ஆரம்ப நாட்கள் எப்பொழுதும் அழகிய, கவர்ச்சிமிகு
காலமாகவே இருக் கும். அந்நாட்களில் தாஈ விரிந்த தோப்பு களுக்குள்ளால் ஆனந்தமாக உலா
வரு வார். அங்கே அவர் ஆழ்ந்த சுகந்தத்தை நுகர்வார். இன்னோர் இடத்தில் மலர்கள் அவரை
வருடிக் கொடுக்கும். இனிய தென்றல் அவரை புல்லரிக்க வைக்கும். அவர் அழகிய, பார்க்கும்
கண்களைக் கவரும் ஆனந்த மழையில் நனைந்து கொண்டிருந்த சிறிய யூசுபைப் போன்றி ருப்பார்.
அவர் வசந்த காலத்தின் அனை த்து ஆனந்தங்களையும் பருகிக் களிப் படைவார்.
அவர் அடக்கமாகக் கற்றுக் கொள்வார். பணிவோடு பிறரை மதிப்பார்.
சொல்பவற்றை கவனமாக காது தாழ்த்திக் கேட் பார். இந்த வசந்தம் மிகு கவர்ச்சியான சூழ லில்
அவர் தன்னைப் பற்றி பெருமிதம் கொள்வார். இஸ்லாத் திற்காக செயற்படு கின்ற இப்படியான
மனிதர்களுக்கு மத்தி யில் அவரது வாழ்வு இன்பமானதாயும் அருள் நிறைந்ததாயும் காணப்படும்.
அங்கு நிலவும் ஆனந்தமான சூழ்நிலையில் அன் பும் தூய்மையும் இறை வனுக்காக செயற்படு கின்ற
ஆர்வமும், சுவ னத்தையும் அதன் அந் தஸ்த்தையும் யாசிக் கும் போக்கும் புதிதாக அந்த சூழலுக்கு
வந்த தாஈயியை பூமியை விட்டும் ஓரடி தூரம் உயர இருக்கச் செய்யும்.
புதிதாக அமைப்புக்குள்ளால் வந்த இந்த தாஈ அமைதியான இயல்புடன்
எதைப் பந்றியும் உரையாடாமல் எதை யும் புதிதாக சிந்திக்காமல் தனது செயற் பாட்டில் புதிய
நுட்பங்களை கையாலா மல் தனது சுய ஆற்றல்களில் எதையுமே பயன்படுத்தாது தான் இருக்கும்
நிறு வனத்தின் போக்கிற்கு சிறிதும் மாற்ற மாக சிந்திக்காமல் இருந்தால் அவர் தொடர்ந்தும்
அனைவராலும் அங்கீகரிக் கப்பட்ட தாஈயாக இருப்பார். அவர் அந்த ஆரம்ப வசந்தத்தில் தொடர்ந்தும்
சுற்றித் திரியலாம். அவருக்கு தன்னைத் தவிர எதைப் பற்றியும் எந்தக் கவலை யும் இருக்க
மாட்டாது. அவர் ஓர் ஓரத்தில் இருந்து கொள்வார்.
இதற்கு மாற்றமாக அவர் உரையாடத் துவங்கினால், கருத்தச்
சொல்ல முற் பட்டால்,
புதிதாகக் கண்டுபிடிக்க, புதிய முறைகளைக் கையாள முயன்றால், தன்னை அர்ப்பணித்து
செயற்பட்டு அமைப்பில் வித்தியாசமாகத் தென்பட் டால், வழமையாக பழக்கப்பட்ட ஒழுங்
குக்கு மாற்றமாக வித்தியாசமான முறையில் சிந்தித்து செயற்பட முற்பட் டால் அங்கு கலங்கமும், கவலையும், போட்டியும், ஒடுக்குதலும்
தோன்ற ஆரம்பிக்கும். அது அவரது எல்லா செயற்பாடுகளையும் பாதிக்கும். ஒவ் வொரு நாளும்
அவர் கசப்பான பானங் களை அருந்த வேண்டியிருக்கும். அவ ருக்கு வசந்த காலம் இலையுதிர்
கால மாக மாறத் துவங்கும். பலபோது அது கடுமையான குளிர் காலமாய் மாறி அவரை வீட்டில் அடங்கி
இருக்க நிர்ப்பந்திக்கும். இந்தப் புயலால் அவர் தனது செயற்பாடுகளை காலம் தாழ்த்திச்
செய்ய ஆரம்பிப்பார்.
தஃவா நிறுவனத்தினுள் இஸ்லாமிய அழைப்பாளன் காணும் இந்தக் கலங்க
மும் கவலையும் பொறாமையும் ஒடுக் குதலும் மோசமான போட்டியும் பொய் யான சில வார்த்தைகளால்
நியாயப் படுத்தப்படலாம். சிலபோது அது தஃவாவின், அமைப்பின் நலன் என்று கூறப்படும்.
சிலபோது மனித உள்ளங் களை ஆழமாக விளங்குதல் என்று கூறப்படும். சிலபோது மோசமான மதிப்பீடுகளால்
அது நியாயப்படுத்தப் படும். அதற்கு ஷரீஅத்திலோ ஒழுக்க ரீதியாகவோ எந்த ஆதாரமும் காணப்பட
மாட்டாது. இப்படி நிறைய நியாயங்கள் அடிக்கடி போலி வாசகங்களால் கூறப் பட்டுக் கொண்டே
இருக்கும்.
உள்ளங்களிலே காணப்படும் பொறாமை, குரோதம், இயலாமை
போன்ற நோய்களை மறைப்பதற்கான காரணங்களாக அவை காணப்படும். அவர்கள் தமது தஃவா நிறுவனங்களின்
மீது தாம் தமது பெற்றோரிடமிருந்து அவற்றை வாரிசாகப் பெற்றது போன்று அதிகாரம் செலுத்திக்
கொண்டிருப்பார் கள். அவர்கள் தாம் விரும்பும் அடிப்ப டையில் தமது நிறவனத்தை வழிநடாத்து
வதற்குரிய சூழலை அங்கு உருவாக்கி வைத்திருப்பர். அங்கு யாருக்கும் சுதந் திரமாகவும்
புத்தாக்கத்துடனும் தலை யீடு செய்ய முடியாமலிருக்கும்.
யூசுபின் சகோதரர்கள்
யூசுபின் சகோதரர்கள் அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருந்த தோற்ற
அழகினை ஏற்றுக் கொள்ளவில்லை. நபியாக இருந்த தனது தந்தையிடத்தில் அவருக்கிருந்த அந்தஸ்த்தையும், அல் லாஹ்
தனது தூதைக் கொடுப்பதற்காக அவரிலே ஏற்படுத்தியிருந்த ஆளுமை வேறுபாட்டையும் அவர்களால் அங்கீ கரிக்க முடியவில்லை.
எனவே அவரை இல்லாதொழிக்கத் தீர்மானித்தனர்.
“நீங்கள் யூசுபை கொலை செய்து விடுங்கள் அல்லது பூமயில் எங்காவது ஓர் இடத்தில் அவரை
எறிந்து விடுங்கள். அப்போது உங்கள் தந்தையின் முகம் முழுமையாக உங்கள் பக்கம் திரும்பி
விடும். அதன் பின்னர் நீஙகள் நல்ல கூட்டத்தினராகி விடுவீர்கள்” (யூசுப்:
09).
இப்படித்தான் கொலை அல்லது துரத்திவிடல் ஏதோ ஒரு தொலைவில் ஒதுக்கிவிடுதல்
என்பதுதான் இங்கு தீர்வு. இந்தத் தீர்வுக்கு யூசுபின் சகோதரர் கள் வரக் காரணம் “யூசுபும்
அவரது சகோதரரும் எங்கள் தந்தைக்கு மிகவும் விருப்பத்துக்குரியவராக இருக்கிறார். நாமோ
பலசாலிகளாக இருக்கிறோம்”
என்பதுதான். யூசுப் மீது அவரது தந்தை கொண்டிருந்த அன்புதான்
அவர்கள் இந்தத் தீர்மானத்திற்கு வரக் காரணம்.
யூசுபின் சகோதரர்களது இந்தத் தீர் மானத்துக்குரிய உண்மையான காரணம்
உளநோய்தான். இன்றும் இப்படியான தீர்மானங்களுக்கு இயக்கங்களுக்குள்ளால் வருவோரின் அடிப்படைப்
பிரச்சி னையும் இந்த உளநோய்தான்.
யூசுபின் சகோதரர்கள் யூசுபை வெளிப்படையாகவே கொலை செய்ய வேண்டுமென
பேசினர். ஆனால்,
இன் றுள்ளவர்களோ இளைய யூசுப்களை கருத்து ரீதியாக கொலை செய்கிறார்கள்.
இது அவர்களை ஓரங்கட்டுவதன் மூலம் அல்லது அவர்களைப் பற்றி பொய்யான கற்பனைகளை பரப்புவதன்
மூலம் அவர்களுக்கு செயற்படுவதற்கான ஒழுங்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்காமல் யூசுப்களை
கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
யூசுபின் சகோதரர்களோ அவரை பால் கிணற்றில் எறிந்தார்கள். ஆனால்
இன்றுள்ளவர்களோ தமது சகோதரர் களை இயக்கச் செயற்பாட்டில் பால் கிணறுகளில் போட்டு வருகின்றனர்.
அவர்கள் தமது சகோதரர்களை ஓரம் கட்டி விட்டு அவர்களால் எந்தப் புதிய சாதனைகளும் நிகழாத
வண்ணம் பார்த் திருக்கின்றனர்.
யூசுபின் சகோதரர்கள் யூசுபை ஒழித் தால் தாம் நல்லவர்களாக இருப்போம்
என்றனர். இன்று சிலரை ஒதுக்குவதற் காக தஃவாவின் நலன் அல்லது தஃவா விலுள்ள அனுபவ முதிச்சியால்தான்
தாம் அவரை ஒதுக்கினோம் என பல நியாயங்களைச் சொல்லி தாம் தஃவா அணியின் முன்னணியில் இருக்க
முயற் சிப்பர்.
யூசுபின் சகோதரர்கள் தாம் அவரைக் கொள்ள முன்னரே தௌபாவை செய்து
கொண்டனர். இன்றும் அப்படித்தான் கருத்து ரீதியாக பலரைக் கொலை செய்து கொண்டே தொழுகையும், திக்ரும், பாவமன்னிப்பும்
நடக்கும். ஷஹீத் செய்யித் குதுப் சொல்வது போன்று எல்லாமே தயார் செய்யப்பட்ட தௌபா.
யூசுபின் சகோதரர்கள் கொலை செய் யத் தீர்மானித்து விட்டு அதனை
உப தேசமாகவும் அவர் மீது அவர்கள் கொண்ட ஆர்வமாகவும் ஓநாயிலிருந்து அவரை பாதுகாப்பதற்கான
முயற்சியாக வும் காட்ட முனைந்தனர். இன்றும் அப் படித்தான், எல்லாவற்றையும்
செய்து விட்டு உபதேசம்,
தஃவாவின் நலன்,
கரிசனை போன்ற பல காரணப் பெயர் களை வைத்து தமது செயற்பாடுகளை
நியாயப்படுத்துவர்.
இப்படியான சூழல் தஃவா அமைப் புக்களுள் நிலவுமாயின் அங்கு பல
பாதாலக் கிணறுகளுக்குள் பல திறமை யான புத்தாக்கச் சிந்தனை கொண்ட பலர் எறியப்படுவர்.
உண்மையில் இது மோசமான ஒரு சூழல். இது தவிர்க்கப் பட வேண்டும். இல்லாவிடின் நல்ல ஆளுமைகள்
தஃவா அமைப்புகளை விட்டும் தூரமாகி விடுவர். ஏனெனில் இப்படியான நல்ல ஆளுமைகள் எப் போதும்
அமைதியான சூழலையே விரும்புவர். எனவே அப்படியான சூழ லைத் தேடி அவர்கள் இயக்கத்தினுள்
ஒதுங்கி விடுவர் அல்லது இயக்கத்தை விட்டும் தூரமாகியே போய்விடுவர்.
நிர்வாகத் துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர் முஹம்மத் அப்துல்
ஜவாத் இது பற்றிக் கூறுகையில்,
தலை மைத்துவங்களுக்கு நிர்வாக ரீதியான பயிற்றுவித்தலில் உள்ள
குறைபாடும் ஈமானியப் பலவீனமுமே இதற்குக் காரணம். சிறந்த ஈமானிய உள்ளம் வாழ்வை குறுகிய
வட்டத்தில் பார்க்க மாட்டாது,
அடுத்தவர்களின் வெற்றியி னால் அது சங்கடப்படவும் மாட்டாது. அது
வாழ்வை விசாலமான கண் கொண்டு பார்க்கும். அடுத்தவர்களின் முன்னேற்றத்தால் தனது வெற்றி
பாதிக் கப்படும் என அது ஒருபோதும் சிந்திக்க மாட்டாது.
இப்படியான மோசமான ஒரு சூழல் நிறுவனங்களுக்குள், இயக்கங்களுக்குள்
நிலவுமாயின் அங்கு சுயநலம் தலை விரித்தாடும். அங்கு வேலைகளிலன்றி அடுத்தவனுக்கு குழி
பறிப்பதிலும் தன்னை பிரபல்யப்படுத்திக் கொள்வதி லுமே கவனம் குவிந்திருக்கும். இதன்
போது அங்குள்ள வேலைகள் வெறு மனே கடமைக்காகச் செய்யப்படுபவை யாகவே இருக்கும். அதில்
எந்த நேர்த்தி யும்,
ஒழுங்கும் காணப்பட மாட்டாது.
கூட்டாக சேர்ந்து செயற்படுகின்ற இடங்களில் இவ்வாறான விடயங்கள்
தோன்றுவது தடுக்க முடியாததுதான். என்றாலும் தஃவா அமைப்புகள் சமூகத் துக்கு மிகச் சிறந்த
முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். எனவே இதுபோன் றவை இயல்பானவை என்று விட்டு விடாமல்
இப்படியான சூழல் தோன்று வதிலிருந்தும் தமது அமைப்புக்களைப் பேணிக் கொள்ள வேண்டும்.
இதற்கு சிறந்த தூய்மையான தலைமைகள் அங்கு தோற்றுவிக்கப்படுவதுவும் ஒரு தீர்வாக அமையும்.
ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி தனது முதல் கட்டுரையை பத்திரிகை
யில் எழுதிய அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார். அந்தக் கட்டுரைக்கு எல்லா இடங்களிலுமிருந்தும்
விமர்சனங்கள் தாராளமாக வரத் துவங்கின. இதனால் நான் மனச் சோர்வடைந்து போனேன். இந்நிலையில்
இமாம் ஹஸனுல் பன்னா விடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் “நான் உங்கள்
கட்டுரையை வாசித்து முகம் மலர்ந்து போனேன். அதனை நீங்கள் குத்ஸின் ஆன்மாவை உங்களிடம்
வைத்துக் கொண்டா எழுதி னீர்கள்”
என்று எழுதியிருந்தார்.
ஷெய்க் மஹ்பூழ் நஹ்நாஹ் சில சகோதரர்களோடு உட்கார்ந்து தஃவா செயற்பாடுகள்
பற்றியும் அதற்காக ஆட் களை தெரிவு செய்வது பற்றியும் உரை யாடிக் கொண்டிருந்தார். இதன்போது
அவர் “நீங்கள் துணிவுள்ள புரட்சி மனப் பாங்குள்ள (முஷாஇப்) இளைஞர்களை தெரிவு செய்யுங்கள்.
அவர்கள் தஃவா செயற்பாட்டிற்கு மிகவும் பயனுள்ள வர்கள்” என்றார்.
இவர்கள் போன்ற தலைமைத்துவங் களால்தான் இஸ்லாமிய அமைப்புகளுக்
கான நல்ல தெரிவுகள் இடம்பெற முடியும். இவர்கள்தான் மனிதர்களை சரியான பெறுமானங்களால்
அளவீடு செய்வார்கள். இல்லாதபோது மனிதர் களுக்கு மத்தியில் காணப்படும் இயல்பு வேறுபாடுகளை
கவனத்தில் கொள் ளாது எல்லோரையும் நாம் விரும்பிய வண்ணம் எமக்கு ஒத்துப்போகும் வண் ணம்
மாற்ற முயல்கிறோம். மாறாத போது பால் கிணற்றில் தூக்கியெறிந்து விடுகிறோம்.
“மலையேறிப் பழக்கமற்றவன் எப் போதும் பாதளக் கிடங்கில் வாழ்வதே கதியாகிவிட்டது” என்ற ஒரு
கவிஞனின் கவிதை வரிகள்தான் இங்கு ஞாபகத் திற்கு வருகிறது.
No comments:
Post a Comment