– எம்.என்.இக்ராம் –
உழ்ஹிய்யா என்பது நபியவர்களால் வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா. இதனை நாம் ஸுன்னா முஅக்கதா என்கிறோம்.இமாம் அபு ஹனீபா போன்றவர்கள் வசதியுள்ளவர்களுக்கு இது வாஜிப் என்றும் கூறியுள்ளனர்.இக்கடமையை நாம் எமது நாட்டில் பாரம்பரியமாக நிறைவேற்றி வந்துள்ளோம்.எனினும் அண்மைக்காலமாக இது தொடர்பில் பல புரலிகள் பல்வேறு நோக்கங்களையும் மையப்படுத்தி கிளப்பப்பட்டு வருவதனை நாம் அறிவோம்.
இத்தகைய ஒரு சூழலில் நாம் இக் கடமையை சிறுபான்மையாக வாழுகின்ற ஒரு சூழலிலே எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பில் சிந்திப்பது பொருத்தம் எனக் கருதுகிறோம். இங்கு நாம் உழ்ஹியா பற்றிய விடயத்தை சரியாக புரிந்து கொள்வதற்கு சிறுபான்மையாக வாழும் போது இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் எப்படி சிந்திக்க வேண்டும் என்ற விடயத்தை சற்று விளங்கிக் கொள்வது பொருத்தம் எனக் கருதுகிறோம்.
அண்மையில் ஒரு சகோதரருடன் பிரயாணமொன்று சென்று வரும் வழியில் தொழுதுவிட்டுச் செல்வோம் இலேசாக இருக்கும் என்றேன். அவர் பள்ளிக்குப் பக்கத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு,இலேசுக்காகவா இங்கே தொழ வேண்டும்? நாம் தொழாமலே சென்றிருக்கலாமல்லவா? எனக் கேட்டார். இது அவரது வினா மட்டுமல்ல, இது இஸ்லாத்தைப்பற்றிய நமது சமூகத்தின் புரிதலின் குருக்கு வெட்டு முகம். இஸ்லாம் அடிப்படையிலேயே வாழ்வை இலகு படுத்த வந்த மார்க்கம் “இலகு படுத்துங்கள் கஷ்டப்படுத்த வேண்டாம்… நன்மாராயம் கூறுங்கள் விரண்டோட வைக்க வேண்டாம்…” நபியவர்கள் சொல்லியிருக்கிறாரே. நபியவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை விளக்கும் போது ‘சிரமங்களை இல்லாமல் செய்வதற்காக’ -அஃராப்-157 என குர்ஆன் குறிப்பிடுகிறது. “மார்க்கத்தில் உங்களுக்கு சிரமங்களை வைக்கவில்லை” என ஸுரா ஹஜ்ஜின் இறுதி வசனம் இதனை விளக்குகிறது. இதனை நபியவர்கள் மிகத் தெளிவாகவே பேசியுள்ளார்கள் “இந்த மார்க்கம் இலகுவானது, யாரும் மார்க்கத்தை கடினமாக்க முனைய வேண்டாம். அப்படி செய்தால் அவரை அது மிகைத்துவிடும்” –புகாரி-
மார்க்கம் அவரை மிகைக்கும் என்பது அவரால் தொடர்ந்து மார்க்கத்தை பின்பற்ற முடியாது போகும் என பத்ஹுல் பாரியில் விளக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சிறுபான்மையாக இருக்கும் போது மாத்திரமல்ல பொதுவாகவே நாம் மார்க்கத்தை இந்தப் பின்னணியில் இருந்துதான் அணுக வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அப்படியாயின் சிறுபான்மையாக வாழும் போது இவ்விடயம் எவ்வளவு தூரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பது இங்கு தெளிவாகிறது. எனினும் எமது நாட்டைப் பொருத்த வரை மார்க்கத்தை வெறும் உபதேச (வஃல்) பாணியிலேயே அணுகிப் பலகிப் போன நாம் இஸ்லாத்தின் சட்டத் துறையையும் அதே பாணியில் அணுக முனைகின்றோம். அதன் விளைவு நாம் இஸ்லாத்தை சிரமப்படுத்தி வைத்துள்ளோம். எனவே சமூகம் ஹலாலான சலுகைகளை அறியாது ஹராத்தில் போய் நிற்கின்ற தெரிவையே பல விடயங்களில் மேற்கொள்கிறது. நாம் இன்று பேசும் பல விவகாரங்களும் எமது கடின போக்கை மாற்றாது விடின் மார்க்கத்தை விட்டும் அவற்றை நீக்கி சிந்திக்கின்ற மார்க்கத்தை சில கிரியைகளுக்கு மட்டுப்படுத்திப் பார்க்கின்ற ஒரு போக்கு எதிர்காலத்தில் தலை தூக்கலாம்.
இந்தப் பின்னணியில் இருந்து கொண்ட நாம் இங்கு முன்வைக்க முனைகின்ற இந்த இடம்பாடுகள் இது பற்றி சிந்திப்பதற்கான ஒரு முன் மொழிவே தவிர முடிவுகளல்ல. இது பிக்ஹுத் துறை, ஷரீஆவின் அடிப்படைகள், நோக்கங்கள் போன்ற துறைகளில் கற்றவர்களது கடமை. அவர்கள் இது போன்ற விவகாரங்களில் எமது நாட்டின் சூழலில் இருந்து சட்டம் சொல்ல முனைவது வாஜிப் என்பதையும் இங்கு நினைவு கூர்வதுடன். இது தொடர்பில் நாம் வாசித்த அபிப்பிராயங்களை கருத்தாடலுக்காக இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
உழ்ஹியா தொடர்பில் நாம் நோக்கும் போது பிரதானமாக இரு விவகாரங்கள் இங்கு கலந்துரையாடப்பட வேண்டியுள்ளது.
1-உழ்ஹியாவிற்கு பதிலாக அதனது பெறுமதியை கொடுத்தல்.
2-உழ்ஹியாவை முஸ்லிம் அல்லாதாருக்கு பரிமாறுதல்
2-உழ்ஹியாவை முஸ்லிம் அல்லாதாருக்கு பரிமாறுதல்
1-உழ்ஹியாவிற்கு பதிலாக அதனது பெறுமதியை கொடுத்தல்.
உழ்ஹியாவை பொருத்தவரை அதனது பெறுமதியை கொடுப்பதைப் பார்க்கிலும் அதனை அறுத்துப் பலியிடுவதே மேலானது என்பது எல்லா சட்ட அறிஞர்களம் கருத்தாகும். எனினும் யாரும் கொடுக்க முடியாது என மறுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதே போன்று எமக்கு சிந்திக்க முடியுமான இடம் பிக்ஹில் ஆரம்பம் முதலே இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதே நேரம் பிராணியை பெற முடியாத போது அப்படி செய்யலாம் என இமாம் அஹமத் போன்றோர் அனுமதித்துள்ளனர். இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் உழ்ஹியாவிற்கு அறுப்பு நிகழ்ந்தேயாக வேண்டும் என்ற கடமை இல்லை என்பதைக் காட்ட இறைச்சியை வாங்கி பகிர்ந்தளிக்கும்படி தனது அடிமைக்கு கட்டளையிட்டதாக ஒரு அறிவுப்பு உள்ளது. பிலால் (றழி) அவர்கள் உழ்ஹியாவுக்கு பதிலாக அதன் பெறுமதியை ஒரு அநாதைக்கு கொடுக்க தான் விரும்புவதாக குறிப்பிட்ட றிவாயத் உள்ளது. ஆயிஷா (றழி) அவரகள் காஃபாவுக்கு அருகில் ஆயிரம் மிருகங்களை பலியிடுவதை விட எனது இந்த மோதிரத்தை ஸதகா செய்வதை நான் மேலாகக் கருதுகிறேன் என்று கூறிய றிவாயத் உள்ளது. மாலிகி மத்ஹபில் பலவீனமான ஒரு கருத்து பெறுமதி கொடுப்பது பற்றி பேசுகிறது.
இப்படி இது தொடர்பில் சிறுபான்மையாக இருந்து கொண்டு சிந்திப்பதற்கு பல இடம்பாடுகள் காணப்படுகின்றன. அடுத்து இங்கு பெறுமதியை கொடுக்காது உழ்ஹியாவை கொடுக்க வேண்டும் என வழியுறுத்தியவர்கள் அந்தக் கடமை இல்லாமல் போய்விடக் கூடாது என்ற நியாயத்தைத்தான் முன்வைக்கிறார்கள். அடுத்து உழ்ஹியாவை பிராயணத்தில் இருப்போர் நிறைவேற்றல் சம்பந்தமான ஒரு கருத்தும் இந்த விவகாரத்தில் நாம் நிறையவே சிந்திப்பதற்கான இடங்கள் இருப்பதைக் காட்டுகிறது.
நவீன காலத்தில் ஷெய்க் கர்ளாவி அவர்கள் இந்த விவகாரத்தை அழகாக அணுகுகிறார்கள். இந்தக்கடமையின் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் உயிருடன் இருந்து இக்கடமையை நிறைவேற்றுபவர்கள் அறுப்பது சிறந்தது என்றும் மரணித்தவர்களுக்காக கொடுக்கும் போது பெறுமதியை கொடுக்கலாம் அதுவும் இறைச்சி தேவையற்ற நாட்டில் இருப்பவர்கள் அதாவது இறைச்சி நிறைய அக்காலப்பகுதியில் கிடைக்குமாயின் மரணித்தவரின் உழ்ஹியா பெறுமதியை கொடுப்பதே சிறந்தது என்கிறார். அதே போன்று முந்பொரு வருடம் உழ்ஹியாவின் பெறுமதியை கொண்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் பேசிய அறிஞர்கள் கவனத்தில் எடுத்த ஒரு விவகாரம் உழ்ஹியா தொடர்பாக பேசப்பட்டிருக்கின்ற அனைத்து பத்வாக்களும் பெரும்பாலும் சாதாரண சூழலில் இருந்தே பேசப்பட்டிருப்பதாகவும் அசாதாரண சூழலில் அது நோக்கப்படவில்லை எனவும் அப்படி நோக்கும் போது அதனை ஸதகா செய்வது உழ்ஹியா கடமையை நிறைவேற்றுவதை விட பெறுமதியானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதனோடு சேர்த்து நாம் உழ்ஹியாவுக்கு பதிலீடு என்று யோசிப்பதற்கு முன்னர் அதற்கு முன்னர் செய்ய வேண்டிய கடமைகள் என சமூகத்தில், பிரதேச, குடும்ப மட்டங்களில் எத்தனையோ இருக்கின்றன. எனவே அவற்றை முற்படுத்தி இதன் உழ்ஹியாவின் அளவை கவனத்தை குறைக்கும் வகையில் நாம் குறைக்கலாம். அது மாத்திரமன்றி நாம் ஒரு நீண்டகால வியூகம் என்ற வகையிலும் உழ்ஹியாவின் அளவை குறைப்பது தொடர்பில் யோசிக்க வேண்டியுள்ளது. அத்தோடு உழ்ஹியா செயற்திட்டங்களை செய்யும் நிறுவனங்கள் மிகக் கண்டிப்பாக இந் நாட்டில் உழ்ஹியாவையும் இப்தாரையும் பார்க்கிலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் என்பதை இங்கு உதவியளிக்கும் தனவந்தர்களுக்கு சொல்லியாக வேண்டும். அவர்களால் ஆயிரம் மாடுகளை உழ்ஹியாவுக்கு வாங்குவதற்கு பதிலாக மேற்கால் விலைக்கு வாங்கப்படும் இஸ்லாத்தின் எதிரிகளில் ஒருவரையாவது அல்லது அதற்கு மாற்றமாக இயங்கும் பலமான சக்தியொன்றையாவது இத்தருணத்தில் விலைக்கு வாங்குவதுதான் முதன்மையான கடமையாக இருக்கும் என்ற செய்தியை அவர்களுக்கும் எமக்குமாக நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
2-உழ்ஹியாவை முஸ்லிம் அல்லாதாருக்கு பரிமாறுதல்
அடுத்து உழ்ஹியா தொடர்பில் நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு விவகாரம்தான் அதனை பங்கீடு செய்தல். இதில் எல்லா அறிஞர்களதும் பொதுவான அபிப்பிராயம் உழ்ஹியாவை மூன்றாகப் பிரித்து அதில் 1/3 ஐ தனக்காகவும் மற்றய 1/3 ஐ அயலவர்கள் உறவினர்களுக்காகவும் மற்றய 1/3 ஐ ஏழைகளுக்காகவும் கொடுப்பது சிறந்தது என்பதாகும். இதில் அறைவாசியை எடுத்து விட்டு அறைவாசியை கொடுக்கலாம் என்ற அபிப்பிராயமும் உண்டு. 2/3 ஐ உரியவர் எடுக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. அதை அவர் முழுமையாக கொடுத்தும் விடலாம் எனினும் ஒரு சிறு பகுதியையாவது எடுத்துக் கொண்டு கொடுப்பதே சிறந்தது என்றவாறான கருத்துக்கள் இதில் நிலவுகின்றன. இதில் ஒருவர் முழுவதையும் கொடுக்காமல் இருந்தாலும் உழ்ஹியா நிறைவேறுமா என்றால் அது நிறை வேறும் என்ற கருத்துத் தான் காணப்படுகிறது. இங்கு தான் இது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டிய முக்கிய விடயத்தை சட்ட அறிஞர்கள் பேசுகிறார்கள் அதாவது உழ்ஹியா கடமை என்பது வேறு அதனை பங்கிடுதல் என்பது வேறு என்ற விடயம்.
இந்த இடத்தில் இருந்து கொண்டு உழ்ஹியாவின் இறைச்சியை முஸ்லிம் அல்லாதாருக்கு கொடுத்தல் தொடர்பில் முன்னைய இமாம்கள் என்ன கருத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை நாம் பார்க்கும் போது,
இமாம் முஜாஹிதின் ஒரு அறிவிப்பு,அப்துல்லாஹ் இப்னு அம்ர் (றழி) அவர்களது வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட போது அவர் அதிலிருந்து தனது அயல் வீட்டாரான யூதனுக்கு கொடுத்தீர்களா என்று வினாவினார்கள் என திர்மிதியில்(1943)பதிவாகியுள்ளது.இதனை ஷெய்க் அல்பானி ஸஹீஹ் எனக் குறிப்பிடுகிறார்.
இது தொடர்பில் இமாம் இப்னுல் முன்திர் குறிப்பிடுவதாக இமாம் நவவி குறிப்பிடுகிறார்: உழ்ஹியாவிலிருந்து முஸ்லிம்களிலுள்ள ஏழைகளுக்கு கொடுக்க முடியும் என்பதில் அனைத்து அறிஞர்களும் உடன்படுகிறார்கள். எனினும் அதனை முஸ்லிமல்லாதாருக்கு (திம்மீக்கள்) கொடுப்பது தொடரபில் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன. இமாம் ஹஸனுல்பஸரி, அபூ ஹனீபா, அபூ ஸவ்ர் போன்றோர் இதனை அனுமதிக்கின்றனர். இமாம் மாலிக் நஸாரக்களுக்கு உழ்ஹியாவின் இறைச்சியையோ அதன் தோலையோ கொடுப்பதை மக்ரூஹ் ஆக கருதினார்கள். இமாம் லைஸும் மக்ரூஹ் ஆக கருதினாலும் சமைத்ததை கொடுக்கலாம் என்கிறார். இதனைக் கூறும் இமாம் நவவி அவர்கள் எமது மத்ஹபில் (ஷாபிஈ) வாஜிபான (நேர்ச்சை மூலம்) உழ்ஹியா அல்லாத சாதாரண உழ்ஹியா (ததவ்வுஃ) இறைச்சியை கொடுக்கலாம் என்கிறார்.
இமாம் முஜாஹிதின் ஒரு அறிவிப்பு,அப்துல்லாஹ் இப்னு அம்ர் (றழி) அவர்களது வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்ட போது அவர் அதிலிருந்து தனது அயல் வீட்டாரான யூதனுக்கு கொடுத்தீர்களா என்று வினாவினார்கள் என திர்மிதியில்(1943)பதிவாகியுள்ளது.இதனை ஷெய்க் அல்பானி ஸஹீஹ் எனக் குறிப்பிடுகிறார்.
இது தொடர்பில் இமாம் இப்னுல் முன்திர் குறிப்பிடுவதாக இமாம் நவவி குறிப்பிடுகிறார்: உழ்ஹியாவிலிருந்து முஸ்லிம்களிலுள்ள ஏழைகளுக்கு கொடுக்க முடியும் என்பதில் அனைத்து அறிஞர்களும் உடன்படுகிறார்கள். எனினும் அதனை முஸ்லிமல்லாதாருக்கு (திம்மீக்கள்) கொடுப்பது தொடரபில் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன. இமாம் ஹஸனுல்பஸரி, அபூ ஹனீபா, அபூ ஸவ்ர் போன்றோர் இதனை அனுமதிக்கின்றனர். இமாம் மாலிக் நஸாரக்களுக்கு உழ்ஹியாவின் இறைச்சியையோ அதன் தோலையோ கொடுப்பதை மக்ரூஹ் ஆக கருதினார்கள். இமாம் லைஸும் மக்ரூஹ் ஆக கருதினாலும் சமைத்ததை கொடுக்கலாம் என்கிறார். இதனைக் கூறும் இமாம் நவவி அவர்கள் எமது மத்ஹபில் (ஷாபிஈ) வாஜிபான (நேர்ச்சை மூலம்) உழ்ஹியா அல்லாத சாதாரண உழ்ஹியா (ததவ்வுஃ) இறைச்சியை கொடுக்கலாம் என்கிறார்.
இமாம் இப்னு குதாமா, காபிருக்கு உழ்ஹியாவிலிருந்து பங்கு கொடுக்கலாம்….ஏனெனில் அது ஒரு உணவு,அதே போல் அது(இறைச்சியை பங்கிடுதல்)ஸதகதுத் ததவ்வுஃ ஆக காணப்படுகிறது.எனவே,ஏனைய ஸதகதுத் தவ்வுஃ ஐ போன்று கைதிகள் திம்மீக்கள் அனைவருக்கும் கொடுக்கலாம் …என்கிறார். (முஃனி-9/450)
இந்த வகையில் உழ்ஹியாவிலிருந்து முஸ்லிம் அல்லாதாருக்கு பங்கு கொடுக்கலாம் என்கிற கருத்தை நாம் பெற இடம்பாடுகள் தாராளமாக உள்ளது என்பதைக் காணலாம். அதிலும் குறிப்பாக அத்தகையோர் அயலவர்களாக,உறவினர்களாக, தேவையுடையோராயின் அப்படி கொடுப்பது சிறந்தது என்ற கருத்து இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதனை கூடாது என்போர் முஸ்லிம்களது தேவை இருக்க மற்றவர்களை முற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்ற வகையிலேயே அதற்கு நியாயம் சொல்கிறார்கள். மாற்றமா எம்மில் பலர் நினைப்பது போல் இறைச்சிக்கு புனிதத் தன்மை கொடுத்து அல்ல என்பதனை அவர்களது கருத்துக்களில் இருந்து விளங்கலாம். அத்தோடு நாம் ஏலவே குறிப்பிட்டது போன்று உழ்ஹியா இறைச்சியின் பங்கீட்டை உழ்ஹியா கடமையிலிருந்து பிரித்தே எல்லோரும் நோக்குவதைக் காண்கிறோம்.
நவீன காலத்தில் இமாம் அப்துல்லாஹ் பின் பாஸ் மற்றும் அல்-அஸ்ஹர் பத்வா சபை என்பன எம்முடன் போராடாத காபிர்களுக்கும் கைதிகள் மற்றும் எம்மிடம் அபயம் பெற்றோருக்கும் கொடுக்கலாம் என்கின்றனர் அதுவும் அவரகள் ஏழைகளாக, நெருங்கிய உறவினரகளாக, அயலவராக இருப்பின் இது சிறப்பானது என்பதுடன் அவர்களது உள்ளங்களை பிணைக்கும் நோக்குடனு(தஃலீபுல் குலூப்)ம் இதனை செய்யலாம் என்கின்றனர்.
இந்த வகையில் இவ்விடயத்தை எமது நாட்டின் சூழலில் கவனமாக சிந்திக்க வேண்டும் கொடுத்தாலும் குற்றம் கொடுக்காவிட்டாலும் குற்றம் என்கிற சூழலில் இது கவனமாக சிந்திக்க வேண்டிய விடயம்.இதில் அவர்களில் விருப்பமுள்ள சாராருக்கு கவனமாக, பகிரங்கமாக அல்லாது கொடுக்க முடியுமாயின் நாளடைவில் இதிலிருந்து பிரயோசனம் பெறும் ஒரு பெறும்சாரார் அவர்களில் தோற்றம் பெறுவாராயின் இதற்கான எதிர்ப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் சாரார் அவர்களிலேயே உருவாகலாம். என்பதுடன் மிருக வளர்ப்பு என்ற வகையிலும் பெறும் சாரார் இக்கடமையால் அவர்களில் பிரயோசனம் பெறும் விவகாரமும் பொருளாதார ரீதியான கணக்குகளுடன் பேசப்பட வேண்டிய தேவையும் உள்ளது.
இப்படி பல்முனையில் இத்தகைய விவகாரங்களை அணுகுவதற்கான வழிகாட்டல்கள் சமூகத்துக்கு வழங்கப்பட உரிய துறை சார்ந்தோர் முயற்சிப்பார்களா? இப்படியான தேவை இருக்கும் சூழலில் இன்னும் மிம்பர் மேடைகளில் காபிர்களுக்கு உழ்ஹியாவில் பங்கு கொடுக்கக் கூடாது, அதனை சாப்பிடக் கொடுக்கக் கூடாது என்கிற கருத்துக்களை பேசுவதையாவது தவிர்ப்பது சிறப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment