தொழுகை
இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் ஒன்றாகும்.அந்தக் கடமை
பாதுகாக்கப்படுவதற்காகவும்,அதன் பயன்கள் சமூகத்தில் நிலைப்பதற்காகவும்,அது
சமூகத்தில் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் இஸ்லாம் கூடிய கவனம் செலுத்தியுளள்ளது.
"ما من ثلاثة في قرية ولا بدو لا تقام فيهم الصلاة إلا استحوذ
عليهم الشيطان فعليك بالجماعة فإنما يأكل الذئب القاصية "
“ஒரு
நகரில்
அல்லது
கிராமத்தில்
மூன்று
பேர்
இருந்தும்,அங்கு
தொழுகை
நிலைநாட்டப்படாது விட்டால்,அவர்களை
ஷைத்தான்
ஆக்கிரமித்துக் கொள்வான்.நீங்கள்
கூட்டாக
இருங்கள்.தனித்துப்போகின்ற
மந்தையையே
ஓநாய்
சாப்பிடும்.”-அஹமட்,நஸாஈ,அபூதாவூத்-
“ஓரிடத்தில் ஐந்து
வீட்டார்கள்
இருந்து,அவர்களிளுக்கு
மத்தியில்
அதான்
சொல்லப்பட்டு
தொழுகை
நிலைநாட்டப்படாது விடின்,ஷைத்தான்
அவர்களை
ஷைத்தான்
ஆக்கிரமித்துக் கொள்வான்.ஓநாய்
தனித்துப்
போவதைத்தான்
பிடித்துக்
கொள்ளும்.நீங்கள்
மக்களுடன்
சேர்ந்து
நகர்களில்
வசியுங்கள்”-இப்னு அஸாகிர்)
ஜமாஅத் தொழுகை
தொடர்பான ஷரீஆவின் நிலைப்பாடு
ஜமாஅத் தொழுகையின் சட்ட நிலைப்பாடு தொடர்பாக இமாம்களிடத்திலே
நான்கு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.உண்மையில் இது அடிப்படையில் இரு கருத்துக்களாகத்தான்
காணப்படுகின்றன.
இமாம் அஹமத் இப்னு ஹன்பல் மற்றும் ஹனபி மத்ஹபின் பொதுவான
கருத்தும் ஜமாஅத் தொழுகை வாஜிபாகும் என்பதாகும்.ஆனால்,தொழுகை அங்கீகரிக்கப்படுவதற்கான
ஷரத்தாக அவர்கள் இதனைக் கருதவில்லை.அந்தக் கருத்தை ழாஹிரீக்கள்தான் கொண்டிருக்கின்றனர்.
ழாஹிரி
மத்ஹப் சார்ந்த தாஊத் அழ்ழாஹிரி,இமாம் இப்னு ஹஸ்ம் போன்றோர் ஜமாஅத் தொழுகையை கட்டாயக்
கடமையாகக் கருதுகின்றனர்.அதாவது ஜமாத் தொழுகையை தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான ஒரு
ஷரத்தாக அவர்கள் கருதுகினறனர்.ஜமாஅத்தாக தொழாது விட்டால் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது
என்ற கருத்தை இவர்கள் கொண்டிருந்தனர்.
இமாம் ஷாபிஈ,மாலிக்,ஹனபி மத்ஹபில் ஒரு சாராரினதும் கருத்து
ஜமாஅத் தொழுகை ஸுன்னா முஅக்கதா என்பதாகும்.
இதில் ஷாபிஈ மத்ஹபின் இரண்டாவது கருத்தாக ஜமாஅத் தொழுகை பர்ளு
கிபாயாவாக நோக்கப்படத்தக்கது என்பதாகும் இதனை இமாம் நவவி அவர்கள்,
قال النووي:
"صلاة الجماعة هي في الفرائض غيرالجمعة سنة مؤكدة ٬ وقيل: فرض كفاية للرجال ٬
فتجب بحيث يظهر الشعار في القرية ٬ فإن امتنعوا كلهم قوتلوا"
“பர்ழான தொழுகைகளுள் ஜுமுஆ தொழுகையை தவிர ஏனைய தொழுகைகளை
ஜமாஅத்தாக தொழுவது ஸுன்னா முஅக்கதாவாகும்.இது ஆன்களைப் பொருத்தவரை பர்ழு கிபாயா எனப்படுகிறது.அதாவது
ஒரு பிரதேசத்தில் தொழுகை என்ற கிரியை பொதுவான தோற்றப்பாடாகக் காணப்பட வேண்டும்.அங்குள்ள
அனைவரும் இதனை நிறைவேற்றத்தவரின் அவர்களுக்கெதிராக யுத்தம் செய்யப்பட முடியும்.”என விளக்குகிறார்கள்.
இதில்
ஜும்ஹுர்களது கருத்து,பர்ழான தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவது ஸுன்னா முஅக்கதா என்பதாகும்.இதில்
ஜும்ஹுர்கள் கிட்டத்தட்ட இஜ்மாவான கருத்துக்கு வருகின்றனர் என இமாம் இப்னு ருஷ்த் அவர்கள்
தனது பிதாயதுல் முஜ்தஹிதில் குறிப்பிடுகிறார். அதே நேரம் இந்த விடயத்தில் ஒரு சமூகத்தில்
சமூக ரீதியான அலட்சியமோ,மறுப்போ நிகழுமாயின் அதற்கெதிராக போராட வேண்டும் எனவும் ஜும்ஹுர்கள்
கருதுகின்றனர்.
இந்தக்
கருத்துக்களை இவ்விடயத்தில் நாம் எப்படி அனுக வேண்டும் என்பதனை இமாம் இப்னு ருஷ்த்
அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:
وسبب اختلاف الفقهاء هو تعارض مفهوم
الآثار في تلك المسألة، وذلك كما يقول ابن رشد(1) إن ظاهر قوله صلى الله عليه وسلم
: (صلاة الجماعة تفضل صلاة الفذ بخمس وعشرين درجةً، أو بسبع وعشرين درجةً) يعني أن
الصلاة في الجماعة من جنس المندوب إليه وكأنها كمال زائد على الصلاة الواجبة؛ فكأنه
صلى الله عليه وسلم قال: صلاة الجماعة أكمل من صلاة المنفرد، والكمال إنما هو شيء
زائد على الإجزاء.
فمن قال: إن الجماعة سنة مؤكدة أخذ
بهذا الحديث واستدل به بهذا المفهوم.
وأما من قال: إن الجماعة واجبة فقد
اعتمد على أدلة أخرى، منها حديث تحريق بيوت الذين يتخلفون عن الجماعة، وحديث
الأعمى الذي استأذن النبي صلى الله عليه وسلم وطلب أن يرخص له في عدم حضور الجماعة
لأنه يجد مشقةً في ذلك فلم يرخص له.
وعلى ذلك فقد سلك كل واحد من الفريقين
مسلك الجمع بين الأحاديث بتأويل حديث مخالفه وصرفه إلى الظاهر الذي تمسك به. وهذا
هو تفصيل المذاهب في تلك المسألة.
இங்கு
இமாம்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதற்கான காரணம் குறித்த இந்த விடயத்தில்
வந்துள்ள ஹதீஸ்களை விளங்கிக் கொள்வதில் காணப்படுகின்ற வேறுபாடுகளாகும்.ஜமாஅத் தொழுகையின்
சிறப்புக்கள் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை வைத்து,அதனை பர்ளான தொழுகைளை முழுமைப்படுத்தும்
விடயமாக ஸுன்னா முஅக்கதா என்போர் பாரத்தனர்.
வாஜிப்
என்போர்,தொழுகைக்காக பிந்துவோரின் வீடகளை எரிப்பது சம்மந்தமாகவும் குருடருக்கு ஜமாஅத்துக்கு வராதிருக்க அனுமதி மறுக்கப்பட்ட ஹதீஸையும்
வைத்து தமது கருத்தை நிறுவுகின்றனர்.இங்கு இரு சாராரும் தாம் கொண்ட கருத்தை மற்றைய
சாராரின் ஆதாரங்களுக்கு விளக்கம் சொல்வதன் ஊடாக நிறுவுகின்றனர்.
உண்மையில் இந்த விடயத்தில் ஜும்ஹுர்களது நிலைப்பாடே,ஜமாஅத்
தொழுகையின் பிரதான நோக்கமான தொழுகை எனும் கிரியை சமூக மட்டத்தில் இல்லாது போகாமல் பேணுதல்
என்ற விடயத்துடன் உடன்பட்டு வருகிறது என்பதனைக் காணமுடியும்.
ஜமாஅத்
தொழுகை சம்மந்தமாக எம்மிடம் இருக்கின்ற உரையாடல்கள்,இது தொடர்பாக மிகச் சரியாகப் புரிந்து
கொள்ளப் படுகின்ற போதுதான் அழகான விளைவைத் தரும்.இல்லாத போது அது உபதேசிகளின் உபதேசமாக
மாத்திரம் இருந்துவிட்டுப் போகும்.அது நடத்தை மாற்றத்தை நோக்கிய உரையாடலாக மாறமாட்டாது.
ஜமாஅத் தொழுகையின்
சிறப்புக்கள்
قال
الله تعالى" فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا
اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآَصَالِ رِجَالٌ لَا تُلْهِيهِمْ
تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ " (النور
24)
“அல்லாஹ்வின்
பெயர் நினைவு கூறப்படவும்,உயர்த்தப்படவும் அனுமதிக்கப்பட்ட வீட்டிலேஅவனை காலையிலும்,மாலையிலும்
நினைவு கூர்கின்ற சிறப்பான ஆளுமகள் இருப்பார்கள்.அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவதைவிட்டும்,அல்லாஹ்வை
நினைவு கூர்வதைவிட்டும் வியாபாரமோ,கொடுக்கல் வாங்கல்களோ பராக்காக்கமாட்டாது.”
قال النبي صلى الله عليه وسلم : (( صلاة الجماعة أفضل من صلاة
الفذ بسبع وعشرين درجة )) [ متفق عليه ] .
“ஜமாஅத்தாக தொழுவது தனித்துத் தொழுவதைப் பார்க்கிலும் 27 மடங்கு
சிறந்ததாகும்”
عن أبى هريرة رضى لله عنه قال : قال رسول لله صلى لله عليه
وسلم : " صلاة الرجل في الجماعة تضعف على صلاته في بيته ٬ وفي سوقه ٬ خمسا
وعشرين ضعفا ٬ وذلك أنه : إذا توضأ ٬ فأحسن الوضوء ٬ ثم خرج إلى المسجد ٬ لا يخرجه
إلا الصلاة ٬ لم يخط خطوة ٬ إلا رفعت له بها درجة ٬ وحط عنه بها خطيئة ٬ فإذا صلى
٬ لم تزل الملائكة تصلي عليه ٬ ما دام في مصلاه : اللهم صل عليه ٬ اللهم ارحمه ٬
ولا يزال أحدكم في صلاة ما انتظر الصلاة”-البخاري-
“ஒரு
ஆண் வீட்டிலும்,கடைத் தெருவிலும் தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவது 25 மடங்கு நன்மையை பெற்றுத் தரும்.அது,ஒருவர்
வுழு செய்யும் போது அழகாக வுழு செய்து,பிறகு பள்ளி வாயிலுக்கு தொழுகைக்காக வேண்டியே
மாத்திரம் வெளியேறிச் சென்றால்,அவர் வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும்,அவரது ஒரு படித்
தரம் உயர்த்தப்படும்,ஒவ்வொரு பாவம் மன்னிக்கப்படும்.அவர் தொழுதுவிட்டு,அவர் தொழுத இடத்திலேயே
அமர்ந்திருந்தால் அவருக்காக மலாஇகாக்கள் பிரார்த்திப்பார்கள்:யா அல்லாஹ்!அவர் மீது
ஸலவாத் சொல்வீராக.யா அல்லாஹ் அவருக்கு இரக்கம் காட்டுவாயாக.உங்களில் ஒருவர் தொழுகையை
எதிர்பார்த்து காத்திருக்கும் காலமெல்லாம் அவர் தொழுகையில் இருக்கிறார்.”
عن
أبي موسى الأشعرى رضى لله عنه قال : قال النبي صلى لله عليه وسلم : " أعظم
الناس أجرا في الصلاة أبعدهم ٬ فأبعدهم ممشى والذي ينتظر الصلاة حتى يصليها مع
الإمام أعظم أجرا من الذي يصلي ٬ ثم ينام "-البخاري-
“மனிதர்களிலேயே தொழுகையில் அதிகம் நன்மையை பெற்றுக் கொள்பவர்,மிக,மிகத்
தொலைவில் இருந்து வந்து தொழுபவராவார்.இமாமுடன் தொழுவதற்காக காத்திருப்பவர் தொழுதுவிட்டு
உறங்குபவரைப் பார்க்கிலும் அதிகம் கூலியைப் பெற்றுக் கொள்கிறார்.”
عن أبى هريرة رضى لله عنه عن النبي صلى لله عليه وسلم قال : "من غدا إلى المسجد أو راح أعد لله له في
الجنة نزلا كلما غدا أو راح"-البخاري ومسلم-
“யார் காலையிலும் மாலையிலும் பள்ளிவாயிலுக்கு செல்கின்றாரோ,அவர்
காலையிலும் மாலையிலும் போகின்ற போதெல்லாம் அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் விருந்தொன்று
ஏற்பாடு செய்கிறான்.”
عن أنس بن مالك رضى لله عنه قال : قال رسول لله صلى لله عليه وسلم : "من صلى
أربعين يوما في جماعة
يدرك التكبيرة الأولى كتب له براءتان : براءة من النار ٬ وبراءة من النفاق
"
-رواه
الترمذي وحسَّنه الألباني-
“யார் நாற்பது நாட்கள் முதற்
தக்பீருடன் ஜமாஅத்தாக தொழுகிறாரோ,அவர் இரண்டு விடயங்களிலிருந்து நிரபராதியாவார்:1-நரகிலிருந்து அவர் விடுதலையாகிறார்.2-நிபாக்கிலிருந்து
அவர் விடுதலையாகிறார்.”
عن أبي أمامة
رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال" من خرج من بيته متطهرا
إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم " (حسنه الألباني )
“யார் தனது வீட்டிலிருந்து
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு,கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக வெளியேறிச் செல்கிறாரோ,அவருக்கான
கூலி இஹ்ராமணிந்து ஹஜ் செய்தவருக்கான கூலி போன்றதாகும்.”
عن أبي هريرة
رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه و سلم" ألا أدلكم على ما يمحو
الله به الخطايا و يرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال: إسباغ الوضوء على المكروهات
وكثرة الخطا إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط " (صححه
اللباني: صحيح الترغيب و الترهيب(
“அல்லாஹ் உங்களது தவறுகளை அழித்து,அந்தஸ்த்துக்களை உயர்த்தக்கூடிய ஒரு விடயத்தை
காட்டித் தரட்டுமா? என நபியவர்கள் கேட்டதற்கு,ஸஹாபாக்கள்: ஆம் யாரஸுலல்லாஹ் என்றார்கள்.அதற்கு
நபியவர்கள்:சிரமமான நிலையிலும் வுழுவை நிரப்பமாக செய்தல்,பள்ளிவாயிலுக்கு அதிகம் நடந்து
செல்லுதல்,ஒரு தொழுகைக்குப் பின்னர் இன்னோர் தொழுகையை எதிர்பார்த்திருத்தல் என்பனதான்
அவை.உண்மையில் அவை அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதாகும்.”
وعن أبي أمامة رضي الله عنه قال: قال رسول
الله صلى الله عليه وسلم قال " ثلاثة كلهم ضامن على الله إن عاش رزق وكفي وإن
مات أدخله الله الجنة من دخل بيته فسلّم فهو ضامن على الله ومن خرج إلى المسجد فهو
ضامن على الله ومن خرج في سبيل الله فهو ضامن على الله" (رواه ابو داوود و
صححه الألباني)
“மூன்று நபர்கள் இருக்கின்றார்கள்,அவர்கள்
அனைவரும் அல்லாஹ்வின் பொருப்பில் இருக்கின்றார்கள்.அவர்கள் வாழ்ந்தால் அவர்களுக்குருிய
வாழ்வாதாரத்தைக் கொடுத்து அவர்களை காப்பான்.அவர்கள் மரணித்தால் சுவனத்தில் நுழையச்
செய்வான்.யார் தனது வீட்டுக்கு ஸலாம் சொன்னவராக நுழைகிறாரோ,அவர் அல்லாஹ்வின் பொருப்பிலுள்ளார்.யார்
பள்ளிவாயிலுக்கு வெளியாகிச் செல்கிறாரோ அவர் அல்லாஹ்வின் பொருப்பிலுள்ளார்.யார் அல்லாஹ்வின்
பாதையில் வெளியேறிச் செல்கிறாரோ அவர் அல்லாஹ்வின் பொருப்பிலுள்ளார்.”
சுபஹ்,இஷா
தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதன் சிறப்பு
عن
عثمان بن عفان رضي لله عنه قال: سمعت رسول لله صلى لله عليه وسلم يقول: " من
صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ٬ ومن صلى الصبح في جماعة فكأنما صلى
الليل كله "-مسلم-
“யார் இஷாவை ஜமாஅத்தோடு
தொழுகிறாரோ,அவர் பாதியிரவு நின்று வணங்கியவரைப் போன்றவராவார்.யார் ஸுபஹை ஜமாஅத்தோடு
தொழுகிறாரோ அவர் முழு இரவும் நின்று வணங்கியவரைப் போலாவார்.”
இவ்விரு தொழுகைகளும் ஜமாஅத்தாக நிறைவேற்றுவதற்காக
சமூகம் தருவதில் காணப்படுகிற சிரமங்கள்தான் இத்தகைய தூண்டுதலுக்கு காரணமாகும்.
عن أبي هريرةرضي الله عنه قال: قال رسول لّله صلىّ لّله عليه وسلمّ
:"إن أثقل صلاة على المنافقين صلاة
العشاء وصلاة الفجر ٬ ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا ٬ ولقد هممت أن آمر بالصّلاة فتقام ٬ ثّم آمر رجلا ٬فيصليّ بالناّس ٬ ثّم أنطلق معي برجال معهم حزم من حطب إلى قوم لا يشهدون الصّلاة فأحّرق عليهم بيوتهم
بالناّر"-مسلم-
“முனாபிக்குகளுக்கு மிகவும் பாரமான தொழுகை,இஷா தொழுகையும்,பஜ்ர்
தொழுகையுமாகும்.அவை இரண்டிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களாயின் அவற்றை தொழுவதற்காக
தவண்டாவது வருவர்.தொழுகையை நிலைநாட்டுமாறு ஏவிவிட்டு,மக்களை தொழுவிப்பதற்காக ஒருவரை
நியமித்துவிட்டு,என்னோடு விரகுக் கட்டுக்களை சுமந்து கொண்டு சிலரை அழைத்துச் சென்று,தொழுகைக்காக
சமூகம் தராதவர்களது வீட்டை நெருப்பால் எரிப்பதற்கு என் மனம் விரும்புகிறது.”
இந்த
ஹதீஸ்,நபியவர்களால் குறிப்பிட்ட சூழலில் முனாபிக்குகளது விவகாரத்தை கையாள்வதற்காக சொல்லப்பட்ட
எச்சரிக்கையாகும்.இது,நபியவர்கள் இதனை நடைமுறைப்படுத்தாமையில் இருந்து விளங்கிக் கொள்கிறோம்.
அஸர் தொழுகையை பேணுதல்
حَافِظُوا عَلَى
الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (البقرة -238 )
“நீங்கள் எல்லா தொழுகைகளையும்,அஸர் தொழுகையையும் பேணிக்
கொள்ளுங்கள்.அவற்றை அல்லாஹ்வுக்காக பணிவுடனுமு் அமைதியாகவும் நிவேற்றுங்கள்”
عن أبي موسى رضي الله عنه
قال : قال رسول الله صلى الله عليه وسلم " من صلى البردين دخل الجنة
"(البردان هما الفجر و العصر) (رواه البخاري ومسلم)
“யார் இரண்டு குளிர் நேரத் தொழுகைகளையும் நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் சுவனம்
நுழைந்துவிடுவார்கள்.(அஸர்,சுபஹ்)”
"الذي
تفوته صلاة العصر، كأنما وتر أهله وماله"-متفق عليه-/"من فاتته صلاة العصر فكأنما وتر أهله وماله“-أحمد/ابن حبان-
“யார் அஸர் தொழுகையை தவரவிடுகிறாரோ
அவர் தனது குடும்பத்தையும்,சொத்துக்களையும் இழந்தவர் போலாவார்.”
" من ترك
صلاة العصر فقد حبط عمله "-البخاري-
“யார் அஸர் தொழுகையை விட்டு விடுகிறாரோ அவரது செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும்”
இங்கு அஸர் தொழுகையை விடல் என்பதற்கு,அதன் ஜமாஅத்தை தவர விடல் என்ற ஒரு விளக்கமும்
காணப்படுகிறது.அதனைப் பார்க்கிலும் அதன் நேரத்தை தவரவிடல்,வேண்டுமென்றே அதனை தொழாமல்
விடுதல் என்ற விளக்கம்தான் பொருத்தமானது. ஏனெனில் இதே றிவாயத் ‘வேண்டுமென்றே’ என்ற பகுதியுடன்
இணைந்து வேறு ரிவாயத்களில் இடம் பெற்றுள்ளது.
தொழுகையை பயிற்றுவித்தல்
தொழுகையை பொருத்தவரை இஸ்லாத்தின்
அடிப்படையான கடமை என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.அதே போன்று ஜமாஅத்தாக அதனை
நிறைவேற்ற வேண்டும் என்பதிலும் அதிக கவனத்தை அது செலுத்தியுள்ளது.எனினும், சமூக மட்டத்திலும்
சரி, தனிப்பட்ட முறையிலும் சரி அதற்கு உரிய முக்கியத்துவம் சரியாக வழங்கப்பட்டு அதன் விளைவுகள்
கிடைக்கும் வண்ணம் அது நிறைவேற்றப்படுவதில் நிறையவே பலவீனங்கள் காணப்படுகின்றன. காரணம்
நாம் தொழுகையை ஏவுகின்ற அளவுக்கு, அதன் சட்டங்களை பேசுகின்ற அளவுக்கு, அதனை தேவையுணர்ந்து, அனுபவித்து
நிறைவேற்றுகின்ற வகையில் பயிற்றுவிக்க தவறி விடுகிறோம்.
உதாரணத்திற்கு பன்றி இறைச்சி
சம்மந்தமான பிரக்ஞை எம்மிடம் எவ்வளவு ஆழமாக பதிந்துள்ளது என்பதனைப் பாருங்கள்.அது விற்கப்படுகின்ற
கடையில் அல்லது அதற்கு அருகிலுள்ள கடைகளில் கூட நாம் எதையும் வாங்குவதற்கு அருவருப்படைகிறோம்.அதனை
சொல்லும் போதே ஒரு வகை தீண்டத்தகாத உணர்வு எம்மிடம் ஏற்படுகிறது. ஆனால், தொழுகை விடயத்தில், அதனை
நிறைவேற்றும் விடயத்தில் இந்த உணர்வு எம்மிடம் ஆழமாக பதிந்ததாக இல்லை. காரணம் அது உணர்வு
பூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் எமதுள்ளத்தில் ஆழப் பதியவில்லை. நாம் பல ஆன்மீகக் கடமைகளை
நிறைவேற்றுவதற்காக சொல்லும் நியாயம் நாம் அதனை சமூகத்திற்காயும், நமது அந்தஸ்த்தை சமூகத்தில்
பாதுகாப்பதற்காயும் அதனை நிறைவேற்றுகிறோம் என்ற தோரனையில் அமைந்துள்ளது. இதுதான் இது
சார்ந்த விடயங்களில் எம்மிடம் பலவீனம் ஏற்படுவதற்கு காரணமாய் அமைகிறது. அது தொடர்பாக
பேசும் போது நாம் மேற் சொன்ன நியாயங்களுக்காகவே செய்கிறோம்.. பிறகு மீண்டும் பலவீனம்…இதனை
சரியாக நிவர்த்திக்க வேண்டுமாயின் இவை படிமுறை ஒழுங்கில், உள்ளத்துக்கு இனிப்பாக, இன்பமாக
பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
தொழுகையுடன் சம்மந்தமான விடயங்களை
சற்று உற்று நோக்குங்கள், பாங்கு அது இசையும் ஓசையும் கொண்டது, வுழு அது சுத்தம்.. வுழு
செய்யும் போது அதன் ஓசையையும் அழகையும் ரசித்ததுண்டா? பள்ளி வாயிலுக்கு அழகுடனும் அலங்காரத்துடனும்
பயணித்தல், தொழுகையின்
தக்பீர்களும் ஓதல்களும்,
தொழுகையின் அணி, பிரார்த்தனை…. அது ஆன்மீக மென்மையைத் தரும் அழகியல் நிறைந்த
கடமை. அதில் மனிதனின் முழு அண்டசராசரமும் அடங்கி அமைதி காண்கிறது. உள்ளம் மென்மை பெறுகிறது.
பலவீனனில் அனுதாபமும் ஆதரவும் கொள்கிறது… தொழுகையுடன் இணைந்தே செயலின் அழகு ஸகாத்தும்,
ஸதகாவும் உயிர் பெறுகிறது. அசிங்கங்கள் ஊத்தைகளை விட்டும் தூர விலகி, அழகை, அன்பை அனுபவிக்கும்
உணர்வைத் தருகிறது… ஆனால், நாம் இதை எல்லாம் எங்களது தொழுகைகளில் அடைகிறோமா?... எங்கள்
தொழுகையை பிறருக்கு சொல்லும் போது இந்த உணர்வு அவர்களுக்கு கடத்தப்படுகிறதா?
எமது பாங்கோசைகளில் ஓசை இல்லை…
அவை செத்தே பிறக்கின்றன… எமது ஓதல்களில் இசை மரணித்தே எழுகின்றன… எமது அணிகளில் அழகு
செத்துத்தான் நிமிர்கின்றன… இனி எங்கே மென்மை உயிர் பெறப் போகிறது? கடமையை முடித்துவிட்டு
வந்தால் கர்வமும், அகம்பாவமும் தோலில் தோற்றிக் கொள்கின்றன. பலவீனனை இழிவாய், தீண்டத்தகாதவனாய்
பார்க்கும் நிலையே மேலோங்கி வளர்கின்றது… இனி எங்கே அந்தக் கடமை இகாமத் செய்யப்படப்
போகிறது… தொழுகையை இகாமத் செய்யும் வாஜிப் இன்னும் சமூகத்தில் பூச்சியத்திலேயே இருக்கிறது.
பள்ளிவாயில்கள் கட்டப்படும் அளவு தொழுகை கட்டப்படவில்லை. பள்ளிவாயில்கள் அலங்கரிக்கப்படும்
அளவு தொழுகை அலங்கரிக்கப்படவில்லை. பள்ளிவாயில்களை கட்டுவதற்காக வசூலுக்கு தூண்டப்படுமளவு
தொழுகையாளிகளின் வெளிப்பாடாய், உணவு கொடுக்க, அத்தியவசிய தேவைகளை நிறைவு செய்து, மானத்தோடு
மனிதன் வாழ தொழுகையாளிகளால் தூண்டல் கொடுக்கப்படவில்லை.
தொழுகையை பயிற்றுவிவிப்பதில்
பயிற்றுவிப்பின் அழகையும் மென்மையையும், ஒழுங்கையும் பேண முடியுமாயின், எதற்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும்? எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை? எதனை முற்படுத்த வேண்டும்?
எதனை முற்படுத்தத் தேவை இல்லை என்பதனை விளங்கி பயிற்றுவிப்பை செய்ய முடியுமாயின் இந்த
அழகிய கடமையை அழகாக எம்மில் உயிர்ப்பிக்கலாம்.
இறுதியாக,ஜமாஅத் தொழுகையை
நாம் எமக்குள்ளால் பயிற்றுவிப்பதில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என்பது தொடர்பாக கலாநிதி
ஜாஸிர் அவ்தாவிடம் பெற்ற ஒரு ஆலோசனையை பகிர்து கொள்கிறோம்.
‘صلاة الجماعة في المسجد سنة وهو ما يعني أن يثاب فاعلها ولا يعاقب تاركها.
أما الضغط على الشباب من باب التربية فأرى أن النصح والرفق هما أيضا من السنن
المؤكدة وهما أولى وأنجح لأن هذا ما فعله رسول الله صلى الله عليه وسلم. تحياتي ‘
“பள்ளிவாயிலில்
ஜமாஅத்தாக தொழுதல் ஸுன்னாவாகும். இதன் கருத்து, அதனை நிறைவேற்றியவர் கூலி பெறுவார்.
அதனை விடுபவர் தண்டிக்கப்படமாட்டார். இந்த விடயத்தில் பயிற்றுவித்தல் நோக்கில் இளைஞர்களுக்கு
அழுத்தம் கொடுப்பதைப் பொருத்தவரை, இதில் மென்மையாக நடப்பதும், உபதேசம் செயவதும் கூட
ஸுன்னா முஅக்கதாவாகக் காணப்படுகிறது. அவை இரண்டும் இந்த விடயத்தில் முதன்மைப்படுத்தப்பட
வேண்டியவையாகவும், வெற்றிகரமானதுமான வழிமுறையாகவும் காணப்படுகிறது. இதுதான் நபியவர்களது
வழிமுறையும் கூட.”
حديث إحراق البيوت لابد أن
ننظر فيه إلى قصد النبي صلي الله عليه وسلم فيه. هو لم يقصد أن يعاقب فعلاً بالحرق
ولم يفعلها أبدا وإلا أصبحت الصلاة العادية في المسجد فرضاً وهو ما لم يقل به أحد.
بل هو قصد التأديب والحث بكلام عربي يفهم السامع منه حرصه وجديته وليس فعلا أن
يحرق البيوت على أحد. هذا الحديث مثل حديث أن يقلب الله رأس المصلي لرأس حمار إذا
رفع قبل الإمام، أو غيرها من الأحاديث. وصلاة الجماعة في غير الجمعة سنة أي يثاب
فاعلها ولا يعاقب تاركها، ولكن لا ينبغي أن يترك المصلي الجماعة دائما أبداً لأن
هذا يخالف السنة وفي هذا جاء الحديث. والله أعلم. وفقك الله
“ஜமாஅத் தொழுகை தொடர்பில் வந்துள்ள வீட்டை எரித்தல் சம்மந்தமான
ஹதீஸைப் பொருத்தவரை அதன் நோக்கத்தை நாம் பார்க்க வேண்டும். நபியவர்கள் இங்கு எரிப்பதை
நோக்கமாகக் கொள்ளவுமில்லை, அதனை ஒரு போதும் நடைமுறைப்படுத்தவுமில்லை. அப்படியில்லாது
போனால் அன்றாடம் அனைத்து தொழுகைகளையும் பள்ளிவாயிலில்
தெழுவது பர்ளாக மாறியிருக்கும். இப்படி யாருமே கூறவில்லை. இந்த ஹதீஸ், இங்கு பண்படுத்தும்,
தூண்டும் நோக்கோடு கூறப்பட்டதாகும். அறபு மொழியில் இப்படி சொன்னால் விடயம் பாரதூரமானது
என்பதனை கேட்பவர் விளங்கிக் கொள்வர். மாற்றமாக யாருடையதாவது வீட்டை எரிக்கப் போகிறார்
என இங்கு புரியப்படமாட்டாது. இது இமாமுக்கு முன்னர் எழும்புபவரின் தலையை கழுதையின்
தலையாக மாற்றிவிடுவதாக வந்த ஹதீஸ் போன்றது. ஜுமுஆ தொழுகை தவிர்ந்த அனைத்து தெழுகைகளும்
ஜமாஅத்தாக தொழப்படுவது ஸுன்னாவாகும். அதாவது செய்பவர் நன்மை பெறுவார். செய்யாதவர் தண்டிக்கப்படமாட்டார்.
என்றாலும் ஒரு தொழுகையாளி எப்போதுமே ஜமாஅத் தொழுகையை விடக் கூடாது. அது சுன்னாவுக்கு
முறணாகும். இது தொடர்பில் ஹதீஸ்கள் வந்துள்ளன.”
எனவே, இந்த விடயத்தை கையால்வதில் நபியவர்களது
முன்மாதிரியை கைக் கொள்வது இந்த விடயத்தில்
உரிய பலனைத் தரும். ஸப்வான் இப்னு முஅத்தல்
போன்று விதிவிலக்கான பலவீனங்களை பொதுமைப்படுத்தாது உண்மையான நிலையை அறிந்து சமூகத்திலும்
அணியிலுமுள்ளோரை இந்த விடயத்தில் நெறிப்படுத்த முயற்சிப்போம்.
ஜமாஅத் தொழுகையை பேணிக் கொள்ள சில ஒழுங்குகள்
- இயன்றவரை முதல் நேரத்திலேயே பள்ளியில் நிறைவேற்ற முயற்சித்தல்.
- பள்ளிவாயிலுக்கு செல்ல முடியாத சந்தர்ப்பங்களின் போது இருக்கின்ற இடத்தில் ஜமாஅத்தாக நிறைவேற்றல்.
- எந்த இடத்திலும் ஜமாஅத்
நிறைவுற்று ஒருவர் தனியாக தொழும் நிலை வரின் அவருடன் இன்னொருவர் சேர்ந்து ஜமாஅத்தாக
தொழல்.
ما أخرجه الإمام أحمد
والترمذي من حديث أبي سعيد وحسنه الترمذي: (أن النبي -صلى الله عليه وسلم- بعد ما
انتهى من صلاة - وفي بعض الروايات صلاة الفجر- جاء رجل تأخر عن الصلاة فدخل يصلي
فقال النبي -صلى الله عليه وسلم-:ألا رجل يتصدق على هذا)
- ஒருவர் ஓர் இடத்தில் தொழுதுவிட்டு
வந்தோ அல்லது ஏதோ ஒரு வகையில், குறிப்பாக பள்ளிவாயிலில் ஜமாஅத் செய்கின்றவர்களை
எதிர்பார்த்திருக்க நேர்ந்தால் அவர்களுடன் இணைந்து தொழுவது நபிலுக்கான நன்மையை
தரும்.
(إذا
صليتما في رحالكما ثم أتيتما مسجد جماعة فصليا معهم فإنها لكم نافلة)
- வியாபாரம், தொழில் நடவடிக்கை, பிராயாணம் போன்ற
சந்தர்ப்பங்களில் எல்லாம் பள்ளிவாயிலுக் செல்ல முடியாத நிலைவரின் ஜமாஅத்தாக தொழ
வாய்ப்பிருப்பின் உரிய நேரத்தில் குறித்த இடத்தில், அங்குள்ள அனைவரையும் இணைத்துக்
கொண்டு தொழுதல். இதனை வகுப்பறைகளில், கடைத் தெருக்களில் கூட செய்யலாம்.
حديث مالك بن الحويرث -رضي الله
عنه- قال: (أتى النبي -صلى الله عليه وسلم- رجلان يريدان السفر فقال -عليه الصلاة والسلام-
إذا أنتما خرجتما فأذنا وأقيما وليؤمكما أكبركما)
- ஜமாஅத் தவறுகின்ற போது குறைந்த அளவில் குடும்பத்தோடாவது
ஜமாஅத்தாக தொழுதல்.
No comments:
Post a Comment