Saturday, June 9, 2018

ருகூஃவில் ஓத வேண்டிய ஓதல்கள் எம்.என்.இக்ராம்




”فأما الركوع فعظموا فيه الرب عز وجل“ –مسلم-
ருகூஃவில் கண்ணியம் மிக்க றப்பை மகத்துவப் படுத்துங்கள்


ருகூஃ என்பது தொழுகையின் பர்ழுகளுல் ஒன்றாக காணப்படுகிறது. அதனை உரிய முறையில் நிறைவேற்றுவதன் மூலமாக  எமது தொழுகைகளையும் சீராக்கிக் கொள்ள முடியுமாக  இருக்கிறது.
ருகூஃ செய்வதானது முஸ்லிம்கள் மீது கடமையானதாக் காணப்படுகிறது. இதனை அல்-குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ۩ ( الحج - 77)
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்; நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.”
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ (البقرة – 43 )
“தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஸகாத்தையும்  கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.”
இவைகள் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக ருகூஃ செய்தல் வேண்டும் என்பதனை உணர்த்தி நிற்கின்றன.
மேலும் இது அல்லாஹு த்தஆலாவின் சுபசோபனத்தினை சம்பாதித்து தருகின்ற முக்கிய  செயலாகக் காணப்படுகிறது.  
التَّائِبُونَ الْعَابِدُونَ الْحَامِدُونَ السَّائِحُونَ الرَّاكِعُونَ السَّاجِدُونَ الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ ( التوبة – 112 )

“மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
பாவங்களை அழித்து விடுகின்ற  ஆற்றல்மிக்கதாகதாக ருகூஃகள் காணப்படுகிறது. நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் இதனை தெளிவுபடுத்துகிறது .
قال رسول الله صلى الله عليه وسلم  - إن العبد إذا قام  للصلاة أتي  بذنوبه  كلها  فوضعت على عاتقيه، فكلما ركع أو سجد تساقطت عنه ".( صححه الشيخ الألباني - رحمه الله - في كتابه "سلسلة الحاديث الصحيحة(
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  நிச்சயமாக அல்லாஹ்வின் அடியான் தொழுகைக்காக தயாரான நிலையில் நிற்கின்ற போது, அவன் புரிந்த பாவங்கள் யாவும் கொண்டு வரப்பட்டு, அவனது தோளின் இரு பகுதிகளிலும் வைக்கப்படுகிறது. அவன் ருகூஃ அல்லது சுஜூது செய்கின்ற போது அவைகள் (பாவங்கள்)  அவனை விட்டும் படிப்படியாக சென்று விடுகின்றன”. ( அபூதாவூத் )
ருகூஃவில் தடுக்கப்பட வேண்டியவை
1. அல்-குர்ஆன் ஓதுவது
ருகூஃவில் அல்-குர்ஆன் ஓதுவதனை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

روى مسلم عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ : قال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَلا وَإِنِّي نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا ، فَأَمَّا الرُّكُوعُ فَعَظِّمُوا فِيهِ الرَّبَّ عَزَّ وَجَلَّ ، وَأَمَّا السُّجُودُ فَاجْتَهِدُوا فِي الدُّعَاءِ فَقَمِنٌ – أي جدير وحقيق - أَنْ يُسْتَجَابَ لَكُمْ .
“அறிந்து கொள்ளுங்கள். ருகூஃ, சுஜூது போன்ற நிலைகளில்  அல்-குர்ஆன் ஓதுவது எனக்கு தடுக்கப்பட ஒன்றாகும். ருகூஃ அல்லாஹ்வை துதி செய்கின்ற  இடமாகும். சஜூதைப் பொறுத்தவரை அதிலே நீங்கள் பிராத்தனை செய்ய முயற்சியுங்கள்.ஏனெனனில் அது பதிலளிக்கத்தக்க பிராத்தனையாகும்.(முஸ்லிம் )
1. வேகமாக ருகூஃ செய்தல்
விரைவாக செய்யப்படுகின்ற ருகூஃ, சுஜூதுகளை நபியவர்கள் தொழுகையில் புரியப்படுகின்ற களவாக  அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.
رواه الإمام أحمد وغيره عن أبي قتادة رضي الله عنه قال قال: رسول الله صلى الله عليه وسلم: "أسوأ الناس سرقة الذي يسرق من صلاته لا يتم ركوعها ولا سجودها ولا خشوعها" 
“மக்களிளே மிகவும் கேவலமானவர்கள், தொழுகையில் திருடுகின்றவர்கள். அத்தகையவர்கள், தங்களது தொழுகையில் ருகூஃவையோ, சுஜூதையோ பூரணமாக செய்யமாட்டார்கள், மேலும் அவர்களது  தொழுகை பயபக்தியற்றதாகவே காணப்படும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இங்கு எம் தொழுகைக்கான முக்கிய பெறுமானமாகஅவற்றை நிதானமாக நிறைவேற்றல் காணப்படுகிறது.
எனவே, எமது ருகூஃ, சுஜூதுகளை உரிய முறையில் செய்து, அல்லாஹ்வின் திருப்தியைப் பரிபூரணமாகப் பெற்ற  அடியர்களாக மாறுவதற்கு முயலுதல் அவசியமானதாகும்.
அந்தவகையில்  எமது ருகூஃகள் சீராகுவதற்கு, அதில்  ஓதப்பட வேண்டிய அவ்ராதுகளை தெரிந்து, விளங்கி,மனனமிட்டு ஓதிவருவது முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
ருகூஃவில்  ஓத  வேண்டிய   துஆகள்

1)   عن عوف بن مالك الأشجعي قال:  قمت مع رسول الله صلى الله عليه وسلم ليلة فقام فقرأ سورة البقرة ، لا يمر بآية رحمة إلا وقف فسأل ، ولا يمر بآية عذاب إلا وقف فتعوذ. قال ثم -  ركع بقدر قيامه، يقول في ركوعه - سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة ،ثم سجد بقدر قيامه.(رواه أبو داود  )
ஆட்சியையும்,அதிகாரத்தையும், பெருமையையும், மகத்துவத்தையும் சொந்தமாக வைத்திருப்பவன் மிகத் தூய்மையானவன்

2)   عن عائشة رضي الله عنها أنها قالت :  كان النبي صلى الله عليه وسلم يكثر أن يقول في ركوعه وسجوده: سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي(صحيح البخاري )
யா அல்லாஹ்! நீ தூய்மையானவன்,  உனது புகழை முன் நிறுத்தி கேட்கின்றேன்,யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னிப்பாயாக!  

3)   عن محمد بن مسلمة رصي الله عنه : أن رسول الله صلى الله عليه وسلم كان إذا قام يصلي تطوعا، يقول إذا ركع : اللهم لك ركعت وبك آمنت ولك أسلمت وعليك توكلت، أنت ربي خشع جميع سمعي وبصري ولحمي ودمي ومخي وعصبي لله رب العالمين. (سنن النسائي)
யா அல்லாஹ் உனக்காகவே  ருகூஃ செய்கிறேன்,உன்னையே ஈமான் கொண்டிருக்கிறேன், உன்னையே வணங்கி வழிபடுகிறேன், உன்னிலே அனைத்தையும் பொறுப்புச் சாட்டுகிறேன், நீ தான் எனது றப்பாக  இருக்குகிறாய்,எனது மூளை, இரத்தம், சதை,பார்வைப்புலன், கேள்விப்புலன் யாவுமே அகிலங்களின் இரட்சகனாகிய  அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

வேறு ஒரு அறிவிப்பில் இந்த துஆ பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
4)   اللهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِي، وَبَصَرِي، وَمُخِّي، وَعَظْمِي، وَعَصَبِي(صحيح مسلم)
அல்லாஹ்வே, உனக்காகவே ருகூஃ செய்கிறேன். உன்னையே விசுவாசித்துள்ளேன். உனக்கே கட்டுப்பட்டுள்ளேன். எனது கேள்வி,பார்வை,மூளை,எனது எழும்புகள், நரம்புகள் அனைத்தும் உனக்கே அஞ்சி வழிப்படுகின்றன.
5)   وفي سنن أبي داوود عن عائشة: أن النبي صلى الله عليه وسلم كان يقول في ركوعه وسجوده : سبوح قدوس رب الملائكة والروح.
அவன் அதிகமாக துதிக்கப்படுபவன்,மேலும் மிகவும்  புனிதப்படுத்தப்படுபவனும் அவனே,மேலும் அவனே ஜிப்ரீலினதும், மலக்குமார்களினதும் றப்பாக  இருக்கிறான்.”
6)   في دعاء الركوع:((سبحان ربي الأعلى وبحمده)) وهو حديث صحيح قد رواه الخمسة، أحمد وأبو داود والترمذي والنسائي وابن ماجه وغيرهم عن حذيفة .
உயர்ந்த எனது றப்பு மிகத் தூய்மையானவன் “.

எனவே இந்த அவ்ராதுகளை பொருள் விளங்கி ஓதி வருகின்ற போது எமது ருகூஃகளை உயிரோட்டமானவையாக மாற்றி தொழுகையையும் ஆரோக்கியமாதாக அமைத்துக் கொள்ளவும் முடியும் என்பது உறுதி

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...