Monday, December 26, 2016

பிள்ளை வளர்ப்பு ஓர் இபாதத்


 "إذا مات العبد انقطع عمله إلا من ثلاث: صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له"، (رواه مسلم).
ஒரு அடியான் மரணித்து விட்டால் மூன்று விடயங்கள் தவிர அவனது அனைத்து செயற்பாடுகளும் துண்டிக்கப்பட்டு விடும், அவை: ஸதகா ஜாரியா அல்லது பிரயோசனமளிக்கக் கூடிய அறிவு அல்லது அவனுக்காக பிரார்த்திக்கும் ஸாலிஹான பிள்ளை 

பிள்ளைகள் என்பவர்கள் அல்லாஹ்வால் எமக்களிக்கப்பட்ட அருட் கொடைகளாகவும் அமானிதங்களாகவும் காணப்படுகின்றனர்.உயிரினங்களின் பிள்ளைப் பருவத்தில் மனிதனது பிள்ளைப் பருவம்தான் நீண்டதாகக் காணப்படுகிறது.அதன் கருத்து,இவர்களுக்கு பெற்றோரது பராமரிப்பு நீண்ட நாட்களுக்கு அவசியப்படுகின்றது என்பதுதான்.எனவேதான் அல்லாஹ் இதனை உத்தரவாதப் படுத்தும் வகையில் குடும்ப அமைப்பபை மனித இனத்தின் உயிரியல் ரீதியான அங்கங்களுள் ஒன்றாக அமைத்து வைத்துள்ளான்.இதனுடன் மனித தொழிற்பாடுகள் அனைத்தும் இறுக்கமான தொடர்பை கொண்டிருக்கிறது.
இந்த வகையில் குடும்ப அமைப்பின் பிரதான இலக்காகவும், தொழிற்பாடாகவும் சந்ததி உருவாக்கமும் வளர்ப்பும்தான் காணப்படுகிறது.இது தொடர்பாக ஸுரா நிஸாவின் ஆரம்ப வசனம் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.
(يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالاً كثيراً ونساءً) النساء: 1.
மனிதர்களே!உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த றப்பை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.அந்த ஆன்மாவிலிருந்து தான் அதன் துணையை படைத்தான்.அவர்களிலிருவரிலிருந்தும்தான் அதிகமான ஆண்களையும் பெண்களையும் படைத்தான்.”
(والله جعل لكم من أنفسكم أزواجاً، وجعل لكم من أزواجكم بنين وحفدة) النحل: 72.
அல்லாஹ்தான் உங்களிலிருந்து உங்கள் துணையை படைத்தான்.உங்கள் துணையிலிருந்து பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் தந்தான்
பிள்ளைகளது வாழ்வில் பெற்றோரது அல்லது குடும்பத்தின் பாதிப்பைத்தான் நபியவர்கள் பின்வரும் ஹதீஸில் விளக்குகிறார்கள்
روى البخاري في صحيحه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال) مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ(
பிறக்கின்ற அனைத்து குழந்தைகளும் இயல்பு நிலையிலேயே பிறக்கின்றன.அதன் பெற்றோர்கள்தான் அதனை யூதனாக,நஸரானியாக,மஜுஸியாக மாற்றுகின்றனர்.”
 இங்கு குழந்தைகளை பெற்று வளர்ப்பதுதான் குடும்பத்தின் பிரதான பணி என்பதை விளங்குகிறோம்.இதற்கு திருமணம்,பாலியல் வாழ்வு சம்பந்தமாக இஸ்லாம் தந்துள்ள அனைத்து வழிகாட்டல்களும் பலம் சேர்க்கின்றன.
 மார்க்கமுள்ள துணையை தெரிவு செய்வது முதல்,துணைத் தெரிவில் பரம்பரை குறித்து கவனம் செலுத்துவது மற்றும் பாலியலில் ஈடுபடுவதற்கு முன்னரானபிரார்த்தனைகள் வரை அனைத்து வழிகாட்டல்களும் குடும்ப வாழ்வின் பிரதான பணி சந்ததி பெருக்களும் வளர்த்தலும் என்பதனை காண்பிக்கிறது.
இந்தக் கருத்தை குடும்பவியல் துறை சார் அறிஞரான கலாநிதி அக்ரம் றிழா அவர்கள் தனதுஅல்-மவ்ஸுஆ பீ கவாஇதி தக்வீனில் பைதில் முஸ்லிம்என்ற நூலில் குடும்ப வாழ்வின் நோக்கம் சம்பந்தமாக விளக்கும் போது குறிப்பிடுவார்.
 குடும்ப வாழ்வின் பிரதான நோக்கங்களாக மூன்று விடயத்தை அவர் அடையாளப் படுத்துவார்
1.      مقصد التناسل والوظيفة التربوية للأسرة
சந்ததி உருவாக்கமும் அவர்களை வளர்த்தலும்
2.      مقصد الإستعفاف والوظيفة الأخلاقية للأسرة
கற்பைப் பேணுதலும் ஒழுக்கத்தை பேணுதலும்
3.      مقصد التعاون والوظيفة الإجتماعية للأسرة
சமூகப்பங்களிப்பும் கூட்டொத்தாசையும்
இதில்  “சந்ததி உருவாக்கமும் அவர்களை வளர்த்தலும்என்பது குடும்ப வாழ்வின் மிக அடிப்படையான நோக்கம் என்பதனை இமாம் அபூ ஹாமித் அல்-கஸ்ஸாலி,முஹம்மத் அபூ ஸஹ்ரா போன்ற அறிஞர்களின் கருத்துக்களையும் மேற்கோல் காட்டி கலாநிதி அக்ரம் றிழா விளக்குவார்.
 குடும்ப வாழ்வின் இந்த பிரதான பணிக்கு வகை கூற வேண்டியவர்கள் யார் என்று நோக்கும் போது,அதனை நபியவர்களது பின்வரும் ஹதீஸ் விளக்குவதை அவதானிக்கலாம்.

 )ص:( 1996  باب المرأة راعية في بيت زوجها
      பெண் தனது கணவனின்வீட்டுக்கு பொருப்பானவள் என்ற பாடம் 

4904 حدثنا عبدان أخبرنا عبد الله أخبرنا موسى بن عقبة عن نافع عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال كلكم راع وكلكم مسئول عن رعيته والأمير راع والرجل راع على أهل بيته والمرأة راعية على بيت زوجها وولده فكلكم راع وكلكم مسئول عن رعيتهالبخاري-
நீங்கள் அனைவரும் மேய்ப்பாளர்கள்.நீங்கள் அனைவரும் உங்களது மேய்ப்புப் பற்றி வினவப்படுவீர்கள்.தலைவர் மேய்ப்பாளர்.ஆண்கள் தமது குடும்பத்தாரின் மேய்ப்பாளர்களாக இருப்பர்.பெண் தனது கணவனின் வீட்டினதும்அவனது பிள்ளையினதும் மேய்ப்பாளராக இருப்பாள்.நீங்கள் அனைவரும்மேய்ப்பாளர்கள்.நீங்கள் உங்களது மேய்ப்புப் பற்றி வினவப்படுவீர்கள்.”
 இதே கருத்தை குர்ஆன் பொதுமையாகக் குறிப்பிடுகிறது.
 ( ياأيها الذين أمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ). -التحريم الآية: 6-
ஈமான் கொண்டவர்களே!நீங்கள் உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் மனிதர்களும் கற்களும் எரிபொருட்களாகக் கூடிய நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்…”
 இங்கு மொத்தமாக தனது குடும்பத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆண் பதில் சொல்ல வேண்டியவனாகக் காணப்படுகிறான்.பெண்ணைப் பொருத்த வரையில் அவள் குறிப்பாக கணவனின் சொத்துக்களுக்கும் பிள்ளைகளுக்கும் பொருப்புக் கூற வேண்டியவளாக இருக்கிறாள் என்பதனை விளங்குகிறோம்.
 இந்த வகையில் பிள்ளை வளரப்பு என்ற பொருப்பின் பிராதனமான ஒரு பாத்திரம் பெண்ணுக்குக் காணப்படுகிறது என்பதனை இங்கு விளங்குகிறோம்இதில் பழைய புதிய அறிஞர்கள் எவரிடத்திலும் மாற்றுக் கருத்துக்கள் கிடையாதுஒரு பெண் இந்த தனது பொருப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே அவளது ஏனைய அனைத்து செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்ற கருத்தில் அனைவரும் உடன்படுகின்றனர்.
 இங்கு இது தொடர்பில் எம்மிடம் காணப்படுகின்ற ஒரு தாழ்வு மனப் பான்மை உடைத்தெறியப்பட வேண்டியுள்ளதுஅதாவது பெண் என்பவளது முதன்மைப் பணி வீட்டை பராமரித்தலும் குழந்தை வளர்ப்பும் என்ற விடயத்தை ஏற்பது பிற்போக்கானது எனக் கருதுபவர்களாகவே நாம் இருக்கின்றோம்இது ஸியோனிஸப் பின்னணியைக் கொண்ட பெண்ணிய சிந்தனையின் தாக்கமாகும்இந்த விவகாரம் தர்க்க ரீதியற்றஒரு முரண் நகையாகக் காணப்படுவதை நாம் பல போது புரிந்து கொள்ளத் தவறி விடுகின்றோம்.
 அதாவது ஒருவர் பாடசாலைக்கு சென்று 40 பிள்ளைகளுக்கு கற்பிப்பதுதான் கௌரவமானது.அவர்தான் சமூகப் பங்களிப்பு செய்கின்றார்.வீட்டில் இருந்து தனது பிள்ளையை வளர்ப்பது என்பது அவள் செய்யும் சமூகப் பங்களிப்புக் கிடையாது.அப்படி செய்பவர் எதுவுமே செய்யவில்லை.அவர் ஒரு மனையாள் மாத்திரமே..அவளால் சமூகத்துக்கு எதுவும் கிடைக்கவில்லை எனப் பேசுகின்றோம்.இது எவ்வளவு அபத்தமானது.தர்க்க ரீதியற்றது.இதனை விடவும் அபத்தமான ஒரு விடயம் இருக்கின்றது.அது ஒரு பெண் தான் உயர்கல்வி கற்றுப் பெற்ற அறிவை அடுத்தவர்களுக்காக கொடுத்துவிட்டு,தனது பிள்ளையை தனது அன்பும் அரவணைப்பும் தொடுகையும்(தாயின் உஷ்ணம்) தேவைப் படும் பருவத்தில் பலபோது படிப்பறிவற்ற ஒருவரிடம் ஒப்படைத்துச் செல்கிறாள்.இது எத்துனை அபத்தமானது?!...இதனால் பாதிக்கப்படுவது குறித்த பிள்ளை மாத்திரமல்ல,ஒட்டு மொத்த சமூகமும்தான்.இதனால்.எல்லா இடங்களிலும் வாடகைத் தாய்மார்கள்தான் பிள்ளைகளுக்குக் கிடைப்பர்.இது பணத்துக்கும் பண்டங்களுக்கும் முதலிடம் கொடுக்கும் நாகரீகத்தின் மிக மோசமான விளைவு.
 எம்மிடம் அரச ஆசிரியர் அல்லது தொழிலாளிதான் உயர்ந்தவர் அல்லாஹ்வால் இயற்கையாக கொடுக்கப்பட்ட தாய்மை ஏதுமற்றதுஅதனால் எதுவும் சாதிக்க முடியாதுஇதனால்தான் ஆரோக்கியமான ஒரு பரம்பரையை உருவாக்கும் பங்களிப்பை செய்ய வேண்டிய தாய்தனது கணவனையும் பிள்ளைகளையும் ஆரோக்கியமான மனோ நிலையுடன் வரவேற்பதற்காக தன்னையும் வீட்டு சூழலையும் தயார்படுத்த வேண்டிய தாய்… அலுவலகங்களில் காட்சிப் பொருட்களாக நின்று கொண்டு யாரையோ வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்…. எமது முதன்பைப் பணி எதுஎம்மிடம் முக்கியத்துவம் பெற வேண்டியது எது? என்ற கண்ணோட்டம் மறைந்து போனமைதான் இந்த முரண்பாடுகளுக்குக் காரணம்.
இங்கு,அப்படியாயின் பெண்களின் தேவை உள்ள,ஆரம்ப பாடசாலை,மகப்பேறு போன்ற துறைகளில் பெண்கள் பணியாற்றுவது எப்படி என சிலர் வினவலாம்.இது சிறப்பாளுமைகளாக இனம் காணப்படுபவர்களின் பணி.இவர்கள் சிறு தொகையினராகவே காணப்படும் என வரலாறு குறிப்பிடுகிறது.இத்தகைய துறைகளில் பணியாற்றுபவர்கள் கூட தமது அடிப்படை பணியாக அமையும் விடயங்களை ஒழுங்கு பண்ணிக் கொள்ளுதல் அவசியம் என ஷெய்க் அபூ உத்தா போன்றவர்கள் கருதுகின்றனர்.
 இதன் விளைவு ஆரோக்கியமற்ற ஒரு பரம்பரை தோற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.இதனை தவிர்க்க வேண்டுமாயின் பிள்ளை வளர்ப்பு என்பதனை எமது முதன்மையான பணியாக நாம் கொள்ள வேண்டும்.அதனை ஒரு இபாதத்தாக அதிக நன்மை தரும் தொழிலாக நாம் கருத வேண்டும்.
 "إذا مات العبد انقطع عمله إلا من ثلاث: صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له"، (رواه مسلم).
ஒரு அடியான் மரணித்து விட்டால் மூன்று விடயங்கள் தவிர அவனது அனைத்து செயற்பாடுகளும் துண்டிக்கப்பட்டு விடும், அவை: ஸதகா ஜாரியா அல்லது பிரயோசனமளிக்கக் கூடிய அறிவு அல்லது அவனுக்காக பிரார்த்திக்கும் ஸாலிஹான பிள்ளை” 
பிள்ளை வளர்ப்பில் கவனம் செலுத்த ஆரம்பிக்க வேண்டிய காலம்
1.    திருமணத்திற்கு முன்னர்
2.    திருமணத்தின் போதும் ,பாலியல் தொடர்பின் போதும்
3.    கற்ப காலம்
4.    குழந்தையின் ஆரம்ப காலப் பகுதி(2வருடம்)
5.    2வருடம் முதல்7 வயது வரை
 பிள்ளை வளர்ப்பு தொடர்பாக சிந்திக்க வேண்டிய காலம் திருமணத்திற்கு முன்னராகும்.திருமணத்தின் போது சிறந்த,மார்க்கமுள்ள,சிறப்பான பரம்பரையும்,குடும்ப சூழலும் கொண்ட துணையின் தெரிவு சிறந்த சந்ததியை கருத்திற் கொண்டே வலியுருத்தப்பட்டிருக்கிறது.
அடுத்து திருமண பந்தத்தில் இணையும் துணையை கைப்பிடிக்கும் போது ஓத வேண்டிய பிரார்த்தனையும் சந்ததிகளினை கருத்திற் கொண்டே அமையப் பெற்றிருக்கிறது.

" إذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا، فَلْيَقُلْ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ "
யாஅல்லாஹ் அவளின் சலவையும் அவளுடன் பரம்பரையாக தொற்றிக் கொண்ட நலவையும் உன்னிடம் வினவுகிறேன்.அவளினன் தீங்கையும் அவளுடன் பரம்பரையாக தொற்றிக் கொண்ட தீங்கையும் விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.”
 பாலியல் தொடர்பின் போதான பிரார்த்தனையும் இதனை மையப் படுத்தியே அமைந்துள்ளது

لو أن أحدهم : إذا أراد أن يأتي أهله قال :  بسم الله اللهم جنبنا الشيطان ، وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك ، لم يضره الشيطان أبدا
அல்லாஹ்வின் பெயரால் துவங்குகிறேன்யாஅல்லாஹ் ஷைத்தனை விட்டும் எம்மை பாதுகாப்பாயாகஎமக்கு அருளாகத் தரப்படும் குழந்தையையும் ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாயாக
இவ்வாறு பிரார்த்தித்து விட்டு உறவில் ஈடுபட்டால் அதன் மூலம் பிறக்கும் குழந்தையை ஒரு போதும் ஷைத்தான் தீண்டமாட்டான் என ஹதீஸ் குறிப்பிடுகிறது.
அடுத்து கற்பம் தரித்ததன் பின்னர்சிசுவாக இருக்கின்றபோது தாயின் நடத்தைகள் அனைத்தும் பிள்ளையில் பாதிப்புச் செலுத்துகின்றது.இந்தப் பருவத்தையும் அதனை அடுத்து வருகின்ற 02 வருடங்களையும் பல அறிஞர்கள் தாயின் பராமரிப்பில் மாத்திரம் பிள்ளை காணப்படும் காலமாகக் குறிப்பிடுவர்.இதில் குறிப்பாக கற்ப காலம் முக்கியமானதுதாயின் போசாக்குநடத்தை முதல் அவளது உணர்வுகள் வரை அனைத்தும் பள்ளையில் தாக்கம் செலுத்தும் காலப் பகுதியாக இது காணப்படுகிறது.
இதனைத்தான் நபியவர்களின் பின்வரும் ஹதீஸும் காண்பிக்கிறது.
ورد عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يسقي ماءه زرع غيره. وفي لفظ: من كان يؤمن بالله واليوم الآخر فلا يسق ماءه زرع غيره. وفي لفظ: من كان يؤمن بالله واليوم الآخر فلا يسق ماءه ولد غيره. رواه أحمد والترمذي وغيرهما وصححه الألباني في صحيح وضعيف الجامع الصغير.
அல்லாஹ்வையும் மறுமயையும் ஈமான் கொண்டவர் அடுத்தவர் நாட்டிய பயிருக்கு தனது நீரை ஊற்றுவது ஆகுமானதல்ல அல்லது அடுத்தவரின் பிள்ளைக்கு தனது நீரை ஊற்றுவது ஆகுமானதல்ல.”
 இது ஹைபரின் போது அடிமைகளாக பிடிபட்ட கற்பிணிப் பெண்களுடன் அவர்கள் கற்பம் தரிக்கும் வரை உறவு கொள்வதை தடுப்பதற்காக கூறியதாயினும் இதன் கருத்து,கற்பத்தில் உள்ள சிசுவில் அது பாதிப்பு செலுத்தும் என்பதுதான்எனவேதான் கற்பிணியின் இத்தா காலப் பகுதி கற்பம் தரிக்கும் வரையில் காணப்படுகிறது.
 அதே போன்று கற்பிணியின் ஆரோக்கியம் பேண றமழானில் நோன்பிருக்காதிருக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளதுகற்பிணிப் பெண்ணுக்குரிய தண்டனையை நிறைவேற்றுவதை தாமதப் படுத்துகிறதுகற்பத்தை கலைப்பதை பாவமாகக் கருதுகிறது…. இப்படி கற்ப கால பராமறிப்புக்கு இஸ்லாம் வழி காட்டுகிறதுஇந்த வகையில் கற்ப காலத்தில் இறை நெருக்கம்நன்னடத்தைசிறந்த மனோநிலை என்பவற்றினூடாகவும் போசாக்கினூடாகவும் பிள்ளையை போசிக்க வேண்டும்.
 அடுத்துகற்ப கால மருத்துவம்மகப் பேறு என்பவற்றில் இயன்ற வரை இஸ்லாமிய வரையரையை பேணுதல் அவசியம்ஏனெனில்நாம் நிர்ப்பந்தம் என்ற விடயத்தை சொல்லிக் கொண்டு இதில் விடும் கவனயீனம் எமது சந்ததியில் பாதிப்புச் செலுத்துகிறது.
  பிறந்தது முதல் இரண்டு வருடங்கள் வரை தஹ்னீக்தாய்ப்பால் உட்படபிரார்த்தனைஅதான்பெயர்அகீகாவிருத்த சேதனம்… என பல்வேறு கடமைகளை குறிப்பிகிறது இஸ்லாம்இதில் இரண்டு வருடங்கள் பாலூட்டல் மற்றும் பிள்ளையை பொருப்பான பருவம் வரை பராமறித்தல் என்பன போன்ற கடமைகளில் தாயை முற்படுத்துகிறதுஇக்காலப்பகுதி பிள்ளை கண்காது, உள்ளம் என்பவற்றால் விடயங்களை 100% உள்வாங்கும் பணியை செய்கின்றதுஎனவேஇக்காலப் பகுதியில் பிள்ளையின் போசாக்கில் மாத்திரமன்றிஅதன் அறிவுஆன்மா ஆளுமைப் பகுதியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்து வரும் ஐந்து வருடங்களும் குழந்தையின் எதிர்கால ஆளுமையில் முன்னைய பருவம் போன்றே முக்கியமான காலப்பகுதி இங்கு தான் அதன் நடத்தைகள்சிந்திப்பு முறைமுதன்மை ஒழுங்குஉறவுகள்… என அனைத்தும் ஒழுங்கமைக்கப்படுகின்ற காலப் பகுதியாகும்இந்த ஆரம்ப 07 வருடங்களும் பிள்ளையின் இடத்திற்கு சென்று அதற்குரிய விடய்ங்களை கொடுக்க வேண்டும்அதன் இலட்சியங்கள் மனதில் பதிய வைக்கப்பட வேண்டும்.
قال رسول الله صلى الله عليه وسلم : " لا عبوا أولادكم سبعا وأدبوهم سبعا وصاحبوهم سبعا ".
உங்கள் பிள்ளைகளுடன் முதல் 07 வருடங்கள் விளையாடுங்கள்.அடுத்த 07 வருடங்கள் பண்படுத்துங்கள்.அடுத்த 07 வருடங்கள் தோழமை கொள்ளுங்கள்
 இங்கு ,கற்பத்திற்கு முன்பிருந்து ஆரம்ப 07 வருடங்கள் வரை தாயின் பங்களிப்பு எவ்வளவு அவசியம் என்பதனை புரிகின்றோம்.அடுத்து இங்கு பிள்ளைகளை வளர்ப்பது என்பது எமது ஆசைகளையும் பெருமைகளையும் அடைவதற்கான கருவியாக அவர்களை பாவிப்பதல்ல.மாற்றமாக அவர்களை அவர்களின் ஆற்றலுக்கும் காலத்திற்குமேற்ப மார்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் சிறப்பான ஆளுமைகளாக வளர்ப்பதுதான் இங்கு முக்கியம். அவர்களது முழுமையான ஆளுமை வடிவமைப்புத்தான் இங்கு நாடப்படுகிறது மாற்றமாக ஒரு சில அடைவுகளல்ல.
 குறிப்பாக அகீதாவை விதைப்பதற்கான மிகச் சிறந்த காலம் அதன் ஆரம்பப் பருவம்தான்இதனை எம்மால் இப்போது துவங்கி வைக்க முடியுமான் கிட்டிய 10 ஆண்டுகளின் பின்னர்  ஈமானில் வாரக்கப்பட்ட சிறப்பான ஆளுமைகள் எமது சமூகத்தின் இளைஞர்களாக வருவார்கள்ஆனால்பிரச்சினை நாம் எமது முதன்மைப் பணியை விளங்கவில்லைஎமது தஃவா பணியென்பது ஆண்களின் பணியை பெண்களாக பிரதி பண்ணல் என நினைக்கிறோம்இதனால்தஃவாவின் எதிர்கால சந்ததி மிகப் பெரிய ஆபத்தில் இருப்பதை கண்கூடாகக் காண்கிறோம்.

  சத்தியமிட்டுச் சொல்கிறோம்,பெண்களின் கவனம் வீட்டை நோக்கியும்குடும்ப வாழ்வை நோக்கியும் அதனூடாக 0-7 வரையான வளரிளம் சந்ததியை நோக்கியும் முதன்மைப் படுத்தப் படாத போது எமது நாட்டில் தஃவாக்களுக்கான எதிர்காலம் கிடையாதுஅங்கு இப்னு அப்பாஸ்இப்னு மஸ்ஊத்இப்னு உமர்.. உஸாமா இப்னு ஸைத்பாதிமாஆயிஷாபோன்றவர்கள் தோன்ற மாட்டார்கள்அபூ பக்ர்களுடனும் உமர்களுடனும் ,கதீஜாக்களுடனும் அது மரணித்து விடும்இது தான் உலக வரலாறுஉலகில் தோன்றிய நாகரீகங்களெல்லாம் வீழ்ந்தது இதனால்தான்இன்றைய மேற்கு வீழ்ந்து கொண்டிருப்பது இதனால்தான்குறிப்பாக எமது நாடு அதள பாதாளத்தை நோக்கி செல்வது இதனால்தான்நாமும் எமது தஃவாக்களின் மரணத்தை இன்றே எழுதப் போகின்றோமா எனத் தீர்மானியுங்கள்.இது தொடர்பாக நிறைய வாசியுங்கள்கலந்துரையாடுங்கள்நிகழ்ச்சிகளை ஒழுங்கு பண்ணுங்கள்.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...