Wednesday, March 2, 2016

தாஈக்களின் கவனத்தை இழந்து நிற்கும் சமூக விவகாரங்கள் (18june2010மீள்பார்வை-200)-சில மாற்றங்கள் இருப்பினும் அன்று சொன்னவை இன்றும் பொருந்தும்-

அரசியலமைப்புச் சீர்திருத்தம், நிர்வாக எல்லைகளை மீள் வரைதல்,தேசியக் கல்விக் கொள்கை, மீள் குடியேற்றம்... என யுத்தத்துக்குப் பிந்திய எமது நாட்டுச் சூழலில் மாற்றங்களும், மாற்றங்களுக்கான தயார் நிலையும், நிகழ்வுகளும் என எத்தனை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் நீண்ட காலத் தாக்கம் கொண்ட மாற்றங்களாக அமையப் போகின்றன. குறிப்பாக சிறுபான்மை மூகங்களின் மூக அரசியல் இருப்பில் தாக்கம் செலுத்தும் நிகழ்வுகளாக இவை காணப்படுகின்றன.
தே நேரம் எமது நாடு இன்று பாரியளவான பிராந்திய மற்றும் ர்வதேசக்திகளின் அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து வருவதோடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதைப் பார்க்கிலும் ஆபத்தான நிலை இவற்றையெல்லாம் ஒரே பிடியில் அமுக் கிப்போட்டுவிடும் வகையில் காணப்படும் அரசியல் அராஜக மும் ஊடக அடக்குமுறையுமாகும். இதன் நேரடி விளைவு; எல்லா நிகழ்வுகளும் அதிகாரத்தில் உள்ளவர்களதும் அவர்களது நண்பர்களதும் விருப்புக்கு ஏற்ப மாத்திரம் கட்டமைக்கப்படுவதும் நிகழ்த்தப் படுவதுமாகும்.
இப்படியாக மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ள நாட்டின் இன் றைய சூழ்நிலைக்கு முன்னால் பொதுவாகவே சிவில் மூகத்தின் எதிர்வினை மிகவும் மந்தமாகவே உள்ளது. சிறுபான்மையினரின் எதிர்வினை அதனிலும் மந்தமாஉள்ளது. குறிப்பாக முஸ்லிம் மூகம் சார்பாக உருப்படியான எத்தகைய முன்னெடுப்பும் இடம் பெற்றதாகக் காண முடியவில்லை. இன்றைய இந்த சூழலில் சிறுபான்மையினர் கூடுதல் விழிப்பாகச் செயற்பட வேண்டிய தேவை இருந்தும் தமிழ்த் தரப்பின் ஒருசில செயற்பாடுகளைத் தவிர இரண்டாம் சிறுபான்மையான முஸ்லிம் மூகம் இதுவரையில் எந்த நடவடிக்கைகளிலும் இறங்கியதாகக் காணவில்லை. வழக்கம்போல் அவர்கள் எதுவரையில்தான் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை.
அரசியல் ரீதியாக இரு பெரும் பான்மைகளுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் மூகம் இந்நிலைமாறும் தருணத்தில் தன் சார்பில் தீர்க்கமான முடிவுகளைக் கொண்டிருத்தல் மிகவும் அவசியமானதாகும். எனினும் அப்படியான எந்த திட்ட வரைபுகளும் இருப்பதாகத் தெரிவில்லை. அதனை யாரும் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் கொள்ள முடியாமல் காணப்படுகிறது. அரசியல் தலைமைகள் இதன்போது தீர்க்கமான முன்னெடுப்புக்களை செய்வார்கள் என எதிர்பார்ப் பது ஒரு நப்பாசையாகவே இருக்கும். அவர்களது முதற் கவனம் தத்தமது அதிகாரக் கதிரைகளை பாதுகாத்துக் கொள்வ திலேயே காணப்படுகிறது. ஆன்மீகத் தலைமைகள் என்போர் அதனைச் செய்வார்களா என்று பார்த்தால் இது தொடர்பான போதிய புரிதல் அவர்களிடம் காணப்படுவதாகத் தெரியவில்லை.
நாம் காலாகாலமாக முஸ்லிம் மூகத்தின் தலைமை; அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை என இரண்டாக இருக்க முடியாது எனப் பேசி வந்தாலும் யதார்த்தத்தில் இந்நிலையில் பெரிய மாற்றங் கள் இடம்பெற்றதாகத் தென்படவில்லை. எப்போதும் போல் அரசி யல், சமூக விவகாரங்கள் என்று வரும்போது அரசியல் தலைமைக ளாக இருப்போர் ஏதாவது செய்தால்தான். இல்லாதபோது அது பற்றிய எந்த லனங்களும் இருக்காது. மார்க்கம் என்று வருகின்ற போது ஆன்மீகத் தலைமைகள் பேசுவார்கள்.
இது இன்னும் நாம் எவ்வளவுதான் இஸ்லாத்தின் முழுமைத் தன்மை தொடர்பாகப் பேசியபோதும் நடைமுறையில் நாம் அதனை உள்வாங்கவில்லை என்பதனையே காண்பிக்கின்றது.இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நாம் அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட தொழுகைக்காக பாங்கு’ சொல்லும் விவகாரம் தொடர் பாக இஸ்லாமியத் தலைமைகள் எடுத்த நடவடிக்கையையும் தற்போதுள்ள நிலையில் அவை காக்கும் மௌனத்தையும் குறிப் பிடலாம். பாங்கு சொல்வது மார்க்க விவகாரம், அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் வெறும் அரசியல் விவகாரம் என்று பார்க்கும் மத மனப் பாங்கிலிருந்து தாஈக்கள் மீண்டு வந்ததாக விளங்கவில்லை.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏனைய அரசியல் வாதிகளைப் போன்றே பத்தோடு பதினொன்றாக இருக்கின்ற யதார்த்த நிலையில் தமக்காக அவர்கள் மூகத்தை, அதன் நலன் களை அடகு வைப்பார்களேயொழிய மூக நலனுக்காக தாம் எதையும் இழக்க முன்வர மாட்டார்கள். அத்தோடு எந்தவித இஸ் லாமியப் பின்னணியோ ஆன்மீகப் பக்குவமோ அற்ற, பேரளவில் முஸ்லிம் அரசியல்வாதிகளாக உள்ள அவர்கள் எமது சமூகத்தின் விவகாரங்களை நியாயமாகக் கையாள்வார்கள் என எதிர்பார்ப்பது அடிப்படையிலேயேபிழையான அம்சமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்துகின்ற, வழிகாட்டுகின்ற மார்க்கம் எனப் பேசுகின்ற தாஈக்கள் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய சமூக அரசியல் விவகாரங்களிலும் தமது கவனத்தைச் செலுத்தியாக வேண்டும். எல்லா விவகாரங்களுக்குமான வழிகாட்டல், எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வு இஸ்லாத்தில் காணப்படுகின்றது என கொள்கையளவில் ஏற்றுள்ள நாம் அதனை நடைமுறையில் பிரயோகிக்க வேண்டிய பெருந்தேவை இன்று எமது நாட்டில் காணப்படு கின்றது. அதனை நடைமுறையில் பிரயோகிப்பதற்கு முன்னர் அதற்கான தீர்வுகளை முன்வைப்பதே ஒரு பெரும் செயற்திட்ட மாகக் காணப்படுகின்றது.
நீண்ட ஆய்வுகளையும் செயல மர்வுகளையும் கலந்துரையாடல் களையும் வேண்டி நிற்கிறது. ஆனால், எமக்கு முன்னால் இன் றுள்ள உடனடித் தேவை அதுவல்ல. மாற்றமாக, இன்று நாட்டில் பொதுவாக ஏற்படுத்தப்படப்  போகும் மாற்றங்களில் எமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விடயங்களை இந்த மாற்றங்கள் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவது, அதற்கானதோர் திட்டவரைபை நாம் சமூகமாகக் கொண்டிருப்பது.
இதனை ஜம்இய்யதுல் உல மாவை (இன்று அவர்கள் காலாவதியாகிவிட்டனர்அந்த இடத்திற்கு  NSC  பொருத்தம்) ) முன்னிலைப்படுத்திய நிலை யில் இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புக்களும் நிறுவனங்களும் துறைசார் நிபுணர்களைக் கொண்டு அரசியல்வாதிகளையும் அமர வைத்து செய்துமுடிக்க வேண்டிய கட்டாயத் தேவை காணப்படு கின்றது. இது எமது நாட்டில் இன்று நாம் முதன்மைப்படுத்த வேண்டிய (அவ்லவிய்யாத்) ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. இதன் கருத்து இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புக்களும் தாஈக்களும் தமது அடிப்படைப் பணிகளை விட்டுவிட்டு இதில் மூழ்க வேண்டும் என்பதல்ல. மாற்றமாக நீண்டகால அடிப்படை யில் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையாகிய முஸ்லிம் சமூகத்தின் இருப்பில் தாக்கம் செலுத்தும் மாற்றங்களாக இவை அமையவிருப்பதால் அவசியம் இந்தத் தருணத்தில் நாம் பொருத்தமானதோர் தீர்வை  இதில் கொண்டிருக்க  வேண்டும். அதனை உரிய தரப்பிற்கு முன்வைக்க வேண்டும். இடம்பெறும் மாற்றத்தில் அதனையும் உள்ளடக்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் மௌனம் காப்பது பாவமான காரியமாகும். ஓர் அரசியல் பத்தியாளர் குறிப்பிட்டது போன்று தற் கொலைக்கு ஒப்பானதாகும். ஏனெனில், இங்கு நாமாக நமக்கான தீர்வுகளை இந்த மாற்றங்களில் உள்ளடக்க வேண்டுமென  கேட்கா மல் இருக்கின்ற போது அதிகாரத்தில் உள்ளவர்கள் தாமாக முன் வந்து எமக்கு எதனையும் தந்துவிடப்  போவதில்லை. அப்படி நாம் நினைத்தால் அதுவொரு மகா கற்பனையாகவே அமையும்.
அதிகாரத்தில் உள்ள தரப்பும் அதன் நண்பர்களும் எபபோதும் தமது நலன்களையேமுற்படுத்தும். இதன் போது சிறுபான்மையாக வாழும் எமது நலன்களில் அது பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தும். மாத்திரமல்ல எமது இருப்புக்குத் தீங்கு பயக்கக் கூடிய பல மாற்றங் களையும் அது கொண்டிருக்கப்  போகின்றது என்பதில் எந்த ஐயமும் கொள்ளத் தேவையில்லை. இதற்கு வரலாறு சிறந்த சாட்சியாக உள்ளது.
அந்தவகையில் அரசியலமைப்புத் திருத்தம், நிர்வாக எல்லை களை மீள்வரைதல், தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கம்  போன்ற விவகாரங்களில் நாம் கவனம் செலுத்துவது ஒரு மார்க்கக் கடமை. அது முஸ்லிம் சமூகத்தினதும் அதனடியாக இஸ்லாத்தினதும் நலனைக் காப்பதாக அமையும். அதே போல் முஸ்லிம் சமூகத்துக்கும் அதனடியாக இஸ்லாத்திற்கும் ஏற்படும் தீங்கைத் தடுப்பதாக அமையும். ஒரு விடயமின்றி ஒரு கடமை நிறைவேறாத போது அந்த விடயமும் கடமையாக மாறும் என்ற பிக்ஹு விதியின்படி எமது சமூக, மார்க்க நலன்களைப் பாதுகாக்க நாம் இவற்றைச் செய்துதான் ஆக வேண்டியிருப்பின் இதனைச் செய்வது இன்றையசூழ்நிலையில் ஒரு சமூகக் கடமையாகக் காணப்படுகின்றது.
எனினும், இத்தகையதோர் பெரும் பொறுப்பொன்றுக்கு நாம் முகம்கொடுத்துள்ள நிலையிலும் எமது தாஈக்கள் இவை பற்றி எந்த விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கின்ற போது சகிக்க முடியாமல் இருக்கின்றது. நாட்டை இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன, இராமனுடன் வந்த குரங்கு தான் ஆண் டால் என்ன என்பது போல் அவர்கள், தாமும் தமது பாடும் என இருப்பதைக் காண்கிறோம். சிலர் சற்று வித்தியாசமாய் பொதுமக்களைப்  போன்று நிகழ்வுகளை மட்டும் பேசிவிட்டு பெருமூச் செறிந்துவிட்டு செல்வதைத் தவிர வேறு எந்த உருப்படி யான மனோநிலையிலும் இருப்பதாகத் தெரிய வில்லை. இதற்குரிய அடிப்படைக் காரணம் நாம் ஏலவே குறிப்பிட்டது  போன்று நாம் இன்னும் மத மனோநிலையிலிருந்து மீண்டு இஸ்லாமிய மனோநிலைக்கு வராமையாகும்.
எனவேதான் பலஸ்தீனப் பிரச்சினையை இஸ்லாமியப் பிரச்சி னையாகப் பார்க்க முடிகின்ற எம்மால் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை அப்படிப் பார்க்க முடிவதில்லை. பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை மார்க்கமாகப் பார்க்கும் எம்மால் அரசியலமைப்பு மாற்றத்தை அவ்வாறு நோக்க முடிவதில்லை. நிர்வாக எல்லைகளை மீள்வரைகின்ற போது எமது மும்மொழிவுகளை முன்வைப்பதை மார்க்கம் சார்ந்ததாக நோக்குகின் றோமில்லை. பொதுக் கல்விக் கொள்கையில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களில் கவனம் செலுத்து வதை நன்மைதரும் காரியமாகப் பார்ப்பதில்லை.
அடுத்து, அப்படி இவற்றை அலட்டிக் கொள்ளாமைக்கான காரணம் எம்மிடம் காணப்படுகின்ற இயக்க ஊக்கமின்மையாகும். எப்போதும் சிரமங்களற்று செக்குத்தனமாக இருப்பதையே எம்மில் பலர் விரும்புகின்றனர். எப்போதும் ஒரேமாதிரியாக சிந்தித்தல், ஒரே மாதிரியாக செயற்படல் என்பதற்கப் பால் ஒரு எட்டும் வைக்கும் மனோநிலையில் பலரும் இல்லாதிருக் கின்றனர்.
தமது தஃவா செயற்பாட்டை வெறும் தொழின்மை (Professional) செயற்பாடாக மாத்திரம் கருதுகின்றனர். அதற்கப்பால் இலட்சிய மனப்பாங்குடன் சூழலில் நடக்கும் மாற்றங்களை கவனத்திற் கொண்டு செயலூக்கத்தோடு (Dynamic) இயங்கும் மனோநிலை படிப்படியாக குறைந்து  போகின்றதோ என சிந்திக்கத் தோன்றுகின்றது. சவால்களை விட்டு விலகி ஓடுகின்றோம். அதற்கு முகங்கொடுத்து மாற்றத்தை சாதிக்கும் மனோநிலை இல்லாமல்  போய்க் கொண்டிருக்கின்றது.
அடுத்து இஸ்லாமிய ஊடகப் பரப்பிலும் இந்த உயிர்ப்பைக் காண முடிவதில்லை. எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதனைப் பேச வேண்டுமென்ற அக்கறை இல்லாமல் பக்கம் நிரப்பும் வெறும் மனோநிலையுடன் அவை செயற்படுவதாகத் தோன்றுகின்றது. ஒரு சமூகத்தின் பிரச்சினையை பொதுப் புலத்தில் பேசுபொருளாக்குவதில் ஊடகங்களுக்குப் பெரும் பங்களிப்புள்ளது. எனினும் எந்தவித இலக்கு மற்று சமூக முக்கியத்துவமோ, தேசிய முக்கியத்துவமோ அற்ற செய்திகளையும் விடயங்களையும் அவை பேச முற்படுவது விசனத்திற்குரியது. இதனால் சமூகத்தில் எது முக்கியத்துவம் கொடுத்து நோக்கப்பட வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலை உருவாகின்றது.
இந்த நிலை மாற வேண்டும். தஃவாவை மாற்றத்திற்கான உயிர்ப்புள்ள செயற்பாடாக நாம் கருத வேண்டும். அந்த மாற்றம் சகல தளங்களையும் நோக்கி விரிய வேண்டும். மாற்றத்திற்கான வேர்கள் எங்கெல்லாம் காணப்படுகின்றதுவோ அங்கெல்லாம் நாம் ஊடு பரவ வேண்டும். நபியவர்களின் தஃவாவின் ஓட்டத்தை ஸீறாவில் அவதானிக்கின்ற போது இந்த உயிர்ப்பை, மாற்றத்திற்கான வேர்களைத் தேடிச் செல்லும் பாங்கை, சகல தளங்கள் சார்ந்த செயற்பாட்டை நாம் நன்கு காண முடியுமாக உள்ளது.

எனவேதான், இமாம் பன்னா அவர்கள் தமது சகோதரர்களைப் பார்த்து; “நீங்கள் சமூகத்தில் ஊடுருவும் ஒரு புதிய ரூஹ்” என்றார்கள். அந்த ரூஹ் சமூகத்தின் சகல தளங்களையும் ஊடுருவிப் பாயும். அது ஓரிடத்தில் இருப்புக் கொள்ளாது. அனைத்து இடங்களிலும் ஊடு பரவும் தாகம் அதில் இருந்து கொண்டே இருக்கும். அதனை அடக்க முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தகைய உயிர்ப்புள்ள செயற்பாட்டாளர்களால் எமது தஃவாக் களத்தையும் நிரப்ப வேண்டுமென பிரார்த்திப்போம்.  

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...