தஃவாவில் அல்குர்ஆன் பிரதான இடத்தை வகிக்க வேண்டு மெனப் பார்த்தோம். ஒரு தாஈக்கும் அல் குர்ஆனுக்குமிடையே நெருக்கமான உறவு இருக்க வேண்டுமென்பதில் இரு கருத்து இருக்க முடியாது. அந்த உறவு வெறும் சட ரீதியான உறவாக அல் லாமல் உயிருள்ள ஆத்மார்த்த மான உறவாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தாஈ அல்குர்ஆனிலிருந்து தாக்கம்பெற முடியும்.
அல்குர்ஆனை மூல மொழியில் புரிந்துகொள்ள முடியுமானவர் தான் அதிலிருந்து உயிரோட்டமான தாக்கத்தைப் பெற முடியுமாக இருக்கும். அதன் மொழிபெயர்ப்புக்களை வாசிக்கும் ஒருவரால் அதன் கருத்துக்களைப் படிக்க முடியுமே தவிர அதிலிருந்து பாதிப்புப் பெறுவதென்பது சிரமமான காரியமாகத்தான் இருக்கும். அதன் தொடராக அல்குர்ஆனின் பாதிப்பு இல்லாமல் அதன் கருத்துக்களை மாத்திரம் உள்வாங்கிக் கொண்டு ஒருவர் தஃவாவில் ஈடுபடும்போது அவரது தஃவாவில் நிச்சயம் உயிரோட்டம் குறைவாகத்தான் காணப்படும்.
அவர் தனது அன்றாட வணக்க வழிபாடுகளைக் கூட சிறந்த பாதிப்புடன் நிறைவேற்றுவது சாத்தியமில்லாமல் போகும். அவை வெறுமனேகடமைக்குச் செய்யப்படுவனவாகவே இருக்கும். அதன் தொடராய் தஃவாவும் கடமைக்கான செயற்பாடாய் இருக்குமேயொழிய அந்த மனிதனுடன் முழுமையாக கலந்துவிட்ட ஒரு பணியாக இருக்க மாட்டாது.
இந்த வகையில்தான் தஃவாவில் ஈடுபாடு காட்டிய முன்னைய இமாம்களும் தற்கால இமாம்களும் அல்குர்ஆனின் மொழியான அறபு மொழியை முஸ்லிம்கள் கற்பதை “வாஜிப்” என்று குறிப்பிடு வார்கள். இதனால்தான் உலகில் உள்ள எந்த முஸ்லிமும் குறைந்த பட்சம் அறபு மொழியை வாசிக்கவாவது கற்றிருப்பதை நாம் காண்கிறோம். அப்படியில்லாதபோது அல்குர்ஆனின் சில வசனங் களைக் கூட உச்சரிக்கவாவது அவன் தெரிந்திருப்பான்.
வரலாற்றில் இஸ்லாமிய தஃவாவை பரப்புவதில் ஈடுபட்ட தாஈக் கள் அறபு மொழியையும் அதனுடன் சேர்த்துப் பரப்புவதில் இயல் பாகவே ஈடுபட்டுள்ளார்கள். “இஸ்லாமிய தஃவா வரலாறும் அதன் வளர்ச்சியும்” என்ற உரையில் ஷெய்க் முஹம்மத் அஹ்மத் றாஷித் அவர்கள் இந்தக் கருத்தை மிக அழகாக விளக்குகின்றார்கள். “இஸ் லாமிய வரலாற்றில் தஃவா சென்று சேர்ந்த இடங்களிலெல்லாம் ‘தஃரீப்’ எனப்படும் அறபு மயமாக்கல் என்ற பணியும் இடம் பெற்றேவந்துள்ளது.
அந்தப் பணி இடம்பெறாமல் போனது மிகவும் அரிதே. எனவே தான் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்குட்பட்டிருந்த நாடுகளில் உத்தி யோகபூர்வ மொழியாக அறபு மொழி இருந்திருப்பதைக் காண்கிறோம்” என்கிறார்.
நவீன காலாத்தின் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இந்தியாவி லிருந்து பிரிக்கப்பட்டபோது மஸ்ஊதுன் நத்வி போன்ற அறிஞர்கள் பாகிஸ்தானின் உத்தியோகபூர்வ மொழியாக அறபு மொழியை மாற்ற முயற்சித்தனர். எனினும் அந்த முயற்சிகள் திட்டமிடப் படாமல் செய்யப்பட்டன. எனவே, பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக மாறாமல் போனமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணமென ஷெய்க் முஹம்மத் அஹ்மத் றாஷித் அவர்கள் விளக்குகிறார்கள். இஸ்லாத்திற்கெதிராக போர்தொடுத்த எதிரிகள் பிரதானமாக செவ்வறபு மொழியை வழக்கிலிருந்து ஒதுக்கி கிளைமொழி களை மேலோங்கச் செய்வதில் திட்டமிட்டு செயற்பட்டனர்.அதன் விளைவாக அறபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்குள்ளேயே ஒரு சாரார் இன்னோர் சாராருடன் தொடர்பு வைக்க முடியாமல் போனது. அத்தோடு செவ்வறபு மொழியில் அமைந்துள்ள அல்குர்ஆனையும் ஹதீஸையும் விட்டும் மக்கள் தூரமாயினர்.
அதேபோன்று மொழியை அடிப்படையாகக் கொண்டு தேசிய உணர்வுகளை ஊட்டி முஸ்லிம் தேசத்தை பல நாடுகளாகப் பிரித்த னர். இந்த நடவடிக்கையின் உச்ச நிலையைத்தான் நாம் இறுதியாக இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியுறச் செய்யப்பட்ட துருக்கியில் கண் @டாம். தொழுகைக்கான அதான் துருக்கிய மொழியில் அமைய வேண்டும். ஓதல்களும் அம்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பன போன்ற வாதங்களெல்லாம் அங்கு முன்வைக்கப்பட்டன.
இதனால்தான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் செவ்வறபு மொழியை பேசுமாறு தமது சகோதரத்துவ அமைப்பைச் சார்ந்தவர்களை ஊக்குவித்தார்கள். அதனை இஸ்லாமிய அடையாளங்களுள் ஒன்றாகக் கருதினார். இமாம் பன்னாவின் “பைனல் அம்ஸி வல் யௌம்” என்ற ரிஸாலாவில் இஸ்லாமிய சமூகத்தின் வீழ்ச்சிக்கான காரணிகளை அவர் அடையாளப்படுத்துகிறார்.
அதில் ஒரு காரணியாக அறபு மொழி தெரியாத ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தமையையும் ஒரு காரணமாகக் குறிப்பிடுகிறார். அறபு மொழி தெரியாதவர்கள் ஆட்சிக்கு வந்தமையால் அவர்களால் இஸ்லாத்தை சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போனதாயும், அல்-குர் ஆனிலிருந்து பாதிப்புப் பெற முடியாமல் போனதாயும், இதனால் அவர்களால் சமூகத்தை சரியாக வழி நடத்த முடியாமல் போனதாயும் அவர் அந்த ரிஸாலாவில் விளக்கிச் செல்கிறார்.
இந்தப் பின்னணிகளுடன் பார்க்கின்றபோது இஸ்லாமிய தஃவாக் களத்தில் இஸ்லாமிய சிந்தனையைப் பரப்புவதில் சரிநிகராக நாம் அறபு மொழியையும் பரப்ப வேண்டிய தேவை இருப்பதையும் உணர்கிறோம். அறபு மொழியல்லாத மாற்று மொழிகளை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு மத்தியில் தஃவாப் பணி யில் ஈடுபடுபவர்கள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.அறபுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடையே செவ்வறபு மொழியைப் பரப்புவதும் தஃவாவின் பணியாக இருக்கும். இந்தப் பணி பெருமளவு தூரத்திற்கு அறபு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதை காண்கிறோம். சென்ற நூற்றாண் டின் 50களுக்கு முன்னரேயே அதன் அவசியம் பற்றி ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி போன்றவர்களாலும் பேசப்பட்டது. அதன் விளைவாக அறபு மொழியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள் இன்று அந்நாடுகளில் செயற்பட்டு வரு வதைக் காண்கிறோம்.
இந்தவகையில் எமது நாட்டில் நாம் இதனை எப்படித் தொடங்க முடியும். அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன என்பது தொடர்பில் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் நோக்குவோம். அல்லாஹ் எம்மைப் பொருந்திக் கொள்ளட்டும்.
No comments:
Post a Comment