக்h; (றழி) அவா;கள் றஸுல் (ஸல்) அவா;களிடம் ஹிஜ்ரத் செய்வதற்காக அனுமதி கேட்டாh;கள். அதற்கு நபியவா;கள் நீh; அவசரப்பட வேண்டாம். சில வேளை உம்முடன் செல்வதற்கு ஒரு தோழரை அல்லாஹ் அனுப்புவான் என்றாh;கள். இங்கு தன்னுடன் ஒரு தோழா; வருவாh; என நபியவா;கள் நாடியது தன்னையே என அவா; உணா;ந்து கொண்டாh;.

2. றஸுல் (ஸல்) அவா;களையும் அவரது தோழரையும் மதீனாவுக்குச் சுமந்து செல்வதற்கான வாகனத்தைத் தயாh; செய்தல்.

3. றஸுல் (ஸல்) அவா;களுடனும் அவரது தோழருடனும் சேர்ந்து செல்வதற்கென பாதைகள் தொடா;பாக அறிவுடைய நிபுணரான வழிகாட்டியொருவரைத் தேடிக் கொள்ளல். இதற்காக நபியவா;கள் பனூ தைலம் இப்னு பக்h; கோத்திரத்தைச் சோ;ந்த அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்பவரைக் கூலிக்கமா;த்தினாh;கள். அவா; ஒரு திறமையான வழிகாட்டியாகக் காணப்பட்டாh;. அவா; இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. எனினும் நபியவா;களும் அவரது தோழரும் அவரை நம்பி, அவாpடம் வாகனங்களை ஒப்படைத்து, தாம் தௌவ்h; குகையை விட்டு வெளியேறிச் செல்லும் நேரத்தில் அங்கே வருமாறு நேரம் குறிப்பிட்டுக் கொண்டனர்.

4. றஸுல் (ஸல்) அவா;களும் அவரது தோழரும் மக்காவை விட்டு வெளியேறும் போது அவா;களைத் தேடும் படலம் ஓயும் வரை அவா;கள் ஒழிந்திருப்பதற்கான ஒரு இடத்தை தயாh;படுத்தல். இதற்காக தௌவர்க் குகையைத் தொpவு செய்தாh;கள்.

5. முஷ்hpக்குகளை ஏமாற்றுவதற்காகவும் அவா;களின் இலக்குகளை திருப்புவதற்காகவும் றஸுல் (ஸல்) அவா;கள் தூங்கும் இடத்தில் அலீ இப்னு அபீதாலிப் (றழி) அவா;களைத் தூங்குவதற்குப் பணித்தல்.

6. றஸுல் (ஸல்) அவா;கள் குகையில் தங்கியிருக்கும் போது முஷ்hpக்குகளின் செய்திகளை அவா;களுக்குக் கொண்டு வருவதற்காக ஒருவரைத் தயாh;படுத்தல். அதற்காக அப்துல்லாஹ் இப்னு அபீபக்h; ஸித்தீக்  (றழி)  அவா;களைத் தொpவு செய்தாh;கள்.

7. றஸுல் (ஸல்) அவா;களும் அவரது தோழரும் குகையில் இருக்கும் போது, உணவும் நீரும் கொண்டு வருவதற்காகவும் குகைக்கு வந்து போகின்றவர்களின் கால் எட்டுக்களை அழிப்பதற்காகவும் ஒருவரைத் தயாh; படுத்தல்.

றஸுல் (ஸல்) அவா;களுக்கு எதிரான சூழ்ச்சிகள்

குறைஷியா; முஹம்மத் (ஸல்) அவா;களையும் அவரது தஃவாவையும் தீh;த்துக் கட்டுவதற்கென உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுக்க விரும்பினா;. குறிப்பாக நபியவா;கள் இதுவரையில் எங்கும் செல்லாமல் மக்காவிலேயே இருப்பதனாலேயே அவா;கள் இவ்வாறு சிந்தித்தனா;. நபியவா;கள் குறைஷியாpன் மாh;க்கத்தை ஒழித்துக்கட்டி அவா;களின் கண்ணியத்தை இழக்கச் செய்ய முன்னா; அவரையும் அவரது தஃவாவையும் தீh;த்துக் கட்ட நினைத்தனா;. எனவே, மக்கா காபிh;களும் ஷிh;க்கின் குபேரா;களும் உறுதியானதொரு முடிவை எடுப்பதற்காக தாருன் நத்வாவில் ஒன்று கூடினா;.

“அவா;கள் அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைத்துவிட விரும்புகின்றனா;. காபிh;கள் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை பு+ரணப்படுத்துவான்.”  (ஸுறதுஸ் ஸப் : 80)

அங்கு கூடிய காபிh;கள் “இந்த மனிதனுடைய விவகாரம் எவ்வாறு ஆபத்தானது என்பதை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவா; எங்களுக்கு எதிராகவே இருப்பார் என்பது உறுதி. அவரைப் பின்பற்றுகின்ற பிற சமூகத்தைச் சோ;ந்தோரும் இவ்வாறு இருப்பர். எனவே, அவரது விடயத்தில் நீங்கள் ஆலோணை செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள்” என தமக்கிடையே கூறிக் கொண்டனா;. பின்னர் அவா;களில் ஒருவா; “அவரை இரும்புக் கூட்டினுள் சிறைப்பிடித்து அடைத்து வைய்யுங்கள். அவருக்கு முன்னா; அவரைப் போன்ற கவிஞா;கள் சிறைகளில் மரணித்தது போன்று அவரும் மரணிக்கும் வரை எதிh;பாh;த்திருங்கள்” என்று கூறினாh;. அங்கிருந்தவா;கள் இக் கருத்து தொடா;பாக ஆராய்ந்து விட்டு பின்னர் அதனை மறுத்;து, “நீங்கள் சொல்வது போன்று அவரைச் சிறைப் பிடித்தால், நீங்கள் அவரைப் பு+ட்டி வைத்திருக்கும் செய்தி பின் கதவால் அவரது தோழா;களுக்கு எட்டி விடும். அப்போது அவா;கள் உங்களுக்கு எதிராகக் கிளா;ந்தெழுந்து அவரை விடுவித்துக் கொள்வாh;கள். பின்னர் அவா;கள் அவரோடு சேர்ந்து பெருந்தொகையானோரை உங்களுக்கெதிராக ஒன்று திரட்டுவாh;கள். அப்படித் திரண்டால் அவா;கள் உங்களை மிகைத்து விடுவா;;. எனவே இது பொருத்தமான முடிவல்ல. நீங்கள் மற்றொரு தீh;வைப்பற்றி ஆலோசனை செய்யுங்கள்” என அவா;களில் சிலா; கூறினா;.

பின்னர் அவா;களில் இன்னொருவா; “அவரை எமக்கு மத்தியிலிருந்து வெளியேற்றி நாடு கடத்துவோம். அவா; எமக்கு மத்தியிலிருந்து நீங்கி எங்கு சென்றாலும் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” எனக் கருத்துத் தொpவித்தாh;.

அங்கிருந்தவா;கள் இந்தக் கருத்தையும் பொருத்தமாகக் கருதவில்லை. அவா;களில் சிலா; “என்ன நீங்கள் இவ்வாறு கருத்துக் கூறுகிறீh;கள்? அவரது பேச்சையும், இனிய வாதத்தையும் காணவில்லையா? அவா; முன்வைக்கின்ற பாங்கு உள்ளங்களை எவ்வாறு கவருகின்றது என்பதைப் பாh;க்கவில்லையா? எனவே அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அவ்வாறு செய்வதனால் மனிதா;கள் அவரைப் பின்பற்றுவதை உங்களால் தடுக்க முடியாது. பின்னர் அவா; எல்லோரையும் ஒன்று சேர்த்து உங்களின் நாட்டில் வைத்தே உங்களை மிகைத்து விடுவாh;. அவா; உங்களின் கரத்திலிருந்த அதிகாரத்தைப் பெற்று தான் விரும்பியதைச் சாதிப்பாh;” எனக் கருத்துத் தொpவித்தாh;.
பின்னா; அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் : “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த இடத்தில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. நீங்கள் அதனைப் போன்று இது வரையும் சிந்தித்தது கிடையாது” என்றாh;. இதனைக் கேட்ட அவா;கள் “அபுல் ஹகமே அது என்ன?” எனக் கேட்டனா;. பின்னா; அபு+ஜஹல் தனது திட்டத்தை பின்வருமாறு விவாpத்தான். “நாம் ஒவ்வோரு கபீலாவிலிருந்தும் குடும்ப ஆதிக்கமும் பலமுமிக்க வாட்டசாட்டமான இளைஞா;களை எடுத்து அவா;கள் ஒவ்வொருவாpன் கையிலும் ஒரு கூhpய வாளை ஒப்படைப்போம். அவா;கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமது வாளை உருவி ஒரு வெட்டுடன் முஹம்மதைக் கொலை செய்து தீh;த்துக் கட்டிவிடட்டும். அவரை ஒழித்துக் கட்டிய பின் நாம் நிம்மதியாக இருக்கலாம். அவரைக் கொலை செய்தமைக்கான பொறுப்பு அனைத்து கபீலாக்களையும் சாh;ந்ததாக இருக்கும். இதன்போது அப்துல் மனாப் கோத்திரத்தாh; அவா;கள் அனைவருடனும் எதிh;த்துப் போhpட சக்தி பெறமாட்டாh;கள். எனவே அவர்கள் எம்மிடம் அக்கொலைக்காக நஷ்டஈடு பெற்றுக்கொள்ள முன்வருவாh;கள்.” இதனைக் கேட்ட அனைவரும் இதுதான் சிறந்த யோசனை என அபு+ஜஹ்லின் கருத்தில் உடன்பட்டனா;. பின்னா; அனைவரும் இந்தக் கருத்தில் ஒன்றுபட்டவா;களாக அங்கிருந்து பிhpந்து சென்றனா;. அது முதல் அவா;கள் றஸுல் (ஸல்) அவா;களை கொலை செய்வதற்காக தயாராகினா;.

“அசத்தியம் எப்போதும் இவ்வாறுதான். நிராயுதபாணியான சத்தியத்தை ஒழித்துக்கட்ட விரும்பும். அதனை ஒரு நபி சுமந்திருந்தாலும் சாpயே, நோ;வழியை நோக்கி அழைக்கும் ஒரு தாஈ சுமந்திருந்தாலும் சாpயே. அவா;கள் இவ்வாறுதான் நடந்து கொள்வர். இது எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் அசத்தியத்தின் நியதியாகக் காணப்படுகின்றது. அல்லாஹ் தனது விவகாரத்தில் வெற்றி பெறுபவன். எனினும், அதிகமான மனிதா;கள் அதனை அறியாதவா;களாக இருக்கின்றனர்.” (யு+ஸுப் : 21) (ஸீறது இப்னு ஹிஷாம் அலா;ரவ்ழதில் அன்ப் 2:222 மக்தபுல் குல்லிய்யாத் அல் அஸ்ஹாpய்யா)

அல்-குh;ஆன் சு+ழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது.

முஷ்hpக்குகள் இரவில் ஒன்றுகூடிச் செய்த சு+ழ்ச்சியை, துரோகிகள் தீட்டிய திட்டத்தை அல்லாஹ் தனது தூதருக்கு அறிவிக்காமல் விட்டு விடவில்லை. அவா;கள் சு+ழ்ச்சி செய்கிறாh;கள். அல்லாஹ்வும் சு+ழ்ச்சி செய்கிறான். அல்லாஹ் சு+ழ்ச்சியாளா;களில் மிகச் சிறந்தவன். எனவே, அல்லாஹ் தனது தூதருக்கு அவா;கள் செய்த சு+ழ்ச்சியை அறிவிக்கிறான். “நிராகாpப்பாளா;கள் உம்மை சிறைப்பிடிக்க அல்லது கொலை செய்ய அல்லது நாட்டை விட்டு வெளியேற்ற சு+ழ்ச்சி செய்து கொண்டிருந்ததை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவா;கள் சு+ழ்ச்சி செய்கிறாh;கள். அல்லாஹ்வும் சு+ழ்ச்சி செய்கிறான். அல்லாஹ் சு+ழ்ச்சியாளா;களில் மிகச் சிறந்தவன்.” (அல்-அன்பால் 90) “அவா;கள் அவர் ஒரு கவிஞா;தான். காலம் கொண்டு வரும் அழிவு அவருக்கு ஏற்படும் வரை எதிh;பாh;த்திருப்போம் என்கின்றனா;.” (அத் தூர் : 30)

நபியவா;கள் ஹிஜ்ரத்தை நடைமுறைப்படுத்தல்

றஸுல் (ஸல்) அவா;களைக் கொலை செய்வதற்காக அவா;கள் உடன்பட்டதன் பின்னா; நபியவா;கள் மக்காவில் வாழ்வது சிக்கலாக மாறியது. ஏனெனில், முஷ்hpக்குகள் தமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சந்தா;ப்பத்தையே எப்போதும் எதிh;பாh;த்திருந்தாh;கள். சந்தா;ப்பம் கிடைத்தவுடன் அவரை தீh;த்துக் கட்டிவிடுவாh;கள். எனவே தஃவாவை புறக்கணித்து, அதற்கெதிராக சு+ழ்ச்சி செய்த வரண்ட பு+மியிலிருந்து தஃவாவையேற்று அதற்கு இடம் கொடுத்த பு+மிக்குச் செல்ல வேண்டிய நிh;ப்பந்தம் இயல்பாகவே நபியவா;களுக்கு ஏற்பட்டது. அதேநேரம் நபியவா;களின் தோழா;கள் அவருக்கு முன்னரே மதீனாவிற்கு சென்று விட்டனா;. மதீனாவாசிகளும் அவரது வரவை எதிh;பாh;த்திருந்தனா;. இந்த சந்தா;ப்பத்தில் அல்லாஹ் நபியவா;களுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அனுமதி வழங்கினான். நபியவா;கள் தான் ஹிஜ்ரத் செல்லப் போகும் இடத்தைக் கனவில் கண்டாh;கள். நாம் முன்பு பாh;த்தது போல் நபியவா;களும் அதற்கு தயாராக இருந்தாh;கள்.

நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவர்களுக்கு ஹிஜ்ரத்துடைய காலத்தைத் தொpயப்படுத்தல்.

றஸுல் (ஸல்) அவா;கள் மத்தியானம் சு+hpயன் உச்சிம் கொடுக்கும் வேளை அபு+பக்h; (றழி) அவா;களின் வீட்டுக்குச் சென்றாh;கள். அது மக்கள் கைலூலா (சிறு தூக்கம்) தூங்கும் வேளையாக இருந்தது. மக்கள் எல்லோரும் தங்களின் வீடுகளுக்குள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனா;. இந்த நேரத்தில் யாரும் இன்னொருவரைச் சந்திக்கச் செல்வது வழமையில்லை. எனவே வழமைக்கு மாறான இந்த நேரத்தில் நபியவா;கள் வருவதைக் கவனித்த அபு+பக்h; (றழி) அவா;கள் றஸுல் (ஸல்) அவா;கள் ஒரு முக்கியமான விடயமாகத்தான் வந்திருப்பாh;கள் என்பதைப் புhpந்து கொண்டாh;கள்.

இது தொடா;பாக ஆயிஷா (றழி) அவாகள் : “றஸுல் (ஸல்) அவா;கள் வீட்டினுள் நுழைந்ததும் அபு+பக்h; (றழி) அவா;கள் தூங்கும் அறையிலிருந்து வெளியில் சற்றுத் தாமதித்தே வந்தாh;கள். அது வரை நபியவா;கள் வீட்டினுள் வந்து அமா;ந்தாh;கள். அப்போது வீட்டினுள் நபியவா;களுடன் நானும் எனது சகோதாp அஸ்மாவையும் தவிர வேறு எவரும் இருக்கவில்லை” எனக் குறிப்பிடுகின்றாh;கள்.

பின்னா; நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களிடம் “உங்கள் வீட்டிலிருக்கின்ற ஏனையவா;களை வெளியேற்றி விடுங்கள்” என்றார்கள். ஆதற்கு அபு+பக்h; (றழி) அவா;கள் “அல்லாஹ்வின் தூதரே! அவா;கள் இருவரும் எனது மகள்மாh;தான். எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அh;ப்பணமாகட்டும். அவா;கள் இருப்பது ஒரு பிரச்சினையே கிடையாது” என்றாh;கள். அபு+பக்h; (றழி) அவா;கள் தனது மகள்மாரான அஸ்மா (றழி), ஆயிஷா (றழி) ஆகிய இருவரும் அமானிதமாக நடந்து கொள்வாh;கள் என்பதில் நம்பிக்கையாய் இருந்தாh;கள். பின்னர் நபியவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களுக்கு ஹிஜ்ரத் செல்லும் தினத்தை அறிவித்தாh;கள். “அல்லாஹ் எனக்கு ஹிஜ்ரத் செல்ல அனுமதி அளித்து விட்டான்” என றஸுல் (ஸல்) அவா;கள் அபு+பக்h; (றழி) அவா;களிடம் கூறினாh;கள்.

இது தொடா;பாக ஆயிஷா (றழி) : அபு+பக்h; (றழி)  நபியவா;களிடம் “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழருக்குமா?” என்று கேட்டதற்கு “தோழருக்கும்தான்” என பதிலளித்தாh;கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அபு+பக்h; (றழி) அவா;கள் அன்று சந்தோசத்தால் அழுதாh;கள். அதற்கு முன்னா; யாரும் சந்தோசத்தால் அழுவாh;கள் என நான் நினைத்திருக்கவில்லை என்று கூறுகின்றாh;கள்.

உண்மையில் இது எல்லோரதும் அவதானத்தை ஈh;க்கக் கூடிய ஆச்சாpயமான ஒரு விடயமாகும். எல்லோருக்கும் ஓரு சமூகத்தின் இரத்தத்திலும்; சொத்துக்களிலும் எது செய்யவும் அனுமதிக்கப்பட்ட ஒரு நிலை. முழு உலகமும் அவா;களைத் துரத்துகின்றது. அவா;களுக்கு எதிராக சு+ழ்ச்சி செய்கின்றது. அவா;களைத் தீh;த்துக்கட்ட விரும்புகின்றது. அவா;களுக்கு முன்னால் ஹிஜ்ரத்துடைய பாதை மாத்திரம் திறந்திருக்கின்றது. அதுகூட ஆபத்துக்கள் சு+ழ்ந்த ஒரு நீண்ட பாதையாகும். ஆனால் அவா;கள் எதற்குமே பயப்படாமல் இருப்பதைக் காண்கிறோம். அதைவிட ஆச்சரியமான விடயம் அவா;கள் ஹிஜ்ரத் செல்வதற்கு ஆh;வமாய் இருக்கிறாh;கள், அதற்காய் சந்தோசப்படுகிறாh;கள் என்பதேயாகும்.

பாடங்களும் படிப்பினைகளும்.

1. அசத்தியவாதிகள் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் கையாளுகின்ற வழிமுறைகள் ஒன்றாகவே காணப்படுகின்றன. அவா;களால் தாஈக்களை எதிh;கொள்ள முடியாமல் போகின்ற போது, அவா;கள் தாஈக்களை சிறைகளில் அடைக்கின்றனா; அல்லது கொலை செய்ய முற்படுகின்றனா;.

2. அநியாயக்கார ஆட்சியாளா;கள் எப்போதும் தாஈக்களை விரட்டிக்கொண்டும் பின்தொடா;ந்து கொண்டுமே இருப்பா;. அவா;கள் அந்த அநியாயக்கார ஆட்சியின் எல்லைக்கு வெளியில் வாழ்ந்த போதும் இந்த நடவடிக்கையை தொடா;வா;. ஏனெனில் அவா;கள் தமது அதிகாரம் சட்டபு+h;வமானதல்ல; தம்மிடம் இருக்கும் சிந்தனை பலவீனமானது என்பதை உணா;ந்திருப்பதால் தாஈக்கள் எப்போதும் தமக்கு ஆபத்தானவா;களாகவே இருப்பா; என நினைக்கின்றனா;.

3. சிறந்த முறையில் தயாராதல், சீரான திட்டமிடல், மனித சக்தியின் எல்லைக்குட்பட்ட வழிமுறைகளை முடிந்தவரை நுணுக்கமாகக் கையாளுதல் என்பன அல்லாஹ்வின் மீதான தவக்குலை அடுத்து வெற்றிக்கான மிக முக்கியமான காரணிகளாகும்.

4. எப்போதும் தூய்மையாக செயற்படும் தாஈக்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும். மனித முயற்சிகளின் எல்லை முடிவுறும் போது இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

5. ஆபத்துக்கள் நிறைந்தும், சு+ழ்ந்தும் காணப்படும் பாதையான தஃவாப் பாதைக்கு எப்போதும் சிறந்த பண்புகள் கொண்ட, தெளிவான பயிற்றுவித்தலுக்குட்பட்ட மனிதர்கள் தேவைப்படுகின்றாh;கள்.

6. பயணத்தில் எப்போதும் ஒரு நண்பனின் தேவை இருக்கும். றஸுல் (ஸல்)  அவா;கள் ஒரு சிறந்த நண்பனை தயாh;படுத்தி வைத்திருந்தாh;கள்.

7. முஸ்லிம்களிடம் காணப்பட்ட உண்மையான ஈமான், இஸ்லாமிய சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஹிஜ்ரத் மேற்கொள்வதற்கான ஆh;வத்தைக் கொடுத்தது. அந்த சமூகத்தின் மூலம் தமது பண்பாடுகளையும், தமது அரசின் பெறுமானங்களையும் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என அவா;கள் எதிh;பாh;த்தனா;.

8. முஸ்லிம்கள் பெரும் சோதனைகளை சந்திக்கும் போதெல்லாம் அவா;களிலிருந்து பெரிய பெரிய மனிதர்கள் உருவாக்கிக் கொண்டே இருப்பா;. ஹிஜ்ரத்தில் உமா; பாரூக் (றழி) அவா;களும், தோழமை கொண்டு செல்கையில் அபு+பக்h; (றழி) அவா;களும், நபியா;களின் தூங்கிய படுக்கையில் அலி (றழி) அவா;களும் இவ்வாறான பெரிய மனிதர்களாக இருந்தனா;.

9. அபு+பக்h; (றழி) அவர்களின் பிள்ளைகள் ஹிஜ்ரத்தின் போது பெரும் உதவியாக இருந்தனா;. அவருடைய மகள் அஸ்மா (றழி) உணவு கொண்டு கொடுத்தாh;. ஆயிஷா (றழி) பயணத்திற்கான கட்டுச் சாதனங்களை தயாh;படுத்திக் கொடுத்தாh;. மகன் அப்துல்லாஹ் தௌவ்h; குகைக்கு மக்காவின் செய்திகளை கொண்டு வந்து கொடுத்தாh;.








ஹிஜ்ரத்(02) மதீனாவுக்கான ஹிஜ்றத்



இந்தப்பாகம் பின்வரும் விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது

01. றஸுல் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு மதீனாவுக்கு ஹிஜ்றத் செய்யுமாறு அனுமதி வழங்குதலும் அதற்கான காரணங்களும்.

02. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்கு தயாராதலும், அதற்காக திட்டமிடுதலும்.

03. நபியவர்களின் ஹிஜ்ரத்தை நடைமுறைப்படுத்தலும் அதனை முழுமைப்படுத்தலும்.

         நாம் முன்னர் அறிந்து வைத்திருப்பது போன்று மக்காவிலே இஸ்லாமிய தஃவாவின் ஒளி தோற்றம் பெற்றது. பின்னர் அங்கு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையிலான போராட்டம் இடம் பெறவேண்டும் என அல்லாஹ் நாடினான். இது மனித வாழ்விலும் தஃவாக்களிலும் காணப்படுகின்ற அல்லாஹ்வின் பொதுவான நியதி (சுனன்) ஆகும்.  “இவ்வாறுதான் நாம் சத்தியத்தையும் அசத்தியத்தையும் மோதவிடுகின்றோம். வெறும் நுரை பயனற்று அழிந்து போய்விடும். மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடியவை பூமியில் நிலைத்திருக்கும். அல்லாஹ் இவ்வாறுதான் உதாரணங்கள் கூறுகின்றான்”(அர்-ரஃத்:17)

அதற்கு முன் நபியவர்கள் தனது தஃவாவின் செய்தியை வரகத் இப்னு நவ்பலிடம் கூறியபோது அவர் நபியவர்களுக்கு கூறிய செய்தியையும் நாம் இங்கு ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்.

வரகத் இப்னு நவ்பல் : அவ்வேளையில் “நான் இளமைத்துடிப்புள்ள இளைஞனாக இருந்திருக்கக்கூடாதா? உங்கள் சமூகம் உங்களை வெளியேற்றும் போது நானும் உயிருடன் இருக்கக்கூடாதா?” நபியவர்கள் : “அவர்கள் என்னை வெளியேற்றுவார்களா?”வரகத் இப்னு நவ்பல் : “ஆம். நீங்கள் கொண்டுவந்துள்ள செய்தியைப் போன்ற செய்தியை யார் கொண்டுவந்தாலும் அவர் துன்புறுத்தப்படுவார். அவ்வேளையில் நான் உயிருடன் இருந்தால் உமக்கு சிறந்த முறையில் உதவி செய்வேன்.”

ஒதுக்குப்புறமாக நலிந்து போய் இருந்த சத்தியத்திற்கும், பலம் பெற்றிருந்த அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டம் பலமடைந்தது. முஸ்லிம்கள் துணிந்து அப்போராட்டத்தில் பொறுமை காத்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அந்த துன்பங்களிலிருந்து விடுதலையை அளிக்கும் வரை பொறுமையாகவே இருந்தார்;கள். காலம் செல்ல முஃமின்களின் மீதான குறைஷியரின் கொடுமையும் துன்புறுத்தலும் அதிகரித்துக்கொண்டே சென்றது. சில முஸ்லிம்கள் தமது மார்க்கத்தை விட்டுவிடுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். இன்னும் சிலர் குறைஷியரின் கரங்களில் அகப்பட்டு கடுமையாக துன்புறுத்தப்பட்டனர். மற்றும் சிலர் தமது அகீதாவை பாதுகாத்துக்கொள்ள நாட்டைவிட்டே தப்பியோடினர். அவர்களில் சிலர் ஹபஷாவுக்கும், முகம் போன திக்கிலும் ஓடித்தப்பினர். இந்த நீண்ட இரவின் மத்தியில் அடர்ந்த இருள்களிற்கிடையே முஃமீன்களுக்கான அல்லாஹ்வின் ஒளி பிரகாசித்தது. உண்மையான உழைப்பாளிகளுக்கு கிடைக்கக்கூடிய வெற்றி கிடைக்க ஆரம்பித்தது. “தூதர்கள் நம்பிக்கை இழந்து தாம் பொய்ப்படுத்தப்பட்டுவிட்டோம் என்று நினைக்கின்ற நேரத்தில் எமது உதவி அவர்களுக்குக் கிடைத்தது”. (யூஸுப் : 110)

யத்ரிப் எனப்பட்ட மதீனா முனவ்வரா தனது இருகரங்களையும் விரித்து முஃமின்களான முஜாஹித்;களை வாரி அணைத்துக் கொண்டது. பாதுகாப்பான ஓர் இடத்திலே புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை அது அவர்களுக்கு வழங்கியது.

 

றஸுல் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு மதீனாவுக்கு ஹிஜ்றத் செய்யுமாறு அனுமதி வழங்குதலும் அதற்கான காரணங்களும்

 

அல்லாஹ் யத்ரிப் வாசிகளின் உள்ளங்களை இஸ்லாத்தை நோக்கி விரிவு படுத்தி ஈமானை அவர்களுக்கு விருப்புக்குரியதாக மாற்றினான். எனவே இஸ்லாம் அங்கு பரவியது. அன்ஸாரிகள் நபியவர்களுக்கும், அங்கு புகலிடம் தேடி வரும் முஸ்லிம்களுக்கும் உதவி அளிப்பதாக உடன்படிக்கை செய்து கொடுத்தார்கள். எனவே அங்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அனைத்து முஸ்லிம்களும் ஆவல் கொண்டனர்.

அபூ மூஸா அல்-அஷ்அரி (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : றஸுல் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது முஸ்லிம்களைப் பார்த்து : “நான் மக்காவை விட்டு பேரீச்சை மரங்கள் உள்ள ஒரு பிரதேசத்துக்கு ஹிஜ்ரத் செய்வதாக கனவு கண்டேன்” என்று கூறினார்கள். அங்கு இருந்தவர்கள் அது யமாமா அல்லது ஹஜர் என்னும் பிரதேசமாக இருக்கலாம் என யூகித்தனர். ஆனால் அது (யத்ரிப்) மதீனாவாக இருந்தது. (புஹாரி)

 
நபி (ஸல்) கூறியதாக ஆயிஷா (றழி) அவர்கள் கூறியதை உர்வா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “உங்களின் ஹிஜ்ரத் பூமியையும், இரு பற்றைக்காடுகளுக்கிடையே உள்ள, ஈச்சை மரங்களைக்கொண்ட ஒரு கட்டாந்தரையையும் கண்டேன்.”

அதன் பின்னர் நபியவர்கள் மக்காவில் இருந்த முஸ்லிம்களுக்கு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து அங்குள்ள சகோதரர்களான அன்ஸாரிகளுடன் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். இது தொடர்பாக நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : “அல்லாஹ் உங்களுக்கென்று நீங்கள் பாதுகாப்பாய் இருக்கக் கூடிய சகோதரர்களையும் வசிப்பிடத்தையும் அமைத்துத் தந்துள்ளான்”. (புகாரி, முஸ்லிம்)

 எனவே முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கும், அவனது துhதருக்கும் கட்டுப்பட்டு கூட்டம் கூட்டமாக மக்காவிலிருந்து வெளியேறிச் சென்றனர். சத்தியத்தின் போராளியாக இருந்த நபியவர்களுக்கு மதீனாவில் ஓர் இஸ்லாமிய சமூகத்தையும், அரசையும் உருவாக்குவதற்காக உதவும் நோக்குடன் அவர்கள் மதீனாவில் குடியேறினார்கள்.

 

ஸஹாபாக்கள் மதீனாவுக்கு ஹிஜ்றத் சென்றமை

 முஸ்லிம்கள் மதீனாவுக்கு தனித்தனியாகவும் கூட்டம் கூட்டமாகவும் ஹிஜ்ரத் சென்றனர். ஸஹாபாக்களில் மதீனாவிற்கு முதலில் ஹிஜ்ரத் செய்தவர் அபூஸலமா (றழி) அவர்கள். அதனைத் தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸத் இப்னு ஹிலால் உம் ஆமிர் இப்னு அபீ ரபீஆவும் அவரது மனைவி லைலா பின்த் ஹஸ்மா அல்அதவிய்யாவும் சென்றனர். பின்னர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (றழி) சென்றார். பிறகு உமர் இப்னுல் கத்தாப் (றழி) சென்றார். அவருடன் அவரின் சகோதரர் ஸைத் இப்னுல் கத்தாபும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஸுராகா இப்னு முஃதமர் இன் மகன்களில் இருவரான அம்;ர், அப்துல்லாஹ் ஆகியோரும், ஹப்ஸா (றழி) அவர்களின் கணவர் ஹுனைஸ் இப்னு ஹுதாபா அஸ்ஸுஹமியும் இன்னும் பலரும் இணைந்து கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து எஞ்சிய ஸஹாபாக்களும் சென்றனர். இந்த ஹிஜ்ரத் பயணம் வரலாற்றில் ஈமானின் தனித்துவத்தையும் வீரத்தையும் பிரதிபலிக்கும் நிகழ்வாக சான்று பகர்கின்றது.

பெண்களின் ஹிஜ்றத்

 ஹிஜ்ரத் ஆண்களுடன் மாத்திரம் சுருங்கிய ஒரு நிகழ்வாக இருக்கவில்லை அதில் பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் தமது மார்க்கத்தை ஷிர்க்கிலிருந்தும், அநீதியிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், தீமையிலிருந்தும் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் புதியதொரு ஈமானிய சமூகத்தை மதீனாவில் தோற்றுவிப்பதில் தமது பங்களிப்பை செலுத்துவதற்காகவும் மக்காவில் இருந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டனர். இறை திருப்தியையும் சுவனத்தையும் எதிர்பார்த்து தமது தூதைச் சுமந்து, தம்மீதான அமானத்தை நிறைவேற்றுவதற்காக அவர்கள் ஹிஜ்ரத் செய்தனர். இவ்வகையில் பெரும் தொகை முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரத்தில் கலந்து கொண்டனர். ஸைனப் பின்த் ஜஹ்ஷ், ஹம்னா பின்த் ஜஹ்ஷ், உம்மு கைஸ் பின்த் முஹ்ஸின், உம்மு ஹபீப் பின்த் ஸுமாமா, உம்மு ஸலமா போன்ற பெண்களை இங்கு குறிப்பிடலாம். இவர்கள் தவிர்ந்த இன்னும் பல பெண்களும் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் இறை பாதையில் தியாகத்திற்கும் அர்ப்பணத்திற்கும் பொறுமைக்கும் முன்னுதாரணமாய் திகழ்ந்தனர்.

ஹிஜ்றத்தில் நிகழ்ந்த அதிசயங்கள்

மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வது முஃமீன்களுக்கு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அது உள்ளத்துக்கு உவப்பான செயலாகவும் காணப்படவில்லை. முஸ்லிம்கள் தமது வீடுவாசல்களையும் சொத்துக்களையும் குடும்பத்தினரையும் விட்டுவிட்டு, தம்மையும் கணக்கில் கொள்ளாது அல்லாஹ்வையும் அவனது துhதரையும் இந்த உலகில் உள்ள அனைத்து சொத்துக்களையும் விட மேலாகக் கருதிச் சென்றார்கள். இவற்றை அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக விலையாகக் கொடுத்தார்கள். “தமது வீடு வாசல்களையும் சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட முஹாஜிர்களான ஏழைகள் அல்லாஹ்வின் அருளையும் அவனது திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உதவி புரிகின்றனர். அவர்கள்தான் உண்மையாளர்கள்”. (அல்-ஹஷ்ர் : 08) அவர்கள் வெளியேறிச் சென்றபோது முஷ்ரிக்குகள் அவர்களை எல்லா இடங்களிலும் பின்தொடர்ந்து, தாக்குவதற்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்ட இடத்தில் பிடித்து மக்காவிற்கு திருப்பி அனுப்புவதற்காக அல்லது அவர்களை தாக்குவதற்காக அல்லது அவர்களது கையில் காணப்பட்ட உடமைகளையும், சொத்துக்களையும் அபகரிப்பதற்காக முஷ்ரிக்குகள் காத்திருந்தனர். எனினும், அவர்கள் கண்ணியமான, வீரமிக்க பெரும் போராளிகளாகச் சென்றனர். “அவர்களில் துன்பத்திற்குட்பட்டு, ஹிஜ்ரத் செய்து, போராடி, பொறுமையுடன்; இருந்தவர்களுக்கு அல்லாஹ் இருக்கின்றான். உமது இறைவன் அதற்குப் பின்னரும் மன்னிப்பவனாகவும் அன்புடையோனாகவும் இருக்கின்றான்”. (அந்நஹ்ல் :110)

ஸுஹைப் (றழி) அவர்களின் ஹிஜ்ரத்

 ஸுஹைப் (றழி) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற முஷ்ரிக்குகள் அவரின் அம்புப் பையை பறித்து சிதறடித்தனர். அதனைப் பார்த்த ஸுஹைப் (றழி) அவர்கள் : “குறைஷியரே! உங்களுக்குத் தெரியும். நான் உங்களிலேயே சிறந்த முறையில் அம்பெய்தக்கூடியவன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் என்னைப்பிடிக்க வந்தால் என்னிடம் இருக்கின்ற அம்புகள் நிறைவுறும் வரை உங்கள் மீது ஏய்வேன். பின்னர், எனது கையில் ஏதாவது மீதம் இருக்கும் வரையில் எனது வாளைக் கொண்டும் போராடுவேன்” என்றார். இதனைக்கேட்ட குறைஷியர் : “நீர் எங்களிடம் ஒன்றுக்கும் வக்கில்லாமல் இழிவான நிலையில் வந்தாய். எங்களிடம் வந்த பின்னர்தான் உனது செல்வத்தை பெருக்கிக் கொண்டாய். எம்மோடிருந்து நீர் அடைய வேண்டியவற்றை அடைந்து கொண்டாய். பின்னர் நீர் உனது சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு வெளியேறப் பார்க்கின்றாய். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது ஒரு போதும் நடக்காது” என்றனர். அதற்கு ஸுஹைப் (றழி) அவர்கள் : “எனது சொத்துக்களையெல்லாம் உங்களுக்குக் கொடுத்துவிட்டால், நீங்கள் என்னை விட்டு விடுவீர்களா?” என்று வினவினார். அவர்கள் : “நீ எங்களுக்கு உனது சொத்தைக் காட்டித்தந்தால் நாம் உம்மை விட்டு விடுகிறோம்” என்றனர். பிறகு அவர்கள் அதற்காக ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். பின்னர் ஸுஹைப் (றழி) அவர்கள் தனது சொத்துக்களைக் கொடுத்து விட்டு றஸுல் (ஸல்) அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டார்கள். அவரைப் பார்த்து நபியவர்கள் : “அபூ யஹ்யாவின் வியாபாரம் இலாபமடைந்து விட்;டது” என்றார்கள். அல்லாஹ் அவர் தொடர்பாக பின்வரும் வசனத்தை இறக்கினான். “மனிதர்களில் சிலர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தன்னை விற்பனை செய்பவர்களாக இருக்கின்றார்கள். அல்லாஹ் அடியார்கள் மீது இரக்கமுடையவன்”. (ஸூறதுல் பகறா : 207) (உஸுதுல் ஃகாபா)

ஸுஹைப் (றழி) அவர்களின் வீரமும் பலமும் எப்படி என்பதைப்பாருங்கள் : அவர் தனது ஈமானாலும், அச்சமற்ற தன்மையாலும் ஒரு பெரும் தொகையினரை எப்படி பயங்காட்டினார். மக்காவிலே நீண்ட பல வருடங்களாக வியர்வை சிந்தி, களைப்;புற்று, கடின உழைப்பினால் சேர்த்த சொத்துக்களையெல்லாம் எவ்வாறு தியாகம் செய்தார். இவை அல்லாஹ்வின் பாதையில் செய்யப்பட்ட தியாகங்களே தவிர வேறு இல்லை. இவை இஸ்லாமிய தஃவாப் பாதையில் அவர் செய்த தியாகங்கள். தன்னை நிராகரிப்பிலும் அநீதியிலும் வழிகேட்டிலும் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகக் கொடுத்த விலைகள். தனது பணியை சிறந்த முறையில் நிறைவேற்றியவருடைய கூலியை அல்லாஹ் வீணாக்குவானா? என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லலாம். ஆயிரம் தடவை இல்லை என்று சொல்லலாம். ஏனெனில், அல்லாஹ் தனது அடியார்கள் மீது இரக்கமுடையவன். அவன் நல்லடியார்களின் கூலியை வீணாக்கவே மாட்டான்.

 

 

அபூ ஸலமா (றழி) அர்களதும், அவரது மனைவியினதும் ஹிஜ்றத்

அபூ ஸலமா (றழி) அவர்களும் அவரது மனைவியும், மகனும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்காக ஆயத்தமானபோது, அவரது மனைவியின் குடும்பத்தார் அவரைப்பார்த்து : “நீ உமது விருப்பத்தால் எம்மை விட மேலானவனாகப் பார்க்கின்றாய். எமது இந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு நாம் உம்மை வேறு இடத்திற்கு போக விடுவோமா?” என்று கேட்டனர். பின்னர் அவர்கள் அவரது மனைவியையும் மகனையும் அவரிடமிருந்து பறித்துக்கொண்டனர். இதனால் அபூ ஸலமாவின் குடும்பத்தார் அவரது மனைவியின் குடும்பத்தாருடன் கோபங்கொண்டு “நீங்கள் எங்கள் மகனிடமிருந்து உங்களது பெண்ணை பிரித்து எடுத்ததால் நாம் எமது பிள்ளையை அவருடன் விட்டுவிட மாட்டோம்” என்றனர். பின்னர் அபூ ஸலமா (றழி) அவர்களின் மகன் அவர்களுக்கிடையில் இழுபறிக்குட்பட்டு ஈற்றில் அபூ ஸலமாவின் குடும்பத்தார் அவரின் மகனைப் பறித்துச் சென்றனர். பின்னர் அபூ ஸலமா மாத்திரம் மதீனாவுக்கு சென்றார். அதன் பின்னர் தனது கணவனையும் மகனையும் இழந்த உம்மு ஸலமா (றழி) அவர்கள் கிட்டதட்ட ஒரு வருடகாலம் ஒவ்வோர் நாள் காலையிலும் மக்காவிற்கும் மினாவிற்கும் இடையே இருந்த “அப்தஹ்” என்ற இடத்திற்குப் போய் அழுது புலம்பியவாறு காலம் கழித்தார்.

 இந்நிலையைக் கண்டு மனமிழகிய உம்மு ஸலமாவின் குடும்ப உறவினர்களில் ஒருவர் அவரது குடும்பத்தாரிடம் : “நீங்கள் இந்த அபலையைச் செல்ல விடக்கூடாதா? அவளைவிட்டும் அவளது கணவரையும் பிள்ளையையும் பிரித்துவிட்டீர்களே” என்றார்.

பின்னர் நிகழ்ந்தவற்றை உம்மு ஸலமா (றழி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : அவர்கள் “நீ விரும்பினால் போய் உனது கணவருடன் சேர்ந்து கொள்ளலாம்” என்றனர். அதன் பின்னர் பனு அப்துல் அஸத் கோத்திரத்தார் எனது மகனை என்னிடம் திருப்பி ஒப்படைத்தனர். நான் எனது மகனை எடுத்து எனது மடியில் வைத்துக் கொண்டு எனது ஒட்டகையில் ஏறி மதீனாவில் இருந்த எனது கணவரைச் சந்திக்கச் சென்றேன். பிரயாணத்தில் என்னுடன் வேறு எவரும் இருக்கவில்லை. நான் “தன்ஈம்” என்ற இடத்தை தாண்டிச் செல்லும் போது, பனூ அப்துத் தார் கோத்திரத்தாரின் சகோதரர் உஸ்மான் இப்னு தல்ஹாவை சந்தித்தேன். அவர் என்னிடம் “அபூ உமையாவின் மகளே! நீ எங்கே செல்கின்றாய்?” எனக்கேட்டார். நான் “மதீனாவில் உள்ள எனது கணவரை தேடிச்செல்கிறேன்” என்றேன். அதற்கு அவர் : “உம்முடன் யாரும் துணை இல்லையா?” எனக் கேட்டார். அதற்கு நான் “இல்லை அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வையும் எனது இந்த மகனையும் தவிர என்னுடன் வேறு எவரும் கிடையாது” என்றேன். அதனைக்கேட்ட அவர் : “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உம்மை தனியே போக விடமாட்டேன்” என்று கூறிவிட்டு எனது ஒட்டகையின் கடிவாளத்தைப்பிடித்து இழுத்துக் கொண்டு என்னுடன் துணையாக வந்தார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவரைப் போன்ற கண்ணியமான ஒரு அரபு மனிதருடன் துணையாகச் சென்றது கிடையாது. அவர் என்னை மதீனாவில் விட்டுவிட்டு மக்காவிற்கு திரும்பிச் சென்றுவிட்டார்.

ஒரு முஃமினின் உள்ளத்தில் ஈமான் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பாருங்கள். அகீதா எப்படி எல்லாவிடயங்களிலும் மிகைக்கும் என்பதைப் பாருங்கள். அல்லாஹ்வின் திருப்தியையும் கூலியையும் எதிர்பார்த்து சொத்துக்களையும் குடும்பத்தையும் பிள்ளையையும் தியாகம் செய்யும் மனப்பாங்கை அகீதா ஏற்படுத்துவதைக் காணலாம். ஈமான் துன்பங்களை எப்படி மிகைக்கிறது?. மலைகளை எப்படி உலுக்குகின்றது, தடைகளை எப்படி தாண்டுகிறது என்பதனை இங்கு விளங்கலாம். இவற்றை தெய்வீக வழிகாட்டலின் ஒளியைப் பெற்ற கொள்கைவாதிகளான முஃமின்களைத்தவிர வேறு எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. அக்கொள்கைவாதிகள் தங்களுக்கிடையே சத்தியத்தையும் பொறுமையையும் பரஸ்பரம் ஏவிக்கொள்கின்றனர். அவர்களே அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உண்மைப்படுத்துகின்றனர். அவர்களில் சிலர் அதற்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இன்னும் சிலர் அதனை எதிர்ப்பார்திருக்கின்றனர். அதனை எதனாலும் மாற்றமுடியாது.

ஹிஜ்றத் தொடர்பாக முஷ்ரிகீன்களின் அச்சம்

முஸ்லிம்கள் ஹிஜ்ரத் சென்;று மதீனாவில் ஒன்று குவிவதும் அவர்களின் தஃவா அங்கு மேலோங்குவதும் முஷ்ரிகீன்களின் உள்ளத்தில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்களின் மூளையில் மறைந்திருந்த தீமையின் தூண்டுதலும், குரோதத்தின் உந்துதலும் அலை மோதின. குறிப்பாக றஸுல் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் போய் இணைந்துகொள்வது நிச்சயமாகும். அப்படி நிகழ்ந்தால் முஸ்லிம்கள் மதீனாவில் ஒரு சக்தியாக மாறுவர். அது முஷ்ரிக்குகளை அச்சுறுத்துவதாக அமையும். ஏனெனில், குறைஷியர் ஷாமுக்குச் செல்லும் வியாபாரப் பாதையிலேயே மதீனா காணப்படுகிறது. குறைஷியரின் வாழ்வாதாரம் வியாபாரத்திலேயே தங்கியிருந்தது. அவர்களது வியாபாரத் தொடர்புகள் துண்டிக்கப்படுவது அவர்களது வாழ்வாதாரம் துண்டிக்கப்படுவதற்கு அல்லது தமது நாடி நரம்புகளுக்கு செலுத்தப்படும் இரத்தம் துண்டிக்கப்படுவதற்குச் சமனானதாகும். முஷ்ரிக்குகள், முஸ்லிம்களின் சொத்துக்களை பறித்து, அவர்களைத் துன்புறுத்தி இருப்பிடங்களிலிருந்து அவர்களை துரத்தியடித்தமையினால், அவர்கள் தம்மை பழிவாங்குவார்கள் என அவர்கள் அச்சம் கொண்டனர்.

றஸுல் (ஸல்) அவர்கள் ஹிஜ்றத்திற்குத் தயாராகுதல்

மக்காவில் இருந்து முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாகவும், தனித்தனியாகவும் ஹிஜ்ரத் செய்தனர். அதனால் மக்காவில் முஸ்லிம்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவானது. இதனைக் கண்ட குறைஷியர் இஸ்லாத்திற்கென ஒரு தேசமும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதெற்கென ஒரு கோட்டையும் உருவாகிவிட்டதாக உணர்ந்தனர். ஏனெனில், மதீனாவுக்குச் சென்ற முஸ்லிம்களை அங்கிருந்த அன்ஸாரிகள் அன்போடும், ஆதரவோடும் அரவணைத்துக் கொண்டனர். இதனையடுத்து றஸுல் (ஸல்) அவர்களும் ஹிஜ்ரத் செய்வதற்கு சிந்தித்தார்கள். அல்லாஹ்வின் அனுமதி கிடைக்கும் வரை அவர்கள் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

தயார் செய்தல் வெற்றிக்கான அல்லாஹ்வின் (சுனன்) நியதிகளில் ஒன்றாகும்

அல்லாஹ்வின் தூதர்களை விட அல்லாஹ்வின் உதவியையும் வெற்றியையும் பெறுவதற்கு தகுதியான மனிதர்கள் வேறு எவரும் இருக்கமுடியாது. ஏனெனில், அவர்கள்தான் நேர்வழி கொடுத்து அனுப்பப்பட்டவர்கள். அந்நேர்வழியை எத்திவைப்பதில் அவர்கள் மிகப்பெரும் துன்பங்களை எதிர் கொண்டனர். எனினும் அவர்களையும் காரணகாரியங்களை கைக்கொள்ளுமாறு அல்லாஹ் வேண்டிக்கொண்டான். ஏனெனில், அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் தமது நோக்கை அடைவதற்கான காரணிகளைக் கைக்கொள்வதில் முழு ஈடுபாடு காட்டாமல், தமக்குத் தேவையானதை அடைவதற்கான பூரணமான வழிமுறைகளைக் கையாளாமல் கிடைக்கப் பெறுவதில்லை.

 எனவேதான், றஸுல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்திற்கான தனது திட்டமிடலை சிறப்பாகச் செய்தார்கள். அதற்குத் தேவையான அனைத்து சாதனங்களையும் தயார் செய்தார்கள். அவர் தனது நடவடிக்கைகளில் நடப்பவை நடக்கட்டும் என கண்ணை மூடிக்கொண்டு விட்டுவிடவில்லை. உண்மையில் ஒரு முஃமினின் பண்பு இதுதான். அவன் தனது காரியங்கள் அனைத்திற்கும் தேவையான விடயங்களை மேற்கொள்வான். அவன் தனது கடமையை நிறைவேற்றுவதற்காக முழு சக்தியையும் செலவிட்டு பின்னர் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பான். அதன் பின்னர் அவன் தோல்வியுற்றால் நிகழ்ந்தவற்றிற்காக அல்லாஹ் அவனைக் கண்டிக்கமாட்டான்.  “நீங்கள் உங்களால் முடிந்தவரை பலத்தையும் குதிரைப்படைகளையும் அவர்களுக்கெதிராக தயார் படுத்துங்கள்”. (அன்பால் : 60)

 “ஈமான் கொண்டவர்களே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் சிறு சிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்றிணைந்தோ போராட்டத்துக்குச் செல்லுங்கள்”. (அந்நிஸா : 71)

நபிமார்களின் ஹிஜ்றத்

 எல்லா நபிமார்களையும் அவர்களது சமூகத்தார் எதிர்த்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த தேசம் அவர்களை வெளியேற்றியுள்ளது. அவர்களின் கோத்திரத்தார் அவர்களை விரட்டியுள்ளனர். எனவே அவர்கள் தமது சொந்த இடங்களை விட்டு ஹிஜ்ரத் மேற்கொண்டனர். அப்போது ஏற்பட்ட தடைகள் சிரமங்கள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொண்டனர். நபிமார்களின் தந்தையான இப்றாஹீம் (அலை) அர்கள் ஈராக்கிலிருந்து பலஸ்தீனுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார். அவருடன் அவரின் மனைவி ஸாராவும், அவருடைய சகோதரரின் மகன் லுhத் (அலை) அர்களும் சென்றனர். இதுதொடர்பாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் “அவரை லுhத் (அலை) ஈமான் கொண்டார். அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : “நான் என் இறைவனுக்காக ஹிஜ்ரத் செய்கின்றேன். அவன் மிகப்பலம் கொண்டவன், ஞானமுள்ளவன்”. (அல்-அன்கபூத் : 26)

 “ஷுஐப் நபியின் சமூகத்தில் காணப்பட்ட கர்வம் கொண்ட பிரமுகர்கள் அவரிடம் : ‘ஷுஐபே! நாம் உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டிருப்பவர்களையும் எமது ஊரிலிருந்து விரட்டிவிடுவோம் அல்லது நீங்கள் எங்களது மார்க்கத்திற்கு திரும்பவேண்டும்’ என்றனர். அதற்கு ஷுஐப் நபி அவர்களிடம் ‘நாம் அதனை வெறுத்தபோதிலுமா?’ எனக்கேட்டார்”. (அல்-அஃராப்:88)

மூஸா (அலை) அவர்கள் தன்னைக் கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட மோசமான சூழ்ச்சியிலிருந்து தப்பித்து மத்யனுக்கு ஹிஜ்ரத் செய்தார்.  “நகரத்தின் தொலை துhரத்திலிருந்து ஒருமனிதர் வந்து, ‘மூஸாவே! சமூகப் பிரமுகர்கள் உம்மைக் கொலை செய்ய சூழ்ச்சி செய்கின்றனர். எனவே, நீர் இங்கிருந்து வெளியேறிச் சென்றுவிடும். நான் உமக்கு உபதேசிக்கின்றவனாய் இருக்கின்றேன்’ என்றார். எனவே அவர் தனக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்ற அச்சத்துடன் வெளியேறிச் சென்று ‘எனது இறைவனே அநியாயக்கார சமூகத்திடம் இருந்து என்னைப்பாதுகாப்பாயாக’ என்றும் பிரார்த்தித்தார்”. (அல்-கஸஸ் : 20-21)

 யூதர்கள் ஈஸாஅலை அவர்களை பொய்ப்பித்து அவரை கொலை செய்ய முயற்சித்ததால் அவர்களிடம் இருந்து ஈஸா (அலை) அவர்கள் தப்பித்துச் சென்றார்.

அந்தவகையில் எமது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது தூதை எத்திவைக்க முடியாமல் தடுக்கப்பட்டு, அவரை கொலை செய்ய சூழ்ச்சி செய்த பிரதேசத்தில் இருந்தும் ஹிஜ்ரத் செய்தமை அதிசயமான ஒரு விடயமல்ல. “முன்னர் சென்றவர்களில் நடைமுறையாகிய அல்லாஹ்வின் நியதி இதுதான். அல்லாஹ்வின் நியதியில் எவ்வித மாற்றத்தையம் நீங்கள் காணமாட்டீர்கள்”. (அல்-அஹ்ஸாப் : 62)

ஹிஜ்றத் என்பது ஒரு மானுஷ்யப் பயணம் அது ஒரு தெய்வீக அற்புதமல்ல

றஸுல் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரத் மனித இயல்புக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு மானுஷ்யப் பயணம். ஒரு நபி மேற்கொண்ட போராட்ட வியூகம். றஸுல் (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற முனையும் இஸ்லாமிய ஊழியர்களுக்கும், போராளிகளுக்கும் ஒரு நடைமுறைப் பாடமாக இது அமைந்து காணப்பட்டது. நபியவர்களின் ஹிஜ்ரத், இஸ்ரா மிஃராஜ் போன்ற ஒரு அற்புதப் பயணமாக அமையவில்லை. மாற்றமாக இது ஒரு போராட்ட வியூகம். ஒரு முன்மாதிரி. போராட்டத்திற்கும் செயற்பாட்டிற்குமான பாதை. சத்தியப்பாதையில் எவ்வாறு பொறுமையாக இருப்பது, தியாகம் செய்வது, திடசங்கற்பம் பூணுவது என்பதற்கான பாடம். நல்லவற்றிலிருந்து தீயவற்றை வேறுபடுத்தி அறிவதற்கும், போராளிகளையும் போராட்டத்திற்கு செல்லாமல் இருப்பவர்களையும் பிரித்தறிவதற்குமுரிய பரீட்சை. “மனிதர்கள் தாம் ஈமான் கொண்டோம் என்று சொல்லிவிட்டால் சோதிக்கப்படாமல் விட்டு விடப் படுவோம் என எண்ணியிருக்கின்றார்களா? நாம் அவர்களுக்கு முன்பு இருந்தவர்களைக் கூட அவர்களில் உண்மையாளர்களையும் பொய்யர்களையும் அறிந்து கொள்வதற்காக சோதித்தோம்”. (அல்-அன்கபூத் : 2-3)

பாடங்களும் படிப்பினைகளும்

01. அல்லாஹ்வுக்கு துhய்மையாக கட்டுப்பட்டு வாழும் ஒரு முஸ்லிம் தனது தேசத்தையோ சொத்துக்களையோ பொருட்படுத்தமாட்டான். ஏனெனில் அவை அனைத்தையும் அவன் அல்லாஹ்வின் பாதையில், அவனது மார்க்கத்திற்கு உதவும் பாதையில் தியாகம் செய்வான்.

02. முஸ்லிம்கள் வேதனைகளையும் கஷ்டங்களையும் தாங்கிக் கொள்ளுதல் என்ற சோதனையிலிருந்து சொத்துக்களையும் பிள்ளைகளையும் தமது தேசத்தையும் விட்டுச் செல்லல் என்ற சோதனையை நோக்கிச்சென்றார்கள். ஆனால், அவர்கள் இரு சோதனைகளிலும் வெற்றி பெற்றார்கள்.

03. றஸுல் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி முஸ்லிம்கள் அனைவரும் மதீனாவை நோக்கிச் சென்றனர். இது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பயணமாகும். அதே போன்று இப்பயணத்திற்கு ஹிஜ்ரத்துக்கு முன்னர் நபியவர்கள் கண்ட கனவும் காரணமாய் அமைந்தது.

04. மதீனா வாசிகள், பெரும் திரளாக தம்மிடம் வந்த முஹாஜிர்களை சிறந்;த முறையில் வரவேற்று சகோதரத்துவத்தோடும் விட்டுக் கொடுப்போடும் நடந்து கொண்டனர். றஸுல் (ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைய முன்னரே மதீனாவாசிகள் இவ்விடயங்களில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர். அவர்கள்தான் இஸ்லாமிய அரசின் அத்திவாரமாக அமைந்தனர்.

05. ஒரு தாஈ தன் மீதான அநியாயம் மிகைத்து தனக்கும் தனது தஃவாவுக்கும் அழிவு நிகழும் எனப் பயந்தால் அவன் தான் வாழும் இடத்தைவிட்டு ஹிஜ்ரத் செய்வது கடமையாகும்.

06. ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுக்கு உதவுவது கடமையாகும். இது அவர்களுக்கிடையே இனரீதியான, குலரீதியான, இடரீதியான எத்தகைய வேறுபாடுகள் காணப்பட்டபோதிலும் இடம் பெறவேண்டிய ஒரு கடமையாகும்.

07. கைதிகள், பலவீனர்கள் போன்றோரை விடுதலை செய்வதற்காகவும் அவர்களை அநியாயக்காரர்கள், அடக்கு முறையாளர்களின் கரங்களிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் செயற்படவேண்டும். அவர்கள் எந்த இடத்தில் எந்த நாட்டில் இருந்த போதிலும் அதற்காக முடியுமான அனைத்து வழிமுறைகளையும், சட்டங்களையும், சொத்துக்களையும், அதிகாரத்தையும் பயன்படுத்தவேண்டும்.

08. முஸ்லிம்கள் தமக்கிடையே விசுவாசமாய் நடந்து கொள்வது கட்டாயக் கடமையாகும். பிறருடன் அவ்வாறு நடந்து கொள்வது கூடாது.

09. ஸஹாபாக்கள் தாம் முஷ்ரிக்குகளிடமிருந்து பெரும் துன்பங்களை எதிர் கொள்ளாமல் எவ்வாறு பாதுகாப்பாக ஹிஜ்ரத் செய்யலாம் என்பதற்கான அனைத்து வழிமுறைகளையும், வாய்;ப்புக்களையும் பயன்படுத்தினர்.

10. இஸ்லாமிய தஃவாவிலும், அரசிலும் பெண்களுக்கு உரிய அந்தஸ்த்துக் காணப்படுகிறது. ஏனெனில், அவர்கள் ஹிஜ்ரத்தின் போது பெரும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர்.

11. ஸுஹைப் ரூமி (றழி) அவர்கள் தனது மார்க்கத்திற்காக ஹிஜ்ரத் செய்தபோது சொத்துக்களை தியாகம் செய்வதில் ஒரு சிறந்த நடைமுறை முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.

12. உம்மு ஸலமா (றழி) அவர்கள் தனது ஈமானின் மூலம் சொத்துக்கள் குடும்பம் பிள்ளைகள் அனைத்தையும் இறைதிருப்தியை நாடி மிகைத்துவிடுகிறார்.

13. முஷ்ரிக்குகள் எப்போதும் எல்லா இடங்களிலும் முஸ்லிம்களை அமைதியாக இருக்கவிடுவதில்லை. அவர்கள் எப்போதும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து கொண்டே இருப்பர்.

14. ஒரு சிறந்த தலைமைத்துவத்தின் பண்பாக தயார்படுத்தலும் திட்டமிடலும் காணப்படும். அந்தத் தலைமை எப்போதும் எல்லா விடயங்களையும் தனது கணிப்பில் வைத்திருப்பதோடு, குறைந்த இழப்போடு இலக்கை அடைந்து கொள்வதற்காக செயற்படும்.

15. றஸுல் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் அவருக்கு முன்பிருந்த நபிமார்களின் ஹிஜ்ரத்தின் தொடராகவே இருந்தது.

16. ஹிஜ்ரத் என்பது முஜாஹிதீன்களையும், போராட்டத்திலிருந்து பின்வாங்குபவர்களையும் பிரித்தறிந்து கொள்வதற்காக இடம்பெறும் ஒரு பரீட்சை. தியாகம் செலவழித்தல் பற்றிய ஓர் பாடம். செயற்களம் எவ்வாறு என்பது பற்றிய ஒரு பயிற்றுவித்தல். பொறுமை, நிலைத்திருத்தல தொடர்பான ஒரு படிப்பினை.

17. ஹிஜ்ரத் என்பது றஸுல் (ஸல்) அவர்களை பின்பற்றுகின்ற முஜாஹித்களுக்கான ஒரு செயல் ரீதியான முன்மாதிரி. அது இஸ்ரா மிஃராஜ் போன்ற ஒரு அற்புதமாக அல்லாமல் மனிதனின் சக்திக்குட்பட்;ட பௌதீக செயற்பாடாகவே காணப்படுகின்றது.

18. உமர் (றழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றியாகவும் உதவியாகவும் காணப்;பட்டது. அவரின் ஹிஜ்ரத்தும் அவ்வாறே அமைந்தது.

19. சோதனையிலும் கஷ்டத்திலும் பயிற்றுவிக்கப்பட்ட முஸ்லிம்கள், அல்லாஹ்வின் பாதையில் துன்புறுத்தலுக்கும் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு அதில் பொறுமை காத்து இஸ்லாமிய அரசொன்றை உருவாக்குவதற்காக இறை திருப்தியை நாடி ஹிஜ்றத் செய்தனர். அந்த இஸ்லாமிய அரசு பூமிவாழ் மாந்தர் அனைவருக்கும் இஸ்லாமிய நாகரிகத்தின் பெறுமானங்களை பரப்பும் என அவர்கள் சிந்தித்ததால் இத்தகைய தியாகங்களை மேற்கொண்டனர்.

20. ஒரு முஸ்லிம் தனிமனிதனோ சமூகமோ தமக்கென்றோரு இஸ்லாமிய அரசு காணப்படாதபோது தமது பணியை நிறைவேற்றவோ, உலகிற்கு ஒழுக்க பண்பாட்டுப் பெறுமானங்களை முன்வைக்கவோ, இஸ்லாமிய ஒழுங்குகளை யதார்த்தங்களை முன்வைக்கவோ முடியாது. எனவேதான், ஒரு முஸ்லிம் இஸ்லாமிய அரசொன்றை நிறுவுவதற்காக செயற்படுவான். அந்த அரசு தன்னைப் பாதுகாக்கும், தனது பணியை செய்வதற்கு தடையாக அமையும் காரணங்களை நீக்கிவிடும் என அவன் நம்புகின்றான்.

21. றஸுல் (ஸல்) அவர்கள் தனது தோழர்களின் இயலுமைகள் பொருத்தமற்ற இடத்தில், இது வரை தயார்படுத்தப்படாத பூமியில் வீணடிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். எனவே, அந்த இயலுமைகளை பொருத்தமான இடத்தில் பொருத்தமான காலப்பகுதியில் பயன்படுத்திக்கொண்டார்கள்.

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...