இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தம் தொடர்பிலான பேச்சு மீண்டும் மேல் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான பிரச்சினை முக்கிய ஒரு விடயமாக மேலெழுப்பப் பட்டு வருவது அவதானத்துக்குரியது. இந்த வகையில் இது தொடர்பில் நாம் கவனமாக சிந்திக்க வேண்டிய சில விடயங்கள் காணப்படுகின்றன.
இஸ்லாம்
பொதுவில் திருமணத்திற்கு வயதை ஒரு வரையறையாக இடவில்லை. அதே போன்று பொதுவாகவே ஒரு பெண் பிள்ளையை திருமணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பது ஷரீஆவின்
நிலைப்பாடு. அப்படி செய்தால் அது பிரிக்கப்பட
முடியும். அதே
போன்றுதான் பருவமடையாத நிலையில், பொருப்புக்குரிய
தகுதி நிலையடையாத நிலையில் திருமணம் செய்து
வைக்கப்பட்டாலும் பிள்ளை முடிவெடுக்கும் காலத்தில் அதற்கு
பிரிவதற்கும் சேர்வதற்கும் வாய்ப்புள்ளது என்ற ஏற்பாடுகள் ஷரீஆவில்
உள்ளன.
இங்கு சிறு வயது திருமணத்தை இஸ்லாம்
ஆதரிக்கிறது, ஊக்குவிக்கிறது
என்பதாக நாம் எடுத்துவிடக் கூடாது. திருமணத்துக்குரிய
முழு இலக்கும் அடையப் பெற அதற்குரிய தகுதி நிலை தேவை என்ற கருத்தில் எத்தகைய மாற்று
நிலைப்பாடும் இல்லை. அந்த
வகையில், திருமணம் என வரும் போது, முதிர்ச்சி, தகைமை என்பன பார்க்கப்பட வேண்டும் என்பதனை
இஸ்லாம் பொதுவில் வலியுருத்துகிறது. ஆனால், இது நபருக்கு நபர், இடத்துக்கு இடம், குடும்பத்துக்கு குடும்பம், சமூகத்துக்கு
சமூகம், பிரதேசத்துக்கு பிரதேசம், நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் என்ற
வகையில்தான் இங்கு ஷரீஆ அந்த தகுதியும், முதிர்ச்சியும்
அடையப் பெறுவதற்கான காலத்தை வரையறை செய்யவில்லை
என்பதைக் காண்கிறோம்.
அதே
போன்று இஸ்லாமிய சட்டப்பரப்பில் திருமணம் சார்ந்த
விடயங்கள் இரு நோக்குகளில் பார்க்கப்படுகின்றன.
1-இபாதத் சார்ந்த நோக்கு.
2-முஆமலாத் சார்ந்த நோக்கு
இபாதத்
சார்ந்த நோக்கில் பார்க்கின்ற போது சிறந்த சந்ததி, கற்பை
பேணல்,மார்க்கத்தை
பாதுகாத்தல், சமூகத்தை
பாதுகாத்தல்… என்பன
திருமணத்தின் பிரதான இலக்குகளாகப் பார்க்கப்படுகின்றன. முஆமலாத் சார்ந்த நோக்கில் பார்க்கும்
போது திருமணத்தில் பாலியல், மார்க்கம், சமூகம் என்பதைத்தாண்டி வேறு பல
விடயங்களும் நோக்காகக் கொள்ளப்படுகின்றன. இதில் இரு சாராருக்கிடையில்
பல நோக்குகளில் இடம் பெறும் வியாபார உடன்படிக்கையை ஒத்த உடன்படிக்கையாக திருமணம்
நோக்கப்படுகின்றது. இதன் போது ஒரு சிறு
பிள்ளையின் சொத்தை பராமரித்தல் மற்றும் உள்ள அது போன்ற பல்வேறு நலன் சார்ந்த விடயங்களும்
ஒரு நோக்காக பார்க்கப்படுகின்றது (இது விரிவாக பேசப்பட வேண்டியது). இந்த
வகையில்தான் இஸ்லாமிய சட்டப் பரப்பில் இந்த விடயம் தனித்து நோக்கப்படுகின்றது. இந்த
இரண்டு வகை நோக்குகளுக்குள்ளாலும் வயது வரையறை இன்றி பல்வேறு இலக்குகளை மையப்படுத்தி
ஆள், இட, சூழல்
வேறுபாட்டிற்கு ஏற்ப திருமணங்கள் இடம் பெறுவதற்கான அனுமதி இஸ்லாத்தில் உள்ளது.
இந்த
வகையில் பார்க்கும் போது திருமணம் என்ற விடயம் தனி நபர், குடும்ப, சூழல்
வேறுபாடுகளுக்கு ஏற்ப, குறித்த
சாராரின் தேவைகளை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட முடியுமான ஒரு விடயம். இதில்
பொதுவாக யாருக்கும் அநீதிகள் இழைக்கப்டாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் கவனத்தில் கொள்ப்பட்டிருப்பதையே
நாம் காண்கிறோம்.
இந்த வகையில், தனியார்
சட்ட சீர் திருத்தம் என்ற விடயத்தில் எமது கவனத்தைப் பெற வேண்டிய பல்வேறு விடயங்கள்
காணப்படுகின்ற போதும் வயது வரையறை என்பது மாத்திரம் ஏன் பெரியதோர் விடயமாக நோக்கப்படுகிறது? உண்மையில் இலங்கை முஸ்லிம்களிடம் சிறுவயதுத் திருமணம்
பிரச்சிரனைக்குரியதாக உள்ளதா? அது தொடர்பான துல்லியமான ஆய்வுகள் உள்ளனவா? இது ஏன்
பிரச்சினைக்குரியதாக பார்க்கப்படுகிறது? மிக மிக சிறிய அளவில்
நடக்கும் ஒன்றுக்கு ஏன் பெரிய அளவில் சட்ட ஏற்பாடுகள் தேவை? என்ற கேள்விகள் இதனை பொருத்த வரையில் எழாமல் இல்லை.
இந்த இடத்தில்தான் இங்கு நாம் இதற்கு பின்னால்
உள்ள சர்வதேச சமவாயங்களின் அஜெண்டாக்களையும் விளங்க வேண்டும். திருமணத்திற்கான வயது வரையறையை கொண்டு வருதல் என்பது 1979 டிசம்பரில் ஐ.நாவால்
முன்வைக்கப்பட்ட CEDAW (Convention on the Elimination of all
forms of Discrimination against Women-பெண்களுக்கெதிரான அனைத்துவிதமான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சமவாயம்) என்ற
பெண் சமத்துவம் குறித்து வழியுருத்தும் சர்வதேச சமவாயத்தின்
முக்கிய நிபந்தனை. இந்த சமவாயத்தில் எமது நாடு
உட்பட ஒரு சில நாடுகள் தவிர உலகின் 189 நாடுகள்
கையெழுத்திட்டுள்ளன. இந்த சமவாயம் வெளிப்படையில்
பல நலன்களை கொண்டிருப்பது போன்றிருந்தாலும் இதற்குப் பின்னால் குறிப்பாக சமூகங்களின்
பலத்தை தக்க வைக்கும் இயற்கை அலகான குடும்ப ஒழுங்கை
தகர்த்தெரியும் பல்வேறு எதிர்மறை விடயங்களை கொண்டிருக்கின்றது. தன்னினச் சேர்க்கையை சட்ட
பூர்வமாக்கள், விபச்சாரத்தை
சட்டபூர்வமாக்கள், திருமணத்திற்காக வயது
வரையறைகளை ஏற்படுத்தல்... என குடும்ப வாழ்வை தகர்த்தெரியும் பல
அம்சங்களை சட்ட பூர்வமாக அரசுகளை செய்வதற்காக நிர்ப்பந்திக்கும் ஒரு ஒப்பந்தமாகவே CEDAW காணப்படுகிறது. இந்த வகையில்தான்
திருமண வயதெல்லையை மாற்றுதல் என்ற நிபந்தனை GSP+ வரிச் சலுகையை பெறுவதுடன் தொடர்பாகிறது. இதில் திருமணத்திற்கு வயதெல்லை
ஏற்படுத்துவது எப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என நாம் சிந்திக்க முடியும். உண்மையில் சர்வதேச சமூகம் சிறுவர்
பாதுகாப்பு,பெண் உரிமை என்பவற்றை
(அவற்றுள் பல நலன் வெளிப்படையாக இருப்பதாக தெரிந்தாலும்) பேசுவதன் பின்னால் மிக
மோசமான அஜெண்டாக்கள் இருக்கின்றன. இந்த வயது விடயத்தின்
பின்னால் உள்ள நோக்கம் சட்டப்படி திருமணம் முடிப்பதை பிற்போட்டு விபச்சாரத்தை
ஊக்குவிப்பது. சட்டப்படி செய்தால் குற்றம்
மற்றப்படி இருவரும் இணங்கிச் செய்தால் அது மனித உரிமை என்ற நிலைக்கு இட்டுச்
செல்வதுதான் இதன் நோக்கம்.
எனவேதான்
குடும்ப வாழ்வை பாதுகாப்பது தொடர்பில் இஸ்தான்பூலில் அண்மையில்
ஒரு சமவாயம் நிறைவேற்றப்பட்டது. இது
குடும்ப வாழ்வை தகர்ப்பதற்கான சர்வதேச சமவாயமான CEDAW வினை எதிர்கொள்ளும் வகையில், குடும்ப வாழ்வை
பாதுகாப்பதற்காக துருக்கியை மையப்படுத்தி
இஸ்லாமிய உலகில் மேற் கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டத்தின்
ஒரு அங்கம். இவ்வருட ஏப்ரல் மாதப்
பகுதியில் துருக்கியில் குடும் வாழ்வு பற்றிய ஒரு மாநாடு இடம்
பெற்றது. அதில் பல ஆய்வுக்
கட்டுரைகளும் முன்வைக்கப்பட்டுத்தான் இந்த சமவாயம்
நிறைவேற்றப்பட்டது. இந்தப் பின்னணியில் அதன் விதிகள் இங்கு
கவனத்தில் கொள்ளப்படுவது சிறந்தது. அதில் குடும்ப வாழ்வுடன்
தொடர்பான அனைத்தையும் உள்ளடக்கும் வகையிலான விதிகள் காணப்படுகின்றன. இதில் அவர்கள் வயதை
குறிக்காது முதிர்ச்சி, தகைமை என்பதனையே குறிப்பிட்டுள்ளார்கள்.(11. பதினோராம் விதி:திருமண
ஒப்பந்தத்திற்கு தம்பதியினரின் தகுதி நிலை,பொருப்பை சுமப்பதற்கான
இயலுமை என்பன நிபந்தனைகளாகக் கொள்ளப்படும்.)
திருமண வயதெல்லை தொடர்பான விடயத்தில் நாம் ஏன்
இப்படி சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஒரு சம்பவத்தை
உதாரணமாகக் குறிப்பிடலாம்.13 வயதுடைய பிள்ளை… தாய் அருகில் இல்லை... இரவில் தந்தையின் தொல்லை தாங்க முடியாமல்
பக்கத்தில் கத்தியுடனேயே இந்தப் பிள்ளையின் இரவுகள் கழிந்தன...குடும்பத்தார்
எடுத்த தீர்மானம் அவரை திருமணம் செய்து கொடுப்பது... இது வயது வரையரை 16 அல்லது 18 ஆக இருந்தால் அந்தப் பிள்ளையின் நிலை என்ன?... ( அந்தப் பிள்ளை மிகச்
சிறப்பான வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கிறது)
இது சிந்திக்க வேண்டிய ஒரு
பகுதி. இங்கு திருமணம்தான் ஏக தீர்வு
என்றில்லாவிட்டாலும் அதுவும் மிகவும் முக்கியமான ஒரு தீர்வாக இத்தகைய சூழ்
நிலையில் அமைய முடியும். எமது சமூகத்தில் குடும்பங்களுக்குள்ளால், அயலவர்களால், நெருங்கியவர்களால் சிறு பராயத்திலேயே
பாலியல் தொந்தரவுகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆட்படும் பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகளின் தொகை கணிசமாக இருப்பதாகவே
நாம் செவியுரும் பல செய்திகள் சொல்கின்றன. இது பல வழிகளில் இடம்
பெறுகன்றன.
சொந்த தகப்பனால், சகோதரர்களால்…,நெருங்கிய உறவுகளால், சகோதரிகளின் கணவர்களால்... என இதன் பயங்கரம் அதனை
அறிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இது மானம் எனும்
போர்வையால் மூடப்பட்டிருக்கும் ஒரு நரகம். இதனை தேசிய அளவில் காதி
சபையில் செயற்படுகின்ற ஒரு சகோதரரும் உறுதிப்படுத்தினார். அங்கு வருகின்ற
பிரச்சினைகளுள் அதிகமானவை நெருங்கிய உறவுகளுக்கு மத்தியில் ஏற்பட்ட தகாத உறவு
சார்ந்தது என்கிறார் அவர். இந்த வகையில் பார்க்கும்
போது இத்தகையவர்களுக்கு புணர் நிர்மானமளிப்பதற்கான
வசதிகள் எம்மிடம் எந்தளவு உள்ளது?... இத்தகைய அச்சுருத்தலுக்கு, அல்லது குற்றத்துக்கு உட்படுத்தப்
படுவோருக்கான பாதுகாப்பை எப்படி வழங்குவது? பாதுகாப்பு என்பதனைத் தாண்டி இப்படியான
ஒரு நிலைக்கு உட்படுத்தப்பட்டவர் வழி பிறழ்வதற்கான வாய்ப்புகளே அதிகம். இலங்கையில் விபச்சாரத்
தொழிலுக்கு வரும் பெண்களுள் அதிகாமானவர்கள் காதலர்களால் ஏமாற்றப்பட்டவர்களும்,துஷ்பிரயோகத்துக்குட்பட்டவர்களும் என்ற
ஒரு செய்தி அண்மைய சிங்கள நாளிதழ் ஒன்றில் புள்ளிவிபரங்களுடன் பதியபபட்டிருந்தது.
அந்த வகையில் இவர்களுக்கான
தீர்வுகளுள் முக்கியமானதாக பாதுகாப்பான திருமண ஏற்பாடு இருக்க முடியாதா? வயதுக் கட்டுப்பாடு இருக்குமாயின்
குறித்த வயதை அடையும் வரையில் இவர்கள் எங்கு எப்படி பாதுகாக்கப்படுவது சாத்தியம்?
இது இப்படியான சூழ் நிலையால் பாதிக்கப்படும் ஆண்களுக்குள்ள பிரச்சினையும் கூட. தனிப்பட்ட முறையில் அப்படியான விடயங்களால் பாதிக்கப்பட்ட சிலரை கையாண்ட போது, அவர்களது பாலியல் உணர்வுகள் விகாரமாக தூண்டப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது. இவர்களுக்கான தீர்வுகள் என்ன?...இஸ்லாம் திறந்து வைத்துள்ள ஒரு வாயிலை மூடிவிட்டு தீர்வுகள் தேடி வேறு எங்கு போவது? இது நாம் இது தொடர்பில் சிந்திப்பதற்கான ஒரு விடயம் மாத்திரமே.
இது இப்படியான சூழ் நிலையால் பாதிக்கப்படும் ஆண்களுக்குள்ள பிரச்சினையும் கூட. தனிப்பட்ட முறையில் அப்படியான விடயங்களால் பாதிக்கப்பட்ட சிலரை கையாண்ட போது, அவர்களது பாலியல் உணர்வுகள் விகாரமாக தூண்டப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது. இவர்களுக்கான தீர்வுகள் என்ன?...இஸ்லாம் திறந்து வைத்துள்ள ஒரு வாயிலை மூடிவிட்டு தீர்வுகள் தேடி வேறு எங்கு போவது? இது நாம் இது தொடர்பில் சிந்திப்பதற்கான ஒரு விடயம் மாத்திரமே.
அந்த
வகையில் நிதானமான ஒரு பரந்த பார்வையுடனேயே இந்த
விடயம் அணுகப்பட வேண்டும். உண்மையில் எமது நாட்டில்
உள்ள பிரச்சினை சிறுவர் திருமணம் என்பதை விட சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இளைஞர்
நெறிபிறழ்வு என்பனதான். அடுத்து, இலங்கை முஸ்லிம் பெண்களின் திருமண வயது
பிந்திப் போவதுதான் எமது சமூகத்தில் உள்ள பிரச்சினையாகக்
காணப்படுகிறது. 25, 30 வயது தாண்டியும் திருமணத்தில்
இணையாதவர்களுடைய பிரச்சினைதான் அதிகம். சீதனம், உயர் கல்வி மற்றும் பல்வேறு
விடயங்கள் இதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறன. இப்படியிருக்க வயதுக்கு
வரையரை குறித்து பேசுகின்ற இடத்தில் வயது வரையறை என்றல்லாமல், முதிர்ச்சி, தகுதி என்பன உறுதிப்படுத்தப்படும்
ஒழுங்கொன்று குறித்து திருத்தத்தில் சிந்திக்கப்படுவதே சிறந்தது என்பது எனது
தாழ்மையான அவதானம். இப்போது உள்ள வரையறையும் வெறும்
வயது என்பதனை மாற்றி இந்த இடத்தில் அநீதிகளும், துஷ்பிரயோகங்களும்
இடம் பெறாமல் குடும்ப வாழ்வின் நோக்கங்கள் பாதுகாக்கப்படும் வகையிலான ஒரு சட்ட ஏற்பாட்டை
செய்வதே பொருத்தம். இதனை அண்மையில்
இஸ்தான்பூலில் வெளியிடப்பட்ட குடும்ப வாழ்வை பாதுகாப்பதற்கான சமவாயமும்
உறுதிப்படுத்துகிறது.
அடுத்து, இந்த விடயத்துடன் தொடர்பான
வகையில் காழி நீதிமன்ற ஒழுங்கு, தலாக், சீதனம், மஹர் போன்றவற்றிலேயே
சிக்கல்கள் நிறைய இருக்கின்றன.எமது கவனம் இந்தப் பகுதிகளிலேயே குவிய
வேண்டும். தனியார்
சட்டத்தில் சீர் திருத்தத்திற்குரிய பகுதிகள் நிறைய காணப்டுகின்ற போது எமது கவனம் ஒரு
சிறிய விடயத்தில் குவிந்து மற்றயவை கவனமற்றுப் போய்விடக் கூடாது. இந்த
சந்தர்ப்பம் இத்தகைய
சிக்களுக்குரிய விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கே பயன்படுத்தப்பட வேண்டும்.
சீதனம் தடுக்கப்படுவதற்கான
சட்ட ஏற்பாடு குறித்து இங்கு சிந்திக்கலாம். தலாக் என்பது பிரிவுக்கான சட்டம் என்பதைத் தாண்டி
குடும்ப வாழ்வின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு எட்டு என்ற இஸ்லாத்தின்
பார்வைக்கேற்ப, தலாக் முறை ஒழுங்கு படுத்தப்படுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக
இது பார்க்கப்பட வேண்டும். அப்படி தலாக் முறை ஒழுங்குபடுத்தப்பட்டால் குடும்பங்கள் பிரிவதற்கான வாய்ப்புகள்
நிறைய தடுக்கப்பட்டு அவை சேர்வதற்கான இடமாகவே காழி நீதி மன்றங்கள் அமையும். மஹருக்கான (சமூக பொருளாதார
நிலைக்கு தகுந்த) ஏற்பாடு இங்கு செய்யப்பட வேண்டும். குடும்ப பராமறிப்பு
உறுதிப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடு மற்றும் திருமணத்திற்கு பெண்ணின் சம்மதம்
பெறப்பட்டதனை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடு.... என இதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. இதை விட்டு எமது கவனம் திசை திருப்பப் படுதல் கூடாது.
இந்த வகையில் , தனியார் சட்ட சீர்
திருத்தங்களை மேற் கொள்ளும் போது தகுதி வாய்ந்தவர்களது
ஆலோசனைகளும் அவதானங்களும் பெற்றுக் கொள்ளப்படுவதுடன்
சர்வதேச ரீதியாக இது தொடர்பான வேலைத்திட்டங்களில் ஈடுபடுபவர்களது அவதானங்களும் ஆலோசனைகளும்
பெற்றுக் கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்வதுவும் மிகவுமே சிறந்ததாக
அமையும்.
No comments:
Post a Comment