Sunday, July 24, 2016

அல்லாஹ்வின் அங்கீகாரமே தஃவாவின் முதன்மைத் தேவை(09.07.2010)

எனது தொழுகையும் எனது கிரியைகளும் எனது வாழ்வும் மரணமும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கேஉரியது. அவனுக்கு இணையில்லை. இவ்வாறுதான் நான் ஏவப்பட்டுள் ளேன். நான் முஸ்லிம்களுள் முதன்மையானவனாகவும் உள் ளேன் என நீர் கூறும்.”(அல் அன்ஆம்: 162-163)

தஃவாவில் ஈடுபடுகின்ற ஒருவர் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டிய விடயம்தான்; தான் எதற்காக இந்தப் பணியைச் செய்கின்றேன் என்ற விடயமாகும். ஒரு முஃமினுடைய எல்லா செயற்பாடுகளிலும் இந்தக் கேள்விக்கான பதில் காணப்பட வேண் டும். எனவேதான், இமாம் உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர் களைப் பற்றி அவரது சகோதரர் ஹிஷாம் இப்னு அப்துல் மலிக் குறிப்பிடுகையில்; “உமர் ஒரு எட்டுவைத்தாலும் அதில் ஒரு நி ய் யத் இல்லாமல் அதனை செய்திருப்பார் என நான் நினைக்க வில்லைஎனக் குறிப்பிடுகிறார்.
ஒரு முஸ்லிமுடைய அனைத்து செயற்பாடுகளும் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரமே நோக்காகக் கொண்டு அமையப் பெறுவது முதன்மையான அம்சமாகும். அல்லாஹ்வுக்கு தூ ய்மையாக அடி பணிந்து அவனுக்கு முழு மையாகக் கட்டுப்படுமாறு நான் ஏவப் பட்டுள்ளேன் என நீர் கூறும். அந்தவகையில் ஒருவர் தஃவாவில் ஈடுபடுவதன் முதன்மை நோக்கமாகவும் இறை திருப்தியேகாண வேண்டும். அதற்கப் பால்தான் ஏனைய நோக்கங்களும் இலக்கு களும் இடம்பெற முடியும். எனவேதான், நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்து நான் ஒரு செயலைச் செய்யும் போது அல்லாஹ்வுக்காக செய்கிறேன். ஆனால், நான் செய்ததை மக்கள் பார்க்க வேண்டு மெனவும் விரும்புகிறேன் என்பதாக சொன்னபோது நபியவர்கள் மௌனமாக இருந்தார்கள். இதன்போது அல்லாஹுத்தஆலா ஸூறா கஹ்பின் இறுதி வசனத்தை இறக்கி அதற்குப் பதில் அளிக்கிறான்;
யார் தனது இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோஅவர் நல்ல மல்களில் ஈடுபடட்டும். அவர் தனது இறைவனை வணங்குவதில் யாரையும் இணையாக்காது மிருக் கட்டும். (அல் கஹ்ப்: 110)
அல்லாஹ்வை நோக்கி மனிதர்களை அழைக்கும் பணியில் ஈடு படும் தாஈக்கள் இந்த இடத்தில்தான் கவனமாக இருக்க வேண்டும். தமது தஃவாப் பணியில் அல்லாஹ்வின் திருப்திஎன்ற முதன்மை நோக்கத்தில் வேறு ஏதும் களங்கம் ஏற்பட்டு விடாமல் அடிக்கடி தமது நி ய்யத்தைத் திருப்பிப் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாத போது அல்லாஹ்வை நோக்கி அழைக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் நாம் துரதிஷ்டவசமாக நரகிற்குச் செல்வோரில் முன்னிலை யில் இடம்பெற நேரிடும்.
மறுமையில் முதலில் விசாரணைக்குற் படுபவர் அல்லாஹ்வின் பாதையில் மரணித்த ஒரு மனிதராகும். அவர் கொண்டு வரப்பட்டு அவருக்குக் கொடுக்கப்பட்ட அருள்கள் தொடர்பாக ஞாபகப்படுத் தப்படும். அதனை அவர் அறிந்து கொண்டதும் அதனை வைத்து நீர் என்ன செய்தா ய் என அவரி டம் கேள்வி கேட்கப்படும். அதற் கவர்; அல்லாஹ்வின் பாதையில் போராடி ஷஹீதானேன் என்பார். அதற்கு அல்லாஹ்: நீ பொ ய் சொல்கிறா ய், அவர் ஒரு வீரர் என்று மக்கள் உன்னைப் புகழ வேண்டுமென்பதற்காகத்தான் நீ போராடி னா ய் என்று கூறி பின்னர் அவரை நரகிற்குக் கொண்டு செல்லுமாறு ஏவப்படும். அவர் முகம் குப்புற இழுத்துச் செல்லப் பட்டு நரகில் எறியப்படுவார். பிறகு அறிவைக் கற்று அதனைக் கற்பித்த, அல்குர்ஆனைக் கற்றுக் கொண்ட ஒரு மனிதர் கொண்டு வரப்படு வார். நீர் அதனை வைத்து என்ன செய்தா ய் எனக் கேட்கப்படும். அதற்கு அவர்: நான் உனக்காக அறிவைக் கற்று அதனைப் பிறருக் குக் கற்றுக் கொடுத்தேன். உனக்காக அல்குர்ஆனை ஓதினேன் என்பார். அதற்கு இறைவன்: நீ பொ ய் சொல்கிறா ய். நீ ஒரு அறிஞன் என்று கூறப்படுவதற்காகவே அவ்வாறு செய்தா ய். நீ நன்றாக ஓதக் கூடிய காரிஎன்று கூறப்படுவதற்காகவே அவ்வாறு செய்தா ய் என்று கூறி அவரை நரகிற்குக் கொண்டு செல்லுமாறு ஏவுவான்... பிறகு ஒரு செல்வந்தர் கொண்டு வரப்படுவார்... உனது பாதையில் உனக்காக நான் செலவு செய்தேன் என அவர் கூறுவார். அதற்கு அல்லாஹ்; நீ பொ ய் சொல்கிறா ய்அவர் ஒரு கொடைவள்ளல்என்று மக்கள் உன்னைப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ செலவு செய்தா ய் எனக் கூறி அவரை நரகில் இடுமாறு ஏவப்படும். அவர் முகம்குப் புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப் படுவார்.” (முஸ்லிம்)
இது தாஈக்கள் இலகுவில் வீழ்ந்துவிடக் கூடிய ஷைத்தானின் ஆபத்தான வலை. இந்த ஹதீஸை அபூ ஹுரைரா (றழி) அவர்கள் ஒரு தாபிஈக்கு கூறும்போது பல முறை சுய நினைவிழந்து போனார் கள். இதனை முஆவியா (றழி) அவர்களிடம் கூறியபோது; இவர் களது நிலையேஇவ்வாறாக இருந்தால் மற்றையவர்களது நிலை எப்படியிருக்கும் எனக் கூறி கடுமையாக அழுதார். பிறகு மயக்க முற்று வீழ்ந்தார். மயக்கம் தெளிந்ததும் தனது முகத்தைத் தடவி விட்டுக் கொண்டு, அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியது உண்மைதான் எனக் கூறி பின்வரும் வசனத்தை ஓதினார்:
யார் உலக வாழ்வையும் அதன் அலங்காரங்களையும் விரும்பு கின்றார்களோஅவர்களுக்கு நாம் அவர்களது செயல்களுக்குரிய வற்றை இவ்வுலகிலேயே பூரணமாகக் கொடுத்துவிடுவோம். அவர் களுக்கு அதில் குறைவு செய்யப்பட மாட்டாது. இவர்கள்தான் மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறு ஏதும் கிடைக்கப் பெறாத வர்கள். அவர்கள் உலகில் செய்தவை அனைத்தும் அங்கு பயனற்றுப் போ ய்விடும். அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணானவை யாகும்.” (ஹூத்: 15-16) இது அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட ஸஹாபாக் களது நிலை. இந்த விடயத்தின் பாரதூரமேவிளங்காத அளவு பொடுபோக்கா ய் வாழும் எமது நிலை பற்றி சிந்திக்கவே பயமாக இருக்கின்றது. தாபிஈன்களுள் ஒருவரான துர் இப்னு அதாஃ உனது இருப்பை யாரும் அறியாத பூமியினுள் புதைத்துவிடுஎன்றார்கள். ஆனால், எந்தவித ஆன்மீகப் பக்குவமோ, முதிர்ச்சியோ, தொடர்ந்த ஆன்மீகப் பயிற்சியோ அற்ற எத்தனையோ பேர் எம்மில் எப்போ தும் உலக ஒளியில் தமது நிழல் விம்பங்கள் விழ வேண்டும் என விரும்புவது ஆச்சரியமாக இருக்கிறது. எமது முன்னோர்களில் கலீபாக்களாக இருந்தவர்களே மக்கள் முன் விறகு சுமந்தும் யாரு மறியாத இருளில் இறைவனை வணங்கியும் ஏழைகளுக்கு ஸதகா சுமந்தும் பகலின் வெளிச்சத்தால் தம்மில் வீழ்ந்துவிடப் பார்க்கும் கறைகளைத் துடைப்பதில் கவனமாக இருந்தார்கள் என்றால் அற்பர்களான நாம் இந்த விடயத்தில் எத்துனை கவனமாக இருக்க வேண்டும்.
உலகின் வெளிச்சத்தில் பயணிக்க ஆசைப்படுபவர்கள் எப் போதும் மறுமையின் இருளை எண்ணிப் பார்த்துக் கொள்ளட்டும். நாளை மறுமையில் பிரகாசமா ய் இருக்கப் போவது இந்த உலகில் இருளுக்குள் புதைக்கப் பட்டவைதான். இந்த உலகில் தமது பெயர் களைப் பதிந்து செல்ல ஆசைப்படுபவர்கள் மறுமையின் ஏட்டில் தமது பெயர்களைத் தவறவிடாது பார்த்துக் கொள்ளட்டும்.
நாம் எப்போதும் தஃவாவில் எமது செயற்பாடுகளுக்கு சமூக அங்கீகாரத்தைத் தேடுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் அங்கீகாரத் தைத் தேடுவதில் கவனமாக இருப்போம். எமக்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைத்தால் இயல்பாகவே சமூக அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுவிடும். அல்லாஹ் ஒரு அடியானை விரும்பினால் மலக்குமார்களுக்கு மத்தியிலும் மனிதர்களுக்கு மத்தியிலும் அல்லாஹ்வே அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கிறான் என நபியவர்கள் ஒரு ஹதீஸில் விரிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவேதான், நபியவர்களைப் பார்த்து அல்லாஹ்; “உமது புகழை நாம் உயர்த்தினோம்என்கிறான். இது அல்லாஹ் தூயவர்களுக்குக் கொடுக்கின்ற அங்கீகாரம்; தேடிச் செல்கின்ற விடயமல்ல.
ஸஹாபாக்கள் எப்போதும் உலகில் தமது செயல்களுக்குக் கிடைக்கப்பெறும் பேறுகளால் மறுமையின் கூலி இல்லாமல் போ ய்விடுமோ எனப் பயந்திருக்கிறார்கள். தமது செயற்பாடுகள் முதலும் இறுதியுமாக அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென் பதில் கூடிய அக்கறை காட்டியுள்ளார்கள். இந்தப் பாரம்பரியத்தினால்தான் எமது சமூகத்தின் வரலாற்றில் எத்த னையோ வெற்றிகளுக்குக் காரணமானவர்கள் யார் என்று அறியப் படாதிருக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை அறிவான்.
நவீனகால இஸ்லாமிய தஃவாவிலும் இந்தப் பாரம்பரியத்தை உருவாக்குவதில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் கவனமா ய் இருந்தார்கள். தனது ச கோதரர்களைப் பற்றி அவர்கள் குறிப்பிடு கையில்; “எம்மில் ஒருவர் வியாழக்கிழமை அஸரின்போது தனது வேலையில் இருந்து வார விடுமுறையில் வந்தால் இஷா தொழு கைக்கு மன்யா என்ற பிரதேசத்தில் உரை நிகழ்த்தச் சென்றிருப்பார். அடுத்தநாள் ஜும்ஆ குத்பாவை அவர் மன்பலூதில் நிகழ்த்துவார். அஸர் நேரம் அஸ்யூத்தில் அவருக்கு ஒரு பாடம் இருக்கும். இஷா நேரம் ஸவ்ஹாஜில் உரை நிகழ்த்துவார். பிறகு மறுநாள் அதிகாலை யிலேயே கெ ய்ரோவிலுள்ள தனது வேலைத்தளத்திற்கு ஏனையவர் களுக்கு முன்னர் போ ய் விடுவார்.
அவர்களில் ஒருவர் 30 மணித்தியாலங்களுக்குள் பல்வேறு பிர தேசங்களிலும் இடம்பெறும் நான்கு விழாக்களில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியிருப்பார். ஆனால், அவர்களது அந்த உழைப்பை அவர்களைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். அதனை அவர்கள் பகிரங்கப்படுத்தவும் விரும்ப மாட்டார்கள்எனக் குறிப் பிடுகிறார்கள். இமாமவர்கள் இத்தகைய தனது சகோதரர்களை ரபாக் கள்சமூகத்தில் அறிமுகமில்லாமல் அந்நியமாய் இருந்து கொண்டு தஃவாவுக்காக உழைப்போர்கள் என விழிக்கிறார்கள்.
ச கோதரர்களே! மக்களை நேர்வழிப்படுத்துவதற்காக நாம் எத்தனை உரைகள் நிகழ்த்தியி ருப்போம்! எத்தனை பாடங்களை நடத்தியிருப்போம்! எத்தனை பக்கங்களை எழுதியிருப்போம்! எத்தனை நூல்களை வெளியிட்டிருப்போம்...! ஆனால், இவை அனைத்தும் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா என்பது தான் நாம் அடிக்கடி எம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய விடயம்.

யா அல்லாஹ்! எமது செயல்களை ஏற்றுக் கொள்வாயாக. எமது பாவங்களை மன்னித்து விடுவாயாக. எம்மை நல்லடியார்களுடன் மரணிக்கச் செய்து, நாளை மறுமையில் அவர்களுடனேயேஎழுப்பு வாயாக!

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...