“ஒரு சமூகம் தம்மைத் தாமேமாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் அவர்களை மாற்றமாட்டான்” (அர் ரஃத்:
11)
தஃவா என்பது மாற்றத்தை நோக்கிய
அழைப்பு அல்லது மாற் றத்திற்கான செயற்பாடு. ஒரு தனிமனிதன், சமூகம்
தான் வாழும் மோசமான அல்லது திருப்தியுர முடியாத நிலையில் இருந்து இஸ்லாம் கூறும் அல்லது
அழைக்கும் நல்ல நிலையை நோக் கிய அல்லது திருப்தியான நிலையை நோக்கிய மாற்றம்தான் தஃவா
என சாதாரணமாகச்
சொல்லலாம்.
அல்குர்ஆன் சொல்வதுபோன்று மாற்றம்
என்பது புறக்காரணி களைப் பார்க்கிலும் அகக் காரணிகளிலேயேபெரும்பாலும் தாங்கி யுள்ளது.
ஒரு சமூகத்தின் மாற்றம் என்பது அந்த சமூகத்தின் அகச் செயற்பாட்டிலேயே தங்கியுள்து. ஒரு சமூகம் மாற வேண்டுமாயின் அந்த சமூகத்தில் உள்ள
தனிமனிதர்களும் குடும்பங்களும் மாற வேண்டும். இந்த வகையில் சமூக மாற்றத்தின் அடிப்படை
தனி மனிதனில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றத்தில் தங்கியுள்ளது. ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வோர்
தனிமனிதனிலும் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றம்தான் அந்த சமூகத்தின் மாற்றம்.
ஒரு தனிமனிதனின் நடத்தை மாற
வேண்டுமாயின் அந்த மாற்றம் அவனது சிந்தனை - உள்ளம் - உறுப்புக்கள்
அல்லது செயற்பாடு என்ற படிமுறையில்தான் அவனது மாற்றம் ஏற்படும். ஒருமனிதனில் ஒரு
செயற்பாடு நிகழ வேண்டுமாயின் அது பற்றிய சிந்தனை மாற்றம் அறிவுக்கு வழங்கப்பட வேண்டும்.
பின்னர் அதனை அவனது உள்ளம் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். பின்னர் அவனது உள்ளத்திடமிருந்து அவனது உறுப்புக்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் அது அவனது நடத்தை யாக மாறும்.
இதனை நாம் சமூக ரீதியாக சிந்திக்கின்றபோதும்
அதன் சிந்தனையில் ஏற்படும் மாற்றம் அந்த சிந்தனைக்கான சமூக அங்கீகாரம் பின்னர் அந்த
அங்கீகாரத்தின் அடியாக சமூகத்தின் அங்கங்கள் இயக்கப்படல் என நாம் இந்த மாற்றத்தை
சொல்லாம். இதனை இன்னோர் வார்த்தையில் சொல்வதாயின் சமூகத்தின் பொதுப் புத்தியில் ஏற்படுத்தப்படுகின்ற
மாற்றத்தில் இருந்துதான் சமூக மாற்றம் நிகழ்கின்றது.
மாற்றம் பற்றிய சிந்தனையை விஞ்ஞான
ரீதியாக இன்னும் ஆழ மாக விளக்கலாம். எனினும் இங்கு முழுமையாக அதுநோக்கமாகக் கொள்ளப்படவில்லை.
மாற்றமாக மாற்றம் என்பது எங்கிருந்து துவங்குகின்றது என்பதை விளக்கவே நாம் இங்கு முயன்றோம்.
ஸூறா அல் அன்ஆமின் 113 ஆவது வசனமும் இந்தக் கருத்தை எமக்கு இன்னும் தெளிவாகச் சொல்லும்.
அந்த வகையில் மாற்றம் என்பது
ஆரம்பத்தில் சிந்தனை மாற்றத் திலிருந்தேதுவங்குகிறது என்பதை நாம் இங்கு புரிந்துகொள்கி
றோம். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை படைத்ததும் செய்த முதல் வேலை அவருக்கு அறிவைப்
போதித்ததுதான். அதேபோன்று அல்லாஹ் நபிமார்களை உலகிற்கு சீர்திருத்தப் பணிக்காக தேர்ந்தெடுத்ததும்
முதல் செய்த பணி அவர்களுக்கு வஹியை போதித்தமைதான். அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த முதல்
பணியும் வஹியை கற்பதும் கற்பிப்பதும்தான். எனவேதான் நபி யவர்கள் “நான் ஆசிரியனாகவே
அனுப்பப்பட்டேன்”
என்றார்கள்.
உண்மையில் நபியவர்களுக்கு வந்த முதல் வஹியும் அதனைத் தான் குறிப்பிடுகின்றது.
வாசிப்பு, கற்றல் என்பவை பற்றித்தான் அந்த ஆரம்ப வசனங்கள் பேசுகின்றன. இந்த முதல் வஹியைத்
தொடர்ந்தும் இறங்கிய வசனங்களையும் நாம் வாசித்துப் பார்த்தால் இந்தக் கருத்தைத்தான்
சொல்வதைக் காணலாம். அங்கு எந்த இடத்திலும் ஈமான் கொள்ளுங்கள் என்ற சொல்லைக் பாவிக்க
வில்லை. தர்க்கரீதியாகப் பார்க்கின்றபோது இஸ்லாத்தின் அடிப் படை அம்சம் ஈமான். எனவே, முதல் இறங்கிய
வசனம் அப்படித் தான் இறங்கியிருக்க வேண்டும் அல்லது அதனைத்தொடர்ந்து அடுத் தடுத்து
இறங்கிய வசனங்களாவது அப்படிப் பேசியிருக்க வேண்டும்.
ஆனால், அப்படிப்
பேசவில்லை. ஈமானைக் கூட அல்லது ஈமானின் அடிப்படை அம்சத்தைக் கூட முத லில் கற்றுக் கொள்ளுங்
கள் சுஅவன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இலாஹ் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்சு என்று தான் அல் குர்ஆன் சொல்கிறது.
இந்த இடத்தில் ஒருவர், ஆயிஷா (றழி) அவர்கள் “நாம் அல் குர்ஆன் கொடுக்கப்பட முன்னர் ஈமான் கொடுக்கப்பட்டோம்” என்று கூறுகின்றார். அல்லாஹ் ஆரம்பத்தில் அல்குர்ஆனை ஓது மாறும்
தஹஜ்ஜுத் தொழுமாறும்தான் சொன்னான். எனவே,
முதலில் அறிவு கொடுக்கப்பட முன்னர் ஈமான்தான் அவசியம் எனக் கூற
முடியும்.
இங்குதான் நாம் விளங்கிக் கொள்ள
வேண்டிய நுணுக்கமான ஒரு அம்சம் இருக்கின்றது. அறிவு அல்லது கல்வி இன்று சடவாத மாய்ப்
போனதால் பலபோது ஆன்மீகவாதிகளுக்கு அறிவு என்ற சொல்லே ஒவ்வாமை கொண்டதாக மாறியிருக்கின்றது.
எனவே, அவர்கள் அறிவுக்கு முன்னர் ஆன்மீகம் என்பார்கள். இந்தக் கருத்துப் பாதிப்பில் சிலபோது
எமது தாஈக்களுக்கும் வாசிப்பு,
கற்றல்,
அறிவு என்ற சொற்கள் ஒவ்வாமை கொண்டதாக (allergic) அமைந்திருப் பதை பலபோது அவதானிக்க முடிகின்றது. எனவே, அவர்கள்
வாசிப்பு, அறிவு, ஆளுமை என்று பேசுகின்றபோதே பேசக்கூடாத
ஒன்றைப் பேசுவது போன்று பார்ப்பார்கள். ஆனால், தாம் தமது பணியின் அடிப்படை
அம்சத்தை மறுக்கின்றோம் என்பது அவர்களுக்குத் தெரியாது.
ஒரு மனிதனுக்கு முதலில் ஈமான்
தான் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகிடையாது. ஆனால், நாம்
சொல்ல வருவது ஈமானை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைத் தான். இங்கு ஈமானை கொடுத்தல்
என்பதற்கும் முதலில் சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்கும் இடையில் முரண்பாடு
கிடையாது. ஆயிஷா (றழி) அவர்கள் சொல்ல வந்த கருத்துக்கும் நாம் சொல்கின்ற விடயத்துக்கும்
கூட முரண்பாடு கிடையாது. அவர் சொன்னது எமக்கு குர்ஆனின் சட்டதிட்டங்களை கற்றுத்தர முன்னர்
ஈமானிய அறிவு தரப்பட்டது என்பதனைத்தான்.
முதலில் அறிவு கொடுக்கப்பட
வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த அறிவு
என்று வருகின்ற போதுதான் இஸ்லாம் அல்லாஹ் பற்றிய ஈமானிய அறிவை முதன்மைப்படுத்துகின்றது.
இங்கு ஆன்மீகம் என்பது ஒன்று,
அறிவு என்பது வேறொன்று என மேற்கின் பாணியில் நாம் பிரித்து விளங்குவதால்
வந்த சிக்கலே தவிர வேறு சிக்கல்கள் கிடையாது. மேற்கின் கருத்துப் படி ஆன்மீகம் என்பது
கண்ணை மூடிக் கொண்டு நம்புவது. எனவே,
அது அறிவுக்கும் அறிவியலுக்கும் எதிரானது. ஆனால், இஸ்லாத்தில்
அந்தக் கருத்துக் கிடையாது.
இஸ்லாத்தைப் பொருத்தவரையில்
அதன் போதனைகளுள் பிரதானமானது தான் ஆன்மீகம்,
ஈமான் என்பதே ஒழிய அது வேறோர் விடயமல்ல.
இதனை நாம் ஆரம்பமாக இறங்கிய
வசனங்களை எடுத்துப் பார்க்கின்றபோது மிகவும் தெளிவாகவே புரிந்து கொள்கிறோம். முதல்
வசனம் ‘இக்ரஃ’
என்று வாசிக்குமாறுதான் சொல்கிறது. மாற்றமாக பாரயாணம் செய்யுமாறோ
நெட்டுருப் போடு மாறோ கூறவில்லை. அறிவின் முதல் வாயில் வாசிப்பு பின்னர் அதனை எப்படி
செய்வது, எதனை வாசிப்பது?
என்பதனை அடுத்தடுத்த வசனங்கள் சொல்கின்றன.
தன்னைப் படைத்த அல்லாஹ்வை ஞாபகப்படுத்தி
அந்த வேலையை ஆரம்பித்தல். பின்னர்,
தான் எப்படி படைக்கப்பட் டேன்? தன்னைப்
படைத்தவன் யார்?
அவன் எத்தகையவன் என்பதனை விளங்கிக் கொள்ளல் என்று அது வருகின்றது.
பின்னர் இப்படி கற்றுத் தரும் பணியை மனிதனுக்கு செய்தவன் அல்லாஹ் தான் என முதல் வஹியின்
இறுதி வசனம் சொல்கின்றது. முதலாவது இறங்கிய வஹியின் தொகுதியிலே வாசிப்பு என்ற சொல்
இரு முறையும் பேனை என்பது ஒரு முறையும் அறிவு என்ற சொல் மூன்று முறையும் பாவிக்கப்பட்டுள்ளது
என்பதையும் நாம் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்வது பொருந்தும்.
அடுத்து முஸ்ஸம்மில், முத்தஸ்ஸிர், கலம்
போன்ற ஸூறாக்களி லும் இதனைக் காணலாம். ஸூறா முஸ்ஸம்லிமில் இரவு நேரத் தொழுகையை பேசியிருக்கின்ற
முறையை நாம் பார்க்கும்போது அங்கு ஈமானை கற்றுக் கொள்ள எந்த நேரம் பொருத்தம்? எந்த இடம்
பொருத்தமானது? என்பதனை அந்த வசனங்கள் சொல்வதைக் காணலாம். அதிகாலைக் கல்வி என்போமே அதுதான் அங்கு கூறப்பட்டுள்ள விடயம்.
அந்தக் கல்வி இறைத் தொடர்
போடு உள்வாங்கப்பட தொழுகை பொருத்தமான இடம். எனவே, அங்கே குர்ஆனை நிறுத்தி நிறுத்தி
வாசிக்குமாறு கட்டளை இடப்படுகிறது. இதுவெல்லாம் தஃவாவை சுமப்பதற்கான அடிப்படைத் தேவைகள்
என விளக்கப்படுகின்றது. இங்கு கல்வி என்பதன் மூலம் வெறும் தகவல்களை பெறுவதனை மாத்திரம்
நாடவில்லை. அதன் முழு வடிவத்திலும்தான் குர்ஆன், இஸ்லாம் அதனைப் பார்த்துள்ளது
என்பதனையும் நாம் சற்று
சீரணித்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணியில்தான் ஒரு
செயலை செய்வதற்கு முன்னர் அதுபற்றிய தெளிவை பெற்றுக் கொள்வதில் ஸஹாபாக்கள் ஆர்வ மாய் இருந்திருப்பதைக் காண்கிறோம். இந்தக் கருத்தை நபியவர் களும் அவர்களுக்கு ஊட்டியிருப்பதை
நாம் ஸீறாவில் காண்கி றோம். இதே கருத்தை
ஸலபுகளில் ஒருவர் கூறும்போது “ஷைத்தான்
ஆயிரம் ஆபித்களுக்கு பயப்படுவதைப் பார்க்கிலும் ஒரு ஆலிமுக்கு கடுமையாகப் பயப்படுகின்றான்”.
என்கிறார்.
“ஒரு ஆபிதைப் பார்க்கிலும் ஒரு ஆலிமின் சிறப்பு உங்களில் தாழ்ந்த நிலையி லுள்ளவர்களுக்கும்
உயர்ந்த நிலையிலுள்ளவர்களுக்குமிடையிலான சிறப்பாகும்”
என நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனவேதான், இமாம்கள்
ஒரு செயற்பாட்டை செய்யுமுன்னர் அதனைப் பற்றிய இஸ்லாத்தின் போதனைகளை விளங்கியிருப்ப
தனை அதனை நிறைவேற்றுவதற் கான ஷர்த்தாகக் குறிப்பிடுகின் றார்கள். இந்தப் பின்னணியில்தான்
இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் தனது இயக்கத்துக்கான செயற்பாடுகளைச் சொல்லும் போது முதலில்
இஸ்லாத்தை விளங்குதல் என்ற ஷர்த்தை இடுகின் றார்கள். அதன் பின்னர்தான் இஃலாஸ், செயற்பாடு
என அவர் விளக்குகிறார்.
இந்தக் கருத்தை அறிஞர் ஸஈத்
ஹவ்வா அவர்கள் தனது ‘தர்பிய துனா அர்ரூஹிய்யா’ (எமது ஆன்மீகத்
தர்பியா) என்ற நூலில் தெளி வாகச் சொல்வதைக் காணலாம். ஒருவர் தன்னை ஆன்மீக ரீதியாக பயிற்றுவித்துக்
கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றி பேச
முற்படுகின்றபோது அதன் முதல் அம்சமாக அறிவு, வாசிப்பு
என்பதனை குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று கலாநிதி மஜ்தி ஹிலாலி
அவர்கள் ‘கைப நுஅய்யிரு மாபி அன்புஸினா’ என்ற தனது நூலில் ஒருவர் தன்னில்
மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முதல் நிபந்தனை அல்குர் ஆனை கற்றல் என்பதனை குறிப்பிடுகின்றார்.
நாம் ஏன் இவ்வளவு ஆழமாகச்
சென்று இந்தக் கருத்தை விளக்கு கின்றோம் என்றால், இன்று தஃவாக் களத்தில் ஆன்மீகத்தின்
பெயரால் அறிவைப் புறக்கணிக்கின்ற ஒரு போக்கு தலை தூக்குவதை உணர்கிறோம். தஃவாக் களம் அறிவுபூர்வமாக வழிநடத்தப்படுவதை பார்க்கிலும்
உணர்வுபூர்வமாக வழிநடத்தப்படுவதைப் பார்க்கிறோம். சிலருக்கு வாசிப்பு, நூல்கள், அறிவு என்பவை
ஒவ்வாமையை (allergic) ஏற்படுத்துகின்ற
விடயமாக மாறிப் போயிருப்பதனைப் காண்கிறோம்.
உண்மையில் ஷெய்க் அஹ்மத் முஹம்மத்
றாஷித் அவர்கள் சொல் வது போன்று உணர்வுபூர்வமான மனிதர்கள்தான் களத்தில் அதிகமாக இருக்கின்றனர்.
ஆனால், தாஈக்களோஅறிவுபூர்வமாக விளங்கி,
திட்டமிட்டு செயற்படுபவர்கள். அவர்கள் களத்தில் குறை வானவர்களே.
இந்த விடயத்தை சொல்லி விட்டு இதனால்வரும் விளைவை வரலாற்றில் ஹவாரிஜ்களின் செயற்பாடுகளை
வைத்து அவர் விளக்குகின்றார். ஹவாரிஜ்கள் நிரப்பமாகத் தொழக்கூடிய மனிதர்கள். ஆனால்
-அவர்களின் வாதப்படி- அல்லாஹ்வை நெருங்குவதற்காக அவனின் திருப்தியை எதிர்பார்த்து அவர்கள்
அமீருல் முஃமினீனையே கொலை செய்தார்கள். எத்துனை பெரிய விபரீதமான செயல் என்று பாருங்கள்!
எனவே, தாஈக்கள்
சொற்களுக் கப்பால் நின்று யதார்த்த நிலையை விளங்க வேண்டும். ஈமான் என்ற சொல்லின் பெயரால்
அறிவைப் புறக்கணிக்கும் போக்கு பிழையானது. அல்லாஹ்வே உயர்வாகப் பேசிய ஒன்றை, முதன்மைப்படுத்திய
ஒன்றை நாம் எப்படிப் புறக்கணிக்க முடியும்?
தாஈக்கள் எப்போதும் இஸ்லாத்தின் சிந்தனையை தெளிவாகச் சுமந்தர்வகளாக
இருக்க வேண்டும். இஸ்லாத்தின் சிறப்பியல்புகளை உணர்வுபூர்வமாக விளக்குவது மாத்திரம்
இன்று தஃவாக் களத்தை வழிநடத்தப் போதுமானதல்ல. மாற்றமாக இஸ்லாத்தின் போதனைகளை தெளிவாக
சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். இஸ்லாத்தை அடுத்தவர்களுக்கு சொல்வ தற்கு முன்னர் தான்
நடைமுறைப்படுத்துவதற்கும் இது அவசிய மான ஒரு விடயம்.
ஒருவர் சிறந்த ஆன்மீக வாதியாக
இருப்பதற்கும் அவர் இஸ்லாத் தின் ஆன்மீக வழிகாட்டலை சரியாக விளங்கியிருக்க வேண்டும்.
இல்லாதபோது அவரது ஆன்மீகமும் ஒருவகை இன்பக்களிப்பாகத் தான் அமையும். ஏனெனில், அல்லாஹ்வே
கூறுகிறான், “தனது அடி யார்களில் அல்லாஹ்வை அதிகம் பயப்படக் கூடியவர்கள் அறிவைப் பெற்றவர்களே” அல்லாஹ்வை சிறப்பாக அறிந்தவரால்தான் அவனை சிறப்பாக வணங்க முடியும்.
அவனை அதிகம் அறிந்தவர்தான் அவனை அதிகம்பயப்படுவர்.
இறுதியாக, இன்று களத்தில்
வெறும் ஆன்மீகக் களிப்புக்காக உணர்வுபூர்வமாக நடக்கும் பயான்களும் அதனைக் கேட்டுக்
களிப்ப டையும் மக்களும் என்ற நிலையிலிருந்து இஸ்லாம் எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி
தஃவாக் களத்தை வழிநடத்த வேண்டுமாயின் தாஈக்கள் அல்குர்ஆனின் முதல் சொல்லை தமது முதற்கடமையாகக்
கொள்ள வேண்டும்போல் தெரிகிறது. அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.
No comments:
Post a Comment