
மனித வாழ்வில் அதன் போக்கிலும், அமைப்பிலும் தாக்கம் செலுத்துகின்ற பிரதான அம்சங்களாக பின்வரும் 03 அம்சங்கள் காணப்படுகின்றன. அவை:
- மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான தொடர்பு
- மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையிலான உறவு
- மனிதனுக்கு தனது சக மனிதனுடன் உள்ள தொடர்பு
இதில் மானிடத் தொடர்பில் பிரதானமாக இரு விடயங்கள் முக்கியமானவை:
- ஆண்-பெண் தொடர்பு
- தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு
இவற்றுள் நாம் பேச எடுத்த விடயம் ஆண் - பெண் தொடர்பு குறித்த பர்வையிலிருந்து எழுகின்ற ஒரு விவகாரம்.
ஹிஜாப் என்றால் என்ன? அது ஏன் அவசியம்? என்பதனை விளங்க ஆண் - பெண் தொடர்பு குறித்த இஸ்லாத்தின் பார்வையின் முக்கிய புள்ளிகளையாவது புரிந்து கொள்வது முக்கியமானது.
- ஆணும் பெண்ணும் அடிப்படையில் சமத்துவமானவர்கள், அவர்கள் வாழ்வின் உரிமைகளிலும் கடமைகளிலும் சம பங்காளர்கள்.
“உங்களில் ஆணாயினும் பெண்ணாயினும் அவர்கள் செய்த எந்த ஒரு செயலையும் நான் வீணாக்கிட மாட்டேன் என அவர்களது றப்பு அவர்களுக்கு பதிலளித்தான். நீங்கள் இருபாலாரும் ஒருத்தரை ஒருத்தர் சாரந்துள்ளீர்கள்….” –ஆல இம்ரான்-195-
“முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் பொருப்பாளர்களாகவும் உதவியாளர்களாக உள்ளனர். அவர்கள் நன்மையை ஏவுகின்றனர், தீமையை தடுக்கின்றனர்…” –தௌபா:71-
2.ஆண்,பெண் இயல்பு அடிப்படையில் வாழ்வில் அவர்களது பணி, பொருப்புக்களில் வேறுபாடு கொண்டவர்கள்.
2.ஆண்,பெண் இயல்பு அடிப்படையில் வாழ்வில் அவர்களது பணி, பொருப்புக்களில் வேறுபாடு கொண்டவர்கள்.
“ஆண்கள் பெண்களைப் போன்றவர்களல்லர்” – ஆல இம்ரான்:36-
“ஆண்கள் பெண்களின் நிர்வாகிகளாயிருப்பர்….” –நிஸா :34-
“ஆண்கள் பெண்களை பார்க்கிலும் படி நிலை வேறுபாடு கொண்டோராவர்…” –பகரா :228-
3.ஆண்-பெண் இருபாலாரும் தமக்கிடையே இயல்பான ஈர்ப்புக் கொண்டவர்கள்.
3.ஆண்-பெண் இருபாலாரும் தமக்கிடையே இயல்பான ஈர்ப்புக் கொண்டவர்கள்.
“உங்களுக்கு
உங்களில் இருந்தே துணையை படைத்தது அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். நீங்கள் உங்கள்
துணையிடம் அமைதிபெற வேண்டும் என்பதற்காகவே அவன் அவ்வாறு செய்தான். அவன் உங்களுக்கிடையே
அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தினான்” –ரூம்: 21-
ஆண்,
பெண்ணின் சமூக வகிபாகம் மற்றும் அவர்களுக்கிடையான ஈர்ப்பும் வேறுபாடும் அவர்களுக்கிடையிலான
உறவு தொடர்பில் சில ஒழுங்குகளும் வரையறைகளும் ஏற்படுத்தப்பட வேண்டியமையை வலியுறுத்துகின்றது.
அதிலும் குறிப்பாக இருபாலாரதும் உறவில் மானிட விருத்தி தங்கியிருப்பது இதனை இன்னும்
வலியுருத்துகிறது.
இரு பால் உறவு வெறும் இன்பம் சார்ந்த தொடர்பாக மாத்திரம் முடிந்து போவதாயின் இந்த தேவை பல போது அவசியப்படமாட்டாது. எனினும் இந்த வேறுபாட்டுக்கு இடையேயான பிணைப்பு மானிட வாழ்வின் அடிப்படை நோக்கம் ஒன்றை கொண்டிருப்பது இந்த உறவை ஒழுங்கு படுத்த வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதனுடன் மாத்திரம் இது சுருங்கி விடுவதில்லை. மானிட வாழ்வின் பொருள் இந்த உறவின் ஒழுங்கில்தான் பொதிந்துள்ளது.
இரு பால் உறவு வெறும் இன்பம் சார்ந்த தொடர்பாக மாத்திரம் முடிந்து போவதாயின் இந்த தேவை பல போது அவசியப்படமாட்டாது. எனினும் இந்த வேறுபாட்டுக்கு இடையேயான பிணைப்பு மானிட வாழ்வின் அடிப்படை நோக்கம் ஒன்றை கொண்டிருப்பது இந்த உறவை ஒழுங்கு படுத்த வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதனுடன் மாத்திரம் இது சுருங்கி விடுவதில்லை. மானிட வாழ்வின் பொருள் இந்த உறவின் ஒழுங்கில்தான் பொதிந்துள்ளது.
ஹிஜாப் ஒரு ஆடையல்ல அது ஒரு முறைமை
இந்தப் பின்னணியில் இருந்தே இஸ்லாம் முன்வைக்கும் ஹிஜாப் சிந்தனை புரியப்பட வேண்டும். அதனை ஒரு ஆடையாக மாத்திரம் புரிந்து கொள்வது, அதுவும் பெண்ணுக்கான ஆடையாக மாத்திரம் புரிவது ஹிஜாப் குறித்த இஸ்லாத்தின் சிந்தனையை புரிவதில் விடப்படுகின்ற குறைபாடாகவே காணப்படும்.
ஹிஜாப் குறித்து ஆரம்பமாக பேசிய வசனங்களாகக்
கருதப்படும் ஸுரா அஹ்ஸாபின் வசனங்களை நாம் பார்த்தாலும், அதற்கடுத்து பேசிய வசனங்களாகப்
பார்ககப்படும் ஸுரா நூரின் வசனங்களை பார்த்தாலும் அவை அனுமதி பெறுதல் என்ற விடயத்தில்
இருந்தே ஹிஜாப் குறித்த பேச்சை ஆரம்பிப்பதை அவதானிக்கலாம்.
“ஈமான்
கொண்டவர்களே! நபியினுடைய வீட்டுக்கு உங்களுக்கு அனுமதி கிடைத்தாலேயன்றி சாப்பாட்டிற்காக உள் நுழைய வேண்டாம்….“ -அஹ்ஸாப்:53-
“ஈமான்
கொண்டவர்களே! உங்களது அல்லாத பிறரது வீட்டிலே நீங்கள்,உங்களது வருகையை அறிவித்து உங்களுக்கான
முன் அனுமதியை பெற்று, அங்கு வசிப்போருக்கு ஸலாம் கூறாத வரை நுழைய வேண்டாம். அதுதான்
உங்களுக்கு சிறந்ததாகும். இதனை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்…, அந்த வீட்டிலே எவரும்
இருப்பதை காணாத போதும் அனுமதி கிடைக்காத வரை அங்கே நுழைய வேண்டாம். நீங்கள் திரும்பி
சென்று விடுங்கள் என்று கூறப்பட்டால் திரும்பி சென்று விடுங்கள். அது உங்களுக்கு தூய்மையானதாகும். நிங்கள்
செய்பவற்றை அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்…., யாரும் வசிப்பிடமாக கொள்ளாத ஒரு வீட்டில்
உங்களுக்கான ஒரு பொருள், தேவை இருப்பின் அங்கே நுழைவதில் குற்றம் கிடையாது. நீங்கள்
மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் அல்லாஹ் அறிபவனாக உள்ளான்” -நூர் 27-29-
இங்கு, உடம்பிற்கு ஹிஜாப் அணிவதற்கு முன்னர்
மனதுக்கு ஹிஜாப் அணிவிக்க வேண்டிய தேவை இருப்பதை விளங்குகிறோம். இதனை ஸுரா நூரின்
58,59 வது வசனங்களும் இன்னும் உறுதிப் படுத்துகின்றன.
“ஈமான்
கொண்டோரே! உங்களது வலக்கரம் சொந்தமாக்கப்பட்டவர்களும், பருவமடையாத உங்களது பிள்ளைகளும்
நாளின் மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி பெறட்டும். அவை பஜ்ரு தொழுகைக்கு முன்னைய
பொழுது, பகல் பொழுதில் உங்களது ஆடைகளை தளர்த்தி வைக்கும் நேரம், இஷாவுக்கு பின்னைய
நேரம் என்பனவாகும். இவை உங்களுக்கான மூன்று அவ்ரத்துக்களாகும். அதனை தவிரவுள்ள நேரங்களில்
அனுமதி குறித்த விடயத்தில் உங்களுக்கோ அவர்களுக்கோ பிரச்சினை கிடையாது. அவர்கள் உங்களை
சுற்றிச் சுற்றி வருவோர். நீங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறீர்கள். அல்லாஹ் இவ்வாறுதான்
உங்களுக்கு வசனங்களை விளக்குகிறான். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனும் ஞானம் கொண்டவனாயுமுள்ளான்……, உங்கள்
குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களை முந்தியவர்கள் அனுமதி கோரியது போல் அவர்களும் அனுமதி கோரட்டும். அல்லாஹ்
இவ்வாறுதான் உங்களுக்கு அவனது வசனங்களை விளக்குகிறான். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனும்
ஞானம் கொண்டவனாயுமுள்ளான்” –நூர்: 58,59-
இங்கு முதலில் அல்-குர்ஆன் அவ்ரத் என்பதை
விரிவான பொருளில் பாவித்திருப்பதை விளங்கிக் கொள்வது அவசியம். அது உடலின் ஒரு பகுதி
என்பதை தாண்டி மேலுள்ள வசனத்தில் குறித்த சில நேரத்தை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை
குறித்த சந்தர்ப்பத்தில் குறித்த சாராருக்கு மறைக்கப்பட வேண்டிய ஒரு விடயமாக நாம் அவ்ரத்தை
விளங்கிக் கொள்கிறோம்.
இந்த வகையில் ஆடைக்கு முன்னர் வீடும்,
அறைகளும் இங்கு அவ்ரத்தாக பார்க்கப்பட வேண்டிய தேவை இருப்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன.
ஒருவருடைய வீடு, எந்த வெளித் தலையீடுகளும் இன்றி தனித்த தன்மையுடன் (Privacy) இருக்க
வேண்டும். அதற்குள்ளால் நுழைதல் முன் அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான
முக்கிய காரணம் உள்ளால் இருப்பவர் மானசீக ரீதியாகவும், உடல், ஆடை… என எல்லா வகையிலும்
சுதந்திரமாக இருப்பதற்கான வாய்ப்பை வழங்குவது என்பதுடன் வெளியால் இருப்பவர் உள்ளே இருப்பவரின்
அனுமதி இன்றி அவரது மறைவான விடயங்களில் தலையீடு செயயாது இருப்பதுடன், காண்பதற்கு கூடாதவற்றை
காண்பதன் ஊடாக தவறான நடத்தைகள் ஏற்படாது பாதுகாப்பதுமாகும். எனவேதான் அனுமதி மறுக்கப்படுவதற்கும்
இங்கு இடம் இருக்கின்றது. (இதுவேதான் தொலைத் தொடர்பு சாதனங்களினாலான நுழைவுக்குமுறிய
ஒழுங்குமாகும். ஆனால் துரதிஷ்ட வசமாக அப்படி பதில் அளிக்காவிடில் பலருக்கு காரணம் சொல்ல
வேண்டிய துர்ப்பாக்கியம் இன்று நிலவுகிறது.) ஏனெனில், ஒருவர் எத்தகைய சூழலில் இருக்கிறார்
என்பது யாராலும் குறித்துக் கூற முடியாது.
அதிலும் ஒரு வீட்டிற்குள்ளும் ஒருவருடைய
தனித்த அறை என்பது அவருக்கு இன்னும் சுதந்திரத்திற்குரிய இடம். அதிலும் அல்-குர்ஆன்
உதாரணமாக குறிப்பிட்ட நேரம் போன்ற ஒருவர் மிக சுதந்திரமாக இருப்பதற்கான பொழுதுகள் முக்கியமானவை.
இங்கு வெளியே இருப்பவரால் உள்ளிருப்பவரது சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது என்ற கவனம்
இருப்பது போலவே உள்ளே இருப்பவரால் வெளியே இருப்பவரது மனோ நிலை பாதிக்கப் படக் கூடாது
என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒருவரது பாலியல் உணர்வு முதல் அவரது மன
உணர்வு மற்றும் சிந்தனை நடத்தை சார் சீர்மைக்கு இப்படியான சுதந்திரமான இடங்களும் பொழுதுகளும்
முக்கியமானவை. அல்- குர்ஆனின் இந்த வசனங்களை வாசித்துச் செல்கின்ற போது இந்த வசனங்கள்
ஹிஜாபை ஒரு தடையாக அல்லாமல் ஒரு சுதந்திர எல்லையை பெற்றுத் தரும் ஒரு தடுப்பாகவே குறிப்பிடுவதை பார்க்க முடிகிறது.
இங்கு, அல்-குர்ஆன் ஒருவருக்கு பார்க்கக்
கூடாத நிலையில், பருவத்தில், பார்க்கக் கூடாதவர்களது காட்சிகள் காண்பிக்கப்படக் கூடாது
என்பதில் முதல் கவனம் எடுத்திருப்பதைக் காண்கிறோம். அதுதான் முதலில் இங்கு தடுக்கப்
பட வேண்டியவை. அவை ஒருவனது ஆழ் மனக் காட்சியாக பதிந்துவிட்டால் அதன் விளைவு மிகவும்
பாரதூரமானது. அதனைத்தான் நாம் இன்று உலகில் கட்டறற பாலியல் கலாச்சார சூழலின் விளைவாக
அன்றாடம் அனுபவிக்கின்றோம்.

தொடரும்…..