“நீங்கள் ஒரு முஃமினின் தீட்சண்யப் பார்வையைப் பயந்து கொள்ளுங்கள். அவன் அல்லாஹ்வின்
ஒளியினால் பார்க்கின்றான்சு
(அல்ஹதீஸ்)
தாஈக்கள் களத்தில் மனிதர்களுடன் உறவாடுகிறார்கள். அவர்கள் எதிர்கொள்கின்ற
மனிதர்கள் இஸ்லாத்தை ஆழமாக நம்பி ஏற்ற வர்களாக இருக்கலாம். அதில் பெயரளவில் இருப்பவர்களாக
இருக்க லாம். அதனை எதிர்ப்பவர்களாக இருக்கலாம். சுயநல நோக்கங்க ளுடன் செயற்படுபவர்களாக இருக்கலாம். உலக இலாபங்களை
நோக்காகக் கொண்டு வாழ்பவர்களாக இருக்கலாம். மனோஇச்சைக் குக் கட்டுண்டு செயற்படுபவர்களாக
இருக்கலாம்...
இப்படி பல்வேறுபட்ட மனிதர்களையும் மனித நடத்தைகளை யும் அவர்கள்
களத்தில் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இதன் போது ஒரு தாஈ பெற்றிருக்கும் அறிவினால், திறமையினால், தேர்ச்சி
யினால் மாத்திரம் இவர்களுள் சிறந்தவர்களை இனங்கண்டு, பலவீனர்களுக்கு சிகிச்சையளித்து, தீயவர்களை
ஒதுக்கிவைத்து,
எதிரியின் சூழ்ச்சியிலிருந்து தனது தஃவாவைப் பாதுகாத்து; இறை அணியினர்
ஏறிச் செல்லும் தஃவா எனும் கப்பலை கரைசேர்க்க அல்லது பக்குவமாய் இயக்கிச் செல்ல முடியாது.
இதற்கு தனது இரு கண்களுக்கும் புலன்களுக்கும் அப்பால் ஒரு மூன்றாம்
கண் தேவைப்படுகின்றது. அல்லாஹ்வின் ஒளியினால் பார்க்கின்ற பக்குவம் அவனுக்குத் தேவைப்படுகின்றது.
இல்லாத போது அவர் தனது கப்பலை அலைகளுக்குள் பறிகொடுத்து விடுவார்.
இதற்குத் தூய்மையும் இறையச்சமும் நிறைந்த உள்ளம் அவருக் குத்
தேவைப்படுகிறது. “யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகின் றாரோஅவர் வழிதவறவோ கைசேதப்படவோ
மாட்டார். யார் எனது ஞாபகத்தை புறக்கணிக்கின்றாரோஅவருக்கு நெருக்கடியான
வாழ்வு உண்டு. நாம் அவரை மறுமையில் குருடராக எழுப்புவோம்சு (தாஹா: 24) உலகில்
இறை ஒளியால் பார்க்காதவர்கள் குருடர்கள். அவர்கள் மறுமையில் குருடர்களாக எழுப்பப்படுவது
இதனால் தான். “ஈமான் கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டால் அவன் உங்களுக்கு தெளிவை (புர்கான்) ஏற்படுத்துவான்.சு (அன்பால்:
29)
ஒருவர் எத்துனை பெரிய திறமையை அறிவை பெற்றிருந்தாலும் இறை ஒளியினால்
மனிதர்களை, மனித நடத்தைகளை விடயங்களை விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாதபோது அல்குர்ஆன் சொல்வதுபோன்று
பாதையில் நிறையத் தடுமாறுவார்,
நெருக்கடி களை எதிர்கொள்வார், கைசேதப்படுவார். இதனால்தான்
தஃவாப் பாதையில் அதிகமானோர் பிழைகளை செய்துவிட்டு அதுவெல் லாம் ‘அனுபவம்’ என்று சொல்வதைக் காண்கிறோம். ‘நாம் அடை யும் தோல்விகளுக்கு அனுபவம் என்று பெயர் சொல்கிறோம்’ என ஒரு அறிஞர் சொன்ன வார்த்தை இங்கு ஞாபகத்தில் வருகின்றது. நாம் இறையுதவி இன்மையால், இறைவன்
வழங்கும் தெளிவு கிடைக்கப் பெறாமையால் பலபோது தோற்றுப் போய் அதற்கு
அனுபவம் என்று சொல்லிக் கொள்கிறோம்.
ஆன்மீகப் பக்குவத்தால் தீட் சண்யப் பார்வை பெற்றவர்கள் எப்போதும்
தம்மைச் சூழ இருப்பவர்களையும் நிகழ்பவைகளையும் கவனமாகக் கையாள்பவர்களாக இருப்பர். யாருடன்
எப்படி நடக்க வேண்டும்?
யாரை எப்படி கையாள வேண்டும்? யாரை எங்கு வைக்க வேண்டும்? யாருடன்
எதனைப் பேச
வேண்டும்?
எப்படிப் பேச
வேண்டும் என்பதனைப் புரிந்து செயற்படுபவர்களாக அவர் கள் இருப்பார்கள்.
நபியவர்கள் ஸஹாபாக்களுடனும்,
முனாபிக்கு களுட னும்,
குறைஷியர்களுடனும்,
யூதர்களுடனும் உறவாடிய முறை இதற்கு சிறந்த உதாரணங்களாகும். இதற்கு
நபியவர்களுக்கு வஹியின் உதவியும் கிடைத்தது. எனவே, மனிதர்கள் பற்றிய அவர்களது
பார்வை, நிகழ்வுகள் பற்றிய அவர்களது கணிப்பீடுகள் பெரும்பாலும் கூர் மையானதாக, தீர்க்கதரிசனம்
மிக்க தாகக் காணப்பட்டது.
இப்பக்குவத்தை நாம் உமர் (றழி) அவர்களிடம் கண்டுகொள் கின்றோம்.
நபியவர்களது காலம் தொட்டேமுனாபிக்குகள் உமர் (றழி) அவர்களின் பார்வையை தவிர்ந்துகொண்டேவந்தார்கள்.
முனாபிக்குகள் நபியவர்களிடம் பேசும்போது உமர் (றழி) அவர் களின் பார்வையை எதிர்கொண்டால்
அவர்களது பேச்சு
குழம்பி விடும். இதனால் உமர் (றழி) அவர்கள் “நான் தந்திரகாரனுமல்ல.
எந்தத் தந்திரகாரனும் என்னை ஏமாற்றி விடவும் முடியாது"என்றார்கள். இதனால்தான் ஷைத்தானும்கூட உமர் (றழி) நடக்கும் பாதையில்
அவரை நேராக எதிர்கொண்டு வர மாட்டான் என நபியவர்கள் கூறினார்கள்.
உமர் (றழி) அவர்களின் இந்தத் தீட்சண்யப் பார்வையின் உச்ச நிலைதான் மதீனாவில் மிம்பர் மீது இருந்து கொண்டு பாரசீகத்தின் ‘நஹா வன்த்’
இல் இருந்த படையணிக்கு வழிகாட்டியமை. ஒரு தாஈ எப்போதும் தான்
எங்கிருந்தபோதும் எல்லா நிகழ்வுகளையும் கண் காணித்துக் கொண்டும் அவதானித்துக் கொண்டும்
இருப்பார். குறிப்பாக தஃவாவின் முன்னணியில்,
தலைமையில் இருப்பவர் களிடம் இப்பண்பு இருப்பது அவசியமா னது.
இப்பண்பின் இன்னோர் வடிவம்தான் தாஈ தன்னைச் சூழ இருக்கின்றவர்களை
கவனமாக தெரிவுசெய்தலாகும். எப்போதும் முன்னணியில், தலைமையில் இருக்கின்றவர்களது
போக்கில் அவர் களைச் சூழ அமரும் பரிவாரங்களின் செல்வாக்கு முக்கியமானது. தீட்சண்யப்
பார்வைகொண்டவர்கள் எப்போதும் தம்மைச் சூழ சிறந்தவர்களையும் நேர்மையானவர்களையும், தாம் தவறு
செய்யும் போது அச்சமின்றி தம்மிடம் சுட்டிக் காட்டக் கூடிய இறையச்சம் கொண்டோரையுமேவைத்திருப்பர்.
எனவேதான் நபியவர்கள் தனக்கு அருகாமையில் எப்போதும் உமரையும் அபூபக்ரையும் வைத்திருந்தார்கள்.
“எனக்கு அருகாமையில் உங்களில் புத்தி கூர்மையுடையோரும் தீட்சண்யப் பார்வை கொண்டோருமேஇருக்கட்டும்சு எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதனைத்தான் அல்குர்ஆன் “ஈமான் கொண்டவர்களேநீங்கள் உங்களைச் சூழவிருக்கும் பரிவாரங்களாக
உங்களை அல்லாதவர் களை எடுத்துக் கொள்ளாதீர்கள்...” (ஆலஇம்றான்: 118)
என்கிறது.
இறை ஒளியின் நிழலில் மனிதர்களை அளவிடத் தெரியாதவர்கள் தனக்கு
அருகாமையிலிருந்து தன்னைப் புகழும் மனிதரின் வார்த் தையில் பலபோது மயங்கிப் போய் விடுவார். தனது தவறை சுட்டிக் காட்டும் மனிதனை எதிரியாகப் பார்ப்பார். இதன்போது
அவரைச் சூழ எப்போதும் முகஸ்துதி செய்யும் போலி மனிதர்களும் முனா பிக்குகளுமேஉட்கார்ந்திருப்பர்.
ஈற்றில் இதனால் அந்த தாஈயின் கருத்துக்களிலும் அவர்கள் செல்வாக்குச் செலுத்துவர். இதனால்
தானும் பாதையில் சறுக்கி,
மற்றவர்களையும் சறுக்க வைப்பார்.
இங்கு இன்னோர் விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண் டும்.
எந்த ஆன்மீகப் பக்குவமும் அற்ற வெறும் அறிவையும் திறன் களையும் மட்டும்கொண்ட ஒருவர்
தனது மனோ உந்துதலால்,
குறைப்பார்வையால்,
தனது செவியால்,
பிறரின் வார்த்தை யால், தனது உள்ளத்திலுள்ள நோயால்
மனிதர்களை அளவீடு செய்துவிட்டு தனது தீட்சண்யப் பார்வையென்று சொல்ல வரும் முதிர்ச்சியற்ற
நடத்தையையிட்டும் நாம் இங்கு கவன மாய் இருக்க வேண்டும். களத்தில் அப்படியான போலிப் பார்வைகளை நாம்
அடிக்கடி சந்திக்கின்றோம். இப்படியான போலிப் பார்வைகள் எப்போதும் ஆபத்தானவை. அவை ஷைத்தானின்
பார்வைகள்.
ஒரு தாஈயின் பார்வை அதுவல்ல. அது ஒளி நிறைந்த பார்வை. ஆன் மீக
முதிர்ச்சியினால் பெற்றுக் கொண்ட பார்வை. கால்கள் வீங்க இரவில் நின்று வணங்கி, கண்களில்
கண்ணீர் வற்ற இறை வன் முன் அழுது புலம்பி,
அல்குர்ஆனை ஓதும்போது அதன் தாக்கத்தால் நோயுற்ற மனிதர்களால்தான்
இந்தப் பார்வையைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. ஆன்மீகப் பாடசாலையில் உட் கார்ந்திருந்து
இஸ்லாமியப் போதனையைப் பெற்றவர்களால்தான் அப்படிப் பார்க்க முடிந்திருக்கிறது.
நவீனகாலத்தில் இமாம் ஹஸனுல் பன்னா, உமர் தில்மிஸானி
போன்ற மனிதர்கள் இத்தகைய பார்வையை உமரைப் போன்றேபெற்றிருந்தார்கள். இன்றும் இத்தகைய
பார்வையை ஏதோ ஒரு விகிதத்தில் பெற்ற அவர்களது மாணவர்கள் வாழ்கிறார்கள். இது எம்மை விட்டும்
தூரத்தில் உள்ள விடயம் அல்ல. அல்லாஹ்வை நோக்கி நாம் நடக்கத் தயாரானால் இந்தப் பார்வை
எம்மை நோக்கி ஒளியின் வேகத்தைப் பார்க்கிலும் விரைவாய் வந்து சேரும்.
“எனது அடியான் என்னை நோக்கி நடந்து வந்தால்... நான், அவன் பார்க்கின்ற
கண்களாக கேட்கின்ற செவியாக... இருப்பேன்“ என்பது
ஒரு ஹதீஸுல் குத்ஸி எமக்குச் சொல்லும் விடயம்.
இறுதியாக இன்னோர் விடயம், இன்று தஃவா களத்திற்கு உமர்
போன்ற தீட்சண்யப் பார்வை கொண்டவர்கள் நிறையவே தேவைப் படுகிறார்கள். அன்று ஷெய்க் அபுல்
ஹஸன் அலி நத்வி அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்குள் நிகழும் ரித்தத்தை ஒழிக்க அபூபக்ர்
போன்றவர்களைத் தேடினார். ஆனால்,
இன்று தஃவாவில் சிறந்த மனிதர் களை இனங்கண்டு உரிய இடத்தில் அமர்த்தி
பயன்பெற, போலிகளை இனங்கண்டு அகற்றி வைக்க,
பலவீனங்களை இனங்கண்டு சீர்திருத்த உமர் போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.
அல்லாஹ்வே எமக்கு வழிகாட்ட போதுமானவன்.
No comments:
Post a Comment