தேசம்

சிறுபான்மை நாட்டில் இஸ்லாத்தை பேசல்



February 20, 2013 at 10:24pm
    இது வரை நாம் இஸ்லாத்தை நமக்குள்ளால் பேசினோம் இப்போது பரந்த வெளியொன்றில் பேச வேண்டிய தேவை எழுந்துள்ளது.இதன் போது இஸ்லாத்தை நாம் முன் வைக்கும் முறையில் நிச்சயம் மாற்றங்கள் தேவை...நாம் யாருக்கு இஸ்லாத்தை முன் வைக்கின்றோமோ அவர்களது பாஷையில் நாம் முன் வைக்க வேண்டியிருக்கின்றது.இங்கு பாஷை என்கின்ற போது மொழியல்ல மாற்றமாக நாம் யாருடன் பேசுகின்றோமோ அவர்களிடம் இருக்கின்ற சிந்தனைகள் பார்வைகளினை அடிப்படையாக வைத்து நாம் அவர்களுடன் பேச வேண்டும்.
    உதாரணமாக நாம் ஹிஜாப் தொடர்பான கருத்துக்களை முஸ்லிமல்லாதாரிடம் விளக்குகின்ற போது எப்படி முன் வைப்பது என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.ஹிஜாப் தொடர்பாக பெண்கள் முகம்,கை தவிர உடம்பின் அனைத்துப் பகுதியையும் மூட வேண்டும் என்பதில் எல்லோரிடமும் உடன்பாடிருக்கிறது.அடுத்து முகத்தை மூடி நிகாப் அணிவதில் இரு கருத்துக்கள் இருக்கின்றன 1.மூட வேண்டும் 2.மூட வேண்டியதில்லை.இது இன்று நேற்று உருவான கருத்தல்ல மாற்றமாக இப்னு மஸ்ஊத் (றழி) முதற் கருத்தையும்,இப்னு அப்பாஸ்(றழி) இரண்டாவது கருத்தையும் கொண்டிருந்தார்கள்.இந்த இடத்தில் மெளானா மௌதூதி (றஹ்) அவர்கள் நிகாப் தொடர்பாக கூறும் அழகான நிலைப்பாட்டையும் ஒரு தெளிவுக்காக நினைவு படுத்திக் கொள்வோம்.முகமும் மணிக்கட்டுக்கு கீழ் உள்ள பகுதியும் அவ்ரத் அல்ல என்பது தெளிவு.ஆனால் அவற்றை மூட வேண்டியவர்கள் மூட வேண்டிய இடத்தில் மூடிக் கொள்வது அவசியமானது.
    இனி,இன்று இது தொடர்பான விமர்சனம் முன் வைக்கப் படுகிறது.அதனை நாம் எப்படி முஸ்லிமல்லாதாருக்கு விளக்குவது?இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் யாருக்கும் நிர்ப்பந்தம் கிடையாது, ”மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கிடையாது”.எனவே ஹிஜாபை அணிய வேண்டும் எனவும் நாம் யாரையும் நிர்ப்பந்திப்பதில்லை.அதன் முக்கியத்துவம்,அவசியம் பற்றியெல்லாம் விளக்குவோம்,அதனை அணியாத போது வரும் விளைவுகளை விளக்குவோம்,அதனை அணிவதால் வரும் விளைவுகளை விளக்குவோம்.அடுத்து,நிகாப் தொடர்பாக இஸ்லாத்தில் இரு கருத்துக்களுண்டு,இருகருத்துக்களையும் பின்பற்றுவதற்கு அவரவருக்கு தாராளமாக சுதந்திரமுண்டு.யாரையும் அணியுங்கள் என்று நிர்ப்பந்திப்பதுமில்லை,அணியக்கூடாது என நிர்ப்பந்திப்பதுமில்லை.இது இஸ்லாத்திலுள்ள பன்மைத்துவ கருத்தியல்.(pluralism-பன்மைத்துவம் என்பது அவர்களுக்கு விளங்கும் ஒரு கருத்தியல் இதனை அறபியில்-التعدديةஎன்போம்.இது தொடர்பாக உஸ்தாத் பத்ஹி யெகன் போன்றவர்கள் பேசியுள்ளார்கள்.)அணியுங்கள் என நிர்ப்பந்திப்பதை நீங்கள்  எப்படி பயங்கர வாதம் என்கிறீர்களோ அதே போல்தான் அணியாதீர்கள் என நிர்ப்பந்திப்பதும் பயங்கரவாதமாகும்.ஒரு பெண் அறை நிர்வாணமாக செல்லும் போது அதனால் தூண்டப்படும் ஒருவர் அவளில் அத்து மீறினாலும் தண்டணை கொடுக்கப்படுகின்றது தானே!அங்கு உணர்ச்சி தூண்டப்பட்டது என்ற நியாயமெல்லாம் ஏற்பதில்லையே!பெண்ணுக்கு அப்படி ஆடை அணிய சுதந்திரம் உண்டு என்போமே!அதே போல் தான் அவள் மூடியும் அணியலாம்.மூடி அணிகின்ற அவள் மீது அத்து மீறினாலும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்,ஏனெனில் அது அவளது சுதந்திரம்.பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்பது ஒரு சோடனை.பயங்கரவாத பிரச்சிணை காலத்தில் இல்லாத அச்சுருத்தலா இன்றுள்ளது?!ஒரு சில நிகழ்வுகள்,அதுவும் சோடிக்கப்பட்ட நிகழ்வுகள் அமுலில் உள்ள ஒன்றை நீக்கவோ ,இல்லாத ஒன்றை ஆக்கவோ உரிய ஆதாரமல்ல.அப்படித்தான் உள்ளது என்று வையுங்களேன்.நீங்கள் தாரளமாக அதற்குரிய தரப்பு உரிய இடத்தில் அப்படி அணிபவர்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தலாம்.ஏனெனில் முகம் மூடும் கருத்தை கொண்டிருப்பவர்களே அதனை திறப்பதற்கான சந்தர்ப்பத்தையும் பேசியுள்ளார்கள். சாட்சி சொல்லல்,கல்வி,மருத்துவம்,ஆளடையாளத்தை உறுதிப்படுத்தல்....எனவே,இஸ்லாமிய நீதி மன்றமாயினும் சாட்சி சொல்ல வந்தால் முகத்தை திறந்து ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்......இப்படி நாம் இஸ்லாத்தின் கருத்துக்களை அழகாக விளக்கத் தெரிய வேண்டும்.இதனுடன் சேர்த்து ஏனைய மதங்கள் சிந்தனைகளில் உடை தொடர்பான கருத்துக்களையும் விளக்கலாம்.இதை விடுத்து நான் என்ன கருத்தை கோண்டிருக்கிறேனோ அதனை மாற்று மொழி ஊடகங்களுக்கு சென்று அதனை அழுத்தி விளக்க முனைவது எவ்வளவு பொருத்தப்பாடுடையது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.அடுத்து ஊடகங்களில் கிடைக்கும் ஒரு சில நிமிடங்களை நாம் பள்ளியுள் பயான் செய்வது போன்று கதை சொல்லி,மாட்டைப்பற்றி வர்ணிக்க மரத்தை சுற்றி வந்து கடைசியில் மாட்டை விட்டு விடுவது எவ்வளவு அறிவீனமானது?அடுத்து பொருப்பு வாய்ந்த இடங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பலரும் ஊடகங்களுக்கு சரியாக பொருப்பாய விடைபகராது நழுவுவது,எம்மை கேள்வி கேட்க நீ யார் என்று விதண்டாவாதம் புரிவது ....இது இஸ்லாத்தை நாமே நமது வாயால் ஊதி அணைப்பது போல்லவா உள்ளது!?நாம் அவர்களுக்கு இஸ்லாத்தை சொல்லிக் கொடுப்பது எமது கடமை,அதனை நாம் செய்யவுமில்லை ,அவர்கள் கேட்டு வருகின்ற போது கூட நாம் அதனை சொல்லிக் கொடுக்க முன் வருவதுமில்லை?!இதுவா நமது தஃவத்து?!
  இதனை பார்க்கின்ற போது ”இஸ்லாம் நிரபராதியாகவுள்ளது ஆனால் அதற்காக வாதிடும் வக்கீல்களோ கையாளாகாதவர்களாக இருக்கிறார்கள்”என ஷெய்க் முஹம்மதல்கஸ்ஸாலி அவரது நூலொன்றின் முன்னுரையில் கூறும் கருத்தை இங்கு நினைவு படுத்தாமல் இருக்க முடியாது........
மீண்டும் சந்திப்போம்...உங்கள் கருத்துக்களையும் பறிமாறிக் கொள்ளுங்கள்..ஒரு அழகிய கலந்துரையாடலால் எம்மை நாம் தகுதி படுத்திக் கொள்வோம்.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...