ஸுஜுத்
உலகில் அடியான் அல்லாஹ்வை நெருங்கியிருப்பதற்கான
சந்தர்ப்பம்.இதனை அல்-குர்ஆன்
"واسجد
واقترب " –العلق:19-
“ஸுஜுத் செய்து அவனை நெருங்குங்கள்” என குறிப்பிடுகிறது.நபியவர்கள் இது தொடர்பாக அதிகம்
வழியுருத்தியுள்ளார்கள்.
عن أبي هريرة أن رسول الله صلى
الله عليه وسلم قال : أقرب ما يكون
العبد من ربه وهو ساجد ، فأكثروا الدعاء - . رواه أحمد ومسلم وأبو داود والنسائي - .
“அடியான் அல்லாஹ்வை அதிகம் நெருங்கியிருக்கும் சந்தர்ப்பம்,அவன் ஸுஜுதிலிருக்கும்
சந்தர்ப்பமாகும்.எனவே,அதிலே அதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.”
இங்கு நெருக்கம் என்பதனை,அல்லாஹ்
ஸுஜுதில் கேட்கும் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறான் என்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.அதனை
ஸுரா பகராவின்
أنه قريب بإجابة الدعاء
”
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون - “البقرة : 186 –
“என்னைப் பற்றி எனது அடியான் வினவினால்,நான் சமீபமாக இருந்து பிரார்த்திப்பவிராரத்தனைகளுக்கு
பதிலளிக்கின்றேன்….”என்ற வசனத்தை வைத்து விளக்கப்படுகிறது.இதனை பின்வரும் ஹதீஸும் உறுதிப்படுத்துகிறது.
«وأما
السجود فاجتهدوا في الدعاء فقمن أن يستجاب لكم»
“ஸுஜுதைப் பொருத்தவரை நீங்கள் அதில் பிரார்த்தனை செய்ய சிரமம் எடுத்துக்
கொள்ளுங்கள்.ஏனெனில் அது உங்களுக்கு பதிலளிக்கப்படத்தக்க பிரார்த்தனையாகும்”
عن ثوبان قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول : { عليك بكثرة السجود فإنك لن
تسجد لله سجدة إلا رفعك الله بها درجة ، وحط بها عنك خطيئة } .رواه أحمد ومسلم وأبو
داود .
“நீங்கள் அதிகமாக ஸுஜுத் செய்யுங்கள்,நீங்கள்
அல்லாஹ்வுக்காக ஒரு ஸுஜுத் செய்தால் அல்லாஹ் உங்களது ஒரு அந்தஸ்த்தை உயர்த்துகிறான்.ஒரு
தவரை மன்னிக்கிறான்.”
وروى مسلم في صحيحه أيضاً عن ابن عباس رضي الله
عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: ((ألا إني نهيت أن أقرأ القرآن راكعاً
أو ساجداً، فأما الركوع فعظموا فيه الرب، وأما السجود فاجتهدوا في الدعاء فقمن أن
يستجاب لكم))
“அல்-குர்ஆனை ருகூஃவிலும்,ஸுஜுதிலும்
ஓதுவது எனக்கு தடுக்கப்பட்டுள்ளது.ருகூ.வை பொருத்தவரை அதில் றப்பை மகத்துவப்படுத்துங்கள்.
ஸுஜுதைப் பொருத்தவரை நீங்கள் அதில் பிரார்த்தனை செய்ய சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்.ஏனெனில்
அது உங்களுக்கு பதிலளிக்கப்படத்தக்க பிரார்த்தனையாகும்”
عن ربيعة بن كعب قال : (كنت
أبيت مع النبي صلى الله عليه وسلم آتيه بوضوئه وحاجته ، فقال : سلني ، فقلت : أسألك
مرافقتك في الجنة ، فقال : أو غير ذلك ؟ فقلت : هو ذاك ، فقال : أعني على نفسك بكثرة
السجود (رواه أحمد ومسلم والنسائي وأبو داود .
றபீஆ இப்னு கஃப்(றழி)அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:“நான்
நபியவர்களுடன் அவருக்கு பணிவிடைகள் செய்து கொண்டு இரவில் தங்கியிருந்தேன்.அச்சந்தர்ப்பத்தில்
நபியவர்கள் எனது தேவைகளை அவரிடம் வினவுமாறு கேட்டார்கள்.நான் சுவனத்தில் உங்களுடன்
இருக்க விரும்புகிறேன் என்றேன்.வேறு ஏதாவது தேவைகள் உண்டா எனக் கேட்ட போது.அதுதான்
எனக்கு தேவை என்றேன்.அதற்கு நபியவர்கள்:அதிகம் ஸுஜுத் செய்து அதற்காக உமக்கு உதவி பெற்றுக்
கொள்”என்றார்கள்.
" وحرم الله على النار أن تأكل آثار السجود "-البخاري-
“அல்லாஹ் ஸுஜுதின் அடையாளங்களை நரக நெருப்பு சாப்பிடுவதை
ஹராமாக்கியுள்ளான்”
இங்கு
ஸுஜுத் என்பது தொழுகையில் ஸுஜுத் செய்தல்,அதாவது அதிகம் நபிலான வணக்கங்கங்களில் ஈடுபடுவதன்
ஊடாக இது சாத்தியப்படுகிறது.எனவேதான் இங்கு அதிக ஸுஜுத்களுக்கான தூண்டுதல் என்பது,அதிக
நபிலான தொழுகைகளுக்கான தூண்டுதல் என விளக்கப்படுகிறது.அத்துடன் தொழுகைக்கு புறம்பாக
செய்யப்படும் ஸஜ்ததுத் திலாவா,ஸஜ்ததுஷ் ஷுக்ர்…என்பனவும் இங்கு அடங்கும்.
அதே
போல் தொழுகையில் நீண்ட ஸுஜுதா அல்லது கியாமா சிறந்தது என்ற இரு கருத்துக்கள் இந்த விடயம்
தொடர்பில் காணப்படுகின்றன.இதில் பெரும்பாலானவர்கள் நீண்ட கியாம் சிறந்தது எனக் கூறுகின்றனர்.ஏனெனில்
நபியவர்களது நீண்ட கியாம் பற்றியே ஹதீஸ்கள் வந்துள்ளன அதே போல் நீண்ட குனூத் உடைய தொழுகை
சிறந்தது என ஹதீஸ் வந்துள்ளது.எனக் கூறுகின்றனர். எனினும் இந்த இரண்டையும் இணைத்துப்
பார்ப்போர் இவை இரண்டும் நீண்டதாக காணப்படுவது சிறந்தது என்கின்றனர்.
அடுத்து,ஸுஜுதில்
எந்த பிரார்த்தனைகளை கேட்பது என்ற விடயம் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.இதனைப்
பொருத்த வரை ருகூஃ அல்லாஹ்வை புகழ்வதற்கான இடமாகவும் ஸுஜுத் பிரார்த்திப்பதற்கான இடமாகவும்
ஹதீஸினூடாக அடையாளப்படுத்தப்படுகிறது. அது தொழுகையாக அமையின் பிரார்த்தனை அறபு மொழியில்
அமைவது பொருத்தம்.அடுத்து நபியவர்களால் ஓதப்பட்ட பிரார்த்தனைகளை முதன்மைப்படுத்துவது
அவரது ஸுன்னாவைப் பின்பற்றிய நன்மையை தருவதோடு,எமது தேவைகள் அனைத்தையும் பொருத்தமான
அமைப்பில் கேட்பதற்கான வாய்ப்பாகவும் அமையும்.அத்தோடு எமது தேவைகள் விருப்பங்களை நாம்
தாராளமாக கேட்கலாம்.இதில் தொழுகையில் அறபு மொழியால் கேட்க முடியாதோர் மனதால் தமது மொழியில்
அதனை கேட்கலாம் என்ற விதிவிலக்கு காணப்படுகிறது.
இங்கு
பிரார்த்னை எனும் போது அல்லாஹ்வுடனான முனாஜாத் இடம் பெறுவதே முக்கியமானதாகும்.அல்லாஹ்வை
நாம் நமது இயலுமையில் நெருங்கும் போது அவனது நெருக்கும் பாரியதாக இருக்கும் என ஹதீஸ்
குறிப்பிடுகிறது.அப்படியாயின் ஸுஜுதின் நெருக்கம் எத்தகைய ஒரு அரிய வாய்ப்பு என்பது
சொல்லப்பட வேண்டிய அவசியம் இருக்காது.இச்சந்தர்ப்த்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்வதற்காக
ஸுஜுதில் நபியவர்கள் ஓதிய பிரார்த்னைகளை கருத்தறிந்து கற்றுக் கொள்வதும் முக்கியமானது.
நபியவர்கள்
ஸுஜுதில் ஓதிய பிரார்த்தனைகள்
1. ( اللهم اغفر ذنبي
كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره ) رواه مسلم .
“யாஅல்லாஹ் எனது அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக.அது மிகவுமே அற்பமானதாய்
இருக்கலாம்,பாரியதாக இருக்கலாம்.ஆரம்பத்தில் செய்ததாக இருக்கலாம்,இறுதியாக செய்ததாக
இருக்கலாம்.அது பகிரங்கமாக செய்ததாக இருக்கலாம்,இரகசியமாக செய்ததாக இருக்கலாம்”
2.
(سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي) -الصحيحين-
“யாஅல்லாஹ்,எங்கள் றப்பே!நீ தூய்மையானவன்.யாஅல்லாஹ் உனது புகழை முன்னிலைப்படுத்திக்
கேட்கிறோம்.எம்மை மன்னிப்பாயாக.”
3.
( سبوح قدوس رب
الملائكة والروح ) -صحيح مسلم-
“அவன் அதிகம் துதிக்கப்படுபவன்,அதிகம் புனிதப்படுத்தப்படுபவன்.அவன் ஜிப்ரீலினதும்
மலாஇகாக்களதும் றப்பாக இருக்கிறான்.”
4.
( اللهم لك سجدت
وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره فأحسن صوره فشق سمعه وبصره فتبارك
الله أحسن الخالقين ) - صحيح مسلم-
“யாஅல்லாஹ் உனக்கு சிரம் பணிந்தோம்(ஸுஜுத் செய்தோம்),உன்னை ஈமான் கொண்டோம்,உனக்கு
கட்டுப்பட்டோம்.எனது முகத்தை அதனை படைத்து,செப்பணிட்டு,அதன் தோற்றத்தை அழகுபடுத்தி,அதில்
பார்வைப் புலனையும்,கேள்விப் புலனையும் ஏற்படுத்தியவனுக்கு முன் பணியச் செய்கிறேன்.அழகிய
படைப்பாளனாகிய அல்லாஹ் பரகத் பொருந்தியவன்.”
5.
(سبحانك وبحمدك
لا إله إلا أنت ) - صحيح مسلم-
“நீ தூய்மையானவன்,உனது புகழால்தான் அனைத்தும்,உன்னைத் தவிர வேறு இலாஹ்
இல்லை”
6.
(اللهم إني أعوذ برضاك من سخطلك ، وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك
لا أحصي ثناءً عليك أنت كما أثنيت على نفسك )-مسلم وأصحاب السنن-
“யா அல்லாஹ் உனது வெறுப்பிலிருந்து உனது திருப்தியை
பாதுகாத்து தருமாறு கேட்கிறேன்.உனது தண்டனையிலிருந்து உனது மன்னிப்பை பாதுகாத்து தருமாறு
கேட்கிறேன்.நான் உன்னிடம் உனது கோபத்திலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன்.உன்னை நீ புகழ்ந்தது போல் என்னால் உனது புகழை கணக்கிட முடியாது.”
7. عقبة بن عامر الجهني
يقول: «لما نزلت {فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ} قال لنا رسول الله صلى الله
عليه وسلّم: اجعلوها في ركوعكم، فلما نزلت {سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلاعْلَى} قال: اجعلوها
في سجودكم».-أحمد-
“மகத்தான உமது றப்பின் பெயரை துதிப்பீராக” என்ற வசனம் இறங்கியபோது இதனை
உங்களது ருகூஃவில் வைத்துக் கொள்ளுங்கள் என றஸுல்(ஸல்)அவர்கள் எமக்கு கூறினார்கள்.“உயர்ந்த
உங்களது றப்பின் பெயரை துதியுங்கள்” என்ற வசனம் இறங்கியதும் அதனை உங்களது ஸுஜுதில்
வைத்துக் கொள்ளுங்கள் என நபியவர்கள் கூறினார்கள்.
8.
عن حذيفة-رضي-أن رسول الله –صلعم- كان يقول في سجوده :( سبحان ربي
الأعلى) رواه أحمد ومسلم وأصحاب السنن- .
“உயர்ந்த எனது றப்பு தூய்மையானவன்” என நபியவர்கள் ஸுஜுதில் ஓதிவரக்கூடியவர்களாக
இருந்தார்கள்.
9. وأما دعاء( يا مقلب
القلوب ثبت قلبي على دينك) ، فقد رواه الترمذي وحسنه عن أم المؤمنين عائشة رضي
الله عنها - وقد كان هذا الدعاء أكثر دعائه عليه الصلاة والسلام ولم ينقل والله
أعلم - أنه كان يقوله في سجوده - ولو قاله أحد في سجوده فلا حرج عليه لأن السجود
موضع دعاء ،
“உள்ளங்களை புரட்டுகிறவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக”
என்ற பிரார்த்தனை நபியவர்கள் அதிகம் ஓதிய துஆக்களுள் ஒன்றாகும்.எனினும் இதனை அவர்கள்
ஸுஜுதில் ஓதினார்கள் என்ற பதிவு இடம்பெறவில்லை.ஆனாலும் இதனை ஸுஜுதில் ஓதுவதில் எத்தகைய
தடையும் கிடையாது.ஏனெனில் ஸுஜுத் பிரார்த்தனைக்குரிய இடமாகும்.
- (اللهم اجعل في قلبي
نورًا، وفي سمعي نورًا، وفي بصري نورًا، وعن يمينى نورًا، وعن يساري نورًا،
وأمامي نورًا، وخلفي نورًا، وفوقي نورًا، وتحتي نورًا، واجعلني نورًا – أو
قال واجعل لي نورًا(-مسلم و
أحمد-
“யாஅல்லாஹ்!எனது
உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக.எனது செவியில் ஒளியை ஏற்படுத்துவாயாக.எனது பார்வையில்
ஒளியை ஏற்படுத்துவாயாக.எனது வலது புறம் ஒளியை ஏற்படுத்துவாயாக.எனது இடப் புறம் ஒளியை
ஏற்படுத்துவாயாக.எனக்கு முன்னால் ஒளியை ஏற்படுத்துவாயாக.எனக்கு பின்புறமாக ஒளியை ஏற்படுத்துவாயாக.எனக்கு
மேலாக ஒளியை ஏற்படுத்துவாயாக.எனக்கு கீழாக ஒளியை ஏற்படுத்துவாயாக.எனக்கு ஒளியை ஏற்படுத்திவிடுவாயாக.”
- رواه النسائي أيضاً عن عوف بن مالك أن الرسول صل الله عليه
وسلم كان يقول في سجوده: "سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة".
وصححه الألباني.
“ஆட்சியையும், அதிகாரத்தையும், பெருமையையும், மகத்துவத்தையும்
சொந்தமாக வைத்திருப்பவன் தூய்மையானவன்”
- عن أبي موسى
الأشعري - رضي الله عنه - عن النبي - صلى الله عليه وسلم - أنه كان يدعو بهذا
الدعاء :” اللهم اغفر لي خطيئتي وجهلي ، وإسرافي في أمري ، وما أنت
أعلم به مني ، اللهم اغفر لي جدي وهزلي ، وخطئي وعمدي وكل ذلك عندي ، اغفر لي
ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني ، أنت المقدم وأنت
المؤخر ، وأنت على كل شيء قدير.“ ( متفق عليه )
“யாஅல்லாஹ்!எனது தவறுகளை மன்னிப்பாயாக.எனது அறியாமையை
மன்னிப்பாயாக.எனது விவகாரங்களில் ஏற்படும் வீண்விரயங்களை மன்னிப்பாயாக.அவைபற்றி என்னைப்
பார்க்கிலும் நீ அறிந்து வைத்திருப்பவையே அதிகம்.யாஅல்லாஹ்!நான் சீரியஸாகவும் பொடுபோக்காகவும்
செய்யும் பிழைகள்,நான் தவறுதலாக செய்பவை,வேண்டுமென்றே செய்பவை என என்னிடமிருந்து வருகின்ற
அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக.நான் முன்னர் செய்தவை,பின்னர் செய்தவை,இரகசியமாக
செய்தவை,வெளிப்படையாய் செய்தவை என அனைத்து பிழைகளையும் பொருத்தருளுவாயாக.அவை பற்றி
என்னைப்பார்க்கிலும் நீஅறிந்தவைகளோ அதிகம்.நீயே முற்படுத்துபவன்.நீயே பிற்படுத்துபவன்.நீ
சர்வமும் செய்யும் வல்லமை படைத்தவன்.”
அடுத்து, அதிகம் ஸுஜுத் செய்யவும் பிரார்த்திப்பதற்கும்
பொருத்தமான பொழுதாக இரவின் இறுதிப்பகுதி காணப்படுகிறது.அச் சந்தர்ப்பத்தை நாம் அதிகம்
பயன்படுத்திக் கொள்வோம்.
(أقربُ ما يكون الرب من عبده، فى جوف
الليل الآخر) رواه الترمذي (3579) وهو حديث صحيح
“றப்
பு தனது அடியானை மிகவுமே நெருங்கியிருக்கும் தருணம் இரவின் கடைசிப் பகுதியாகும்”
وذلك حين ينزل تبارك وتعالى في الثلث
الأخير من الليل، فيقول: «هل من سائل فأعطيه، هل من داع فأستجيب له، هل من مستغفر فأغفر
له».
“மாட்சிமை மிக்க றப்பு இரவின் இறுதிப் பகுதியில் கீழ் வானில் இரங்கி
வந்து கூறுவான்: என்னிடம் கேட்போர் யாருமிருக்கின்றனரா ?நான் அவர்களுக்கு கொடையளிப்பதற்காக.என்னிடம்
பிரார்த்திப்பவர்கள் இருக்கிறார்களா?அவற்றுக்கு பதிலளிக்க.பாவமன்னிப்பு கோருவோர் யாருமிருக்கின்றனரா?அவர்களுக்கு
மன்னப்பளிக்க”
இந்த வகையில் உலகில் அல்லாஹ்வை நெருங்கியிருக்கக்
கிடைக்கும் சந்தர்ப்பத்தை பணன்படுத்தி எம்மை ஆன்மீக ரீதியாக பலப்படுத்திக் கொள்வோம்.அதற்கு
எல்லாம் வல்ல றப்பு எமக்கு அருள்புரியட்டும்.
No comments:
Post a Comment