Friday, December 18, 2015

ஹிஜ்ரத்-(01)ஹிஜ்றத்துக்கு முன்னரான மதீனா

யத்ரிப் நகரின் சிறப்பியல்புகள்

இந்த நகரம் மக்காவுக்கு வடக்கே 300 மைல்  தூரத்தில் அமைந்துள்ளது. அது மிகவும் செழிப்பான பூமி. நீர்வசதி கொண்ட இடம். அங்கு மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுகின்றது. இந்த நகரம் இயற்கை அரண்கள் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது. எதிரிகளின் தாக்குதலில் இருந்து தம்மை
ப்பாதுகாத்துக் கொள்வதற்கு இது வசதியாக அமைந்து காணப்படுகின்றது. யத்ரிபின் கிழக்குப் பகுதியில் ‘ஹுர்ரா வாகிம்’ எனும் கற்பாறைகள் கொண்ட பிரதேசம் காணப்படுகின்றது. அதன் மேற்குப்பகுதியில் ‘ஹுர்ரா வபிரா’ எனும் கற்பாறை காணப்படுகின்றது. அதன் தென்பகுதி பேரீத்தை மரங்களாலும்
, அடர்த்தியான செடிகொடிகளாலும் மூடிக்காணப்படும். யத்ரிபைத் தாக்குவதற்கு படை நகர்த்தப்பட்டால் அந்த வழியாக வருவது சிரமமாகும். இப்னு இஸ்ஹாக் இது தொடர்பாக பின்வருமாறு கூறுகின்றார் : “மதீனாவின் ஒரு பகுதி மாத்திரம் எவ்வித பாதுகாப்புமின்றி காணப்பட்டது. அதன் ஏனைய பகுதிகள் பேரீத்தம் மரங்கள், கட்டிடங்கள் போன்வற்றால் நிரம்பிக்காணப்பட்டன”.

எனவேதான் இந்த பாதுகாப்பான நகரம் றஸுல் (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் ஹிஜ்றத் செய்வதற்கும், தமது தஃவாவிற்கான தலைமையகமாக எடுத்துக் கொள்வதற்கும் பொருத்தமான இடமாக காணப்பட்டது. ஏனெனில் அங்கு  அவர்களுக்கு பாதுகாப்பும் அமைதியும் காணப்பட்டது. முழு மனித சமூகத்திற்கும் இஸ்லாத்தின் துhதை மொத்தமாக எத்திவைப்பதற்கான பூரணமான சுதந்திரம் அங்கு காணப்பட்டது.

யத்ரிப்பின் குடிப்பரம்பல்

யத்ரிபில் பல்வேறு இனத்தைச் சார்ந்தோரும் ஒன்றாக வாழ்ந்தனர். அவர்களில் அரேபியரும் யஹுதிகளும் பிரதானமானவர்கள். இந்த இனங்களுக்கு மத்தியிலே பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய எவ்விதப் பொதுவான இலக்குகளும் காணப்படவில்லை. எனவே அவர்கள் கோத்திரவெறி, மத வேறுபாடு, தலைமைத்துவத்துக்கான போட்டி, சிறந்த விவசாய நிலங்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கான போட்டி போன்றவற்றிற்காக மிக மோசமாக பிளவுபட்டிருந்தனர்.

இந்தப்பிளவு அரேபியருக்கும் யூதர்களுக்கும் இடையில் மாத்திரம் காணப்படவில்லை. அது யூதர்களுக்குள்ளே அவர்களின் குழுக்களுக்கிடையிலும் அரேபியருக்குள்ளே அவர்களின் கோத்திரங்களுக்கிடையிலும் காணப்பட்டது. இந்த சமூகங்களுக்கிடையே காணப்பட்ட குழப்பங்களை ஒழிப்பதற்கான ஒரே வழிமுறையாக பலப்பிரயோகமே காணப்பட்டது. எனவே, அவற்றுக்கிடையே  போராட்டங்கள் பெருகின. குழப்பங்கள் கடுமையாகின. யத்ரிபில் வாழ்வது நரகில் வாழ்வது போன்று சகித்துக்கொள்ள முடியாத நிலைமையாக காணப்பட்டது.

யத்ரிபில் வாழ்ந்த யூதர்கள்

யத்ரிபில் மூன்று கபீலாக்களைச் சேர்ந்த யூதர்கள் காணப்பட்டார்கள். அவை பனூ கைனுகா, பனூ நழீர், பனூ குரைழா ஆகியவையாகும். இவர்கள் ரோமர்களிடமிருந்து தப்பி யத்ரிபுக்கு வந்தவர்கள். ரோமர்கள் யூத அரசை வீழ்த்தி கி.மு 70 ஆம் ஆண்டு பைத்துல் முகத்தஸை நாசப்படுத்தினர். எனவே யூதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிதறிச் சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர்தான் அரபுத்தீபகற்பத்தை நோக்கி வந்தனர். யஹுதிகள் யத்ரிப்புக்கு வந்தபோது அங்கு பல அரேபியக் கோத்திரங்கள் வசித்துக் கொண்டிருந்தன. அரேபியரிடம் காணப்பட்ட விருந்தோம்பல், புகலிடம் கோருவோருக்கு இடம் அளித்தல் போன்ற பண்புகளின் காரணமாக அவர்கள் ரோமர்களிடம் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு அங்கு வாழ இடமளித்தனர்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக யஹுதிகளின் எண்ணிக்கை அங்கு அதிகரித்தது. எனவே தமக்கு குடியேற இடமளித்த பூர்வீக வாசிகளை விட உயர்ந்திருப்பதற்காக கோட்டைகளை அமைக்க ஆரம்பித்தனர். பிறருடனான அவர்களின் அதிகமான கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அடகு, வட்டி என்பவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இந்த மோசமான பொருளாதார நடவடிக்கைகளின் மூலமாக மதீனாவினதும் அதனை அண்டிய பிரதேசங்களினதும் பொருளாதாரத்தில் யூதர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தும் பலத்தைப் பெற்றனர். அவர்களின் பொருளாதார ரீதியான பலம் அதிகரித்தமையால் அவர்கள் சந்தையில் மோசமான முறையில் நடந்து கொண்டனர். தமது நலன்களுக்காக பதுக்கல்களை மேற்கொண்டனர். யூதர்களிடம் காணப்பட்ட மோசமான கொடுக்கல் வாங்கல், சுயநலம் என்பவற்றின் காரணமாக மக்கள் அவர்களை வெறுக்க ஆரம்பித்தனர். (பார்கக்க : பனூ இஸ்ராஈல் பில் குர்ஆன் வஸ்ஸுன்னா : 79,81) அத்தோடு படிப்படியாக மதீனாவில் இருந்த சிறந்த நிலங்களின் சொந்தக்காரர்களாக அவர்கள் மாறினர். இதனால் அவர்கள் மதீனாவின் ஆளும் சக்திகளில் ஒன்றாகத் திகழ்ந்தனர்.

என்றாலும் சிறிது காலம் செல்லும் முன்னே அவர்களிடம் காணப்பட்ட பிணைப்பு பலவீனப்பட்டு அவர்களிடையே போட்டியும், பிரிவினைகளும் தோன்றின. இதனால் அவர்களுக்கிடையே குரோதம் ஏற்பட்டு போராட்டங்கள் இடம்பெற்றன. இது தொடர்பாக அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது : “நீங்கள் உங்களுக்கிடையே இரத்தங்களை ஓட்டக்கூடாது, உங்களைச் சார்ந்தோரை உங்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றக்கூடாது என நாம் உங்களிடம் உறுதிமொழி வாங்கியதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். பின்னர், அதனை நீங்களும் விளங்கி அங்கீகரித்தீர்கள். பின்னர், நீங்கள் உங்களுக்கு மத்தியில் சிலரை கொலை செய்கிறீர்கள். உங்களில் ஒரு சாராரை அவர்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்களுக்கு எதிராக நீங்கள் எதிர்ப்பையும் மோசடியையும் வெளிக்காட்டுகின்றீர்கள். உங்களிடம் கைதிகள் வந்தால் நீங்கள் அவர்களை தண்டப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்கிறீர்கள். அவ்வாறு அவர்களை வெளியேற்றுவது உங்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது”. (அல்-பகரா : 84,85)

மதீனாவில் வாழ்ந்த அரபிகள்

யத்ரிபில் யூதர்கள் இரு பெரிய அரபுக்கோத்திரங்களுக்கு அருகில் வசித்தனர். அவ்ஸ், கஸ்ரஜ் என்பவையே அந்தக்கோத்திரங்கள். இவை இரண்டினதும் அடிப்படை யெமன் அஸ்த் கோத்திரங்களாகும். அந்தக் கோத்திரங்கள் யெமனில் ஏற்பட்ட ஒரு குழப்ப சூழ்நிலையின் காரணமாக மதீனாவுக்கு இடம் பெயர்ந்தன.

ஆரம்பத்தில் யத்ரிபின் தலைமைத்துவம் யூதர்களது கையில்தான் காணப்பட்டது. எனவே, அவர்கள் அவ்ஸ் கஸ்ரஜ் கோத்திரத்தாரின் விவசாயத்திலிருந்து பிரயோசனம் பெற விரும்பினர். அதற்காக அவர்களுடன் யூதர்கள் ஒரு உடன்படிக்கையை செய்து கொண்டனர். அவ்ஸ் கஸ்ரஜ்களின் தொகை அதிகரிப்பதில் யூதர்கள் பயந்தனர். எனவே அவர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்து அவர்களை மதீனாவில் இருந்து துரத்தி விடுவதற்கு முடிவெடுத்தனர். எனவே அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தார் தமது அயலில் இருந்த கஸ்ஸாஸினியரிடம் உதவிகோரினர். ஷாமின் பின்தங்கிய பகுதியில் அவர்களுக்கு ஒரு அரசு காணப்பட்டது. கஸ்ஸாஸினியரின் உதவியோடு அவர்கள் யூதர்களை வெற்றிகொண்டனர். பின்னர் அவர்கள் யத்ரிப்புக்குள் சென்று யூதர்களிடம் காணப்பட்ட பயிர் நிலங்களை சொந்தமாக்கிக்கொண்டனர். எனவே யத்ரிபின் அதிகாரம் அவ்ஸ், கஸ்ரஜ்களின் கைக்கு மாறியது. யூதர்கள் அவர்களுக்கு பணிந்தனர். பின்னர் யூதர்கள் அவர்களுடனான நேரடிப் போராட்டத்தைத் தவிர்த்து பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்தனர். அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தார் ஒன்றிணையாமல் இருப்பதற்காக சூழ்ச்சி செய்யத் துவங்கினர். அதற்காக சிலர் அவ்ஸ்களுடனும் மற்றும் சிலர் கஸ்ரஜ்களுடனும் உடன்படிக்கைகளை செய்து கொண்டனர்.

அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தார் யூதர்களை வெற்றிகொண்டதன் பின்னர் சிறிது காலம் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். பின்னர் யூதர்களுடைய சூழ்ச்சிகளின் காரணமாக அவர்கள் இருசாராருக்குமிடையே பகையுணர்வு தலை தூக்கியது. பயிர் நிலங்களை உடைமையாக்கிக் கொள்;ளும் நோக்கில் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக்கொண்டனர். இதனால் அவர்களுக்கு மத்தியில் அதிகமான போராட்டங்கள் இடம் பெற்றன. சில போராட்டங்கள் நூறு வருடங்களுக்கு மேலாக நீடித்தன. அவர்களுக்கிடையில் இடம் பெற்ற இறுதிப்போராட்டம் ‘புஆஸ்’ போராட்டமாகும். இது ஹிஜ்ரத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது. (பார்க்க : பத்ஹுல் பாரி 5:85) இபோராட்டத்தின் ஆரம்பத்தில் கஸ்ரஜ்கள் வெற்றி பெற்றனர். இறுதியில் அவர்கள் தோல்வியடைந்தனர். இச்சந்தர்ப்பத்தில் அவ்ஸ்களுடன் உடன்படிக்கைசெய்து கொண்டிருந்த யூதர்கள் கஸ்ரஜ்களை மொத்தமாக தீர்த்துக்கட்டுமாறு அவர்களைத் துhண்டினர். எனினும் அதனால் ஏற்படப்போகும் ஆபத்தை அவ்ஸ் கோத்திரத்தார் புரிந்து கொண்டனர். தாம் தமது சகோதரர்களான கஸ்ரஜ் கோத்திரத்தாரை தீர்த்துக் கட்டினால் யூதர்களுக்கு முன்னால் நாம் மாத்திரம் தனித்து விடுவோம். அப்போது யத்ரிபில் அறேபியரை இல்லாது ஒழிக்கும் யூதர்களின் திட்டம் நிறைவேறிவிடும் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் “அவ்ஸ் கோத்திரத்தாரே! நீங்கள் உங்கள் சகோதரர்களைவிட்டும் உங்களது கரங்களை தடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்களுடன் வாழ்வது நரிகளுக்குப் பக்கத்தில் இருப்பதை விட சிறந்தது” எனக்கூறி, தமது கோத்திரத்தார் கஸ்ரஜ்களை தாக்குவதை நிறுத்தினர். அவர்கள் யூதர்களை நரிகள் எனக்கூறியது அவர்களது தந்திரத்தையும் ஏமாற்றத்தையும் சுட்டிக்காட்டுவதற்காகும்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள யத்ரிப் தயாராதல்

யத்ரிப் சமூகத்தில் நிலவிய மோசமான சூழ்நிலை மக்காவாசிகளை விட அதிகம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தயார் நிலையை ஏற்படுத்தியிருந்தது. தமக்கிடையில் நிலவிய கோத்திர வெறி நீங்கி, தலைமைத்துவத்திற்கான போராட்டம் ஓய்ந்து, இரத்தம் ஓட்டப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, தமக்கு மத்தியில் ஐக்கியத்தை உண்டுபண்னி, யூதர்களின் சூழ்ச்சிகளுக்கும் குழப்பங்களுக்கும் முடிவு கட்டவேண்டிய ஒரு தேவை காணப்பட்டது. அதற்காக இந்த சமூகத்திற்கு இஸ்லாம் பெரிதும் தேவைப்பட்டது.

 
இதனால் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தார் றஸுல் (ஸல்) அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொள்வதில் மிகவும் ஆர்வமாய் இருந்தனர். தமக்கிடையில் இடம்பெற்ற நீண்டகால போராட்டத்தின் விளைவாக அதிகமான தீங்குகள் தோன்றிய பின்னர், தமக்கிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய ஒருவரின் தேவை காணப்பட்டமையே இதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது.
 
யூதர்கள் தமது மார்க்கத்தையும் வேதத்தையும் வைத்து பெருமை பாராட்டியும், அரேபியரின் சிலை வணக்கத்தை வைத்து அவர்களை இழிவுபடுத்தியும் வந்தனர். சிலையை உடைக்கக்கூடிய புதிய நபியொருவர் அண்மையில் தோன்றுவார் எனக்கூறி யூதர்கள் அரபிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். இவ்விடயம் யத்ரிப் வாசிகளை தெய்வீகத் தூதொன்றை ஏற்கும் மனோநிலைக்கு இட்டுச்சென்றிருந்தது.

 
நபியவர்களுடன் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தார்கள் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு யூதர்களிடமிருந்து எவ்வித அச்சுறுத்;தலும் காணப்படவில்லை. ஏனெனில் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தார் மதீனாவில் அதிகாரமுடையவர்களாய் மாறியிருந்தனர். எனவே அவர்கள் நபியவர்களுடன் உடன்படிக்கை மேற்கொண்டு அவர்கள் மார்க்கத்தில் நுழைந்து விட்டால், யூதர்களால் நபியவர்கள் யத்ரிபில் நுழைவதை தடுக்கவே முடியாது.

புஆஸ்’ போராட்டத்தில் அதிகமான அவ்ஸ், கஸ்ரஜ் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் இருந்திருந்தால் நபியவர்கள் அவ்ஸ், கஸ்ரஜ்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பாரதூரத்தை விளங்கிக்கொண்டிருப்பர். அதேபோன்று அவர்களின் பேராசைகள் இஸ்லாத்திற்காக செயற்பட்டிருக்கும். ஆயிஷா (றழி) அவர்கள் கூறுகின்றார்கள் : ‘புஆஸ்’ அல்லாஹ் தனது தூதுவருக்காக முற்படுத்திக்கொடுத்த ஒரு தினமாகும். நபியவர்கள் மதீனாவிற்கு செல்கின்ற போது அங்கிருந்த சமூகத்தலைமைகள் பிளவுண்டு அவர்களின் தொப்புள் கொடி அறுக்கப்பட்டிருந்தது”. (புஹாரி)

பாடங்களும் படிப்பினைகளும்

01. முஸ்லிம்கள் தம்மைப்பாதுகாத்துக்கொள்ள மதீனாவின் இயற்கை எல்லைகள் உதவியாக அமைந்திருந்தது. இது அவர்களுக்கு அந்தத்தருணத்தில் கிடைத்த அல்லாஹ்வின் அருளாகும்.

02. மதீனாவில் காணப்பட்ட குடிப்பரம்பல், சமூக அமைப்பு என்பன முஸ்லிம்களுக்கு உதவிய காரணிகளாகும். அங்கு காணப்பட்ட பல மதங்கள், கோத்திர வேறுபாடு, பல்வேறு பிரச்சினைகள், அவர்களிடையே காணப்பட்ட போராட்டம் என்பன இதற்குள் அடங்குவதாகும். எனவே அங்கிருந்த அனைத்து தரப்பும் றஸுல் (ஸல்) அவர்களதும் அவரின் தோழர்களதும் நெருக்கத்தைப் பெறுவதற்கு அதிகம் ஆர்வம் கொண்டனர்.

03. பைதுல் முகத்தஸில் இருந்து தப்பியோடிய யூதர்கள் யத்ரிப் வாசிகளிடம் புகலிடம் அடைந்தனர். பின்னர் அரேபியரின் நற்பண்புகளை பயன்படுத்தி தமக்கென கோட்டைகளையும் அமைத்துக்கொண்டனர்.

04. வட்டிசாப்பிடுதல், ஈடுபெறல், மனிதர்களின் பொருளாதாரத்தில் ஆக்கிரமிப்பு செலுத்தல் என்பன யூதர்களின் பண்புகளாகும். இவை இல்லாமல் அவர்களால் எக்காலத்திலும் எவ்விடத்திலும் வாழ முடியாது.

05. யூதர்களின் செயற்பாடுகளையும், அவர்கள் தமது நபிமார்களுடன் நடந்து கொண்ட வரலாற்றையும், சடவாதத்திற்காக அவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டதையும் அல்குர்ஆன் பகிரங்கப்படுத்திக் கூறுகின்றது.

06. யூதர்களின் இயல்பு ஒரு போதும் மாறாதது. இன்று பலஸ்தீனில் உள்ள யூதர்கள் யத்ரிபில் இருந்த தமது மூதாதையர்கள் செய்த அதே செயலையே செய்கின்றனர். பிறர் பூமியை ஆக்கிரமித்தல், அவ்ஸ், கஸ்ரஜ்களை அவர்களின் பூமியிலிருந்து துரத்த முயற்சி செய்தல். இந்த முயற்சி தோற்றுப்போன போது சூழ்ச்சியும் தந்திரமும் செய்ய ஆரம்பித்தல்.

07. யத்ரிபில் இருந்த அரேபியர் யூதர்களின் திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் ஏமாற்று வழிமுறைகளையும் புரிந்துகொண்டனர். எனினும், இப்புரிதல் தமக்கிடையிலான போராட்டத்தால் பெரிதும் சிரமப்பட்ட பின்னரே வந்தது.

08. தீயவர்களின் மாநாடு இறைத்தூதரை கொலை செய்வதற்காக நடாத்தப்பட்டது. தீயவர்கள் இஸ்லாத்தை பகிரங்கமாகவோ, மறைமுகமாகவோ, தந்திரமான வழிமுறையின் ஊடாகவோ எதிர்ப்பதற்காக அன்றி வேறு எதற்காகவும் ஒன்றுபட மாட்டார்கள்.

09. மதீனாவுக்கு ஆரம்பத்தில் ஹிஜ்றத் செய்தவர்கள், நபியவர்கள் பொருத்தமான நேரத்தில் ஹிஜ்ரத் வருதற்கான தயார்படுத்தலையும், பூரண ஏற்பாட்டையும், சிறந்த திட்டத்தையும் முழுமையாகவும் இரகசியத்துடனும் மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...