Monday, December 26, 2016

நிபாக் - தஃவா பாதையில் எதிர்ப்படும் அபாயம்


   "أدركت كذا وكذا من أصحاب النبي صلى لله عليه وسلم ٬ ما مات رجل منهم إلا وهو يخشى على نفسه النفاق" -ابن أبي مليكة-
 நான் நபித்தோழர்களுள் இவர்,இவரையெல்லாம் சந்தித்துள்ளேன்அவர்களில் யாரும் தன்னிடம் நிபாக்தனம் தோன்றிவிடக் கூடாதே என அச்சம் கொள்ளாமல் மரணிக்கவில்லை

உமர்(றழி) அவர்களைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.அவரது தக்வாவும், பேணுதலும்,மார்க்க உணர்வும் அனைவரும் அறிந்த ஒரு விடயம்.உமர்(றழி) ஒரு பாதையால் சென்றால் அந்தப் பாதையால் ஷைத்தான் போகமாட்டான்.
 இந்த உமர் (றழி) அவர்கள் நபியவர்களின் இரகசிய செயலாளர் ஹுதைபா இப்னுல் யமான் (றழி) அவர்களின் பின்னால் சென்று நபியவர்கள் கொடுத்த முனாபிக்குகளின் பட்டியலில் தனது பெயர் இருக்கின்றதா என விசாரிக்கின்றார்கள்.அதற்கு,இல்லை என பதிலளித்த ஹுதைபா(றழி)அவரகள்,இதன் பின்னர் இதனை நான் யாருக்கும் அறிவிக்கவேமாட்டேன் எனப் பதில் அளித்தார்கள்.

عن ابن أبي مليكة رحمه الله قال : " أدركت ثلاثين من أصحاب النبي صلى- كلهم يخاف النفاق على نفسه "

“நான் ஸஹாபாக்களில் 30 பேரை சந்தித்திருக்கிறேன். அவர்களில் அனைவரும் தன்னிடம் நிபாக் வந்துவிடக் கூடாதே எனப் பயந்து கொண்டே இருந்தார்கள்

عن الحسن قوله عن النفاق : " ما خافه إلا مؤمن ولا أمنه إلا منافق "
நிபாக்கிலிருந்து பயந்து வாழ்பவன் ஒரு முஃமினாகத்தான் இருப்பான்.அதே போன்று ஒரு முனாபிக்கால்தான் நிபாக்கிற்கு அச்சப்படாது இருக்க முடியும்
قال إبراهيم التيمي : " ما عرضت قولي على عملي إلا خشيت أن أكون مكذبا
எனது சொல்லையும் செயலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போதெல்லாம் நான் ஒரு பொய்யனாக இருக்கின்றேனோ எனப் பயப்படுகிறேன்.”
قال الإمام الحسن البصرى رحمه الله " لو كان للمنافقين أذناب لضاقت بكم الطرق "
முனாபிக்குகளுக்கு பின்னால் வால்கள் இருக்குமாயின் உங்களுக்கு பாதையில் செல்ல முடியாதிருக்கும்
இவை,ஸஹாபாக்கள்,தாபிஈன்கள்...என ஸலபுகளிடம் நிபாக் குறித்து காணப்பட்ட அச்சம்.ஒரு முறை ஹன்ழலா(றழி)அவரகள்,ஹன்ழலா முனாபபிக்காகிவிட்டார்,ஹன்ழலா முனாபிக்காகிவிட்டார்...எனக் கூறிக் கொண்டு நபியவர்களிடம் வருகிறார்கள்.அவருடன் அதே விடயத்தை அறிந்து கொள்ள அபூபக்ர்(றழி)அவர்களும் வருகிறார்கள்.நபியவர்கள் விபரம் கேட்டு,அது நிபாக் சார்ந்ததல்ல.அது வாழ்வின் யதார்த்தம் என விளக்குகிறார்கள்.இங்கு முக்கியம் மிக முக்கியமான ஸஹாபாக்கள் கூட நிபாக் குறித்த அச்சத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற விடயம்தான்.நபியவர்களுடன் ஒன்றாய் இருந்து உழைத்த அபூபக்ரிடமே இந்த அச்சம் வந்திருக்கின்றது என்றால் எமது நிலமை எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
 எனினும் துரதிஷ்டவசமாக நாம் மிகவுமே தூய்மையாயும் பாதுகாப்பபயும் இருப்பது போன்ற ஒரு மாயையில் வாழ்கிறோம்.இது ஆபத்தான ஒரு நிலையாகும்.நாம் பல போது ஒரு விடயத்தை அணுகும் போது அதன் தத்துவார்த்தப் பிரிப்புக்களையெல்லாம் பேசி, அதனூடாக நாம் அடைய வேண்டிய முக்கிய அடைவுகளை மறந்து போவோம்.
 இங்கும் நாம் நிபாக்கின் வகைகள்,அதன் வரைவிலக்கணங்கள் என்பவற்றுக்கப்பால் அதன் சிறிய தாக்கமாவது எம்மிடம் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதற்கான முயற்சியிலேயே ஈடுபட வேண்டும்.ஏனெனில்,அதன் பண்புகளது ஒரு சிறிய வடிவமும் நிபாக்கின் உச்ச எல்லைக்கு ஒருவர் இட்டுச் செல்லப்பட காரணமாக அமையலாம்.
  இந்த வகையில் நிபாக் என்பதை நாம் சரளமான பாஷையில் குறிப்பிடுவதாயின்அகமும் புறமும் முரண்பட்டிருத்தல்இது அகத்தில் குப்ரை வைத்திருந்து புறத்தில் இஸ்லாத்தை காட்டுவது துவக்கம் சாதாரண வாழ்க்கை நடத்தையில் அப்படி நடப்பது வரை குறித்து நிற்கும்.அல்-குர்ஆனில் இது தொடர்பாக 17 மதனி ஸுராக்களில் பேசப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 340 வசனங்கள் நிபாக் தொடர்பாக பேசியுள்ளது.தனியான ஒரு ஸுரா இது தொடர்பில் காணப்படுகிறது.இமாம் இப்னுல் கையிம்(றஹ்) அவர்கள் குறிப்பிடுவது போன்று,முழுக் குர்ஆனும் முனாபிக்குகளது விவகாரத்தை பேசியுள்ளதோ என்னும் அளவு குர்ஆன் இது பற்றி பேசியுள்ளது.
 நிபாக்கைப் பொருத்த வரை பொதுவாக பெரிய நிபாக் என்றும் சிறிய நிபாக் என்றும் பிரிப்பர்.அதாவது அகீதா ரீதியான நிபாக்,செயல் ரீதியான நிபாக் என இது பார்க்கப்படுகிறது.ஒருவர் குப்ரில் இருந்து கொண்டு தான் இஸ்லாத்திலிருப்பதாக காட்டிக் கொள்ளல் அகீதா ரீதியான அல்லது பெரிய நிபாக எனப்படும்.அது தவிர்ந்த முன்னுக்குப் பின் முரணான அனைத்து நடத்தைகளும் செயல் ரீதியான நிபாக்காகக் கொள்ளப்படும்.எனினும்,ஒருவர் நிபாக்கின் பண்புகளாக நபியவர்கள் குறிப்பிட்ட பொய்,மோஷடி,வாக்கு மீறுதல்,மோஷமான நடத்தை போன்ற பண்புகளில் ஒன்றின் நிழலேனும் ஒருவரிடம் காணப்படுமாயின் அவர் பொரிய நிபாக்கை நோக்கி இட்டுச் செல்லப்படுவது சாத்தியமானதாகும்.அதாவது,அவர் ஒரு சிறிய உலக இலாபத்துக்காக மார்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதற்கும்,விற்பதற்கும் தயாராக இருப்பார்.
أربع من كن فيه كان منافقا خالصا ٬ً ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها ٬ إذا أؤتمن خان ٬ وإذا حدث كذب ٬ وإذا عاهد غدر ٬ وإذا خاصم فجر   )رواه البخاري ومسلم).
நான்கு பண்புகள் காணப்படுகின்றன.யாரிடம் அவை காணப்படுகின்றனவோ அவர் முழுமையான முனாபிக்காகக் காணப்படுவார்.யாரிடம் இதில் ஒரு பண்பு காணப்படுகிறதுவோ,அவர் அதனை விடும் வரையில்  நிபாக்கின் ஒரு பண்பை பெற்றவராகக் காணப்படுவார்.அவை,நம்பினால் மோசடி செய்தல்,பேசினால் பொய் பேசுதல்,உடன்படிக்கை செய்தால் மோஷடி செய்தல்,சண்டயில் ஈடுபட்டால்  மோஷடியாக நடத்தல்” –புகாரி,முஸ்லிம்-
  நிபாக்கின் பண்புக்கும் அதன் உண்மை நிலைக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு அமையும் என்பதனை பின்வரும் வசனம் விளக்குகிறது.

وَمِنْهُم مَّنْ عَاهَدَ اللّهَ لَئِنْ آتَانَا مِن فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ ﴿75﴾ فَلَمَّا آتَاهُم مِّن فَضْلِهِ بَخِلُواْ بِهِ وَتَوَلَّواْ وَّهُم مُّعْرِضُونَ ﴿76﴾ فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُواْ اللّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُواْ يَكْذِبُونَ ﴿77﴾(التوبة:75-77 )
 அவர்களில் சிலர்,அல்லாஹ் அவனது அருளிலிருந்து எமக்களித்தால் நாம் அதிலிருந்து ஸதகா செய்து நல்லடியார்களாகிடுவோம் என்கின்றனர்.எனினும்,அல்லாஹ் அவனது அருளை கொடுத்த போது அவர்கள் அதில் கஷ்சத்தனம் புரிந்தார்கள்.அவர்கள் புறக்கனித்தவர்களாக திரும்பிச் சென்றனர்.அவர்கள் அல்லாஹ்வுக்களித்த வாக்கை மீறியமயாலும்,அவர்கள் பொய் பேசிக் கொண்டிருந்தையாலும்,அவர்களது உள்ளங்களில் மறுமை வரை நிபாக்கை ஏற்படுத்தி வைத்து விட்டான்.”
 எனவேதான் ஸஹாபாக்கள் நிபாக்கின் பண்புகளின் வாடையாவது தங்களிடம் வீசிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தார்கள்.
நிபாக்கின் அடிப்படை சார்ந்த ஒரு பண்புதான் இரட்டை முகத்துடன் நடந்து கொள்ளுதல்.இதனையும் இஸ்லாம் வன்மையாக கண்டித்துள்ளது.
عن أبي هريرة رضي لله عنه قال : قال النبي صلى لله عليه وسلم:« تجد من شر الناس يوم القيامة عند لله ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه »
மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதனாக இரட்டை முகமுடையவன் காணப்படுவான்.அவன் ஒரு சாராரிடம் ஒரு முகத்துடனும் இன்னோர் சாராரிடம் இன்னோர் முகத்துடனும் செல்வார்.”

عن عمار بن ياسر رضي الله عنه قال: قال رسول لله صلى لله عليه وسلم:« من كان له وجهان في الدنيا كان له لسانان من نار يوم القيامة » (رواه  أبوداود).
யாருக்கு உலகில் இரண்டு முகங்கள் காணப்படுகின்றனவோ,அவருக்கு மறுமையில் நெருப்பிலான இரண்டு நாவுகள் காணப்படும்
ثبت في صحيح البخاري قال ناس لابن عمر رضي لله عنه : (إنا لندخل إلِى أمرائنا فنقول لهم بخلاف ما نتكلم إذِا خرجنا من عندهم ٬ فقال : كنا نعد هذا نفاقا على عهد رسول لله صلى لله عليه وسلم).
இப்னு உமர்(றழி) அவர்களிடம் சிலர் வந்து,நாம் எமது தலைவரகளிடம் சென்றால் நாம் அவர்களிடமிருந்து வெளியில் வந்தால் கதைப்பதற்கு மாற்றமாக கதைப்போம் என்றார்கள்.அதற்கு இப்னு உமர்(றழி)அவர்கள் நாம் அதனை நபியவர்களது காலப் பகுதியில் நிபாக்காகக் கருதினோம் என்றார்கள்.
 இரட்டை முகத்துடன் நடப்பவன் பொருப்பிலுள்ளவர்களை புகழ்ந்து அவர்களை நாசப்படுத்தி விடுவான். இமாம் ஹஸனுல் பஸரி அவர்கள் ஹஜ்ஜாஜின் நிலை பற்றிக் கூறும் போது இதனைக் குறிப்பிடுவார்.
يقول الحسن البصري :(تولى الحجاج العراق وهو عاقل كيس فما زال الناس يمدحونه حتى صار أحمق طائشا سفيها)
ஹஜ்ஜாஜ் ஈராக்கின் கவர்னராக பதவி ஏற்கும் போது அறிவும் திறமையும் கொண்டவனாகக் காணப்பட்டான்.மக்கள் அவனை தொடர்ந்தும் புகழ்ந்து அவன் மடையனாகவும் எதற்கும் உதவாத மொக்கையனாகவும் மாறிவிட்டான்
 இது எம்மிடம் தோற்றம் பெற முடியுமான நிபாக்கின் ஒரு தோற்றம்.அதன் இன்னோர் தோற்றம்தான் ஒருவரை திருப்திப்படுத்துவதற்காக,அவரின் தீங்கை அஞ்சிபல நியாயங்களைக் கூறி பொருத்தமற்றவர்களை பொருப்புக்களில் அமர்த்துவது.இதனை சமூக ரீதியான நிபாக் என அறிஞர்கள் குறிப்பிடுவர்.சமூக ரீதியான உறவுகளில் இதன் வடிவங்கள் பல தரப்பட்டவையாகக் காணப்படுகின்றன.இது ஹதீஸில் மறுமையின் அடையாளங்களுள் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது.
والنفاق الاجتماعي علامة من علامات قيام الساعة ٬ قال صلى لله عليه وسلم « لا تقوم الساعة حتى يكون أسعد الناس بالدنيا لكع ابن لكع »  )يعني العبيد والسفلة  من الناس) (رواه أحمد في مسنده والترمذي في جامعه ٬ وحسنه البيهقي في دلائل النبوة عن حذيفة بن اليمان رضي لله عنه).
மனிதர்களில் மிகமோசமானவர்கள்,மனிதர்களிலெயே மிகவும் சந்தோசமாக இருக்கும் நிலை தோன்றாத வரை மறுமை ஏற்படமாட்டாது
عن أبي هريرة رضي لله عنه قال : بينما النبي صلى لله عليه وسلم في مجلس يحدث القوم ٬ جاءه أعرابي فقال : متى الساعة؟ فمضى رسول لله صلى لله عليه وسلم يحدث ٬ فقال بعض القوم : سمع ما قال فكره ما قال. وقال بعضهم : بل لم يسمع. حتى إذا قضى حديثه قال :«؟ أين السائل عن الساعة » قال: ها أنا يا رسول لله ٬  قال « إذا ضُيعت الأمانة فانتظر الساعة » قال: كيف إضاعتها ؟  قال: )إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة » )متفق عليه)
நபியவர்கள் ஒரு சபயில் மக்களுடன் உறையாற்றிக் கொண்டிருக்கையில்,ஒரு நாட்டுப் புற மனிதர் வந்து,மறுமை எப்போது? என நபியவர்களிடம் வினவினார்.நபியவர்கள் தனது பேச்சை இட நிறுத்தாது தொடர்ந்து கொண்டிருந்தார்…..நபியவர்கள் பேசி முடித்ததும்மறுமமை பற்றி கேட்டவர் எங்கே?” எனக் கேட்டார்கள்.அதற்கு அம்மனிதர்,இதோ நான் என்றார்.நபியவர்கள்அமானத் மோசடி செய்யப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள்என்றார்.அதற்கவர்,அது எப்படி? எனக் கெட்டார்.நபியவர்கள்பொருத்தமற்றவருக்கு பொருப்புக்கள் ஒப்படைக்கப்பட்டால் மறுமையை எதிர்பாருங்கள்என்றார்
عن ابن عباس رضي لله عنهما قال : قال رسول لله صلى لله عليه وسلم: )من استعمل رجلا من عصابة وفي تلك العصابة من هو أرضى منه فقد خان لله وخان رسوله وخان المؤمنين(
யார் ஒரு குழுவில் ஒருவரை விட மிகப் பொருத்தமான ஒருவரிருக்க அவரை விட்டு மற்றவரை பொருப்புக்கு நியமிக்கிறாறோ அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார்.அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்துவிட்டார்.முஃமீன்களுக்கு மாறு செய்துவிட்டார்.”
وقال أمير المؤمنين عمر بن الخطاب رضي لله عنه: (من ولي من أمر المسلمين شيئًا فولى رجلا لمودة أو قرابة بينهما فقد خان لله ورسوله والمسلمين).
யாருக்கு முஃமீன்களது விவகாரமொன்று பொருப்பாக்கப்பட்டு அவர் தனக்குள்ள நட்பின் காரணமாக அல்லது நெருக்கத்தின் காரணமாக ஒருவரை தனக்குக் கீழ் பொருப்புக்கமர்த்துகிறாறோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் மாறு செய்துவிட்டார்.”
நிபாக் என்ற பண்பில் நாம் காணும் பிரதான வெளிப்பாடுதான் அக,வெளி முறண்பாடு,ஏமாற்று,பொய் புரட்டு,நடிப்பு,சமாளிப்பு….என ஒரு வெளிப்படையான ,சீரான ஆளுமையிடம் இருக்கக் கூடாத பண்புகள்.இவற்றிலிருந்து நாம் எம்மையும் தஃவாவையும் பாதுகாத்துக் கொள்வது கடமையான ஒரு விடயம்.எனவேதான் நிபாக்குடன் தொடர்பான பண்புகளின் வாடையாவது காணப்படுபவர்கள் தஃவா அணிகளின் பொருப்புக்கள் எப்படிப் போனாலும் அதன் அங்கத்துவ நிலைக்கே வரக் கூடாது என்பது தஃவா அணியின் பாதுகாப்பிற்குதஃவாவின் நிலைப்பிற்கு முக்கியமானதுஏனெனில்,இந்தப் பணி வரலாறு நெடுகிலும் எதிரிகளால் பாதிக்கப்பட்டதைப் பார்க்கிலும் நிபாக்கினால் பாதிக்கப்பட்டதே அதிகமாகும்.
 அப்படியாயின் நாம் எவ்வளவு தூரம் இதில் பேணுதலாகக் காணப்பட வேண்டும்இதில் பேணுதல் குறையும் போதுஎமது செயற்பாடுகள்அறிக்கைகள்என அனைத்திலுமே சீறியஸ் தன்மை குறைந்து போகும்யாருக்கும் யாரிலும்எதிலும் முழுமையாக நம்பிக்கை கொள்ள முடியாத நிலை தோன்றும்இன் நிலை தோன்றின் தஃவா செயற்பாடுகளின் வேகம் குறைந்து போகும்அணி பலவீனப்பட்டுப் போகும்அல்லாஹ் இன் நிலையிலிருந்து தஃவா அணிகளையும் எம்மையும் காப்பாற்றுவானாக.
)إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا).(النساء:145(.

முனாபிக்குகள் நரகின் கீழ் தட்டில் இருப்பர்.அவர்களுக்கு உதவியாளர்கள் யாரையுமே நீங்கள் காணமாட்டீர்கள்

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...