அல்குர்ஆனின் நிழலில் வாழ்வது ஓர் இன்பம். அது ஓர் இன்பம். அதனை சுவைத்தவர்களைத் தவிர வேறு யாரும் அதனை அறியமாட்டார்கள். அது ஓர் இன்பம். வாழ்வை உயரச் செய்து அதனை தூய்மைப்படுத்தி அருள் புரிகிறது.
அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே...) சிறிது காலம் அல்குர்ஆனின் நிழலில் வாழும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அக்காலப் பகுதியில் எனது வாழ்வில் ஒருபோதும் சுவைத்திராத ஒரு இன்பத்தை அதில் சுவைத்தேன். வாழ்வை உயர்த்தி அதனைத் தூய்மைப்படுத்த அருள் புரியும் இந்த இன்பத்தை நான் அக்காலப்பகுதியில் சுவைத்தேன்.
அல்லாஹ் அவன் தூய்மையானவன்- இந்தக் குர்ஆ னின் மூலம் என்னோடு பேசுவதைக் கேட்ட வண்ணம் நான் வாழ்ந்தேன்.. நானோ அற்பமான ஒரு சிறிய அடிமை... மனிதனுக்கு இந்த மகத்தான உயர்ந்த வேதத்தின் முலம் இத்தனை கண்ணியம் கிடைக்கிறதே இந்த வேதம் மனிதனது வாழ்வை இந்தளவு உயர்த்தி விடுகிறதே? மனிதனுக்கு அவனது படைப்பாளன் இவ்வளவு உயர்ந்தோர் பெறுமானத்தை வழுங்கி யிருக்கிறானா?
நான் உயர்ந்த இடத்தில் இருந்து பூமியில் அலை மோதும் ஜாஹிலிய்யத்தை அவதானித்த வண்ணம் -அல்குர்ஆனின் நிழலில்- வாழ்ந்தேன், ஜாஹிலிய்யத் தின் சொந்தக்காரர்கள் நலிந்து போன அற்ப விடயங் களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை அவதானித்தேன், இந்த ஜாஹிலிய்யத்தின் சொந்தக்காரர்களைத்தான் ஆச்சரியத்தோடு பார்க்கிறேன். அவர்களிடம் குழந்தைத் தனமான அறிவும், கோட்பாடுகளும் இருப்பதைப் பார்க்கிறேன். அது சிறு பிள்ளைகளின் விளையாட்டை அவர்களின் முயற்சிகளை, சேட்டைகளை பெரிய ஒரு மனிதர் பார்ப்பதைப் போன்றிருக்கிறது.
நான் ஆச்சரியப்படுகிறேன்... இந்த மனிதர்களுக்கு என்ன நடந்திருக்கிறது? அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அழுகிய சேற்றிலே புரண்டு கொண்டிருக்கிறார்களே அந்த மகத்தான உயர்ந்த அழைப்பை அவர்கள் செவிமடுக்கிறார்களில்லையே. அது வாழ்வை உயர்த்தி அதனைத் தூய்மைப்படுத்தி அருள் புரிவதற்கான அழைப்பு.நான் அல்குர்ஆனின் நிழலில் இந்தப் பிரபஞ் சத்திற்கான தூய்மையான உயர்ந்த பூரணத்துவம் பெற்ற கொள்கையை உற்றுநோக்கியவனாக வாழ்ந்தேன்... எல்லாவற்றினதும் இருப்பின் இலக்கை சொல்லும் கொள்கை, மனித இருப்பின் நோக்கை விளக்கும் கொள்கை... அக்கொள்கையுடன் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் மனித சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாஹிலிய்யக் கொள்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
நான் வினா எழுப்புகிறேன். எப்படி மனித சமூகம் மாசுபட்ட அழுக்குத் தொட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மிகவும் கீழ் நிலை யில் அதனால் எப்படி வாழ முடிகிறது. மனித சமூகத்திடம் அந்த சிறந்த மேய்ச்சல் நிலம் இருக் கையில் அந்த உயர்ந்த அந்தஸ்து இருக்கையில் அந்தத் தெளிவான ஒளி இருக்கையில் இருண்ட வெளியில் மனித சமூகம் ஏன் வாழ்ந்து கொண்டி ருக்கிறது?
நான் அல்குர்ஆனின் நிழலில் அல்லாஹ் விரும்புகின்ற வகையிலான மனிதனது செயற் பாட்டிற்கும் அல்லாஹ் உருவாக்கிய இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் இடையிலான அழகிய தொடர்பை உணர்ந்தவனாக வாழ்ந் தேன்... பிறகு நான் அவதானிக்கிறேன்... மனித சமூகம் பிரபஞ்ச விதிகளை விட்டும் தடம் புரண்டதால் அனுபவிக்கும் கஷ்டத்தை நான் காண்கிறேன். மனித சமூகத்திற்கு ஒப்புவிக்கப் படும் சீர்கெட்ட மோசமான போதனைகளுக்கும் அதனது இயல்புக்கும் இடையிலான மோதலை நான் காண்கிறேன், நான் எனது உள்ளத்தில் சொல்லிக் கொள்கிறேன், எந்த சபிக்கப்பட்ட ஷைத்தான் மனித சமூகத்தின் போக்கை இந்த நரகை நோக்கி வழிநடாத்திக் கொண்டிருக்கி றானோ?
அடியானுக்கு ஏற்பட்ட கைசேதமே!!!
நான் அல்குர்ஆனின் நிழலில் இந்தப் பிரபஞ் சத்தை அதன் வெளித்தோற்றத்தை விட மிகவும் பெரியதாக பார்த்த வண்ணம் வாழ்ந்தேன். அதன் யதார்த்தத்தில் அது பெரியது. அதன் திசைகளின் எண்ணிக்கையில் அது பெரியது. அது மறை வான உலகும் பௌதீக உலகும் சேர்ந்தது. பௌதீக உலகு மாத்திரமல்ல. அது இம்மையும மறுமையும் சேர்ந்தது. இந்த உலகு மாத்திர மல்ல... இந்த நீண்ட பள்ளத்தாக்குகளிலெல் லாம் மனிதனின் தோற்றம் நீட்சிபெறும்... மரணம் பயணத்தின் முடிவல்ல அது பாதையில் ஒரு கட்டம். மனிதன்இந்த உலகில் பெறு கின்றவை அவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லாப் பங்கும் அல்ல. அது அவனுக்குக் கிடைக்க வேண்டிய பங்கில் ஒரு பகுதியா கும். அவனுக்கு இங்கு கிடைக்கத் தவறு கின்ற கூலிகள் அங்கு அவனுக்கு தப்பி விடாது. அங்கு அநீதியோ நஷ்டமோ, குறைவோ கிடையாது. மனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் மேலால் கழிக்கின்ற காலப் பகுதி உயிருள்ள பரீச்சயமான பிரபஞ்சத் தில் மேற்கொள்ளும் ஒரு பிரயாணம். நட்பும் அன்பும் கொண்ட உலகு மீது இது பெற்றுக் கொள்கின்ற விடை. கொடுக் கின்ற ஆன்மாவுள்ள ஒரு பிரபஞ்சம். உள்ளச்சத்துடன் முஃமினின் ஆன்மா நோக்கிச் செல்கின்ற ஏக படைப்பாளனை நோக்கி அதுவும் செல்கிறது.
“பூமியிலும் வானங்களிலும் உள்ளவர் கள் விரும்பியோ விரும்பாமலோ அல் லாஹ்வுக்கு சிரம்பணிகின்றனர். அவர்க ளது நிழலும் காலையிலும் மாலையிலும் சிரம்பணிகிறது.”
“ஏழு வானங்களும் பூமியும் அவற்றி லுள்ளவர்களும் அவனுக்கு துதி செய்கின் றார்கள். எந்தவொன்றும் அவனது புகழைத் துதிக்காமலில்லை.”
பூரணமான நிறைவான சீரான விசால மான கொள்கை உள்ளத்திலே கரை புரண் டோடச் செய்கின்ற ஆறுதல் தானென்ன, நெருக்கமும் நேசமும் தானென்ன நம் பிக்கை தானென்ன?
தொடரும்...

No comments:
Post a Comment