Monday, September 19, 2016

Hijab Concept ஹிஜாப் ஒரு வேர் நிலைப் பார்வை- பகுதி-01
















மனித வாழ்வில் அதன் போக்கிலும், அமைப்பிலும் தாக்கம் செலுத்துகின்ற பிரதான அம்சங்களாக பின்வரும் 03 அம்சங்கள் காணப்படுகின்றன. அவை:
  1.            மனிதனுக்கும் இறைவனுக்குமிடையிலான தொடர்பு
  2.      மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையிலான உறவு
  3.      மனிதனுக்கு தனது சக மனிதனுடன் உள்ள தொடர்பு
இதில் மானிடத் தொடர்பில் பிரதானமாக இரு விடயங்கள் முக்கியமானவை:
  1. ஆண்-பெண் தொடர்பு
  2. தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமிடையிலான தொடர்பு
இவற்றுள் நாம் பேச எடுத்த விடயம் ஆண் - பெண் தொடர்பு குறித்த பர்வையிலிருந்து எழுகின்ற ஒரு விவகாரம்.
ஹிஜாப் என்றால் என்ன? அது ஏன் அவசியம்? என்பதனை விளங்க ஆண் - பெண் தொடர்பு குறித்த இஸ்லாத்தின் பார்வையின் முக்கிய புள்ளிகளையாவது புரிந்து கொள்வது முக்கியமானது.

  1. ஆணும் பெண்ணும் அடிப்படையில் சமத்துவமானவர்கள், அவர்கள் வாழ்வின் உரிமைகளிலும் கடமைகளிலும் சம பங்காளர்கள்.
உங்களில் ஆணாயினும் பெண்ணாயினும் அவர்கள் செய்த எந்த ஒரு செயலையும் நான் வீணாக்கிட மாட்டேன் என அவர்களது றப்பு அவர்களுக்கு பதிலளித்தான். நீங்கள் இருபாலாரும் ஒருத்தரை ஒருத்தர் சாரந்துள்ளீர்கள்….” –ஆல இம்ரான்-195-
முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர்  பொருப்பாளர்களாகவும் உதவியாளர்களாக உள்ளனர். அவர்கள் நன்மையை ஏவுகின்றனர், தீமையை தடுக்கின்றனர்…” –தௌபா:71-
                                         2.ஆண்,பெண் இயல்பு அடிப்படையில் வாழ்வில் அவர்களது பணிபொருப்புக்களில் வேறுபாடு கொண்டவர்கள்.
“ஆண்கள் பெண்களைப் போன்றவர்களல்லர்” – ஆல இம்ரான்:36-
“ஆண்கள் பெண்களின் நிர்வாகிகளாயிருப்பர்….” –நிஸா :34-
“ஆண்கள் பெண்களை பார்க்கிலும் படி நிலை வேறுபாடு கொண்டோராவர்…” –பகரா :228-

  3.ஆண்-பெண் இருபாலாரும் தமக்கிடையே இயல்பான ஈர்ப்புக் கொண்டவர்கள்.

“உங்களுக்கு உங்களில் இருந்தே துணையை படைத்தது அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். நீங்கள் உங்கள் துணையிடம் அமைதிபெற வேண்டும் என்பதற்காகவே அவன் அவ்வாறு செய்தான். அவன் உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தினான்” –ரூம்: 21-
          ஆண், பெண்ணின் சமூக வகிபாகம் மற்றும் அவர்களுக்கிடையான ஈர்ப்பும் வேறுபாடும் அவர்களுக்கிடையிலான உறவு தொடர்பில் சில ஒழுங்குகளும் வரையறைகளும் ஏற்படுத்தப்பட வேண்டியமையை வலியுறுத்துகின்றது. அதிலும் குறிப்பாக இருபாலாரதும் உறவில் மானிட விருத்தி தங்கியிருப்பது இதனை இன்னும் வலியுருத்துகிறது. 
              இரு பால் உறவு வெறும் இன்பம் சார்ந்த தொடர்பாக மாத்திரம் முடிந்து போவதாயின் இந்த தேவை பல போது அவசியப்படமாட்டாது. எனினும் இந்த வேறுபாட்டுக்கு இடையேயான பிணைப்பு மானிட வாழ்வின் அடிப்படை நோக்கம் ஒன்றை கொண்டிருப்பது இந்த உறவை ஒழுங்கு படுத்த வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதனுடன் மாத்திரம் இது சுருங்கி விடுவதில்லை. மானிட வாழ்வின் பொருள் இந்த உறவின் ஒழுங்கில்தான் பொதிந்துள்ளது.

 ஹிஜாப் ஒரு ஆடையல்ல அது ஒரு முறைமை


         
   இந்தப் பின்னணியில் இருந்தே இஸ்லாம் முன்வைக்கும் ஹிஜாப் சிந்தனை புரியப்பட வேண்டும். அதனை ஒரு ஆடையாக மாத்திரம் புரிந்து கொள்வது, அதுவும் பெண்ணுக்கான ஆடையாக மாத்திரம் புரிவது ஹிஜாப் குறித்த இஸ்லாத்தின் சிந்தனையை புரிவதில் விடப்படுகின்ற குறைபாடாகவே காணப்படும்.
            ஹிஜாப் குறித்து ஆரம்பமாக பேசிய வசனங்களாகக் கருதப்படும் ஸுரா அஹ்ஸாபின் வசனங்களை நாம் பார்த்தாலும், அதற்கடுத்து பேசிய வசனங்களாகப் பார்ககப்படும் ஸுரா நூரின் வசனங்களை பார்த்தாலும் அவை அனுமதி பெறுதல் என்ற விடயத்தில் இருந்தே ஹிஜாப் குறித்த பேச்சை ஆரம்பிப்பதை அவதானிக்கலாம்.
“ஈமான் கொண்டவர்களே! நபியினுடைய வீட்டுக்கு உங்களுக்கு அனுமதி கிடைத்தாலேயன்றி சாப்பாட்டிற்காக  உள் நுழைய வேண்டாம்….“ -அஹ்ஸாப்:53-
“ஈமான் கொண்டவர்களே! உங்களது அல்லாத பிறரது வீட்டிலே நீங்கள்,உங்களது வருகையை அறிவித்து உங்களுக்கான முன் அனுமதியை பெற்று, அங்கு வசிப்போருக்கு ஸலாம் கூறாத வரை நுழைய வேண்டாம். அதுதான் உங்களுக்கு சிறந்ததாகும். இதனை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்…, அந்த வீட்டிலே எவரும் இருப்பதை காணாத போதும் அனுமதி கிடைக்காத வரை அங்கே நுழைய வேண்டாம். நீங்கள் திரும்பி சென்று விடுங்கள் என்று கூறப்பட்டால் திரும்பி சென்று விடுங்கள். அது உங்களுக்கு தூய்மையானதாகும். நிங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்…., யாரும் வசிப்பிடமாக கொள்ளாத ஒரு வீட்டில் உங்களுக்கான ஒரு பொருள், தேவை இருப்பின் அங்கே நுழைவதில் குற்றம் கிடையாது. நீங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் அல்லாஹ் அறிபவனாக உள்ளான்” -நூர் 27-29-
            இங்கு, உடம்பிற்கு ஹிஜாப் அணிவதற்கு முன்னர் மனதுக்கு ஹிஜாப் அணிவிக்க வேண்டிய தேவை இருப்பதை விளங்குகிறோம். இதனை ஸுரா நூரின் 58,59 வது வசனங்களும் இன்னும் உறுதிப் படுத்துகின்றன.
“ஈமான் கொண்டோரே! உங்களது வலக்கரம் சொந்தமாக்கப்பட்டவர்களும், பருவமடையாத உங்களது பிள்ளைகளும் நாளின் மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி பெறட்டும். அவை பஜ்ரு தொழுகைக்கு முன்னைய பொழுது, பகல் பொழுதில் உங்களது ஆடைகளை தளர்த்தி வைக்கும் நேரம், இஷாவுக்கு பின்னைய நேரம் என்பனவாகும். இவை உங்களுக்கான மூன்று அவ்ரத்துக்களாகும். அதனை தவிரவுள்ள நேரங்களில் அனுமதி குறித்த விடயத்தில் உங்களுக்கோ அவர்களுக்கோ பிரச்சினை கிடையாது. அவர்கள் உங்களை சுற்றிச் சுற்றி வருவோர். நீங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறீர்கள். அல்லாஹ் இவ்வாறுதான் உங்களுக்கு வசனங்களை விளக்குகிறான். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனும் ஞானம் கொண்டவனாயுமுள்ளான்……, உங்கள் குழந்தைகள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களை முந்தியவர்கள் அனுமதி கோரியது போல்  அவர்களும் அனுமதி கோரட்டும். அல்லாஹ் இவ்வாறுதான் உங்களுக்கு அவனது வசனங்களை விளக்குகிறான். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனும் ஞானம் கொண்டவனாயுமுள்ளான்” –நூர்: 58,59-
            இங்கு முதலில் அல்-குர்ஆன் அவ்ரத் என்பதை விரிவான பொருளில் பாவித்திருப்பதை விளங்கிக் கொள்வது அவசியம். அது உடலின் ஒரு பகுதி என்பதை தாண்டி மேலுள்ள வசனத்தில் குறித்த சில நேரத்தை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்த சந்தர்ப்பத்தில் குறித்த சாராருக்கு மறைக்கப்பட வேண்டிய ஒரு விடயமாக நாம் அவ்ரத்தை விளங்கிக் கொள்கிறோம்.
            இந்த வகையில் ஆடைக்கு முன்னர் வீடும், அறைகளும் இங்கு அவ்ரத்தாக பார்க்கப்பட வேண்டிய தேவை இருப்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன. ஒருவருடைய வீடு, எந்த வெளித் தலையீடுகளும் இன்றி தனித்த தன்மையுடன் (Privacy) இருக்க வேண்டும். அதற்குள்ளால் நுழைதல் முன் அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம் உள்ளால் இருப்பவர் மானசீக ரீதியாகவும், உடல், ஆடை… என எல்லா வகையிலும் சுதந்திரமாக இருப்பதற்கான வாய்ப்பை வழங்குவது என்பதுடன் வெளியால் இருப்பவர் உள்ளே இருப்பவரின் அனுமதி இன்றி அவரது மறைவான விடயங்களில் தலையீடு செயயாது இருப்பதுடன், காண்பதற்கு கூடாதவற்றை காண்பதன் ஊடாக தவறான நடத்தைகள் ஏற்படாது பாதுகாப்பதுமாகும். எனவேதான் அனுமதி மறுக்கப்படுவதற்கும் இங்கு இடம் இருக்கின்றது. (இதுவேதான் தொலைத் தொடர்பு சாதனங்களினாலான நுழைவுக்குமுறிய ஒழுங்குமாகும். ஆனால் துரதிஷ்ட வசமாக அப்படி பதில் அளிக்காவிடில் பலருக்கு காரணம் சொல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் இன்று நிலவுகிறது.) ஏனெனில், ஒருவர் எத்தகைய சூழலில் இருக்கிறார் என்பது யாராலும் குறித்துக் கூற முடியாது.
            அதிலும் ஒரு வீட்டிற்குள்ளும் ஒருவருடைய தனித்த அறை என்பது அவருக்கு இன்னும் சுதந்திரத்திற்குரிய இடம். அதிலும் அல்-குர்ஆன் உதாரணமாக குறிப்பிட்ட நேரம் போன்ற ஒருவர் மிக சுதந்திரமாக இருப்பதற்கான பொழுதுகள் முக்கியமானவை. இங்கு வெளியே இருப்பவரால் உள்ளிருப்பவரது சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது என்ற கவனம் இருப்பது போலவே உள்ளே இருப்பவரால் வெளியே இருப்பவரது மனோ நிலை பாதிக்கப் படக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
            ஒருவரது பாலியல் உணர்வு முதல் அவரது மன உணர்வு மற்றும் சிந்தனை நடத்தை சார் சீர்மைக்கு இப்படியான சுதந்திரமான இடங்களும் பொழுதுகளும் முக்கியமானவை. அல்- குர்ஆனின் இந்த வசனங்களை வாசித்துச் செல்கின்ற போது இந்த வசனங்கள் ஹிஜாபை ஒரு தடையாக அல்லாமல் ஒரு சுதந்திர எல்லையை பெற்றுத் தரும் ஒரு தடுப்பாகவே குறிப்பிடுவதை பார்க்க முடிகிறது.
            இங்கு, அல்-குர்ஆன் ஒருவருக்கு பார்க்கக் கூடாத நிலையில், பருவத்தில், பார்க்கக் கூடாதவர்களது காட்சிகள் காண்பிக்கப்படக் கூடாது என்பதில் முதல் கவனம் எடுத்திருப்பதைக் காண்கிறோம். அதுதான் முதலில் இங்கு தடுக்கப் பட வேண்டியவை. அவை ஒருவனது ஆழ் மனக் காட்சியாக பதிந்துவிட்டால் அதன் விளைவு மிகவும் பாரதூரமானது. அதனைத்தான் நாம் இன்று உலகில் கட்டறற பாலியல் கலாச்சார சூழலின் விளைவாக அன்றாடம் அனுபவிக்கின்றோம்.
            இங்குதான் ஹிஜாப் குறித்த இஸ்லாத்தின் வழிகாட்டல் எங்கிருந்து நடைமுறைப்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்ற விடயம் எமக்கு துளங்குகிறது… எவனோ வடிவமைத்த ஆடையை அணிவது குறித்து சர்ச்சைப்படும் நாம்… குந்தியிருக்க வீடற்று வாழும் எத்தனையோ ஆயிரம் மக்கள் எப்படி இந்த வழிகாட்டலை நடை முறைப்படுத்துவார்கள் என சிந்திக்க வேண்டியுள்ளது… இரண்டு சுவர்களுக்கும் ஒரு முந்தானைக்கும் மத்தியில் வாழும் குடும்பங்களது கதி என்ன? மாற்றி அணிய ஆடை அற்று ஒட்டுத் துணியுடன் வாழும் மக்களது நிலை என்ன?... பள்ளிவாயில்களுக்கும், உழ்ஹியாக்களுக்கும், நிகாப் மாநாடுகளுக்கும்… கொட்டப்படும் இலட்சங்கள், மணித்தியாளங்கள், மனித வளங்கள் ஏன் இங்கு செலவழிக்கப்படக் கூடாது?... இது, மனிதனின் மானம் காக்கும் பணி…. இதற்கு யார் வகை சொல்வது? இஸ்லாத்தில் ஹிஜாபை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு கருப்புத் துணியை பல்லாயிரங்கள் கொடுத்து எடுத்து உருவத்தை மூடுவது அல்ல… அது இங்கிருந்துதான் துவங்கப்பட வேண்டும்… அங்கு தொடங்கி… உடலை விற்கும் விரசமான சினிமாக்கள், பாடல்கள், இணையத் தளங்கள், பத்திரிகைகள்… இவற்றுக்கு மாற்றீடு கொண்டு வருவது வரை நீள வேண்டும்… இல்லாவிட்டால் நாம் போடும் கருப்புப் போர்வைக்குள் பாலியல் பூதம் ஒன்று எப்போதுமே  குமுறிக் கொண்டிருக்கும்….

            தொடரும்…..

Wednesday, September 14, 2016

முஸ்லிம் சமூகம், அதன் தலைமைகள், நிறுவனங்கள், இயக்கங்களுக்கான ஒரு திறந்த மடல்....

மதிப்பிற்குரிய சகோதரர்களுக்கு
السلام عليكم ورحمة الله وبركاته
 எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவரகள் மீதுசாந்தியும் நமாதானமும் உண்டாவதாக.
   எம் மதிப்பிற்குரிய உலமாக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜம்இய்யதுல் உலமா இன் நாட்டு முஸ்லிம்களுக்கு பல சேவைகளை செய்துள்ளது, செய்து வருகின்றது. இதனை அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்.
            அண்மையில் சமூக வலைத் தளங்களிலும், இன்னும் பல மட்டங்களிலும் ஹிஜாப், நிகாப் குறித்த விடயங்கள் கருத்துப் பரிமாற்றத்துக்கு உட்பட்டு வந்த நிலையில் அது தொடர்பாக 11.09.2016 அன்றுபெண்கள் முகத்திரை அணிவது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு பற்றிய தெளிவுஎன்ற தலைப்பில் ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக் குழு செயலாளரினால் ஒரு அறிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
            அந்த அறிக்கை தொடர்பிலான விடயங்களை சற்று அலசிப்பார்ப்பதற்காக ஜம்இய்யதுல் உலமாவின்  இணையத்தற்கு சென்ற போது அங்கிருந்த பல பத்வாக்களையும் கூட வாசிக்கக் கிடைத்தது.
            இதன் பின்னணியில் இந்த நாட்டினதும், முஸ்லிம் சமூகத்தினதும் பொருப்பு வாய்ந்த ஒரு குடிமகன் என்ற வகையில் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நிறுவனங்கள், இயக்கங்கள், தலைமைகளை நோக்கியும் எனது தாழ்மையான சில அவதானங்களை தெரிவிப்பது எனது கடமை என்று நினைக்கிறேன்.
            குறித்த அறிக்கையை பொருத்த வரை அதில் ஜம்இய்யதுல் உலமாவினால் ஏற்கனவே வெளியிடப்பட்டசமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல்என்ற நூல் தொடரின் ஆறாம் பகுதியில் இடம் பெற்றிருந்த ஹிஜாப், நிகாப் தொடர்பான விடயங்களை மேற்கோள் காட்டியது குறித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நூலை வாசித்துப் பார்த்த போதும், அந்த உரையை கேட்ட போதும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டதற்கு மாற்றமாகவே அந்த நூலிலும் உரையிலும் இருந்த விடயங்கள் காணப்பட்டனஇதனைக் கண்டு நான் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன். இவ்வாறான பொருப்பு வாய்ந்த ஒரு சபை இப்படி செய்திருக்குமா என்ற கேள்விதான் என்னுள் எழுந்தது. உண்மையில் இப்படியான போக்கு எங்கு மேல் எழுந்தாலும் அது கண்டனத்துக்குரியதே.
            அதைவிட ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்த விடயம் அந்த அறிக்கை குறித்த ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு இன்னோர் தரப்பபை நோக்கி பேசுவது போல் அமைந்திருந்தமை. அது இந்த அறிக்கையில் மாத்திரமல்ல ஜம்இ்ய்யதுல் உலமாவின் பல பத்வாக்களும் அந்த தொணியிலும் பாணியிலுமே அமைந்திருந்தமையை அவதானித்த போது மிகவுமே அதிர்ச்சியாக இருந்தது. உண்மையில் அந்த பத்வாக்கள் ஒரு வகையான நலுவல் பாணியில் அமைந்த உபதேசங்களாகவே பல போது அமைந்திருக்கின்றனவே அல்லாமல் ஒரு தலைமையில் இருந்து வருகின்ற நடு நிலையான பத்வாவாக இல்லை. இவை தப்பித் தவறியாவது சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப் படுமாயின் பாரிய சிக்கல்களை தரவல்லவையாக காணப்படுகின்றன. ஒரு பொது சபை குறித்த ஒரு மத்ஹபை சார்வதோ, சிந்தனைப் பள்ளியை சார்வதோ எந்தளவு தூரம் பொருத்தமானது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அது பொதுவில் விடயங்களை அனுக வேண்டும். அதுவும் சிறுபான்மையாக நாம் வாழும் இந்த நாட்டிலே இன்றைய காலப் பகுதியில் மிகவுமே நேர்மையாக இவை அமைவதே வேண்டத்தக்கதாகும்.
            அதைப் பார்க்கிலும் வருத்தத்துக்குரிய விடயம் இந்த நாட்டிலே முஸ்லிம் சமூகத்திற்கும், இந்த நாட்டிற்குமுரிய தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ முதன்மைப் பிரச்சினைகள் இருக்க, ஸஹாபாக்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாட்டிற்குரிய விடயமாக அமைந்த ஒரு விடயம் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாவை ஒற்றை நிலைப்பாட்டில் வைத்துக் கொண்டு  “நிகாப், ஹிஜாப் தொடர்பான மார்க்கத் தெளிவுக் கருத்தரங்கு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளது.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாகும்.
            இது பிரச்சினைக்குரியதல்ல என்றிருந்தாலும் இதைப் பார்க்கிலும் முக்கியமான சமூகப் பிரச்சினைகளான வறுமை, அதனடியாக பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பெற்றுச் செல்லுதல், சிறுவர் துஷ் பிரயோகம், போதைப் பொருள் பாவனை, குடும்ப சீரழிவும் பாலியல் முறை கேடுகளும்...போன்ற விவகாரங்களிலும் முதன்மையான கவனத்தை இது போன்ற விடயங்களில் எடுப்பதைப் பாரக்கிலும் இந்த நிறுவனம் எடுக்குமாயின் அதுவே வரவேற்கத் தக்கதாகும்.
            இஸ்லாம் எந்த இடத்திலும் முன் பின் முரணான, வெளிப்படைத் தன்மையற்ற நிலைப்பாடுகளை கொண்டதல்ல. அப்படி நடப்பது அதன் விழுமியங்களுக்கான அடிப்படை முரண் கொண்டதாகும். இப்படியான ஒரு மனோ நிலையில் இந்த சமூகம் வழிநடாத்தப்படுவது இஸ்லாத்தின் போக்கிற்கு மாற்றமானதாகும்.
இந்த வகையில் ஜம்இய்யதுல் உலமாவின் இந்த விடயங்கள் சம்மந்தமாக இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பொருப்பு வாய்ந்தவர்கள், நிறுவனங்கள் கவனத்தை செலுத்துவது முக்கியமானது. இன்றைய சூழலில் குறைந்த பட்சம் மார்க்கத் தீர்ப்பு போன்ற மிகவுமே பொருப்பு வாய்ந்த சட்டம் சொல்லும் நிலை பற்றிய ஒழுங்குகள், முறைமைகள் குறித்துப் பேசுவது நிகாப் குறித்த மாநாடு நடாத்துவதைப் பார்க்கிலும் முக்கியமானதாகும். இது குறித்து ஜம்இய்யதுல் உலமா மீள் பரிசீலனை செய்வது சிறந்தது. இதனை சமூகத்தின் தலைமைகள் கவனத்தில் எடுப்பது இன்றை காலத்தின் கடமையாக உள்ளது. இல்லாத போது அது எமது சமூகத்தின் பிளவுக்கும் வீணான பிரச்சினைகளுக்கும் மாத்திரமல்லாமல், இந்த நாட்டின் இன ஐக்கியத்திற்கும் இஸ்லாம் குறித்த பிழையான பதிவுகளுக்கும் காரணமாக அமையும்.
இந்த விடயங்களில் கடந்த காலங்களில் கவனம் அற்ற ஒரு நிலையில் இருந்திருப்பதை இட்டு மார்க்கத்தை கற்ற, இந்த நாட்டினதும், சமூகத்தினதும் பொருப்பு வாய்ந்த ஒரு அங்கத்தவன் என்ற வகையில் என்னை மன்னித்துக் கொள்ளுமாறு சமூகத்திடம் வேண்டி விடை பெறுகிறேன்.
அல்லாஹ் எம்மை பொருந்திக் கொள்வானாக
இப்படிக்கு
உங்கள் சகோதரன்
அஷ். ஷெய்க் எம்.என்.இக்ராம்
14.09.2016

குறிப்பு: இந்த வேண்டுகோள் எனது தனிப்பட்ட வேண்டுகோளாகும். இதனை நான் சார்ந்த எந்த நிறுவனங்களுடனும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாம் என்பதை மிகவும் பணிவாய் வேண்டிக் கொள்கிறேன்.


Monday, September 12, 2016

ஈதுல் அழ்ஹா இறைத் தூதர்கள் கிடைக்கப் பெற்றமைக்கு நன்றி செலுத்தும் தினம்



ஈதுல் அழ்ஹா குறித்து ஸுரா ஹஜ்ஜின் 37 வது வசனம் “அல்லாஹ்வை அதன் இறைச்சியோ,இரத்தமோ சென்று சேர்வதில்லை...எனினும் உங்களிடமிருந்து தக்வா அவனைச் சென்று சேர்கிறது....இவ்வாறு, உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியமைக்காக அவனை பெருமைப் படுத்துவதற்காக அந்த கால்நடைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்..” 
ஈதுல் பித்ர் இறைத் தூதை பெற்றமைக்காக றப்பை பெருமைப்படுத்தும் நாளாக...நேர்வழி என்ற றப்பின் அருளுக்கு நன்றி செலுத்தும் நாளாக இருப்பது போன்றே...ஈதுல் அழ்ஹா இறைத் தூதர்கள் கிடைத்தமையை கொண்டாடும் தினம்
உண்மையில் இந்த இரு நிகழ்வுகளும் ஏன் இபாதத்களாக மாற்றப்பட்டு கொண்டாடப் படுவதற்கானவையாகக் காணப்படுகின்றன? என்ற கேள்வி நமக்கு எழ முடியும்.
ஆம், இதற்கான பதிலை தினமும் நாம் எமது தொழுகைகளில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்...அதுதான் “எமக்கு நேரான பாதையை காட்டித் தருவாயாக“ என்ற பிரார்த்தனை...ஹிதாயத் என்னும் நேர்வழி எமது வாழ்வின் அடிப்படைத் தேவை..அது இல்லாது போகின்ற போதுதான் எமது தனிப்பட்ட வாழ்வில் குழப்பங்கள் தோன்றுகின்றன...குடும் வாழ்வில் சிக்கல்கள் தோன்றுகின்றன...எமது பொருளாதார, அரசியல் மற்றும் சமூக வாழ்வில் பிரச்சினைகள் தேன்றுகின்றன....
எனவேதான் மனிதனைப் படைத்து அவனுக்கு இந்த உலகின் அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்த றப்பு அவனுக்கான வழிகாட்டலையும் வழிகாட்டிகளையும் வழங்கினான். முதல் மனிதன் ஆதம் (அலை) ஒரு நபியாக இருந்தமையே இதற்கு போதிய சான்றாகும். இந்தத் தொடரில்தான் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாக இந்தத் தூதை சுமந்து வந்து முஸ்லிம் உம்மத்திடம் அந்தப் பணியை தனது இறுதி ஹஜ்ஜின் போது அறபா வெளியில் நின்று....“இந்த செய்தியை இங்கு சமூகம் தந்தோர் தராதோருக்கு எத்தி வையுங்கள்“ என ஒப்படைத்துச் சென்றார்கள்.
இனி இந்தப் பணியை இந்த உம்மத் சுமந்தாக வேண்டும்.இது சாதாரண பணியல்ல...இது இந்த உலகிற்கு தலைமை கொடுக்கும் பணி....இந்த உலகின் அத்தனை ஏற்ற இறக்கங்களுக்காகவும் பதில் சொல்லும், சாட்சி சொல்லும் பணி....அதனை தான் நிவேற்றி விட்டேனா என இறைத் தூதர் அன்று ஹஜ்ஜிலே கூடியிருந்தவர்களிடம் சாட்சி கோரியது இதற்காகத்தான்...அந்த தூதர்கள் இந்தப் பணியை சுமந்து செய்த தியாகங்களுக்கு முன்னால் அந்தப் பணியைக் கூட இன்னும் சரியாக விளங்கிக் கொள்ளாத நாம் எம்மாத்திரம்?!...ஸுரா ஹஜ்ஜின் இறுதியிலும், ஸுரா பகராவிலும் இன்னும் சில இடங்களிலும் “நாம் உங்களை மனித சமூகத்துக்கு சாட்சியாக அமைத்தோம், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார்” என இதனை குர்ஆன் கூறுகிறது... “உங்களுக்கு நேரும் கஷ்டங்களெல்லாம் அவரால் சகிக்க சிரமமான துன்பங்களாயுள்ளன“ என இறைத் தூதர் இந்தப் பணியை எப்படி சுமந்தார் என குர்ஆன் எமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது... 
இனி, இதனை நினைவு கூற ஏன் இப்றாஹீம்(அலை) அவர்களது பணியின் தியாகங்கள் தெரிவு செய்யப்பட்டன என்ற கேள்வி இங்கு எழுகிறது... இதற்கும் அல்-குர்ஆன் ஸுரா ஹஜ்ஜின் இறுதி வசனத்திலேயே பதில் சொல்கிறது(இந்த வசனம் ஒரு முஸ்லிமின் பணியை சுருக்கமாக சொல்லும் வசனம் என இமாம் பன்னா சொல்வார்)...“ .....இது உங்கள் தந்தை இப்றாஹிமின் மார்க்கம்,அவர்தான் உங்களுக்கு முஸ்லிம் என பெயர் வைத்தார்...” இறைத் தூதர் இதனை ஒரு சமயம் “நான் இப்றாஹிமின் பிரார்த்தனை...” குறிப்பிட்டார்...இதனை ஸுரா பகராவின் 124 முதல் 163 வரையான வசனங்களில் மிகவும் அழகாககவும் ஆழமாகவும் றப்பு விளக்குகிறான்... இப்றாஹீமும் இஸ்மாஈலும் கஃபாவின் அத்திவாரத்தை உயர்த்திவிட்டு எமது சந்ததியில் ஒரு முஸ்லிம் உம்மத்தும்.. ஒரு தூதரும் வர வேண்டும் என்று கேட்ட பிரார்த்தனைக்கான பதில்தான் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர் இறுதியாக நபிமாரின் பணியை சுமத்திச் சென்ற இந்த முஸ்லிம் உம்மத்தும்... அல்- குர்ஆனை பிரட்டிச் செல்கின்ற போது கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் சில ஸுராக்களின் தொடரும் உள்ளடக்கமும் கூட எனக்கு இந்த செய்தியை நினைவூட்டியது... இதனை ஒரு காத்திராவாக பல இடங்களில் நான் நினைவு கூர்வதுண்டு... அதுதான் ஸுரா அல்- அன்பியா 21 வது ஸுரா அதன் உள்ளடக்கமும் அதுதான்... அதனை அடுத்த 22வது ஸுரா, ஸுரா ஹஜ்...அதன் உள்ளடக்கம் தூது அதன் பணி யார் மீது பொருப்பு என்பது... அடுத்தது ஸுரா முஃமினூன் 23 வது ஸுரா...இது தூதை சுமப்போரின் பண்புகள் குறித்து பேசுகிறது... இறைத் தூதர் நபிமார்களிடமிருந்து பெற்ற இந்தப் பணியை 23 வருடங்கள் சுமந்தார் அல்லது 22 வருடங்கள் சுமந்த பணியை 23வது வருடத்தில் முஸ்லிம் உம்மத்திடம் ஹஜ்ஜின் வாயிலாக ஒப்படைத்துச் சென்றார்... இனி நாம் அதனை சுமக்க வேண்டும்..இதனையே ஹஜ்ஜும் அதன் கிரியைகளும் வருடா வருடம் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது...
இந்தப் பின்னணியில் இருந்து கொண்டு நாம் ஹஜ்ஜையும் அதன் கிரியைகளையும் கொண்டாட்டங்களையும் பார்க்கும் போது அது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது....உண்மையில் இந்தப் பணியை விட்டும் நமது வாழ்வை கழற்றி வைத்து சிந்தித்துப் பாருங்கள்...அது சிதிலம் சிதிலமாக உடைந்துபோகிறது...அதற்கான அர்த்தம் தொலைந்து பேகின்றது...
இனி இந்தப் பின்னணியில் இருந்து கொண்டு நாம் ஹஜ்ஜின் ஒவ்வொரு நிகழ்வாய் விளக்க முடியும் அதனை குர்ஆன் அழகாக விளக்குகிறது...அதனை இங்கு ஒவ்வொன்றாய் பகிர்ந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்...இங்கு நாம் எல்லோருமாய் நிறை வேற்றும் உழ்ஹியா குறித்து சற்று நோக்குவோம்...
இதனை ஸுர ஸாப்பாத்தின் 100வது வசனத்திலிருந்து 113 வது வசனம் வரை சுருக்கமாக றப்பு விளக்குகிறான்.....இப்றாஹீம் (அலை) தனது தூதை சுமக்க ஒரு ஸாலிஹான சந்ததியை கேட்கிறார்...றப்பு அவரது முதுமையில் அதற்கு பதில் கொடுக்கிறான் .. தூதை சுமக்கும் நிதானம் கொண்ட ஒரு நபி அவருக்கு சந்ததியாகக் கிடைக்கிறது...அவரது பிரார்த்தனை உண்மையா என்ற சோதிப்பத்தான் இஸமாஈலை அறுப்பது பற்றிய கட்டளை...அதில் அவர் வென்று விடுகிறார்...அவரை றப்பு முஹ்ஸின் என புகழாரம் சூடி ஒரு ஆட்டை பரிசாக வழங்குகிறான்...றப்பு தனது அடியானின் உள்ளத்தை பொருத்த வரை ரோசம் கொண்டவன் என்று இறைத் தூதர் சொல்வார்...அதில் தன்மீதான அன்பை பார்க்கிலும்வேறு எதுவும் மிகைக்கக் கூடாது என அவன் விரும்புகிறான்...அதற்கு அவன் பொருத்தமானவன்...இத்தனை நிஃமத்களை எமக்கு அவன் தந்த பின்பும் அவன் அதை உரிமை கோருவதில் என்ன தவரு இருக்கப் போகிறது?!.இதை குர்ஆன் இன்னும் பல இடங்களிலும் விரிவாக விளக்கும்....இதில் நபி இப்றாஹீம்-இஸ்மாஈல் உறவு....அவர்கள் இறை கட்டளையை நிறைவேற்றவும் மகனிடம் ஆலோசனை கேட்ட தந்தை மகன் ஜனநாயக உறவுகள் எல்லாம்இங்கு பேசவில்லலை...அதனைத்தாண்டி....நாம் ஒரு விஷேட நிகழ்விருந்தால் எப்படி ஒரு பிராணியை அறுத்து விருந்துவைப்போமோ...அதனைப் பாரக்கிலும் ஒரு விஷேட நிகழ்வுதான் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் அல்லது ஈதுல் அழ்ஹா...இது எமக்கான விஷேட தினம் மாத்தரமல்ல..இது மானிட சமூகத்துக்கான விஷேட தினம்...ஆனால் ,இந்த வணக்கத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் பின்னால்... நாம் இந்தப் பணியை சுமக்கும் தயார் நிலையுடன் இருக்கிறோமா?..மானிட சமூகத்துக்கு தலைமை வழங்கும் தகுதி நமக்கு இருக்கிறதா?...மானிட சமூகத்தின் அத்தனை துன்பங்களும் நம்மை சுடுகிறதா?...அதற்காக கவலைப் படுகிறோமா?....அதற்காக நாம் எம்மை எமது உடமைகளை, சந்ததிகளை தியாகம் செய்யும் மனப் பக்குவத்தை பெற்றுள்ளோமா?....என வினாக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன....இந்த ஈதுல் அழ்ஹா இவற்றுக்கு விடை தருமா?!

ஈதுல் அழ்ஹா இறைத் தூதர்கள் கிடைக்கப் பெற்றமைக்கு நன்றி செலுத்தும் தினம்



ஈதுல் அழ்ஹா குறித்து ஸுரா ஹஜ்ஜின் 37 வது வசனம் “அல்லாஹ்வை அதன் இறைச்சியோ,இரத்தமோ சென்று சேர்வதில்லை...எனினும் உங்களிடமிருந்து தக்வா அவனைச் சென்று சேர்கிறது....இவ்வாறு, உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியமைக்காக அவனை பெருமைப் படுத்துவதற்காக அந்த கால்நடைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்..” 
ஈதுல் பித்ர் இறைத் தூதை பெற்றமைக்காக றப்பை பெருமைப்படுத்தும் நாளாக...நேர்வழி என்ற றப்பின் அருளுக்கு நன்றி செலுத்தும் நாளாக இருப்பது போன்றே...ஈதுல் அழ்ஹா இறைத் தூதர்கள் கிடைத்தமையை கொண்டாடும் தினம்
உண்மையில் இந்த இரு நிகழ்வுகளும் ஏன் இபாதத்களாக மாற்றப்பட்டு கொண்டாடப் படுவதற்கானவையாகக் காணப்படுகின்றன? என்ற கேள்வி நமக்கு எழ முடியும்.
ஆம், இதற்கான பதிலை தினமும் நாம் எமது தொழுகைகளில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்...அதுதான் “எமக்கு நேரான பாதையை காட்டித் தருவாயாக“ என்ற பிரார்த்தனை...ஹிதாயத் என்னும் நேர்வழி எமது வாழ்வின் அடிப்படைத் தேவை..அது இல்லாது போகின்ற போதுதான் எமது தனிப்பட்ட வாழ்வில் குழப்பங்கள் தோன்றுகின்றன...குடும் வாழ்வில் சிக்கல்கள் தோன்றுகின்றன...எமது பொருளாதார, அரசியல் மற்றும் சமூக வாழ்வில் பிரச்சினைகள் தேன்றுகின்றன....
எனவேதான் மனிதனைப் படைத்து அவனுக்கு இந்த உலகின் அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்த றப்பு அவனுக்கான வழிகாட்டலையும் வழிகாட்டிகளையும் வழங்கினான். முதல் மனிதன் ஆதம் (அலை) ஒரு நபியாக இருந்தமையே இதற்கு போதிய சான்றாகும். இந்தத் தொடரில்தான் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாக இந்தத் தூதை சுமந்து வந்து முஸ்லிம் உம்மத்திடம் அந்தப் பணியை தனது இறுதி ஹஜ்ஜின் போது அறபா வெளியில் நின்று....“இந்த செய்தியை இங்கு சமூகம் தந்தோர் தராதோருக்கு எத்தி வையுங்கள்“ என ஒப்படைத்துச் சென்றார்கள்.
இனி இந்தப் பணியை இந்த உம்மத் சுமந்தாக வேண்டும்.இது சாதாரண பணியல்ல...இது இந்த உலகிற்கு தலைமை கொடுக்கும் பணி....இந்த உலகின் அத்தனை ஏற்ற இறக்கங்களுக்காகவும் பதில் சொல்லும், சாட்சி சொல்லும் பணி....அதனை தான் நிவேற்றி விட்டேனா என இறைத் தூதர் அன்று ஹஜ்ஜிலே கூடியிருந்தவர்களிடம் சாட்சி கோரியது இதற்காகத்தான்...அந்த தூதர்கள் இந்தப் பணியை சுமந்து செய்த தியாகங்களுக்கு முன்னால் அந்தப் பணியைக் கூட இன்னும் சரியாக விளங்கிக் கொள்ளாத நாம் எம்மாத்திரம்?!...ஸுரா ஹஜ்ஜின் இறுதியிலும், ஸுரா பகராவிலும் இன்னும் சில இடங்களிலும் “நாம் உங்களை மனித சமூகத்துக்கு சாட்சியாக அமைத்தோம், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார்” என இதனை குர்ஆன் கூறுகிறது... “உங்களுக்கு நேரும் கஷ்டங்களெல்லாம் அவரால் சகிக்க சிரமமான துன்பங்களாயுள்ளன“ என இறைத் தூதர் இந்தப் பணியை எப்படி சுமந்தார் என குர்ஆன் எமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது... 
இனி, இதனை நினைவு கூற ஏன் இப்றாஹீம்(அலை) அவர்களது பணியின் தியாகங்கள் தெரிவு செய்யப்பட்டன என்ற கேள்வி இங்கு எழுகிறது... இதற்கும் அல்-குர்ஆன் ஸுரா ஹஜ்ஜின் இறுதி வசனத்திலேயே பதில் சொல்கிறது(இந்த வசனம் ஒரு முஸ்லிமின் பணியை சுருக்கமாக சொல்லும் வசனம் என இமாம் பன்னா சொல்வார்)...“ .....இது உங்கள் தந்தை இப்றாஹிமின் மார்க்கம்,அவர்தான் உங்களுக்கு முஸ்லிம் என பெயர் வைத்தார்...” இறைத் தூதர் இதனை ஒரு சமயம் “நான் இப்றாஹிமின் பிரார்த்தனை...” குறிப்பிட்டார்...இதனை ஸுரா பகராவின் 124 முதல் 163 வரையான வசனங்களில் மிகவும் அழகாககவும் ஆழமாகவும் றப்பு விளக்குகிறான்... இப்றாஹீமும் இஸ்மாஈலும் கஃபாவின் அத்திவாரத்தை உயர்த்திவிட்டு எமது சந்ததியில் ஒரு முஸ்லிம் உம்மத்தும்.. ஒரு தூதரும் வர வேண்டும் என்று கேட்ட பிரார்த்தனைக்கான பதில்தான் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர் இறுதியாக நபிமாரின் பணியை சுமத்திச் சென்ற இந்த முஸ்லிம் உம்மத்தும்... அல்- குர்ஆனை பிரட்டிச் செல்கின்ற போது கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் சில ஸுராக்களின் தொடரும் உள்ளடக்கமும் கூட எனக்கு இந்த செய்தியை நினைவூட்டியது... இதனை ஒரு காத்திராவாக பல இடங்களில் நான் நினைவு கூர்வதுண்டு... அதுதான் ஸுரா அல்- அன்பியா 21 வது ஸுரா அதன் உள்ளடக்கமும் அதுதான்... அதனை அடுத்த 22வது ஸுரா, ஸுரா ஹஜ்...அதன் உள்ளடக்கம் தூது அதன் பணி யார் மீது பொருப்பு என்பது... அடுத்தது ஸுரா முஃமினூன் 23 வது ஸுரா...இது தூதை சுமப்போரின் பண்புகள் குறித்து பேசுகிறது... இறைத் தூதர் நபிமார்களிடமிருந்து பெற்ற இந்தப் பணியை 23 வருடங்கள் சுமந்தார் அல்லது 22 வருடங்கள் சுமந்த பணியை 23வது வருடத்தில் முஸ்லிம் உம்மத்திடம் ஹஜ்ஜின் வாயிலாக ஒப்படைத்துச் சென்றார்... இனி நாம் அதனை சுமக்க வேண்டும்.. இதனையே ஹஜ்ஜும் அதன் கிரியைகளும் வருடா வருடம் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது...
இந்தப் பின்னணியில் இருந்து கொண்டு நாம் ஹஜ்ஜையும் அதன் கிரியைகளையும் கொண்டாட்டங்களையும் பார்க்கும் போது அது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது.... உண்மையில் இந்தப் பணியை விட்டும் நமது வாழ்வை கழற்றி வைத்து சிந்தித்துப் பாருங்கள்... அது சிதிலம் சிதிலமாக உடைந்துபோகிறது... அதற்கான அர்த்தம் தொலைந்து பேகின்றது...
இனி இந்தப் பின்னணியில் இருந்து கொண்டு நாம் ஹஜ்ஜின் ஒவ்வொரு நிகழ்வாய் விளக்க முடியும் அதனை குர்ஆன் அழகாக விளக்குகிறது... அதனை இங்கு ஒவ்வொன்றாய் பகிர்ந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்... இங்கு நாம் எல்லோருமாய் நிறை வேற்றும் உழ்ஹியா குறித்து சற்று நோக்குவோம்...
இதனை ஸுர ஸாப்பாத்தின் 100வது வசனத்திலிருந்து 113 வது வசனம் வரை சுருக்கமாக றப்பு விளக்குகிறான்..... இப்றாஹீம் (அலை) தனது தூதை சுமக்க ஒரு ஸாலிஹான சந்ததியை கேட்கிறார்... றப்பு அவரது முதுமையில் அதற்கு பதில் கொடுக்கிறான் .. தூதை சுமக்கும் நிதானம் கொண்ட ஒரு நபி அவருக்கு சந்ததியாகக் கிடைக்கிறது... அவரது பிரார்த்தனை உண்மையா என்று சோதிப்பதுதான் இஸமாஈலை அறுப்பது பற்றிய கட்டளை... அதில் அவர் வென்று விடுகிறார்... அவரை றப்பு முஹ்ஸின் என புகழாரம் சூடி ஒரு ஆட்டை பரிசாக வழங்குகிறான்... றப்பு தனது அடியானின் உள்ளத்தை பொருத்த வரை ரோசம் கொண்டவன் என்று இறைத் தூதர் சொல்வார்... அதில் தன்மீதான அன்பை பார்க்கிலும் வேறு எதுவும் மிகைக்கக் கூடாது என அவன் விரும்புகிறான்... அதற்கு அவன் பொருத்தமானவன்... இத்தனை நிஃமத்களை எமக்கு அவன் தந்த பின்பும் அவன் அதை உரிமை கோருவதில் என்ன தவரு இருக்கப் போகிறது?!. இதை குர்ஆன் இன்னும் பல இடங்களிலும் விரிவாக விளக்கும்.... இதில் நபி இப்றாஹீம்-இஸ்மாஈல் உறவு.... அவர்கள் இறை கட்டளையை நிறைவேற்றவும் மகனிடம் ஆலோசனை கேட்ட தந்தை மகன் ஜனநாயக உறவுகள் எல்லாம்இங்கு பேசவில்லலை... அதனைத்தாண்டி.... நாம் ஒரு விஷேட நிகழ்விருந்தால் எப்படி ஒரு பிராணியை அறுத்து விருந்துவைப்போமோ... அதனைப் பார்க்கிலும் ஒரு விஷேட நிகழ்வுதான் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் அல்லது ஈதுல் அழ்ஹா... இது எமக்கான விஷேட தினம் மாத்திரமல்ல.. இது மானிட சமூகத்துக்கான விஷேட தினம்... ஆனால், இந்த வணக்கத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் பின்னால்... நாம் இந்தப் பணியை சுமக்கும் தயார் நிலையுடன் இருக்கிறோமா?.. மானிட சமூகத்துக்கு தலைமை வழங்கும் தகுதி நமக்கு இருக்கிறதா?... மானிட சமூகத்தின் அத்தனை துன்பங்களும் நம்மை சுடுகிறதா?... அதற்காக கவலைப் படுகிறோமா?.... அதற்காக நாம் எம்மை எமது உடமைகளை, சந்ததிகளை தியாகம் செய்யும் மனப் பக்குவத்தை பெற்றுள்ளோமா?.... என வினாக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.... இந்த ஈதுல் அழ்ஹா இவற்றுக்கு விடை தருமா?!

Friday, August 19, 2016

நீங்கள் யூசுபை கொலை செய்துவிடுங்கள் (மீள்பார்வ-143,18 ஜனவரி2008) www.alrewak.net



ஆரம்ப நாட்கள் எப்பொழுதும் அழகிய, கவர்ச்சிமிகு காலமாகவே இருக் கும். அந்நாட்களில் தாஈ விரிந்த தோப்பு களுக்குள்ளால் ஆனந்தமாக உலா வரு வார். அங்கே அவர் ஆழ்ந்த சுகந்தத்தை நுகர்வார். இன்னோர் இடத்தில் மலர்கள் அவரை வருடிக் கொடுக்கும். இனிய தென்றல் அவரை புல்லரிக்க வைக்கும். அவர் அழகிய, பார்க்கும் கண்களைக் கவரும் ஆனந்த மழையில் நனைந்து கொண்டிருந்த சிறிய யூசுபைப் போன்றி ருப்பார். அவர் வசந்த காலத்தின் அனை த்து ஆனந்தங்களையும் பருகிக் களிப் படைவார்.
அவர் அடக்கமாகக் கற்றுக் கொள்வார். பணிவோடு பிறரை மதிப்பார். சொல்பவற்றை கவனமாக காது தாழ்த்திக் கேட் பார். இந்த வசந்தம் மிகு கவர்ச்சியான சூழ லில் அவர் தன்னைப் பற்றி பெருமிதம் கொள்வார். இஸ்லாத் திற்காக செயற்படு கின்ற இப்படியான மனிதர்களுக்கு மத்தி யில் அவரது வாழ்வு இன்பமானதாயும் அருள் நிறைந்ததாயும் காணப்படும். அங்கு நிலவும் ஆனந்தமான சூழ்நிலையில் அன் பும் தூய்மையும் இறை வனுக்காக செயற்படு கின்ற ஆர்வமும், சுவ னத்தையும் அதன் அந் தஸ்த்தையும் யாசிக் கும் போக்கும் புதிதாக அந்த சூழலுக்கு வந்த தாஈயியை பூமியை விட்டும் ஓரடி தூரம் உயர இருக்கச் செய்யும்.
புதிதாக அமைப்புக்குள்ளால் வந்த இந்த தாஈ அமைதியான இயல்புடன் எதைப் பந்றியும் உரையாடாமல் எதை யும் புதிதாக சிந்திக்காமல் தனது செயற் பாட்டில் புதிய நுட்பங்களை கையாலா மல் தனது சுய ஆற்றல்களில் எதையுமே பயன்படுத்தாது தான் இருக்கும் நிறு வனத்தின் போக்கிற்கு சிறிதும் மாற்ற மாக சிந்திக்காமல் இருந்தால் அவர் தொடர்ந்தும் அனைவராலும் அங்கீகரிக் கப்பட்ட தாஈயாக இருப்பார். அவர் அந்த ஆரம்ப வசந்தத்தில் தொடர்ந்தும் சுற்றித் திரியலாம். அவருக்கு தன்னைத் தவிர எதைப் பற்றியும் எந்தக் கவலை யும் இருக்க மாட்டாது. அவர் ஓர் ஓரத்தில் இருந்து கொள்வார்.
இதற்கு மாற்றமாக அவர் உரையாடத் துவங்கினால், கருத்தச் சொல்ல முற் பட்டால், புதிதாகக் கண்டுபிடிக்க, புதிய முறைகளைக் கையாள முயன்றால், தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு அமைப்பில் வித்தியாசமாகத் தென்பட் டால், வழமையாக பழக்கப்பட்ட ஒழுங் குக்கு மாற்றமாக வித்தியாசமான முறையில் சிந்தித்து செயற்பட முற்பட் டால் அங்கு கலங்கமும், கவலையும், போட்டியும், ஒடுக்குதலும் தோன்ற ஆரம்பிக்கும். அது அவரது எல்லா செயற்பாடுகளையும் பாதிக்கும். ஒவ் வொரு நாளும் அவர் கசப்பான பானங் களை அருந்த வேண்டியிருக்கும். அவ ருக்கு வசந்த காலம் இலையுதிர் கால மாக மாறத் துவங்கும். பலபோது அது கடுமையான குளிர் காலமாய் மாறி அவரை வீட்டில் அடங்கி இருக்க நிர்ப்பந்திக்கும். இந்தப் புயலால் அவர் தனது செயற்பாடுகளை காலம் தாழ்த்திச் செய்ய ஆரம்பிப்பார்.
தஃவா நிறுவனத்தினுள் இஸ்லாமிய அழைப்பாளன் காணும் இந்தக் கலங்க மும் கவலையும் பொறாமையும் ஒடுக் குதலும் மோசமான போட்டியும் பொய் யான சில வார்த்தைகளால் நியாயப் படுத்தப்படலாம். சிலபோது அது தஃவாவின், அமைப்பின் நலன் என்று கூறப்படும். சிலபோது மனித உள்ளங் களை ஆழமாக விளங்குதல் என்று கூறப்படும். சிலபோது மோசமான மதிப்பீடுகளால் அது நியாயப்படுத்தப் படும். அதற்கு ஷரீஅத்திலோ ஒழுக்க ரீதியாகவோ எந்த ஆதாரமும் காணப்பட மாட்டாது. இப்படி நிறைய நியாயங்கள் அடிக்கடி போலி வாசகங்களால் கூறப் பட்டுக் கொண்டே இருக்கும்.
உள்ளங்களிலே காணப்படும் பொறாமை, குரோதம், இயலாமை போன்ற நோய்களை மறைப்பதற்கான காரணங்களாக அவை காணப்படும். அவர்கள் தமது தஃவா நிறுவனங்களின் மீது தாம் தமது பெற்றோரிடமிருந்து அவற்றை வாரிசாகப் பெற்றது போன்று அதிகாரம் செலுத்திக் கொண்டிருப்பார் கள். அவர்கள் தாம் விரும்பும் அடிப்ப டையில் தமது நிறவனத்தை வழிநடாத்து வதற்குரிய சூழலை அங்கு உருவாக்கி வைத்திருப்பர். அங்கு யாருக்கும் சுதந் திரமாகவும் புத்தாக்கத்துடனும் தலை யீடு செய்ய முடியாமலிருக்கும்.
யூசுபின் சகோதரர்கள்
யூசுபின் சகோதரர்கள் அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருந்த தோற்ற அழகினை ஏற்றுக் கொள்ளவில்லை. நபியாக இருந்த தனது தந்தையிடத்தில் அவருக்கிருந்த அந்தஸ்த்தையும், அல் லாஹ் தனது தூதைக் கொடுப்பதற்காக அவரிலே ஏற்படுத்தியிருந்த  ஆளுமை வேறுபாட்டையும் அவர்களால் அங்கீ கரிக்க முடியவில்லை. எனவே அவரை இல்லாதொழிக்கத் தீர்மானித்தனர்.
நீங்கள் யூசுபை கொலை செய்து விடுங்கள் அல்லது பூமயில் எங்காவது ஓர் இடத்தில் அவரை எறிந்து விடுங்கள். அப்போது உங்கள் தந்தையின் முகம் முழுமையாக உங்கள் பக்கம் திரும்பி விடும். அதன் பின்னர் நீஙகள் நல்ல கூட்டத்தினராகி விடுவீர்கள்” (யூசுப்: 09).
இப்படித்தான் கொலை அல்லது துரத்திவிடல் ஏதோ ஒரு தொலைவில் ஒதுக்கிவிடுதல் என்பதுதான் இங்கு தீர்வு. இந்தத் தீர்வுக்கு யூசுபின் சகோதரர் கள் வரக் காரணம் யூசுபும் அவரது சகோதரரும் எங்கள் தந்தைக்கு மிகவும் விருப்பத்துக்குரியவராக இருக்கிறார். நாமோ பலசாலிகளாக இருக்கிறோம்என்பதுதான். யூசுப் மீது அவரது தந்தை கொண்டிருந்த அன்புதான் அவர்கள் இந்தத் தீர்மானத்திற்கு வரக் காரணம்.
யூசுபின் சகோதரர்களது இந்தத் தீர் மானத்துக்குரிய உண்மையான காரணம் உளநோய்தான். இன்றும் இப்படியான தீர்மானங்களுக்கு இயக்கங்களுக்குள்ளால் வருவோரின் அடிப்படைப் பிரச்சி னையும் இந்த உளநோய்தான்.
யூசுபின் சகோதரர்கள் யூசுபை வெளிப்படையாகவே கொலை செய்ய வேண்டுமென பேசினர். ஆனால், இன் றுள்ளவர்களோ இளைய யூசுப்களை கருத்து ரீதியாக கொலை செய்கிறார்கள். இது அவர்களை ஓரங்கட்டுவதன் மூலம் அல்லது அவர்களைப் பற்றி பொய்யான கற்பனைகளை பரப்புவதன் மூலம் அவர்களுக்கு செயற்படுவதற்கான ஒழுங்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்காமல் யூசுப்களை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
யூசுபின் சகோதரர்களோ அவரை பால் கிணற்றில் எறிந்தார்கள். ஆனால் இன்றுள்ளவர்களோ தமது சகோதரர் களை இயக்கச் செயற்பாட்டில் பால் கிணறுகளில் போட்டு வருகின்றனர். அவர்கள் தமது சகோதரர்களை ஓரம் கட்டி விட்டு அவர்களால் எந்தப் புதிய சாதனைகளும் நிகழாத வண்ணம் பார்த் திருக்கின்றனர்.
யூசுபின் சகோதரர்கள் யூசுபை ஒழித் தால் தாம் நல்லவர்களாக இருப்போம் என்றனர். இன்று சிலரை ஒதுக்குவதற் காக தஃவாவின் நலன் அல்லது தஃவா விலுள்ள அனுபவ முதிச்சியால்தான் தாம் அவரை ஒதுக்கினோம் என பல நியாயங்களைச் சொல்லி தாம் தஃவா அணியின் முன்னணியில் இருக்க முயற் சிப்பர்.
யூசுபின் சகோதரர்கள் தாம் அவரைக் கொள்ள முன்னரே தௌபாவை செய்து கொண்டனர். இன்றும் அப்படித்தான் கருத்து ரீதியாக பலரைக் கொலை செய்து கொண்டே தொழுகையும், திக்ரும், பாவமன்னிப்பும் நடக்கும். ஷஹீத் செய்யித் குதுப் சொல்வது போன்று எல்லாமே தயார் செய்யப்பட்ட தௌபா.
யூசுபின் சகோதரர்கள் கொலை செய் யத் தீர்மானித்து விட்டு அதனை உப தேசமாகவும் அவர் மீது அவர்கள் கொண்ட ஆர்வமாகவும் ஓநாயிலிருந்து அவரை பாதுகாப்பதற்கான முயற்சியாக வும் காட்ட முனைந்தனர். இன்றும் அப் படித்தான், எல்லாவற்றையும் செய்து விட்டு உபதேசம், தஃவாவின் நலன், கரிசனை போன்ற பல காரணப் பெயர் களை வைத்து தமது செயற்பாடுகளை நியாயப்படுத்துவர்.
இப்படியான சூழல் தஃவா அமைப் புக்களுள் நிலவுமாயின் அங்கு பல பாதாலக் கிணறுகளுக்குள் பல திறமை யான புத்தாக்கச் சிந்தனை கொண்ட பலர் எறியப்படுவர். உண்மையில் இது மோசமான ஒரு சூழல். இது தவிர்க்கப் பட வேண்டும். இல்லாவிடின் நல்ல ஆளுமைகள் தஃவா அமைப்புகளை விட்டும் தூரமாகி விடுவர். ஏனெனில் இப்படியான நல்ல ஆளுமைகள் எப் போதும் அமைதியான சூழலையே விரும்புவர். எனவே அப்படியான சூழ லைத் தேடி அவர்கள் இயக்கத்தினுள் ஒதுங்கி விடுவர் அல்லது இயக்கத்தை விட்டும் தூரமாகியே போய்விடுவர்.
நிர்வாகத் துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர் முஹம்மத் அப்துல் ஜவாத் இது பற்றிக் கூறுகையில், தலை மைத்துவங்களுக்கு நிர்வாக ரீதியான பயிற்றுவித்தலில் உள்ள குறைபாடும் ஈமானியப் பலவீனமுமே இதற்குக் காரணம். சிறந்த ஈமானிய உள்ளம் வாழ்வை குறுகிய வட்டத்தில் பார்க்க மாட்டாது, அடுத்தவர்களின் வெற்றியி னால் அது சங்கடப்படவும் மாட்டாது. அது வாழ்வை விசாலமான கண் கொண்டு பார்க்கும். அடுத்தவர்களின் முன்னேற்றத்தால் தனது வெற்றி பாதிக் கப்படும் என அது ஒருபோதும் சிந்திக்க மாட்டாது.
இப்படியான மோசமான ஒரு சூழல் நிறுவனங்களுக்குள், இயக்கங்களுக்குள் நிலவுமாயின் அங்கு சுயநலம் தலை விரித்தாடும். அங்கு வேலைகளிலன்றி அடுத்தவனுக்கு குழி பறிப்பதிலும் தன்னை பிரபல்யப்படுத்திக் கொள்வதி லுமே கவனம் குவிந்திருக்கும். இதன் போது அங்குள்ள வேலைகள் வெறு மனே கடமைக்காகச் செய்யப்படுபவை யாகவே இருக்கும். அதில் எந்த நேர்த்தி யும், ஒழுங்கும் காணப்பட மாட்டாது.
கூட்டாக சேர்ந்து செயற்படுகின்ற இடங்களில் இவ்வாறான விடயங்கள் தோன்றுவது தடுக்க முடியாததுதான். என்றாலும் தஃவா அமைப்புகள் சமூகத் துக்கு மிகச் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். எனவே இதுபோன் றவை இயல்பானவை என்று விட்டு விடாமல் இப்படியான சூழல் தோன்று வதிலிருந்தும் தமது அமைப்புக்களைப் பேணிக் கொள்ள வேண்டும். இதற்கு சிறந்த தூய்மையான தலைமைகள் அங்கு தோற்றுவிக்கப்படுவதுவும் ஒரு தீர்வாக அமையும்.
ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி தனது முதல் கட்டுரையை பத்திரிகை யில் எழுதிய அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார். அந்தக் கட்டுரைக்கு எல்லா இடங்களிலுமிருந்தும் விமர்சனங்கள் தாராளமாக வரத் துவங்கின. இதனால் நான் மனச் சோர்வடைந்து போனேன். இந்நிலையில் இமாம் ஹஸனுல் பன்னா விடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் நான் உங்கள் கட்டுரையை வாசித்து முகம் மலர்ந்து போனேன். அதனை நீங்கள் குத்ஸின் ஆன்மாவை உங்களிடம் வைத்துக் கொண்டா எழுதி னீர்கள்என்று எழுதியிருந்தார்.
ஷெய்க் மஹ்பூழ் நஹ்நாஹ் சில சகோதரர்களோடு உட்கார்ந்து தஃவா செயற்பாடுகள் பற்றியும் அதற்காக ஆட் களை தெரிவு செய்வது பற்றியும் உரை யாடிக் கொண்டிருந்தார். இதன்போது அவர் நீங்கள் துணிவுள்ள புரட்சி மனப் பாங்குள்ள (முஷாஇப்) இளைஞர்களை தெரிவு செய்யுங்கள். அவர்கள் தஃவா செயற்பாட்டிற்கு மிகவும் பயனுள்ள வர்கள்என்றார்.
இவர்கள் போன்ற தலைமைத்துவங் களால்தான் இஸ்லாமிய அமைப்புகளுக் கான நல்ல தெரிவுகள் இடம்பெற முடியும். இவர்கள்தான் மனிதர்களை சரியான பெறுமானங்களால் அளவீடு செய்வார்கள். இல்லாதபோது மனிதர் களுக்கு மத்தியில் காணப்படும் இயல்பு வேறுபாடுகளை கவனத்தில் கொள் ளாது எல்லோரையும் நாம் விரும்பிய வண்ணம் எமக்கு ஒத்துப்போகும் வண் ணம் மாற்ற முயல்கிறோம். மாறாத போது பால் கிணற்றில் தூக்கியெறிந்து விடுகிறோம்.
மலையேறிப் பழக்கமற்றவன் எப் போதும் பாதளக் கிடங்கில் வாழ்வதே கதியாகிவிட்டது என்ற ஒரு கவிஞனின் கவிதை வரிகள்தான் இங்கு ஞாபகத் திற்கு வருகிறது.

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...