Saturday, November 7, 2015

மகப்பேறு என்னும் போராட்டம்-உம்மு பர்ஹா


இஸ்லாமிய குடும்ப வாழ்வின் பிரதான இலக்காகக் கருதப்படுவது சிறந்த சந்ததிகளை உருவாக்கும் இடமாக அது இருக்க வேண்டும் என்பதுதான்.சந்ததி உருவாக்கம் என்பது குழந்தை பிறந்து இளமையை அடைந்ததன் பின்னர; நடக்கின்ற ஒரு செயற்பாடல்ல,மாற்றமாக அது திருமணத்திற்கான துணையை தெரிவு செய்வதில் துவங்குகிறது.
“நீங்கள் இரக்க சுபாவமுள்ள அதிகம் குழந்தைகளை பெற்றுத் தருபவர;களை திருமணம் செய்து கொள்ளுங்கள்”
“ஒரு பெண்ணின் கையின் செழிப்பு அவள் செழிப்பு(அதிகம் குழந்தை பெறுதல்)ள்ள பெண் என்பதைக் காண்பிக்கும்” போன்ற திருமணத்தில் பெண் துணை பற்றி இடம் பெற்றுள்ள பல ஹதீஸ்களும் இதனை எமக்கு உறுதிப்படுத்துகின்றன.
சந்ததி உருவாக்கத்தில் தெரிவு,கணவன் மனைவி தொடரபு,வீட்டு சூழல்,குழந்தைக்கான முழுமையான பராமறிப்பு… போன்ற பல காரணிகள் பிரதான இடத்தை வகிக்கின்றன.இவற்றைப் போன்றே பிரதான இடத்தை வகிக்கும் ஒரு விடயம் எம்மால் கண்டும் காணாதது போன்று விடப்படுகின்றது.அதுதான் குழந்தையை கருவில் சுமந்து பிரசவிக்கும் மகப் பேறு என்ற விடயமாகும்.
 மகப்பேற்றை நபியவர;கள் போராட்டத்திற்கு ஒப்பிட்டுள்ளார;கள்.குழந்தையை சுமந்த நிலையில்,மகப் பேற்றின் போது,மகப் பேற்றின் பின்னரான உதிரப் போக்கால் ஒரு தாய் மரணிப்பதை ஷஹாதத்தாக கருதியிருக்கிறார;கள்.எனினும் நாம் அதனை வெறுமனே மருத்துவம் சார;ந்த பெண் நோய் சார;ந்த ஒரு விவகாரமாக மாத்திரம் குருக்கி விட்டோம்.இதனால் இது தொடர;பிலான விடயங்களை மருத்துவ உலகுக்கப்பால் நாம் சிந்திப்பதில்லை.இதன் காரணமாக மகப் பேறு என்பது மருத்துவர;களைத் தவிர யாரும் விளங்கிக் கொள்ள முடியாத புதிராக மாறிப் பேயுள்ளது.இதன் விளைவு மகப் பேற்றின் போது பெண்கள் எதிர; கொள்ளும் எந்த சிரமங்களும் மருத்துவ உலகிற்கு வெளியே கலந்துரையாடப்படவதோ,அதற்கான தீர;வுகள் தேடப்படுவதோ இல்லை.இன்று மகப் பேற்றிற்காக மருத்துவமனை சென்று வருவது என்பது பெண்களைப் பொருத்த வரை ஒரு வதை முகாமுக்கு சென்று வருவதாக மாறியுள்ளது.குறிப்பாக அதிக பிள்ளைகளை பெற்றுக் கொள்ளும் வயதில் இருக்கும் தாய்மார;கள் இதன் பின்னர; தான் குழந்தையே பெற்றுக் கொள்ளமாட்டேன் என்னும் மனோ நிலையை பெரும் வகையில் மருத்துவ மனைகளில் நடாத்தப் படுகிறார;கள்.இது அவர;களுக்குள்ளாலே பேசிவிட்டு மூடி வைக்கப்படும் விவகாரமாக மாத்திரம் காணப்படுகிறது.அதற்கு வெளியே சமூகத்தின் கவனத்தைப் பெறும் விவகாரமாக இது மாறுவதில்லை.
 பெண்கள் ஒரு பிள்ளையை கர;ப்பத்தில் சுமந்தது முதல் அதனை பிரசவிக்கும் வரையும்…பிரசவித்தது முதல் அது குறைந்தது இரண்டு வருடங்கள் கடக்கும் வரையும் எதிர; கொள்ளும் துன்பங்கள் சொற்களால் கூறி முடிக்க முடியாதவை.
 பல போது பணப் பிசாசுகளும் ஒழுக்கம் பிறழ்ந்தவர;களும் வளம் வரும் மருத்துவ உலகில் கர;ப்பிணித்தாய்மார;கள் தமது மானத்தையும் ஆரோக்கியத்தையும் மார;க்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதில் படும் துயரங்கள் அவர;களுடன் மாத்திரமே மூடி வைக்கப்படுகின்றன.இவற்றை நியாயப்படுத்துவதற்காக எமது ஆண் சமூகம் நிர;ப்பந்தம் எனும் ஒரு சொல்லை மனனமிட்டு வைத்துள்ளது.ஆனால் நிர;ப்பந்தம் என்பதன் எல்லை யாது என்பதனை அவர;கள் விளங்கிக் கொள்ள தயாராக இல்லை.மருத்துவப் பரிசோதனை எனும் பெயரில் தேவைக்கதிகமான உடல்,உள ரீதியான இம்சைகளுக்கும் துன்பங்களுக்கும் அவர;கள் ஆட்படுகிறார;கள்.மருத்துவ உலகில் மிகவும் மரியாதையாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்கிற ஒரு சில வைத்தியர;களுடன் ஒப்பிடுகையில் பலர; மகப் பேற்றுத் துறையை  பலவீனர;களை வைத்து இலகுவாக பணம் சம்பாதிக்கும் ஒரு துறையாகவும் தமது அற்ப ஆசைகளை தீர;க்கும் ஒரு சந்தர;ப்பமாகவுமே பயன்படுத்துகிறார;கள்.

 மகப்பேற்று மருத்துவத் துறையில் ஏன் பெண்களின் விகிதாசாரம் குறைவாக இருக்கின்றது?ஒரு வைத்தியரிடம் கதைக்கும் போது அது அவர;களுக்கு சிரமமானது எனவும் எனவே அத்துறையில் பெண்கள் ஈடுபாடு காட்டுவதில்லை எனவும் குறிப்பிட்டார;.இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம்.எனக்கு இதற்கு மாற்றமான ஒரு அனுபவம் ஒரு ஆபிரிக்க இஸ்லாமிய நாடொன்றில் கிடைத்தது.இஸ்லாமிய வாதிகளால் நடாத்தப் படும் மருத்துவ மனை ஒன்றிலே மகப்பேற்றுடன் தொடர;பான சிகிச்சைகளுக்காக தொடர;ந்தேர;ச்சையாக செல்லும் சந்தர;ப்பம் கிடைத்தது.அங்கு வாரத்தில் ஐந்து நாட்களுக்கும் ஐந்து பெண் மருத்துவர;களே பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மேற் கொள்கின்றனர;.அங்கு மருத்துவம் என்பது பணம் பன்னுகிற விவகாரமாக அல்லாமல் மனித நேயம் கலந்ததாகவே காணப்பட்டது.அப்படியாயின் எமது நாட்டில் மாத்திரம் இது பெண்கள் புக முடியாத பெண்களுக்கான உலகமாக எப்படி மாற்றப்பட்டிருக்கிறது?இது மருத்துவ உலகில் அனைத்து துறைகளிலும் வலம் வரும் யாரும் பகைத்துக் கொள்ள விரும்பாத இரும்பு சட்டகங்களுக்குப் பின்னால் இருக்கும் நுண் அறிவுச் சர;வதிகாரிகளின் கரங்களின் மாய மந்திரங்களுக்கு உட்பட்ட ஒரு விவகாரமாய் மாறிப் போயுள்ளது.இன்று இந்த விவகாரம் இன,மத எல்லைகளைத்தாண்டி பொதுவாக கவனத்தைப் பெற வேண்டிய விவகாரமாக உள்ளது.ஏனைய துரைகளில் உள்ளவர;களிடம் அவர;களது முடிவுகளுக்கு,விடயங்களுக்கு விளக்கம் கோரலாம் ஆனால்,ஒரு மருத்துவரிடம் அவ்வாறு கோருவது அவரது மரியாதைக்கான இழுக்காகப் பார;க்கப்படுனிறது.அவர;கள் சொல்வதை அப்படியே கேட்டு வரும் பொம்மைகளாகவே சேவை நாடிகள் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி அங்குள்ளது.எனவே அங்கு அலாவுதீனின் அற்புத விளக்குகள் பல வலம் வருகின்றன.சேவை நாடிகள் எப்போதும் எழுத்தறிவற்ற பாமரனாய் அவர;கள் முன் மண்டியிட வேண்டும்.
 அதே போன்று முகத்தை மூடி நிகாப் அணிவிப்பதில் தீவிரமாய் இருக்கும் பலர; எமது தாய்மாரகள் அன்னிய ஆணுக்கு தமது சீலையை தூக்கிக்காட்டுவது பற்றிய இஸ்லாத்தின் வரையரையை பேசுவதற்கு தயாராக இல்லை.அதே போன்று எமது தனவந்தர;கள் கற்பித்தலுக்குப் பதிலாக முகத்தை மூடிக் கொண்டு டாம் விளையாட்டுப் போன்று கரும்பலகைளில் எழுதித்தள்ளிவிடுவதை மாத்திரம் கற்பித்தலாகக் கருதும்  மாத்ரசாக்களுக்கு செலவு செய்வது பற்றி சிந்திக்கிறார;களே தவிர எமது தாய்மாரின் அவ்ரத்தைக் காக்க பிரசவ விடுதிகளை அமைப்பது பற்றி சிந்திக்கின்றார;களில்லை.
அதைப் பார;க்கிலும் மிகவும் வேதனையான விடயம் பெண்களின் உரிமை பற்றிப் பேசும் பெண்ணிய வாதிகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர;கள் இது பற்றி மூச்சாவது விடுகிறார;களில்லை.அதனை விடவும் வருந்தத்தக்க விடயம் சமூகத்தின் தயவில் மருத்துவம் கற்ற பெண்கள் இத்துறையில் மேற்படிப்பை மேற் கொள்ளாது தமது குடும்ப வாழ்வுடன் மாத்திரம் சுருங்கி வாழ்கிறார;கள்.
ஓவ்வொரு பெண்ணும் அவள் குழந்தையை பெற்றெடுக்கும் போது ஆயிரம் முறை இறந்து பிறக்கிறாள்.ஆனால் இதனைப் பற்றி பேசுவதற்கோ,அதற்கான தீர;வுகள் பற்றி சிந்திக்கவோ ஆண் சமூகம் தயாராக இல்லை.பெண்களும் தமது மாணத்துடன் சம்பத்தப்பட்ட விடயம் என பிரசவத்துடன் அதனை மறந்து விடுகின்றனர;.இது ஆண்களுடன் தொடர;பான விவகாரமாயின் எத்தனை பாடுபட்டிருக்கும்?

 தமக்கு  இளைஞர; பரம்பரை ஒன்று தேவை,தமது நிறுவனத்தில் திறமையானவர;கள் கற்க வேண்டும்,தமது பாடசாலைக்கு, மத்ரசாவுக்கு திறமையானவர;கள் தேவை என வளர;த்து ஆளாக்கிய பின்னர; ஆளணி தேடும் நிறுவனங்களும்,இயக்கங்களும்,பாடசாலைகளும் ஏன் அவர;களை பெற்றெடுக்கும் மகப் பேற்றுடன் தொடர;பான இவ்விவகாரங்களில் கவனமற்றிருக்கிறார;கள்?!இது இன்றைய நாட்டின் சூழ்நிலையிலும் அதிகம் எமது சமூக மட்டத்தில் கவனத்தைப் பெற வேண்டிய ஒரு விடயமாக உள்ளது.இஸ்லாத்தின் இயல்பில் பிறக்கும் அல்லாஹ்வின் அருள்களான ஆன்மாக்களை உலகிற்கு வரவேற்கும் இத்துறையில் எம்மால் அழகிய முன்மாதிரி ஒன்றை காண்பிக்க முடியுமாயின் அது மற்ற சமூகத்தின் ஆன்மாக்களையும் சம்பாதிக்கும் செயலாக அமையலாம்.

No comments:

Post a Comment

Remote learning activities during the COVID-19 pandemic கொரோனா -19 நோய்த் தொற்றுப் பரவல் சூழலில் தொலைநிலைக் கற்றற் செயற்பாடுகள்

- •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••   “ கொரோனா -19 ந...