Saturday, June 9, 2018

ருகூஃவில் ஓத வேண்டிய ஓதல்கள் எம்.என்.இக்ராம்




”فأما الركوع فعظموا فيه الرب عز وجل“ –مسلم-
ருகூஃவில் கண்ணியம் மிக்க றப்பை மகத்துவப் படுத்துங்கள்


ருகூஃ என்பது தொழுகையின் பர்ழுகளுல் ஒன்றாக காணப்படுகிறது. அதனை உரிய முறையில் நிறைவேற்றுவதன் மூலமாக  எமது தொழுகைகளையும் சீராக்கிக் கொள்ள முடியுமாக  இருக்கிறது.
ருகூஃ செய்வதானது முஸ்லிம்கள் மீது கடமையானதாக் காணப்படுகிறது. இதனை அல்-குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ۩ ( الحج - 77)
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்; நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.”
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ (البقرة – 43 )
“தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஸகாத்தையும்  கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.”
இவைகள் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக ருகூஃ செய்தல் வேண்டும் என்பதனை உணர்த்தி நிற்கின்றன.
மேலும் இது அல்லாஹு த்தஆலாவின் சுபசோபனத்தினை சம்பாதித்து தருகின்ற முக்கிய  செயலாகக் காணப்படுகிறது.  
التَّائِبُونَ الْعَابِدُونَ الْحَامِدُونَ السَّائِحُونَ الرَّاكِعُونَ السَّاجِدُونَ الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ ( التوبة – 112 )

“மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
பாவங்களை அழித்து விடுகின்ற  ஆற்றல்மிக்கதாகதாக ருகூஃகள் காணப்படுகிறது. நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் இதனை தெளிவுபடுத்துகிறது .
قال رسول الله صلى الله عليه وسلم  - إن العبد إذا قام  للصلاة أتي  بذنوبه  كلها  فوضعت على عاتقيه، فكلما ركع أو سجد تساقطت عنه ".( صححه الشيخ الألباني - رحمه الله - في كتابه "سلسلة الحاديث الصحيحة(
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  நிச்சயமாக அல்லாஹ்வின் அடியான் தொழுகைக்காக தயாரான நிலையில் நிற்கின்ற போது, அவன் புரிந்த பாவங்கள் யாவும் கொண்டு வரப்பட்டு, அவனது தோளின் இரு பகுதிகளிலும் வைக்கப்படுகிறது. அவன் ருகூஃ அல்லது சுஜூது செய்கின்ற போது அவைகள் (பாவங்கள்)  அவனை விட்டும் படிப்படியாக சென்று விடுகின்றன”. ( அபூதாவூத் )
ருகூஃவில் தடுக்கப்பட வேண்டியவை
1. அல்-குர்ஆன் ஓதுவது
ருகூஃவில் அல்-குர்ஆன் ஓதுவதனை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

روى مسلم عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ : قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَلا وَإِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا ، فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ ، وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ فَقَمِنٌ – أي جدير وحقيق - أَنْ يُسْتَجَابَ لَكُمْ .
“அறிந்து கொள்ளுங்கள். ருகூஃ, சுஜூது போன்ற நிலைகளில்  அல்-குர்ஆன் ஓதுவது எனக்கு தடுக்கப்பட ஒன்றாகும். ருகூஃ அல்லாஹ்வை துதி செய்கின்ற  இடமாகும். சஜூதைப் பொறுத்தவரை அதிலே நீங்கள் பிராத்தனை செய்ய முயற்சியுங்கள்.ஏனெனனில் அது பதிலளிக்கத்தக்க பிராத்தனையாகும்.(முஸ்லிம் )
1. வேகமாக ருகூஃ செய்தல்
விரைவாக செய்யப்படுகின்ற ருகூஃ, சுஜூதுகளை நபியவர்கள் தொழுகையில் புரியப்படுகின்ற களவாக  அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.
رواه الإمام أحمد وغيره عن أبي قتادة رضي الله عنه قال قال: رسول الله صلى الله عليه وسلم: "أسوأ الناس سرقة الذي يسرق من صلاته لا يتم ركوعها ولا سجودها ولا خشوعها" 
“மக்களிளே மிகவும் கேவலமானவர்கள், தொழுகையில் திருடுகின்றவர்கள். அத்தகையவர்கள், தங்களது தொழுகையில் ருகூஃவையோ, சுஜூதையோ பூரணமாக செய்யமாட்டார்கள், மேலும் அவர்களது  தொழுகை பயபக்தியற்றதாகவே காணப்படும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இங்கு எம் தொழுகைக்கான முக்கிய பெறுமானமாகஅவற்றை நிதானமாக நிறைவேற்றல் காணப்படுகிறது.
எனவே, எமது ருகூஃ, சுஜூதுகளை உரிய முறையில் செய்து, அல்லாஹ்வின் திருப்தியைப் பரிபூரணமாகப் பெற்ற  அடியர்களாக மாறுவதற்கு முயலுதல் அவசியமானதாகும்.
அந்தவகையில்  எமது ருகூஃகள் சீராகுவதற்கு, அதில்  ஓதப்பட வேண்டிய அவ்ராதுகளை தெரிந்து, விளங்கி,மனனமிட்டு ஓதிவருவது முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
ருகூஃவில்  ஓத  வேண்டிய   துஆகள்

1)   عن عوف بن مالك الأشجعي قال:  قمت مع رسول الله صلى الله عليه وسلم ليلة فقام فقرأ سورة البقرة ، لا يمر بآية رحمة إلا وقف فسأل ، ولا يمر بآية عذاب إلا وقف فتعوذ. قال ثم -  ركع بقدر قيامه، يقول في ركوعه - سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة ،ثم سجد بقدر قيامه.(رواه أبو داود  )
ஆட்சியையும்,அதிகாரத்தையும், பெருமையையும், மகத்துவத்தையும் சொந்தமாக வைத்திருப்பவன் மிகத் தூய்மையானவன்

2)   عن عائشة رضي الله عنها أنها قالت :  كان النبي صلى الله عليه وسلم يكثر أن يقول في ركوعه وسجوده: سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي(صحيح البخاري )
யா அல்லாஹ்! நீ தூய்மையானவன்,  உனது புகழை முன் நிறுத்தி கேட்கின்றேன்,யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னிப்பாயாக!  

3)   عن محمد بن مسلمة رصي الله عنه : أن رسول الله صلى الله عليه وسلم كان إذا قام يصلي تطوعا، يقول إذا ركع : اللهم لك ركعت وبك آمنت ولك أسلمت وعليك توكلت، أنت ربي خشع جميع سمعي وبصري ولحمي ودمي ومخي وعصبي لله رب العالمين. (سنن النسائي)
யா அல்லாஹ் உனக்காகவே  ருகூஃ செய்கிறேன்,உன்னையே ஈமான் கொண்டிருக்கிறேன், உன்னையே வணங்கி வழிபடுகிறேன், உன்னிலே அனைத்தையும் பொறுப்புச் சாட்டுகிறேன், நீ தான் எனது றப்பாக  இருக்குகிறாய்,எனது மூளை, இரத்தம், சதை,பார்வைப்புலன், கேள்விப்புலன் யாவுமே அகிலங்களின் இரட்சகனாகிய  அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

வேறு ஒரு அறிவிப்பில் இந்த துஆ பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
4)   اللهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِي، وَبَصَرِي، وَمُخِّي، وَعَظْمِي، وَعَصَبِي(صحيح مسلم)
அல்லாஹ்வே, உனக்காகவே ருகூஃ செய்கிறேன். உன்னையே விசுவாசித்துள்ளேன். உனக்கே கட்டுப்பட்டுள்ளேன். எனது கேள்வி,பார்வை,மூளை,எனது எழும்புகள், நரம்புகள் அனைத்தும் உனக்கே அஞ்சி வழிப்படுகின்றன.
5)   وفي سنن أبي داوود عن عائشة: أن النبي صلى الله عليه وسلم كان يقول في ركوعه وسجوده : سبوح قدوس رب الملائكة والروح.
அவன் அதிகமாக துதிக்கப்படுபவன்,மேலும் மிகவும்  புனிதப்படுத்தப்படுபவனும் அவனே,மேலும் அவனே ஜிப்ரீலினதும், மலக்குமார்களினதும் றப்பாக  இருக்கிறான்.”
6)   في دعاء الركوع:((سبحان ربي الأعلى وبحمده)) وهو حديث صحيح قد رواه الخمسة، أحمد وأبو داود والترمذي والنسائي وابن ماجه وغيرهم عن حذيفة .
உயர்ந்த எனது றப்பு மிகத் தூய்மையானவன் “.

எனவே இந்த அவ்ராதுகளை பொருள் விளங்கி ஓதி வருகின்ற போது எமது ருகூஃகளை உயிரோட்டமானவையாக மாற்றி தொழுகையையும் ஆரோக்கியமாதாக அமைத்துக் கொள்ளவும் முடியும் என்பது உறுதி

Saturday, May 26, 2018

நோன்பு: மாற்றத்தின் திறவுகோல்







– எம்.என்.இக்ராம் –
றமழான் மாதத்தின் பிரதான கடமையாக நோன்பு காணப்படுகிறது. அதன் ஏனைய அனைத்து இபாதத்களும் இதனை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளன. இதனை அல்-குர்ஆன் எமக்கு தெளிவாக விளக்குகின்றது. றமழானுடன் தொடர்புபட்டு வந்துள்ள பலமான ஹதீஸ்கள் அனைத்தும் நோன்பையும் அதன் இலக்குகளையுமே வலியுறுத்துவதை அவதானிக்கலாம். ஸகாதுல் பித்ர் என்ற கடமை கூட நோன்பின் விளைவாக ஏற்படுகின்ற கடமையாகவே காணப்படுகின்றது.
ஈமானை பெற்றவர்களே! உங்களுக்கு முன்பிருந்தோர் மேல் கடமையாக்கப்பட்டது போன்றே உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தக்வா பெற்ற பேணுதலுள்ளவர்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.” –அல்பகரா:184-
றமழான் மாதம் அல்குர்ஆன் இறங்கிய மாதமாகும்அது மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடியதாகவும் நேர்வழியையும் நலவையும் கெடுதியையும் விளக்குவதாகவும் உள்ளதுயார் அந்த மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர்அதில் நோன்பிருக்கட்டும்…” –அல்பகரா:185-
நோன்பு என்பது உலகப் பொது வழக்கு என பகராவின் 184 வது வசனம் குறிப்பிடுகிறது. இது அனைத்து சமூகங்களிலும் காணப்பட்ட ஒரு முறைமை என்பதனை நோன்பு அல்லது விரதத்தின் வரலாறு குறித்து தேடிப்பார்க்கும் போது கண்டு கொள்ளமுடியுமாக இருக்கின்றது. அமெரிக்க இயற்கை மருத்துவரான(naturopath) Arnold Devries (1921-1996) ‘Therapeutic Fasting’  என்ற தனது நூலில் இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
மேற்கு எல்லா துறைகளிற்கும் மூலச் சிந்தனையாளர்களாகக் கருதக் கூடிய கிரேக்க சிந்தனையாளர்களான சோக்ரடீஸ், பிளேட்டோ போன்றோர் தொடர்ச்சியாக 10 நாட்கள் நோன்பிருக்கும் முறை மனிதனது மனம் மற்றும் உடல் திறனை மேம்படுத்தும் (attain mental and physical efficiency.) என விளக்கியுள்ளார்கள். கணிதத் துறை அறிஞரான பைதகரஸ் தனது பரீட்சைகளுக்கு முன்னர் 40 நாட்கள் நோன்பிருந்திருக்கிறார். தனது மாணவர்களையும் பாடங்களுக்கு வரு முன்னர் நோன்பிருக்குமாறு பணித்திருக்கிறார். பிளேட்டோ வாதியாக அறியப்படுகின்ற சுயசரிதையாளர்  Lucius Plutarchus(45-127) இலத்தீன கிறிஸ்த்தவத்தின் தந்தையாகவும் மேற்கின் இறையியலின் நிறுவனராகவும் அறியப்படுகின்ற Tertullian(155-240) ஆகியோர் “ மருந்துப் பாவனைக்குப் பதிலாக ஒரு நாள் நோன்பிருப்பது சிறந்தது (Instead of using medicine better fast a day.)” என குறிப்பிட்டிருக்கிறார்கள். இது இறுதித் தூதரின் வருகைக்கு முற்பட்ட காலமாகும். அதற்குப் பின்னரும் பொதுவாக இது குறித்து நிறையவே பேசப்பட்டுள்ளது. குறிப்பாக எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் அலி இப்னு ஸீனா மூன்று முதல் ஐந்து வாரங்களுக்கு தொடர்ச்சியாக நோன்பிருப்பதை மருத்துவ காரணங்களுக்காக பரிந்துரைத்திருக்கிறார்.
16ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவிஸ் மருத்துவர் Paracelsus “நோன்பு ஒரு மகத்தான தீர்வாகும்(Fasting is the greatest remedy.)” என குறிப்பிடுகிறார். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த Dr. Hoffman நோன்பு குறித்து “Description of the Magnificent Results Obtained Through Fasting in All Diseases”- அனைத்து நோய்களுக்கும் நோன்பின் மூலம் பெறப்பட்ட மகத்தான முடிவுகளின் விளக்கம்- என்ற நூலை எழுதினார். 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய அறிஞரான Dr. Von Seeland “ எனது ஆய்வின் முடிவாக நோன்பு என்பது உயர்ந்த அளவில் சாத்தியப்பாடுள்ள ஒரு சிகிச்சை முறை மாத்திரமல்ல அது கல்வி ரீதியாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமுமாகும் என முடிவு செய்தேன். (As a result of experiments I have come to the conclusion that fasting is not only a therapeutic of the highest degree possible but also deserves consideration educationally.)” எனக் குறிப்பிடுகிறார்.
இவை Arnold Devries தனது நூலில் நோன்பின் வரலாறு குறித்து குறிப்பிட்டுள்ள முக்கியமான விடயங்களுள் மிகச் சிலதாகும். இவை நோன்பு என்பது மானிட சமூகத்தின் பொது வழக்கு என்பதனை நிரூபனம் செய்கின்றன. இஸ்லாத்தின் தொடர்பில் பார்க்கின்ற போது ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் வரை நோன்பு ஒரு கடமையாக இருந்துள்ளமையைக் காணலாம். நபி தாவூத் (அலை) ஒரு நாள் விட்டு மறு நாள் நோன்பிருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக இறைத் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
“அல்லாஹ்வுக்கு விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்… அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பிருப்பார்.” -புகாரி,முஸ்லிம்- அவர் தாலுத் என்ற கொடுங்கோலனை மிகைத்து ஆட்சியமைத்த(அல்-பகரா:251), மிகப் பெறும் பலசாலியாக இருந்தார். உலகில் பெறும் சாம்ராஜ்யம் ஒன்றைக் கொண்டு நடாத்திய வாரிசாக ஸுலைமான் (அலை) அவர்களை உருவாக்கிச் சென்றவர்.
இவை எமக்கு நோன்பு என்பது மனித சமூகத்தின் பொது வழக்கு என்பதற்கப்பால் அது மனித வாழ்வின் அனைத்து வகையான ஆரோக்கியத்திற்கும், வளரச்சிக்கும், விருத்திக்கும் அவசியமான ஒரு விடயம் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றன. மனிதனின் இயக்கம் குறித்துப் பேசும் போது உயிரியல் ரீதியாக சொல்லப்படுகின்ற விளக்கங்கள் இதனை இன்னும் உறுதிப்படுத்துகின்றன.
கலங்கலாலான மனித உடல் அவனது அனைத்து வகையான இயக்கத்திலும் அதன் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. கலங்களின் சீரான இயக்கத்திற்கு சத்துள்ள ஆரோக்கியமான உணவுகள் அவசியப்படுவது போன்றே மனிதன் உணவு உட்கொள்ளாமல் தவிரந்து நோன்பிருக்கும் ஒரு காலப்பகுதியும் அவசியப்படுகிறது. எனவே, மருத்துவ ரீதியாக ஆரோக்கியமான வாழ்வுக்கு தினமும் 12 மணித்தியாளங்கள் ஆகாரமின்றி இருத்தல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆகாரமின்றி இருத்தல், வாரத்தில் இரு நாட்கள் ஆகாரமின்றி இருத்தல், மாதத்தில் சில நாட்கள் ஆகாரமின்றி இருத்தல், தொடர்ச்சியாக பரிந்துரைக்கப்படுகின்ற நாட்கள் ஆகாரமின்றி இருத்தல் என பல்வேறு வகையான விரதங்கள் அல்லது நோன்புகள் பரிந்துரைக்கப்படுவதைக் காண்கிறோம்.
இவை மினதனது உடல் ஆரோக்கியத்துடன் மாத்திரம் தொடர்பானதல்ல. அவனது உள ரீதியான , உணர்வு ரீதியான மற்றும் ஒழுக்க நடத்தை ரீதியான பகுதிகளிலும் நோன்பின் தாக்கம் காணப்படுகிறது. இதனை Epigenetics (அதிசனனவியல்) எனும் 20ம் நூற்றாண்டில் உயிரியல் துரையில் மாத்திரமல்லாது வாழ்வியலிலேயே புரட்சியை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் (The Epigenetics Revolution) கலங்களில் மரபணுக்களின் தொழிற்பாடு குறித்த கண்டு பிடிப்பும் அதுசார்ந்த துறையின் வளரச்சியும் இன்னும் ஆழமாகவே விளக்குகிறது. உயிரினங்களின் அனைத்து செயற்பாடுகளும் அவனது உணவு, வாழ்வு முறை என்பவற்றால்தான் தீர்மானிக்கப்படுகின்றன. அவனது உணவும், வாழ்வு முறையும் அவனது கலங்களில் உள்ள மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அவன் பரம்பரையின் கைதியல்ல மாற்றமாக அவன்தான் தனது வாழ்வு முறையை தனது வாழ்வமைப்பால் வடிவமைக்கிறான் என சுருக்கமாக இந்தத் துறை எமது வாழ்வியலுக்கு கொடுத்த இயக்க சக்தியளிக்கும் விளக்கத்தைக் குறிப்பிடலாம்.
இந்தப் பின்னணியில் இருந்து கொண்டு அல்-குர்ஆன் உட்பட அனைத்து வேதங்களும் இறங்கிய காலமாக குறிக்கப்படுகின்ற றமழான் ஏன் நோன்பு என்ற கடமையை நிறைவேற்றுவதற்கான காலப் பகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது என நாம் சிந்திக்கின்ற போது அல்லாஹ்வின் அற்புதமான ஒரு ஏற்பாடு அங்கிருப்பதை அவதானிக்கலாம்.
உலகில் மனித சமூகத்தின் மாற்றத்திற்காக, வளர்ச்சிக்காக, அபிவிருத்திக்காக வழிகாட்டுவதற்கு அருளப்பட்ட வேதங்கள் இறங்கிய காலப்பகுதி எப்போதுமே மானிட சமூகத்தில் மாற்றத்திற்கான காலப் பகுதியாக இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டை அல்லாஹ் அங்கு வைத்துள்ளான் என்பதனை விளங்கிக் கொள்கிறோம். எனவேதான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் றமழானை அபிவிருத்திக்கான மாதம் என்று முதல் நிலையில் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கடுத்ததாக மனித வாழவில் அபிவிருத்தியையும் வளரச்சியையும் ஏற்படுத்தும் வகையில் றமழானில் நிகழும் மாற்றங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உங்களை நோக்கி அபிவிருத்தி நிறைந்த மாதம் ஒன்று வருகின்றதுஅதில்நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளதுஅதில் சைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள்சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அதில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு உள்ளது. யாருக்கு அதனது பிரயோசனம் கிடைக்காது போகின்றதோ அவர் அனைத்து நன்மைகளையும் இழந்தவராகிறார்.”
“றமழானின் ஒவ்வொரு தினமும் இரவு வேளையில் ஒரு அழைப்பாளர் நன்மையை விரும்புபவனே நீ முன்னே வா. தீமையை விரும்புபவனே நீ அதனை நிறுத்திக் கொள் என்று அழைப்பார். அதன் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து பலரை விடுதலை செய்வான்”.
அடுத்து, நாம் எம்மை மாற்றிக் கொள்வதற்கான காலப் பகுதியாக அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிலுள்ள பிரதான இபாதத்தான நோன்பு எத்தகைய இலக்குகளைக்  கொண்டது என்பதனை அல்-குர்ஆனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
ஈமானை பெற்றவர்களே! உங்களுக்கு முன்பிருந்தோர் மேல் கடமையாக்கப்பட்டது போன்றே உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தக்வா பெற்ற பேணுதலுள்ளவர்களாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.” –அல்-பகரா:184-
நோன்பு என்பது ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் பாவங்களில் ஈடுபடவோசச்சரவுகளில் ஈடுபடவோமோசமாகவும் கவனயீனமாகவும் நடந்து கொள்ளவோ வேண்டாம். நீங்கள் நோன்புடன் இருக்கும் சந்தர்ப்பத்தில் யாராவது உங்களுக்கு ஏசினால் அல்லது உங்களுடன் சச்சரவுப் பட்டால் நான் நோன்பாளிநான் நோன்பாளி என்று கூறுங்கள்”.          
யார் பொய் பேசுவதையும் பொடுபோக்குத் தனத்தையும் அவற்றின் படி செயற்படுவதையும் விட்டு விடவில்லையோ அவர் தான் உண்பதையும் குடிப்பதையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எத்தகைய தேவையும் கிடையாது”.
இங்கு நோன்பு நோற்கின்ற போது எமது உள, உடல், நடத்தை மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தக்வா என்பது எந்த நிலையிலும் நன்மையை விரும்புகின்ற, செய்கின்ற; தீமையை வெறுக்கின்ற, செய்யாதிருக்கின்ற நிலையாகும். இது நோன்பின் முலம் எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த மாற்றத்தைக் குறிப்பிடுகின்றது. நோன்புஎனக்குரியது நானே அதற்கு கூலி கொடுப்பேன்” என்ற ஹதீஸ் இதனை இன்னும் உறுதிப்படுத்துகிறது.
நோன்பு நோற்றல் என்பது அடிப்படையில் ஒருவரது மனதுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். மனக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடியாதவர்களால் நோன்பிருப்பது சிரமமானதாகும். சுய மனக்கட்டுப்பாடு உள்ளவர்களே நோன்பை சரியாக நோற்க முடியும். அப்படியான பயிற்சியை பெறுகின்றவர் எந்த நிலையிலும் ஆரோக்கியமான, சிறந்த செயற்பாடுகளிலேயே ஈடுபடுவார். சட்டம் இருக்கலாம் இல்லாதிருக்கலாம் தன்னை யாரும் அவதானிக்கலாம் அவதானிக்காதிருக்கலாம் அவர் ஒரு நேர்மையானவராக இதன் மூலம் மாற்றப்படுகிறார். இங்கு அல்லாஹ்வை நோக்கிய ஆன்மீக நெருக்கம் இயல்பாய் ஏற்படுகிறது.
அடுத்து நோன்பாளியின் உடலில் ஏற்படுகின்ற உயிரியல் ரீதியான மாற்றங்களும் அவரது உள, உணர்வு மற்றும் ஒழுக்க நடத்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியாக நோன்பிருப்பதால் அவரது கலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அவற்றில் ஏற்பட்டிருந்த கோளாறுகள் சீர் செய்யப்படுகின்றன. உடலில் சேமிக்கப்பட்டிருந்த தேவையற்ற மற்றும் நச்சுச் சேமிப்புக்கள் அகற்றப்படுகின்றன. அவரது நோயெதிர்ப்பு முறைமை(Immune System) புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. ஹோர்மோன்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் நோன்பாளியினை மானசீகமாக மாற்றுகிறது. அவரது உணர்வுகளை புதுப்பிக்கின்றன. அவரது ஒழுக்க நடத்தைகள் மாறுவதற்கு இவை காரணமாக அமைகின்றன.
இந்த எதிர்பாரக்கப்படுகின்ற மாற்றங்கள் நிகழ வேண்டுமாயின் நோன்பு மிகச் சரியாக நிறைவேற்றப்பட வேண்டும். நோன்பை மிகச் சரியாக அமைத்துக் கொள்வதில் எமது உணவு ஆரோக்கியமானதாகவும் உரிய அளவிலும் எடுக்கப்பட வேண்டும்.
மனிதன் நிரப்புகின்ற பாத்திரங்களுள் அவனுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கக்கூடியது அவனது வயிராகும்மனிதனுக்கு தனது முள்ளந்தண்டை நிமிர்த்துமளவுபலத்தை அளிக்க்க்கூடிய சில கவள உணவு போதுமானதகும்அவசியப்படின் அவனதுவயிற்றில் 1/3 உணவுக்கும் 1/3 நீருக்கும் 1/3 காற்றுக்கும் ஒதுக்கிக் கொள்வதுபோதுமானதாகும்
இங்கு உணவின் தரம் மற்றும் அதன் அளவு குறித்த பரிந்துரை தரப்படுகின்றது. இந்த இரண்டும் ஒருவரது நோன்பு சரியான விளைவை தருவதற்கு அவசியமானதாகும். இது குறித்து நோன்பு சம்பந்தமாக இடம் பெற்றுள்ள எண்நிறைந்த ஆய்வுகள் எமக்கு பரிந்துரைக்கின்றன. குறிப்பாக சொல்வதாயின் இயற்கையான, இரசாயனக் கலப்பற்ற உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். மனித உடலுக்கு அதிகளவில் தீங்கு விளைவிக்கத்தக்க மாச்சத்துள்ள உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு உணவின் அளவைப் பார்க்கிலும் தரத்தில் கவனம் செலுத்தி அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.(இதனை விரிவாக விளங்க போசாக்கு மற்றும் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ளலாம்).
இந்த வகையில் நோன்பை அமைத்துக் கொண்டால் நோன்பின் பிரயோசனத்தை அதிகப்படுத்தும் றமழானின் ஏனைய வணக்கங்களை நிறைவேற்றுவது எமக்கு எளிதான காரியமாக அமையும். அப்போது எமது தொழுகை சிறந்த பயனைத் தரும். எமக்கு தியான நிலையிலிருந்து அல்-குர்ஆனை கற்பதற்கான ஆரோக்கியம் கிடைக்கும். எம்மை சீர் செய்வதற்கான கவனத்தை எடுத்துக் கொள்கின்ற மனோ நிலை உருவாகும். எமது உணர்வுகள் சீர்பெற்று பொய் என்கின்ற தீமைகளின் தலையாய நிலை முதல் அத்தனை தீமைகளில் இருந்தும் தவிர்ந்திருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
றமழானில் பாவமன்னிப்புப் பெறல், றமழானை குற்றப்பரிகாரமாக அமைத்தல் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை இந்தப் பின்னணியில் இருந்து விளங்கும் போது அவை எமது வாழ்விற்கான ஒட்டுமொத்த மாற்றத்தை பரிந்துரைப்பதை அவதானிக்கலாம். அந்த மாற்றம் நோன்பை ஆரோக்கியமாக அமைப்பதிலேயே தங்கியிருக்கிறது என்பது எமக்கு விளங்குகின்றது.
உணவுக்கு முன்னால், பெண்ணிற்கு முன்னால் தனது மனதை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவனிடமிருந்து அடுத்த விடயங்களில் நேர்மையை, நலவை எதிர்பார்ப்பது சிரமம். இந்தப் பயிற்சியை நோன்பு எமக்கு சிறப்பாக வழங்குகின்றது. இந்தப் பயிற்சியை பெறும் நாம் குறைந்த அளவில் அடுத்த மனிதனுக்கு தீங்கு செய்யாதவனாக மாற வேண்டும்.முஸ்லிம் என்பவர் தனது நாவாலும் கரத்தாலும் பிறருக்கு தீங்குசெய்யாதவனாவான்
உயர்ந்த அளவில் எமக்கு விரும்புவதையே அடுத்த மனிதனுக்கும் விரும்புகிற, அடுத்தவரக்ளின் உணர்வகளை, பிரச்சினைகளை புரிந்து கொள்கின்ற மனவெழுச்சி நுண்மதி/ஆன்மீக நுண்மதி (Emotional intelligence/ Spiritual intelligence) வளரப் பெற்றவர்களாக மாற வேண்டும். இதன் வெளிப்பாடாகவே றமழான் கால ஸதகாக்களும் ஸகாதுல் பித்ரும் அமையப் பெறும்.
நீங்கள் உங்களுக்கு விரும்புவதை உங்களது சகோதரனுக்கும் விரும்பாதவரை ஈமான்கொண்டவர்களாகமாட்டீர்கள்”.
இந்த றமழானை இந்தப் பின்னணியில் பயன்படுத்திக் கொள்வோம். சுவனத்துக்குச் செல்ல வாய்ப்பளிக்கும், அதில் உயரந்த அந்தஸ்த்தைப் பெற்றுத்தரும் நோன்பாளியாக வாழ்வில் தொடர்ச்சியாக வாழ்வதற்குரியவர்களாக எம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.

Monday, May 21, 2018

குடும்ப வாழ்வை சீர்குலைப்பதற்கான சதிகள்!


எம்.என். இக்ராம்
family 2
இஸ்லாமிய குடும்ப வாழ்வு தொடர்பாக நாம் பல விஷயங்களைக் கேட்டு, பார்த்து, படித்திருப்போம். இங்கு குடும்ப வாழ்வையும் அதனோடு தொடர்பான ஒழுக்க வாழ்வையும் சீர்குழைப்பதற்காக உலகில் நடைபெற்று வரும் சூழ்ச்சிகளைப் பார்ப்போம்.
குடும்ப வாழ்வையும் அதனோடு தொடர்புடைய ஒழுக்க வாழ்வையும் சீர்குழைத்து உலகில் சீர்கேட்டை பரப்பும் நோக்கில் பல்வேறு திட்டங்களும் செயல்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. இவற்றிற்குப் பின்னால் எப்போதும் சியோனிஸ யூதர்களே இருந்து வருகிறார்கள். அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தப் பணியை செய்துவருகிறார்கள். உலகில் தமது ஆதிக்கத்தை வைத்திருப்பதற்கான இலகுவான வழியாக அவர்கள் இதனைக் கருதுகிறார்கள்.
இக்கருத்தை யூதர்கள் தமது புரோட்டோகாலில் (செயல்திட்டங்களில்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: "யூதர்களல்லாதவர்கள் அரசியலிலே புதியதோர் பாதையைக் கண்டடைவதை விட்டும் அவர்களை தூரமாக்க வேண்டும். இதற்காக நாம் அவர்களை சூதாட்டங்களிலும் பொழுதுபோக்குத் தளங்களிலும் தமது நேரங்களை போக்குவதற்குத் தூண்ட வேண்டும். அவர்களது இச்சைகளைத் தூண்டி விட்டு அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆபாசங்களைப் பரப்பி விட வேண்டும்.
அத்தோடு பத்திரிகைகளில், கலை விளையாட்டு போன்ற துறைகளில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து அவற்றை நோக்கி மக்களை அழைக்க வேண்டும்.
பெரும்பாலும் இதனால் மக்கள் படிப்படியாக சுயமாக சிந்திக்கும் திறனை இழந்துவிடுவார்கள். அப்போது புதிய சிந்தனைத் தளங்களை வடிவமைப்பவர்களாக நாம் மாத்திரமே காணப்படுவோம். நம்மைத்தான் பின்பற்றுகின்றார்கள் என்று அவர்கள் உணராத வண்ணம் பிறரை முன்னிலைப்படுத்தியே இதை செய்வோம்.
நாம் சமூகத்தின் பொதுப்புத்தியை “மக்கள் முன்னேற்றம்” என்றும் “சுதந்திரம்” என்றும் “வளர்ச்சி” வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆசையூட்டி அவர்களை நாம் வழிநடத்த முயற்சிப்போம்."
யூதர்களின் இந்த வலைபின்னலை நாம் ஏற்றுக் கொள்வது சிரமமாயினும் நாம் விளங்கிக் கொள்ளாத வகையில் ஏதோ ஒரு திசை நோக்கி வழிநடத்தப்பட்டுக் கொண்டிருப்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். இதனால் தான் அல்குர்ஆன் முஃமின்களின் முதல்தர எதிரியாக யூதர்களை குறிப்பிடுகின்றது. நாம் சீர்திருத்தத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டு செயல்படுகிறோமோ இல்லையோ அவர்கள் நம்மிடையே சீர்கேட்டை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.
நவீன காலத்தில் பொருளாதாரம், உயிரியல், உளவியல் துறைகளில் முக்கியமான சிந்தனைகளை முன் வைத்தவர்களாக கார்ல்மாக்ஸ், டார்வின், ஃபிராய்ட் போன்றவர்கள்குறிப்பிடப்படுகிறார்கள்.
உண்மையில் இவர்கள் மூவரும் யூதர்கள். இந்த மூவரது சிந்தனைகளையும் நாம் எடுத்துப் பார்த்தால் உலகில் இன்று ஏற்பட்டுள்ள சீர்கேடுகளுக்கான சிந்தனைத் தளத்தை வடிவமைத்தவர்களாக இவர்கள் செயல்பட்டிருப்பதை புரிந்து கொள்கிறோம்.
இது தொடர்பாக யூதர்களின் செயல்திட்டம் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது: "உலகில் எமது ஆதிக்கத்தை இலகுவாக ஏற்படுத்த நாம் ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக செயல்பட வேண்டும். ஃபிராய்ட் எங்களைச் சார்ந்தவர். அவர் சூரியனின் ஒளியிலே பாலியல் தொடர்புகளை வைத்துக் கொள்வது தொடர்பான சிந்தனையைத் தொடர்ந்தும் முன்வைப்பார். பாலியல் எப்போதும் இளைஞர்களின் பார்வையில் புனிதமான ஒரு விஷயமாக மாறிப் போகும். அவர்களது பெரும் கவலையாக அதுவே காணப்படும். அந்நிலையில் ஒழுக்கம் வீழ்ச்சியடைந்து போகும்."
இத்திட்டத்தின் அடிப்படையில்தான் ஃபிராய்ட் தனது உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை முன்வைத்தார்: "பாலியல் உணர்வுதான் தனிமனித நடத்தையை ஆளுகின்றது. அவனது அனைத்து உறவுகளையும் அது தான் வரையறை செய்கின்றது.
மதம் என்பது அடக்குதலில் இருந்தும் ஒடிப்பஸ் சிக்கலில் (oedipus complex) இருந்தும் தோன்றுகின்றது. ஆண்பிள்ளை தனது தாய் மீது பாலியல் ரீதியாக ஆசைகொள்வதும் தனது தந்தையை கொலை செய்ய விரும்புவதும் இந்த வகை சார்ந்ததாகும். " ஃபிராய்டின் இந்த நச்சுச்சிந்தனை மேற்கிலும் கிழக்கிலுமாகப் பரவி மனிதனின் ஒழுக்க வாழ்வை தகர்த்தெரிந்து அவனை ஒழுக்க வீழ்ச்சியில் படுபாதாளத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது.
ஃபிராய்டின் இந்தக் கருத்தை தோர்கெய்ம் என்ற யூத அறிஞர் சமூகவியல் துறையில் பிரயோகித்தார்; "குடும்பம் என்பது செயற்கையான ஓர் ஒழுங்காகும். அது சமூக ரீதியாக அத்தியவசியமான ஓர் ஒழுங்கல்ல. சமூகத்தில் பெண்கள் பொதுவுடமையாக இருப்பதுவே அடிப்படையான ஒழுங்காகும்."
இவரது இந்தக் கருத்து சமூக வாழ்வில் குடும்ப அமைப்புக்கு இருந்த மரியாதையை தகர்த்தெறிந்தது. இதனை அவரே இன்னும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்: "திருமணம் என்பது மனிதனின் இயல்பான செயலல்ல. குடும்பம் என்பதும் இயற்கையான ஒழுங்கல்ல." இதன் கருத்து மனிதனின் இயல்பு கட்டுப்பாடுகள் வரையறைகள் இன்றி இருப்பதுதான் என இவர் சொல்ல முற்பட்டார். மனிதனது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய திருமணம் என்றும் குடும்பம் என்றும் வரையறைகள் இடக் கூடாது. அவன் விரும்பியவாறு அதனை நிறைவு செய்து கொள்ள விடப்பட வேண்டும் என்ற கருத்து இதன் மூலம் சமூகத்துக்குக் கொடுக்கப்பட்டது.
famiy
இது விஷயத்தில் கார்ல்மாக்ஸ் பெண்களை பொது வேலைத் தளங்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்: "பெண் பொது வேலைத்தளத்துக்கு ஆணுடன் செல்ல வேண்டும். குடும்பம் என்பது பிற்போக்குத் தனமான ஓர் ஒழுங்கு. அது உடைத் தெரியப்படுவது அவசியமாகும்."
இப்பொழுது வரையறைகள் அகற்றப்பட்டு குடும்ப வாழ்வு உடைக்கப்பட்டு பெண் வீதிக்கு வந்தாயிற்று. அடுத்த படியாக அவளை அலங்கரிக்க வேண்டும்.
எனவே, ஆடை அலங்காரங்களில் கைவைத்தார்கள் யூதர்கள். அலங்கார இல்லங்களை (Fashion House) துவக்கினார்கள். பெண்ணின் ஆடையை படிப்படியாகக் குறைத்தார்கள். அவளை எவ்வளவு நிர்வாணப்படுத்த முடியுமோ அவ்வளவு நிர்வாணப்படுத்தினார்கள். உலகில் ஆடை அலங்காரத் துறையை ஆக்கிரமித்துள்ளவர்கள் இந்த யூதர்கள். இதன் மூலம் அவர்கள் இரு நோக்கங்களை நிறைவு செய்கிறார்கள். ஒன்று ஒழுக்க வாழ்வை சீர்குழைக்கும் ஆடைகளை அறிமுகம் செய்தல். அடுத்து நாளுக்கு நாள் புதிய புதிய அலங்காரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியாக இலாபம் அடைதல்.
இப்போது பெண்ணை நிர்வாணப்படுத்தி ஆணையும் பெண்ணையும் கட்டுப்பாடற்ற மிருகங்களைப் போல் உலாவ விட்டாயிற்று. இப்போது அவர்கள் எப்படி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். எனவே, நடனவிடுதிகள், கேளிக்கை விடுதிகள், சினிமா, விரசமான ஆடல் பாடல்... விபச்சார விடுதிகள் என அதற்கான வாயில்களைத் திறந்தார்கள்.
கவர்ச்சியான யூதப் பெண்களைப் பயன்படுத்தி உலகத் தலைவர்களை அந்த வலையில் சிக்க வைத்தார்கள். எத்தனையோ முஸ்லிம் நாடுகளின் அமீர்களுக்கும் தலைவர்களுக்கும் யூதக் காதலிகளும் பெண்களும் அருகே இருக்கிறார்கள். அவர்கள் மூலம் அந்நாடுகளின் ரகசியங்களை ஸியோனிஸ இயக்கம் பெற்றுக் கொள்கிறது.
இப்போது ஒழுக்க வீழ்ச்சியை நோக்கி இளம் வயது ஆண்களையும் பெண்களையும் தூண்ட வேண்டும். எனவே, அதற்காக ஆபாச மஞ்சள் பத்திரிக்கை, இணையதளங்கள், சினிமாக்களையும் தயாரித்தார்கள். மோசமான கதைகளைப் புனைந்தார்கள். நாவல்களை அறிமுகம் செய்தார்கள். நிர்வாணப் படங்களை அச்சடித்துப் பரப்பினார்கள். உலகிலேயே அதிகளவில் நிர்வாணப் பத்திரிகைகளை பிரசுரிப்பவர் ஒரு யூதர். ‘ஓர்டியாஸ் ஜாக்கான்’ என்பது தான் அவரது பெயர். அவர் ‘மொரிஸ் ஓர்டியாஸ்’ என்ற புனைப் பெயரில் இதனை செய்கிறார். இவர்களது பதிப் பகம் பிரான்ஸில் காணப்படுகிறது. பிரின்டானோ என்பது தான் அதன் பெயர்.
யூதர்களின் இந்த சூழ்ச்சி நடவடிக்கைகள் பற்றி ஹென்றி போர்ட் என்பவர் தனது ‘உலக யூதர்கள்’ என்ற நூலிலே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "யூதர்கள் தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக மூன்று விஷயங்களில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தினர். வட்டியைப் பரப்புவதற்காக வங்கிகளிலும் மோசமான சிந்தனைகளைக் கொடுப்பதற்காக சினிமாக்களிலும் ஒழுக்க வீழ்ச்சியைப் பரப்புவதற்காக ஆடை அலங்காரங் களிலும் தமது ஆதிக்கத்தைச் செலுத்தினர்."
"ஆடைகளின் அலங்காரங்களை மாற்றும் போதெல்லாம் பெண்கள் அதனை அதிகமதிகம் வாங்கினார்கள். இதனால் யூதர்களின் கைக்கு நிறைய பணம் போய்ச் சேர்ந்தது. இதன்மூலம் அவர்கள் ஒழுக்க வீழ்ச்சியைப் பரப்பு கிறார்கள். குட்டையான ஆடை யூதர்களின் கண்டுபிடிப்பாகும். அவர்கள் பெண்களின் உடையை முழங்காலுக்கு மேல் உயர்த்தினார்கள். இதனால் வெட்கம் நீங்கி மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமென விரும்புகின் றார்கள். இதனால், இளைஞர்களுக்கு மத்தியில் கட்டற்ற பாலியல் தொடர்புகள் பரவிப் போயின. பெண்ணின் தூய்மை கெட்டுப் போய் குடும்பம் உடைத் தெரியப்பட்டு பாலியல் நோய்கள் பரவின. இதனால் குழந்தைகள் பாதிப்புக்குள்ளானார்கள். நோய்வாய்ப்பட்ட வழிதவறிய பரம்பரையொன்றின் தோற்றம் இங்கிருந்து துவங்கியது..."
இந்த விஷயத்தை யூதர்கள் தமது புரோட்டோகாலில் இப்படிக் கூறுகிறார்கள்: "நாம் ஒவ்வொரு மனிதனுடைய சிந்தனையிலும் ‘சுயம்’ பற்றிய எண்ணத்தை ஊட்டி விட்டால் யூதர்கள் அல்லாத மக்கள் மத்தியில் குடும்ப வாழ்வை தகர்த்தெறிந்து விடலாம். குடும்ப வாழ்வின் பயிற்றுவித்தல் முக்கியத்துவத்தை இழக்கச் செய்யலாம்."
இந்தத் திட்டங்களெல்லாம் உலகில் அரங்கேற்றப்பட்டன. அதன் உச்ச நிலையை இன்று நாம் மேற்கிலும் இஸ்லாமிய உலகிலும் ஏனைய கீழைத்தேய நாடுகளிலும் கண்டு வருகின்றோம். எல்லோரும் வேலைப்பளுவால் நேரமின்றிக் கிடக்கிறார்கள். வீடுகள் வெறும் ஓய்வறைகளாய் மாறிப் போயுள்ளன.
குடும்பம் என்பது வெறுமனே உடல்கள் சந்திக்கும் இடமாய் மாறிப் போயுள்ளது. பிள்ளைகள் பிறந்தது முதல் பராமரிப்பு நிலையங்களிலும், நர்சரி பள்ளிகளிலும், கல்விக்கூடங்களிலும் தமது வாழ்வை கழிக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்கள் ஊடகங்களோடு கரைந்து போகின்றது. இந்தக் கல்விக்கூடங்களையும் ஊடகங்களையும் வழி நடத்துபவர்கள் யூதர்கள். இயல்பாக நமது எதிர்கால சந்ததியினரை வழிநடத் துபவர்களாக அவர்கள் மாறிப் போனார்கள். அவர்கள் விரும்பிய பரம்பரையொன்று சமூகத்தில் தோன்றியது.
நாம் இந்தப் பின்னணிகள் எதையும் தெரியாது நமது பிள்ளைகளை, இளைஞர்களை நாசமாய்ப் போனவர்கள் சமூகத்தை அழிக்கப் பிறந்தவர்கள் என ஏசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாம்தான் அவர்களை அழித்து விட்டு நமது குடும்ப வாழ்வை தூக்கியெறிந்துவிட்டு அவர்களது நடத்தைகள் முற்றியபின் சீர்திருத்த நினைக்கிறோம். உடைக்க நினைக்கிறோம். ஒட்டுப் போட நினைக்கிறோம்.
"யார் ஜாஹிலிய்யத்தை தெரியாது இஸ்லாத்திலேயே பிறந்து வளர்கிறாரோ அவர் இஸ்லாத்தை துண்டு துண்டாக உடைப்பார்" என உமர் (ரழி) அவர்கள் சொன்ன வாசகத்தை இங்கு நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. அல்குர்ஆன் யூதர்களைப் பற்றி அதன் முதல் அத்தியாயம் முதலே விரிவாக விளக்க முற்பட்டமையினை புரிந்து கொள்ள முடிகிறது. இங்குதான் நாம் நமது இயல்பான பயிற்றுவித்தல் தளமான குடும்ப வாழ்வை புனரமைப்பதன் அடியாகத் தான் சமூக சீர்திருத்தம் இடம்பெற வேண்டு மென்ற உண்மையை அழுத்தமாய் புரிந்து கொள்ள வேண்டி யுள்ளது. இல்லாதபோது அடித்தளமில்லாத கட்டடம் கட்டியவர்களைப் போல் நாம் மாறி விடுவோம்
.https://www.samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/765-

முன்மாதிரி இஸ்லாமியக் குடும்பம் - குடும்ப வாழ்வு - எங்கிருந்து துவங்குவது?


 எம்.என்.இக்ராம்
Family-2-GSalam
முஸ்லிம் சமுகத்தில் சிந்தனை ரீதியாகவும் நடைமுறையிலும் மொத்தமாகவே பாதிப்புக்குட்பட்ட இரண்டு விஷயங்கள் காணப்படுகின்றன. அவை 1. இஸ்லாமியகுடும்ப வாழ்வு, 2. பொருளாதார முறை.
இவை இரண்டிலும் நடைமுறை எப்படிப்போனாலும் அவை பற்றிய அடிப்படையான இஸ்லாமிய கருத்துக்களே கூட முஸ்லிம்களால் அந்நியமாக பார்க்கப்படும் அளவு இன்று நிலமை மாறிப்போயுள்ளது. அந்த வகையில் இஸ்லாமிய பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு முயற்சிகள், தேடல்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், குடும்ப வாழ்வு சம்பந்தமான கவனம் இன்னும் நமது மரபு சார்ந்த சிந்தனையிலிருந்து வெளிவரவில்லை. மேலும் நமது குடும்பங்களில் இஸ்லாம் குடும்ப வாழ்வு சம்பந்தமாகக் கூறும் அடிப்படையான அம்சங்களைக்கூட காணமுடியாதளவு குடும்ப வாழ்வு சிதறி சின்னாபின்னமாகிப் போயுள்ளதை நாம் காணலாம்.
இஸ்லாமியக் குடும்ப வாழ்வை உருவாக்குவதற்கான முயற்சியை எங்கிருந்து துவங்குவது என்பது சிக்கலான ஒரு விஷயமாக மாறியுள்ளது. ஒரு நல்ல மனைவியை, கணவனை தேர்வு செய்தல் என்ற நிலையிலிருந்து ஆரம்பிப்போம் என்றால், அவர்களை சிதறிப்போன இன்றைய குடும்பங்களில் இருந்து தான் தேர்வு செய்தாக வேண்டும் என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அவர்கள் இந்த சிதறிய குடும்பங்களிலும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள இந்த சமூகத்திலும் குறைந்த பட்சமான பாதிப்பிலிருந்தாவது விலகியிருப்பார்கள் என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது.
இங்கு தான் இஸ்லாமிய சீர்திருத்த செயல்பாடுகள் பற்றி நாம் கவனம் செலுத்த வேன்டிய தேவை எழுகிறது. இஸ்லாமியக் குடும்ப உருவாக்கம் என்ற செயல்பாடு இஸ்லாமிய சீர்திருத்த செயல்பாடுகளுடன் இணைந்த வகையிலேயே இடம் பெறுதல் வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கும் அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தின் சீரான இயக்கத்தில் பங்களிப்பு செய்யும் வகையிலான குடும்பங்கள் தோற்றம் பெறும். இஸ்லாமிய சீர்திருத்தப் பணியின் மூலம் உருவாக்கப்படும் ஆணும் பெண்ணும் தான் அந்தக் குடும்பத்தின் அடிப்படையாக இருப்பர். இவ்வகையில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இது தொடர்பாகமுன்வைத்த சிந்தனைகளில் இருந்து நாம் இப்பத்தியை ஆரம்பிக்க விரும்புகிறோம். அது நமது குடும்பங்களை சீர் படுத்திக் கொள்வதில் நமக்குத் தெளிவானவழிமுறையைக் காட்டித்தரலாம்.
நாம் என்ன விரும்புகிறோம்? நாம் முதலில் விரும்புவது; ஆன்மாக்களின் விழிப்பை, உள்ளங்களின் உயிர்ப்பை, உணர்விலும் சிந்தனையிலும் ஏற்படும் உண்மையான எழுச்சியை. நாம் பலம் மிக்க, இளைய உள்ளங்களை விரும்புகிறோம். புத்துணர்வு பெற்ற, செயலூக்கம்கொண்ட உள்ளங்களை விரும்புகிறோம். கொழுந்து விட்டெரியும் ரோசமுள்ளஉணர்வுகளை விரும்புகிறோம். உயர்ந்த இலட்சியத்தையும் இலக்கையும் வரையறை செய்து அதை நோக்கி செயற்பட்டு அதனை அடைந்து கொள்கின்ற வகையில்அமைந்த சிறந்த கனவுகளை, ஆசைகளை விரும்புகிறோம்.
இந்த இலக்குகளும் இலட்சியங்களும் வரையறை செய்யப்பட வேண்டும். இந்தஉணர்வுகளும் சிந்தனைகளும் நெறிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.இவைஒரு கொள்கையாக,நம்பிக்கையாக மாறும் வகையில் ஒன்றுகுவிக்கப்படவேண்டும். அதன் பின்னர் அங்கு வாதாட்டங்களோ,சந்தேகங்களோ தோன்றக்கூடாது. இந்த வரையறைகள் இன்றி இது போன்ற எழுச்சி ஒரு பெரும் வெட்டவெளியில் பாய்ச்சப்பட்ட சிதறிய ஒழிக்கீற்றுக்கள் போன்றிருக்கும். அதில்வெளிச்சம் இருக்காது, வெப்பம் இருக்காது.
இந்த விழிப்புணர்வு அல்லது எழுச்சி தனது செயற்பாட்டை தனிமனிதனில் மேற்கொள்ளும். அப்போது அவன் இஸ்லாம் தனி மனிதனில்விரும்புகின்ற பண்புகளைப் பெற்ற ஒரு சிறந்த தனிமனிதனாக இருப்பான்.இஸ்லாம் தனிமனிதனில் அழகையும் அசிங்கத்தையும் பிரித்து உணர்கின்றஉணர்வை ஏற்படுத்த விரும்புகின்றது. சரியானதையும் தவறானதையும்பிரித்தறியும் திறனை ஏற்படுத்த விரும்புகிறது. சத்தியத்தின் முன்னால்பலவீனப்பட்டு நலிந்து போகாத உறுதியான செயற்திறன் மிக்க ஆழுமையைஏற்படுத்த விரும்புகிறது.
இந்த தனிமனித சீர்திருத்தத்தின் பாதிப்பு அவரது குடும்பத்தில் ஏற்படும்.குடும்பம் என்பது தனிமனிதர்களின் சேர்க்கையால் ஆன ஒரு நிறுவனம்.அக்குடும்பத்திலுள்ள குடும்பத்தலைவன் திருந்தி விட்டால் அங்குள்ள பெண்ணும்திருந்திவிடுவாள். அவர்கள் இருவரும் தான் குடும்பத்தின் தூண்கள்.அவர்களிருவராலும் இஸ்லாம் இட்டுள்ள அடிப்படைகளின் மீதமைந்த ஒரு வீட்டைஉருவாக்க முடியும்.
இஸ்லாம் குடும்பத்திற்கான அடிப்படைகளை சீராகமுன்வைத்துள்ளது.திருமணத்தின் போது சிறந்த துணையை தெரிவு செய்ய வழிகாட்டியுள்ளது. கணவன் மனைவியருக்கிடையிலான பிணைப்பைஏற்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளை தெளிவுபடுத்தியுள்ளது.இருவருக்குமிடையிலான கடமைகளையும் உரிமைகளையும் வரையறைசெய்துள்ளது. இஸ்லாம் இரு தரப்பினருக்கும் இந்தத் திருமண இணைப்பின்விளைவாக வரும் பிள்ளையை அப்பிள்ளை முதிர்ச்சியடையும் வரைபொடுபோக்காக இல்லாமல் கண்காணிப்பது கடமை என்று கூறுகிறது. இந்ததிருமண வாழ்வின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு மிக நுணுக்கமானதீர்வுகளை முன்வைத்துள்ளது. இது பற்றிய எல்லா விடயங்களிலும் தீவிரமோகவனயீனமோ இல்லாது நடுநிலையான ஒரு வழிமுறையை கையாண்டுள்ளது.
எனவே, குடும்பம் சீரடைந்து விட்டால் சமூகம் சீரடைந்து விடும். சமூகம்என்பது இந்தக் குடும்பங்களின் சேர்க்கைதான். உண்மையில் குடும்பம் என்பது ஒருசிறிய சமூகம். சமூகம் என்பது ஒரு பெரியகுடும்பம்.
நாம் இஸ்லாமிய தனிமனிதனை விரும்புகிறோம்ஞ் இஸ்லாமியவீட்டைவிரும்புகிறோம்ஞ் இஸ்லாமிய சமூகத்தை விரும்புகிறோம்ஞ் என்றாலும்அவையெல்லாவற்றுக்கும் முன்னால் இஸ்லாமிய சிந்தனை பரவ வேண்டும்என்று விரும்புகிறோம், அதன் மூலம் சமூகத்தின் எல்லா இடங்களிலும்இஸ்லாத்தின் பாதிப்பு ஏற்பட வேண்டும். சமூகத்தின் எல்லா விடயங்களும்இஸ்லாமிய சிந்தனையால் வழிநடாத்தப்படவேண்டும். அது இல்லாமல் நாம்ஒன்றையும் சாதிக்க முடியாது.
நாம் அனைவரும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் சுதந்திரமாக சிந்திக்கவேண்டும் என்று விரும்புகிறோம். எல்லா விடயங்களையும் மேற்கின்வரையறைகளுக்குள்ளால் நின்று, போக்குகளுக்குள்ளால் நின்று பாரம்பரியமாகசிந்திக்கும் நிலையிலிருந்து நாம் மாற வேண்டும்.
நாம் வரலாற்றில் சிறப்பாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்த ஒரு சமூகத்தைபின்னணியாகக் கொண்டவர்கள் என்ற வகையில் தனித்துவமானபெறுமானங்களையும் ஆளுமைகளையும் கொண்டவர்களாக நாம் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றோம்.
https://www.samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/789-

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...